PDA

View Full Version : செப்டம்பர் 16, வெள்ளிக்கிழமை மலேசிய செய்தி



Mano.G.
16-09-2005, 10:05 AM
ஈராக்கில் தற்கொலைப் படை தீவிரவாதிகளின் தாக்குதல் 15 பேர் பலி
ஈராக்கில் தற்கொலைப் படை தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. Kadhimiya நகரில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 150 பேர் பலியானார்கள்.
தொடர்ந்து 2-வது நாளாக நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். Baghdad அருகே Doura பகுதியில் நேற்று போலீஸ் உயர் அதிகாரிகள் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்கள்.
அப்போது வேகமாக வந்த இரு கார் போலீசார் சென்ற வாகனம் மீது மோதியது. காரில் வந்த தற்கொலை படை தீவிரவாதி உடனடியாக வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
இந்த தாக்குதலில் 16 போலீஸ்காரர்கள் பலியானார்கள். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
-----------------------------------------------------------------------
செயல் திறனில் உள்ள குத்தகையாளர்களுக்கு மட்டுமே குத்தகை வழங்கப்படும்
செயல் திறனில் இல்லாத குத்தகையாளர்களை நீக்கும் நோக்கில், நாட்டில் உள்ள சுமார் 64,000 குத்தகையாளர்களை, CIDB எனப்படும் குத்தகையாளர் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு அக்குத்தகையாளர்களை மீண்டும் வகைப்படுத்தவுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடையவிருக்கும் இத்திட்டத்தின் வழி முழு செயல் திறனில், பாதி செயல் திறனில் மற்றும் செயல் திறனில் அல்லாத குத்தகையாளர்களை அரசாங்கம் கண்டறிய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதனையடுத்து, 2002-ம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரையில் நிறைவு பெறாத கட்டுமானத்திட்டங்களை கண்டறியவும், அவர்களின் நிதி நிலைமையை கண்டறியவும் பதிவு செய்யப்பட்ட அனைத்து குத்தகையாளர்களுக்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இனிவரும் காலங்களில் செயல் திறனில் உள்ள குத்தகையாளர்களுக்கு மட்டுமே குத்தகைகள் வழங்கப்படும் என அவர் கூறினார்.


லஞ்சம் தொடர்பான ஆதாரம் இருந்தால் BPR இயக்கத்திடம் புகார் செய்யலாம்
தேசிய கட்டுமான தொழில்துறையில் லஞ்ச நடவடிக்கை ஏற்படுவதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளிவந்தன. அவ்விவகாரத்தை தொடர்ந்து, சரியான ஆதாரங்கள் இருந்தால் PKMM எனப்படும் மலேசிய மலாய்காரர் குத்தகையாளர் கழகம் சம்பந்தப்பட்ட இயக்கத்திடம் புகார்கள் செய்யலாம் என பொதுப்பணி அமைச்சர் Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.
மேலும் தேசிய கட்டுமான தொழில்துறையில் லஞ்சம் நடவடிக்கை ஏற்படுவது உண்மை என்றால் சம்பந்தப்பட்டவர்களின் மேல் நடவடிக்கை எடுக்க PKMM, BPR எனப்படும் லஞ்ச ஒழிப்பு இயக்கத்திடம் தாராளமாக புகார்களை செய்யலாம் என அவர் கூறினார்.

இதனையடுத்து, லஞ்சம் நடவடிக்கை ஏற்படுவதாக வெளிவந்த கூற்று உண்மை என்றால் சம்பந்தப்பட்டவர்களின் மீது, பொதுப்பணி அமைச்சும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
SUNGAI PETANI மருத்துவமனையில் முறையான சேவை வழங்கப்படவில்லை
Sungai Petani மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகளைப் பராமரிக்கும் சேவை முறையாக அமல்படுத்தவில்லை என்னும் கருத்தை சுகாதார அமைச்சர் Datuk Dr Chua Soi Lek நேற்று ஒப்புக்கொண்டுள்ளார்.
மூன்று மாதக் காலக்கட்டங்களில் அந்த மருத்துவமனையின் குழந்தைகளைப் பராமரிக்கும் பிரிவிலிருந்து மூன்று புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு ஒப்புக்கொண்டுள்ளார்.
Sungai Petani மருத்துவமனையின் விதிமுறைகளையும் அங்கு அமல்படுத்தப்படும் சேவைகள் பற்றியும் அவ்வமைச்சு மறு ஆய்வு செய்யும் எனவும் மேலும் அதற்கான நடவடிக்கைகள் உடனே அமல்படுத்தும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அந்த மருத்துவமனையின் குழந்தைகளைப் பாராமரிக்கும் பிரிவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளைக் களைய அவ்வமைச்சு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

கீழே விழுந்து மரணமடைந்த ஆசிரியரின் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்
கெடா மாநில தேசிய மாதிரி சீனப்பள்ளியில் கரையான் அரித்த பலகையை மிதித்து கீழே விழுந்து மரணமடைந்த ஆசிரியரின் விவகாரத்தை பெரிதுப்படுத்தவோ அல்லது அரசியலாக்கவோ வேண்டாம் என MCA தலைவர் Datuk Seri Ong Ka Ting கேட்டுக் கொண்டுள்ளார்.
அனைத்து தரப்பினரும் இவ்விவகாரத்தை ஒரு பள்ளியின் பாதுகாப்பு விவகாரமாகவே கருத வேண்டும் எனவும் மேலும் இதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். "Bunga Raya Semarak Negara" எனும் தலைப்பிலான செம்பருத்தி பூச்செடிகளை நடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து பேசிய அவர் அவ்வாறு தெரிவித்தார்.
பாதுகாப்பற்ற அப்பள்ளியின் கட்டிடமே அவ்வாசிரியரின் இறப்பிற்கு காரணம் எனவும் மேலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அதன் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை Keat Hwa K, Jalan Kampung Perak, Alor Star-இல் அமைந்திருக்கும் சீனப்பள்ளி ஆசிரியர் Chan Boon Heng கரையான் அரித்த பலகையை மிதித்து கீழே விழுந்து மரணமடைந்ததன் விவகாரம் தொடர்பில் விளக்கமளித்த அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

ஈப்போ-ரவாங் ரயில் தண்டவாள நிர்மானிப்பு பணி 2008-இல் நிறைவடையும்
ஈப்போ-ரவாங் செல்லும் இரட்டை மின்சார இரயில் தண்டவாளம் புதிய கால அவகாசத்தின் படி 2008-ம் ஆண்டில் முடிவடையும் என போக்குவரத்து அமைச்சர் Datuk Seri Chan Kong Choy தெரிவித்தார்.
நாட்டில் பெரும்பாலான துறைமுகங்கள் இரயில் சேவையை பயன்படுத்துவதால், இப்புதிய இரயில் சேவை திட்டம் விரைவில் முடிவடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

2.6 பில்லியன் ரிங்கிட் மதிப்பு கொண்ட இத்திட்டத்தைக் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் UEM World Bhd நிறுவனம் ஏற்று நடத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
நீரின் தன்மையும் உணவின் வகையும்
நாம் குடிக்கும் நீர் எந்த வகைத் தன்மை உடையதாக இருக்கின்றதோ அதற்கு ஏற்ற வகையில் தான் உணவு வகைகளை விரும்புகின்றோம் என சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஆசிய நாடுகளில் பல்வேறு நகரங்களில் கிடைக்கும் நிலத்தடி நீர் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதில் உள்ள தாதுப் பொருட்கள் அட்டவணையிடப்பட்டன. அந்தந்த பகுதி மக்கள் உண்ணும் உணவு வகைகள் பட்டியிலடப்பட்டன.
இந்தியாவிலேயே கோல்கத்தாவில் உள்ள நிலத்தடி நீரிலும், அங்கு ஓடும் ஹூக்ளி ஆற்று நீரிலும் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த தண்ணீர் அதிக அளவு செரிமான சக்தியையும் கொண்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அதிக அளவில் அசைவ உணவை விரும்புபவர்களாக உள்ளனர். இரும்புச் சத்து மிகுந்த நீர் அவர்களின் செரிமான மண்டலத்தில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
அசைவ உணவை விரும்பி ஏற்கும் இயல்பு உள்ளவர்களாக அவர்களை மாற்றுகின்றது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, உணவியல் நிபுணர்கள் அதிக எடை உள்ளவர்கள் உடல் மெலிய உணவுத் திட்டங்களை வகுக்கும் போது அவர்கள் நாள்தோறும் அருந்தும் நீரின் தன்மையையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற புதிய முடிவு கிடைத்துள்ளது.
-----------------------------------
அந்தமானில் கனத்த மழை
அந்தமான் தீவுகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சுனாமியின் கோரத் தாக்குதலில் சுக்குநூறான அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
அடுத்த சில நாட்களுக்கும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையால் தெற்கு அந்தமானில், மோகன்புரா, போங்கிகவுங், சிப்பிகாட் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போர்ட் பிளேர் துறைமுகத்தில் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது.
--------------------------
தீவிரவாதத்தை கவனமாக கையாள வேண்டும் - முஷாரப்
உணர்ச்சிவசப்பட்டு மோதலில் ஈடுபடுபவர்கள் வேறு, தீவிரவாதிகள் வேறு. அவர்களை சரியாக வேற்றுமைப்படுத்தி, அடக்குவதில் தனித்தனியான முறைகளை கையாள வேண்டும், என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க நியுயார்க் சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் முஷாரப், நேற்று முன்தினம் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். நம்பிக்கையுடன் கூடிய பேச்சு வார்த்தை அமைதிக்கான ஒத்துழைப்பு என்ற தலைப்பில் அவர் பேசினார். ஒட்டு மொத்தமாக அனைத்தையும் தீவிரவாதம் என நினைத்து விட கூடாது.
மத ãதியாக உணர்ச்சிவசப்பட்டு மோதலில் ஈடுபடுபவர்கள் வேறு, தீவிரவாதிகள் வேறு. இவர்களை சரியாக கணித்து, அவர்களை அடக்கும் விஷயத்திலும் தனித்தனியான முறைகளை கையாள வேண்டும்.
தீவிரவாதத்தை அடக்க ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மதவெறி கொண்டு மோதலில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்த நீண்ட கால திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முஷாரப் தனது உரையில் குறிப்பிட்டார்.


வங்காளதேச குண்டு வெடிப்பு: 15 பேர் கைது
வங்காளதேச குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதியின் சகோதரர் உட்பட மேலும் 15 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். வங்காளதேசத்தில் கடந்த ஆக.17ம் தேதி 500க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோ ர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 250 பேரை வங்காளதேச போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் ஜமீத்&அல்&முஜாகிதீன் என்ற தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் துண்டு பிரசுரங்கள் கிடந்தன.
இதனை தொடர்ந்து அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை தேடும் பணியில் வங்காளதேச போலீசார் தீவிரமாக இறங்கினர். இந்நிலையில், ஜமீத்& அல்& முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவனானா ஷாயக் அப்துல் ரகுமானின் சகோதரன் ஒபய்தூர் ரகுமான் உள்ளிட்ட மேலும் 15 பேரை கடந்த திங்களன்று வங்காளதேசத்தின் வடக்குப் பகுதியில் போலீசார் கைதுசெய்தனர்.
ஷாயக் அப்துல் ரகுமானின் மற்றொரு சகோதரனையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.


தமிழ் போராட்ட குழு தலைவர் சுட்டுக் கொலை
இலங்கை மட்டக்களப்பு நகரில் தமிழ் போராட்ட குழுத் தலைவர் சிவகுரு நவரத்தினராஜா அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கையெறி குண்டுகளையும் அவர்கள் வீசியுள்ளனர். இதில் சிவகுரு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இலங்கை ராணுவ வீரர்கள் அவரை மட்டக்களப்பு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிவகுரு மரணமடைந்தார்.
இலங்கை ராணுவத்தின் பலத்த பாதுகாப்புப் பகுதியாக கருதப்படும் மட்டக்களப்பில் போராட்டத் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவத்தின் தீவிர தேடுதல் வேட்டையில், ரஸீக் பிரிவு போராட்டக்காரர்கள் உதவியாக இருந்து வந்தனர்.
ரஸீக் கடந்த 1999ம் ஆண்டு மே மாதம் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன் பிறகு சிவகுரு தலைமையில் அப்பிரிவு இயங்கி வந்தது. தொடர்ந்து இலங்கை ராணுவத்தின் 9வது பிரிவுக்கு சிவகுரு தலைமையிலான பிரிவு பல்வேறு வகைகளில் உதவியாக இருந்து வந்தது.
-------------------------------------------------------------
கிரிக்கேட் போட்டியில் களமிறங்கியிருக்கும் இந்திய அணி
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையேயான முதல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆம் நாளன்று ஆட்ட நேர இறுதியில் இந்தியா முதல் Ȣல் 3 விக்கெட் இழப்பிற்கு 325 ரன் எடுத்துள்ளது.
வீரேந்திர சேவக் 44, காம்பீர் 46, டிராவிட் 77 ரன்களுக்கு வெளியாகினர். லட்சுமண் 125 ரன்களுடனும் கங்குலி 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக 7 விக்கெட் இழப்பிற்கு 265 ரன் என்ற நிலையில் ஆட்டத்தைத் தொடர்ந்து ஜிம்பாப்வே 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நன்றி வணக்கம்மலேசியா.காம்.

மனோ.ஜி

pradeepkt
16-09-2005, 10:08 AM
தீவிரவாதத்தை கவனமாக கையாள வேண்டும் - முஷாரப்
-- சிரிப்புதான் மிஞ்சுகிறது இதைக் கேட்டால்
தமிழ் போராட்ட குழு தலைவர் சுட்டுக் கொலை
-- என்று தணியும் இந்த வேள்வித்தீ. வேதனை வேதனை.
ஈராக்கில் தற்கொலைப் படை தீவிரவாதிகளின் தாக்குதல் 15 பேர் பலி
-- பிரச்சினை பூமிகளில் தலையாயதாக இருக்கிறது ஈராக். மனித உயிருக்கு எந்த மதிப்புமில்லை. ஆண்டவன் அனைவருக்கும் அமைதியை அருளட்டும்.