PDA

View Full Version : தமிழ் தளங்கள்



அறிஞர்
15-09-2005, 02:32 PM
இணைய தளங்களில் தமிழின் அசூர வளர்ச்சி மிகவும் பிரமிக்க வைக்கிறது. தினமும் புதிய தளங்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அதில் பலருக்கு பயனுள்ள தளங்களை இங்கு தெரிவிக்கலாமே.

இன்று துவக்கு குழுமத்தின் வழியாக புதிய தளம் (thozhi.com)பற்றி அறிந்தேன். மகளிருக்கு தேவையான பகுதிகள் தமிழ், ஆங்கிலத்தில் உள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் தமிழை ரசித்து எப்.எம் ரேடியோவை (தேனிசை, சிங்கப்பூர் ஒலி, உலகதமிழர் வானொலி.... ) இணைய தளத்தின் வாயிலாக கேட்க அனைத்து தளங்களின் முகவரியும் இங்கு (tamil-media.com) உள்ளது.
----------
பயனுள்ள புதிய தளங்களின் பெயர்களை கொடுங்கள். நேரடி தொடர்புகள் (http://) இல்லாமல் கொடுங்கள்

thempavani
15-09-2005, 10:49 PM
தமிழ் தளங்களின் ஒட்டு மொத்த தள அட்டவணையையும் இந்தத் தளத்தில் காணலாம்..(எங்களது வானொலி ஒலிபரப்பு உட்பட...)
http://www.tamilnaatham.com/

pradeepkt
16-09-2005, 04:53 AM
உங்கள் வானொலி ஒலிபரப்பு எது?
அது இணையத்தில் வருகிறதா? வந்தால் அதன் முகவரி என்ன?

அறிஞர்
16-09-2005, 02:58 PM
தமிழ் தளங்களின் ஒட்டு மொத்த தள அட்டவணையையும் இந்தத் தளத்தில் காணலாம்..(எங்களது வானொலி ஒலிபரப்பு உட்பட...)
http://www.tamilnaatham.com/தகவலுக்கு நன்றி அம்மிணி... தங்கள் வானொலியில் தினமும்... செய்திகளை தளத்திற்கு ஏற்றலாமே.

thempavani
16-09-2005, 11:33 PM
எமது நிகழ்ச்சிகள் இருவகைப்ப்படும்..எமது பிராந்திய கலையகத்திலிருந்து (சென்னை சாந்தோம் கலையகம்) வழங்கப்படும் நிகழ்ச்சிகள், நாடகங்கள்...இவை மனித உறவு, தமிழ் , தமிழ் இலக்கியம் சார்ந்து இருக்கும்...மிகுதி நாங்கள் இங்கிருந்து வழங்குபவை..அவற்றில் நான் பெண்மை வாழ்க நிகழ்ச்சியும், அறிவியல் மணம் நிகழ்ச்சியும் தொடர்ந்து பண்ணுகிறேன்...

நிகழ்ச்சிகளைக் கேட்டுவிட்டு அன்போடு உங்களது கருத்துக்களை எனது முகவரிக்கோ அல்லது எம் தொடர்பு முகவரிக்கோ மின்மடலிடுக..இது எமது வளர்ச்சிக்கு உதவும்.

ஆனால் எமது செய்திகளை எமது தளத்தின் ஊடாகத்தான் கேட்கமுடியும் அறிஞரே..பிற தளங்களுக்கு அனுப்பமுடியாது...அதில் பல பிரச்சனைகள் உள்ளன...மன்னிக்கவும்..

இளையவன்
18-12-2005, 09:09 AM
கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கிய இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கவிஞர் காசி ஆனந்தனைப் பற்றி அறிய மற்றும் அவரின் ஆக்கங்களைப் படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும் (http://www.kaasi.info/)