PDA

View Full Version : இந்திய அணி சாதனை



இளையவன்
15-09-2005, 02:18 PM
சிம்பாப்பேயில் நடைபெற்றுவரும் இந்திய சிம்பாப்பே அணிகளுக்கிடையிலான முதலாவது தொடர் ஆட்டத்தின் முதலாவது சுற்றில் இந்திய அணி 554 ஓட்டங்களைப்பெற்று வலுவான நிலையில் உள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்பே அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றது. சிம்பாப்பே அணிசார்பில் ராபின் 56 மற்றும் கப்டன் தைபு 71 (ஆட்டமிழக்காமல்) ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணிசார்பில் இர்பான்பதான் 5 விக்கட்டுக்களையும் கும்ப்ளே மற்றும் ஜாகிர்கான் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 10விக்கட் இழப்புக்கு 554 ஓட்டங்களைப் பெற்று 275 ஓட்டங்கள் முன்னணியில் உள்ளனர். இந்திய அணிசார்பில் லக்ஸ்மன் 140, கங்குலி 101 திராவிட் 77 ஓட்டங்கள் எடுத்தனர். சிம்பாப்பே அணியின் Mahwire 4 மற்றும் Dabengwa 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர். இந்திய அணிக்கு இந்தப்போட்டியில் சுற்று வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த வாய்ப்பை இந்திய வீரர்கள் பயன்படுத்திக் கொள்வார்களா என்பதுதான் சந்தேகம்?

(சிம்பாப்பே 2வது சுற்றில் 3 விக்கட் இழப்புக்கு 9 ஓட்டங்கள் பெற்றுள்ளனர் 2விக்கட்டுக்களை வீழ்த்தியவர் பதான்)

aren
15-09-2005, 02:26 PM
ஏதோ ஒரு சொத்த டீம் கிடைத்தவுடன் அவரவர்கள் அடிக்கிறார்கள். ஒரு நல்ல டீமுடன் ஆடி அடிக்கட்டும் பின்னர் பாராட்டலாம்.

அடிக்கவில்லையென்றால் அடுத்த ஆட்டத்தில் இடமில்லை என்ற நிலை வந்ததால் கங்குலியும், லஷ்மனும் அடித்தார்கள். அதுவும் கங்குலியின் ஆட்டம் மகாமட்டம். எதுக்கு ஆடுகிறார் என்று நன்றாகவே தெரிகிறது.

அறிஞர்
15-09-2005, 02:35 PM
ஒரு இளிச்சவாயன் கிடைத்தால் போதுமே... திறமை காட்ட...

இரண்டு வருடம் கழித்து லட்சுமண் நூறு ரன்.

கங்குலி பதவியை தக்க வைக்க நல்ல நாடகம். (இது மாதிரி போட்டிகளுக்கு டிராவிடை நியமிக்க மாட்டேர்களே)....

கைப்பை நீக்கி சேர்க்கப்பட்ட யுவராஜ் என்ன சாதித்தார். கமிட்டி தேர்தலில் பஞ்சாப் ஓட்டுகளை கவர...என்ன நாடகம் நடத்துகிறார்கள்..

பாலாஜி முற்றிலும் ஒதுக்கப்பட்டு விடுவாரோ என அய்யம் உள்ளது.

இளையவன்
15-09-2005, 02:39 PM
மட்டமான ரீம் என்று நாங்கள் எதையும் ஒதுக்கிவிட முடியாது. உலக சம்பியனான அவுஸ்திரேலியா பங்களாதேசிடம் தோற்கவில்லையா? கங்குலியின் ஆட்டம் மிகவும் மோசமாகத்தான் இருந்தது ஆனால் அணியின் எண்ணிக்கையை 554 ஆக உயர்த்துவதற்கு லக்ஸ்மனும் கங்குலியும்தான் தூண்களாக நின்று செயற்பட்டார்கள் நண்பரே. சேவாக் மாதிரி கங்குலியும் லக்ஸ்மனும் அதிரடியாக ஆடி சொற்ப ரண்ணுக்குள் ஆட்டமிழந்திருந்தால் சிம்பாப்பேயிடம் (சொத்த டீம்) அவமானகரமான தோல்வியைத் தழுவ நேரிட்டிருக்கும்.

இளையவன்
15-09-2005, 02:43 PM
சிம்பாப்பே 5 விக்கட் இழப்புக்கு 18 ஓட்டங்கள். இர்பான் பதான் 4 மற்றும் ஜாகிர்கான் 1 விக்கட்.

இளையவன்
16-09-2005, 12:46 AM
http://www.dinamalar.com/2005sep16/photos/SPN-01B.jpg

இளையவன்
16-09-2005, 10:01 AM
இந்திய அணி முதலாவது தொடர் ஆட்டத்தில் 1 சுற்று மற்றும் 90 ஓட்டங்களால் சிம்பாப்பே அணியைத் தோற்கடித்துள்ளது. இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்களின் திறமையான பந்து வீச்சால் இந்த சுற்று வெற்றி கிடைத்துள்ளது. 2வது சுற்றில் சிம்பாப்பே சகல விக்கட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்கள் பெற்றனர். அந்த அணி சார்பாக கப்டன் மட்டுமே 52 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய அணிசார்பாக பதான் 4, ஹர்பஜன் 4 ஜாகிர்கான் மற்றும் கும்ப்ளே ஆகியோர் தலா 1 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

pradeepkt
16-09-2005, 10:05 AM
வாழ்க வாழ்க
இந்திய அணி வாழ்க, கிரிக்கெட் வாழ்க. ஊழலில்லாத கிரிக்கெட் வாழ்க.
அனைவருக்கும் வாழ்த்துகள்.

இளையவன்
16-09-2005, 10:18 AM
இர்பான்பதான் ஆட்ட நாயகன் ஆக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.இவர் 2 சுற்றிலும் மொத்தமாக 9 விக்கட்டுக்களை வீழ்த்தியதுடன் 52 ஓட்டங்களையும் பெற்றார். வாழ்த்துக்கள் இர்பான் மற்றும் அனைத்து இந்திய வீரர்களுக்கும்

அறிஞர்
16-09-2005, 03:07 PM
என்னத்த சொல்லுறது... பலசாலியை வென்றால் வாழ்த்தலாம்....

pradeepkt
16-09-2005, 03:08 PM
இந்த மட்டுக்காவது வென்றார்களே...
அதையாவது வாழ்த்தக் கூடாதா?

இளையவன்
20-09-2005, 08:43 AM
இந்திய சிம்பாப்பே அணிகளுக்கிடையிலான இரண்டாவது மற்றும் இறுதித் தொடர் ஆட்டம் சற்று முன்பு ஹராரேரியில் ஆரம்பாமானது. இந்திய அணி இப்போட்டியில் சிம்பாப்பே அணியைத் தோற்கடித்து தொடரைக் கைப்பற்றுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்தத் தொடரைக் கைப்பற்றுவதன் மூலம், 1986க்குப் பிறகு (ஆசியா அல்லாத வெளிநாடொன்றில்) தொடரைக் கைப்பற்றும் பெருமை இந்திய அணிக்குக் கிடைக்கும்.

(இரண்டாவது தொடர் ஆட்டத்தின் முதலாவது சுற்றில் முதலில் துடுப்பெடுத்தாடும் சிம்பாப்பே அணி 1 விக்கட் இழப்புக்கு 31 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. )

பரஞ்சோதி
20-09-2005, 08:46 AM
இந்திய அணி வெற்றிப் பெற வாழ்த்துகிறேன்.

பரஞ்சோதி
20-09-2005, 08:50 AM
31/3 பதான் ஒரே ஒவரில் 2 விக்கெட்

இளையவன்
20-09-2005, 08:54 AM
31/3 பதான் ஒரே ஒவரில் 2 விக்கெட்

ஆட்டமிழந்த மூவருக்குள் கப்டனும் அடங்குகிறார். கடந்த இரண்டு சுற்றுக்களிலும் சிம்பாப்பே அணியில் ஓரளவு சிறப்பாக விளையாடியவர் அவர்தான்.

இளையவன்
20-09-2005, 08:56 AM
ஓட்ட எண்ணிக்கை 31ஆக இருக்கும்போதே சிம்பாப்பே தனது 4ஆவது விக்கட்டையும் இழந்துள்ளது.

பிரியன்
20-09-2005, 09:54 AM
ஜிம்பாப்வே 74 -4 .

இளையவன்
20-09-2005, 10:01 AM
சிம்பாப்பே 27.3 ஓவர்களில் 5 விக்கட் இழப்புக்கு 75 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.

இளையவன்
20-09-2005, 10:56 AM
சிம்பாப்பே 83-6

pradeepkt
20-09-2005, 11:00 AM
பசங்க நிஜமாகவே நல்லா வெளையாடுறாங்களோ

இளையவன்
20-09-2005, 11:29 AM
சிம்பாப்பே 122-7. பதான் 5விக்கட் ஜாகிர்கான் மற்றும் ஹர்பஜன் தலா 1 விக்கட்

இளையவன்
20-09-2005, 11:39 AM
சிம்பாப்பே 136-8

இளையவன்
20-09-2005, 11:43 AM
சிம்பாப்பே 138-9. இர்பான் 6 விக்கட்

இளையவன்
20-09-2005, 11:59 AM
இரண்டாவது தொடர் ஆட்டத்தின் முதலாவது சுற்றில் சிம்பாப்பே அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றனர். இர்பான் அபாரமகப் பந்து வீசி 59 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

pradeepkt
20-09-2005, 12:25 PM
அருமையான ரன்னிங் கமெண்டரி இளையவன், நன்றி.
இந்திய அணிக்கும் இர்பானுக்கும் வாழ்த்துகள்

இளையவன்
20-09-2005, 12:34 PM
இந்தியா 6 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 31 ஓட்டங்கள். கம்பீர் மற்றும் சேவாக் ஆகியோர் களத்தில் உள்ளனர்

இளையவன்
20-09-2005, 01:29 PM
இந்திய 75-1. சேவாக் 44ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளார்

இளையவன்
20-09-2005, 02:02 PM
கம்பீர் அரைச்சதம், இந்தியா 1 விக்கட் இழப்புக்கு 112.

இளையவன்
20-09-2005, 02:56 PM
சிம்பாப்பே முதலாவது சுற்று ஓட்ட எண்ணிக்கையை இந்தியா சமன் செய்துள்ளது (161). இனி இந்தியா எடுக்கும் ஒவ்வொரு ஓட்டமும் சிம்பாப்பேயின் இரண்டாவது சுற்றுச் சுமையை அதிகமாக்கும்.

மன்மதன்
20-09-2005, 03:00 PM
நன்றி இளையவன்......

இளையவன்
20-09-2005, 03:49 PM
முதல்நாள் ஆட்ட நேர முடிவில்
இந்தியா 195-1
கம்பீர் - 95* (116 பந்துகள், 17 நான்கு ஓட்டங்கள் )
ராகுல் - 49* (103 பந்துகள், 8 நான்கு ஓட்டங்கள் )

அறிஞர்
20-09-2005, 11:49 PM
ஆஹா அடுத்த இன்னிங்க்ஸ் வெற்றிக்கு இந்தியா ரெடி....

கங்குலி நிரந்தர கேப்டன்....

பாலாஜிக்கு வாய்ப்பு இல்லை.....

யுவராஜுக்கு வாய்ப்பு.... கைப்புக்கு டெஸ்ட் டீமில் இல்லை....

இளையவன்
21-09-2005, 08:18 AM
சற்று முன்பு ஆரம்பித்த இரண்டாவது நாள் ஆட்டத்தில், நேற்றைய ஆட்டத்தில் 95 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த தொடக்க ஆட்டக்காரர் கம்பீர் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சதத்தைப் பூர்த்தி செய்யாமல் ஆட்டமிழந்து செல்கிறார்.

இந்தியா 198-2
கம்பீர் 97 (121 பந்துகள், 17 நான்கு ஓட்டங்கள்)
ராகுல் 50* (113 பந்துகள், 8 நான்கு ஓட்டங்கள்)

இளையவன்
21-09-2005, 08:52 AM
கடந்த போட்டியில் சதமடித்த லக்ஸ்மன் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளார்.

இந்தியா 219-3

பரஞ்சோதி
21-09-2005, 09:22 AM
கங்குலியார், திராவிடருடன் சேர்ந்து விளையாடுகிறார்.

இளையவன்
21-09-2005, 09:35 AM
கங்குலியார், திராவிடருடன் சேர்ந்து விளையாடுகிறார்.

இரண்டு பேருக்குமிடையில் யார் மெதுவாக ஓட்டங்களை எடுப்பது என்ற போட்டி நடப்பதாகத் தெரிகிறது. (என்றாலும் துணைக் கப்டனை ஜெயிக்க விடமாட்டார் கப்டன்)

இந்தியா 237-3

பரஞ்சோதி
21-09-2005, 09:54 AM
அதான் ஒரு பழமொழி உண்டே, எளவு வீட்டில் பிணமாக இருப்பேன், கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாக இருப்பேன்.

அது மாதிரி தான் நம்ம கேப்டன். பரபரப்பு பேட்டி கொடுத்துட்டார், பரபரப்பாக ரன் சேர்க்கிறாரா என்று பார்ப்போம்.

மன்மதன்
21-09-2005, 10:19 AM
எனக்கு வந்த மெயில் :

ஜிம்பாப்வே இனி கிரிக்கெட் விளையாடுவதில்லை என்று முடிவு பண்ணியிருக்கிறது.. இதை அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்தனர். உலக கிரிக்கெட்டிலிருந்து விலகி கொண்டு கிரிக்கெட் மைதானம் பக்கமே போவதில்லை என்ற ஜிம்பாப்வே அதிபர் கூட ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்.. என்னதான் இருந்தாலும் கங்குலி 100 ரன்கள் எடுத்தது இவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.. :D :D

இந்த மேட்சிலும் கங்குலி 100 எடுத்தால் இது உண்மையிலேயே நடக்கலாம். :D :D

poo
21-09-2005, 10:29 AM
உண்மைதான் மன்மதன்.. கங்குலி சதம் அடித்ததைத்தான் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடிவில்லை!!

இளையவன்
21-09-2005, 10:55 AM
கங்குலி 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளார். இந்தியா 245-4

இளையவன்
21-09-2005, 10:58 AM
இந்த மேட்சிலும் கங்குலி 100 எடுத்தால் இது உண்மையிலேயே நடக்கலாம். :D :D

உங்கள் கணக்கு பொய்த்துவிட்டது. கங்குலி 50 பந்துகளை எதிர்கொண்டு 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளார்.

இளையவன்
21-09-2005, 11:14 AM
இந்தியா 261-4. சிம்பாப்பேயைவிட 100 ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றுள்ளனர். இன்று இந்திய அணியினரின் ஓட்டம் பெறும் வேகம் மிகவும் மந்தமாக உள்ளது.

பிரியன்
21-09-2005, 11:16 AM
கங்குலி 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளார். இந்தியா 245-4

நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது:D :D :D

pradeepkt
21-09-2005, 11:28 AM
அப்ப ஜிம்பாப்வே இனிமேல் விளையாடுவாங்க.
தீபாவளி தெனைக்குமா வருது?
கங்குலி தெனைக்குமா அடிப்பாரு?
:D

இளையவன்
21-09-2005, 12:18 PM
இந்திய அணி தனது 5ஆவது விக்கட்டை இழந்துள்ளது. 70பந்துகளில் 25ஓட்டங்கள் எடுத்த யுவராஜ் ஆட்டமிழந்து செல்கிறார்.

இந்தியா 306-5

பிரியன்
21-09-2005, 12:19 PM
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்தது இந்தியா . ஸ்கோர் 306 / 6

திராவிட் - 98,
ய்வராஜ் - 25

இளையவன்
21-09-2005, 12:23 PM
237 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டரிகளுடன் 98 ஓட்டங்கள் பெற்ற ராவிட் ஆட்டமிழந்துள்ளார்

இந்தியா 306-6

இளையவன்
21-09-2005, 12:41 PM
தினேஸ் கார்த்திக் ஆட்டமிழந்துள்ளார்.
இந்தியா 318-7

பிரியன்
21-09-2005, 12:44 PM
தினேஸ் கார்த்திக் ஆட்டமிழந்துள்ளார்.
இந்தியா 318-7

இந்தியா தனது பழைய செயல் திறனை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது:mad: :mad:

pradeepkt
21-09-2005, 12:48 PM
என்னதான் சொத்தை டீமுடன் ஆடினாலும் அடுத்து என்ன நடக்குமோ என்று நம்மைப் பதைபதைக்க வைப்பதில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஈடு இணையே இல்லை.

பிரியன்
21-09-2005, 12:50 PM
என்னதான் சொத்தை டீமுடன் ஆடினாலும் அடுத்து என்ன நடக்குமோ என்று நம்மைப் பதைபதைக்க வைப்பதில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஈடு இணையே இல்லை.

வாங்குற காசுக்கு வஞ்சனையில்லாம ஆடறவங்க நம்ம அணியினர். எந்தப் போட்டியையும் சுவாரஸ்யமாகுவது நம்மவர்களின் கைவந்த கலை

pradeepkt
21-09-2005, 01:00 PM
இப்படி ஆடுறதுக்கும் ஒரு சால்ஜாப்பு சொல்லி ரசிக்கிறதுதான் நம்மள மாதிரி இந்திய ரசிகர்களின் தனித்தன்மை :)

rajasi13
21-09-2005, 01:06 PM
செத்த பாம்ப அடிசாலும் இப்பொதைக்கு இந்திய அணிக்கு தேவை ஒரு வெற்றி

பிரியன்
21-09-2005, 01:16 PM
இந்தியா 326 - 7 பதான் 16* (4*4)

பிரியன்
21-09-2005, 01:30 PM
இந்தியா 342 -8
பதான் 24*

ஹீத் ஸ்டிரிக் 5 விக்கெட்கள்

இளையவன்
21-09-2005, 01:52 PM
இந்திய அணியினர் சிம்பாப்பேயைவிட 200ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றுள்ளனர்.

இந்தியா 361-8.
இர்பான் 32*
ஹர்பஜன் 11*

பரஞ்சோதி
21-09-2005, 01:53 PM
பதான் அருமையாக விளையாடுகிறார், அவர் இன்னமும் சதம் அடிக்கவில்லை, ஹர்பஹன் வாய்ப்பு கொடுப்பாரா?

பரஞ்சோதி
21-09-2005, 01:56 PM
பதான் விக்கெட் எனக்கு தான்.

இளையவன்
21-09-2005, 01:56 PM
இந்தியா 361-9
பதான் 32

பரஞ்சோதி
21-09-2005, 02:08 PM
ஒருவழியாக இந்தியா 366 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது, 205 ரன்கள் முன்னிலை. இன்னிங்க்ஸ் வெற்றி கிடைக்குமா?

இளையவன்
21-09-2005, 02:13 PM
இந்தியா அணியினர் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 366 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். சிம்பாப்பேயயை விட 205ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றுள்ளனர். முதல் சுற்று போல் களத் தடுப்பும் பந்து வீச்சும் சிறப்பாப இருக்குமேயானல் சிம்பாப்பே அணியினரை இந்த ஓட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்காது.



இந்திய அணி 366-10

கம்பீர்-97 (121 பந்துகள், 17 நான்கு ஓட்டங்கள்)
சேவாக்-44 (44 பந்துகள், 7 நான்கு ஓட்டங்கள்)
ராவிட்-98 (237 பந்துகள், 14 நான்கு ஓட்டங்கள்)
லக்ஸ்மன்-8 (20 பந்துகள், 2 நான்கு ஓட்டங்கள்)
கங்குலி-16 (50 பந்துகள், 2 நான்கு ஓட்டங்கள்)
யுவராஜ;-25 (70 பந்துகள், 3 நான்கு ஓட்டங்கள்)
கார்த்திக்-1 (11 பந்துகள், 0 நான்கு ஓட்டங்கள்)
பதான்-32 (45 பந்துகள், 7 நான்கு ஓட்டங்கள்)
கும்ப்ளே-08 (24 பந்துகள், 2 நான்கு ஓட்டங்கள்)
ஹர்பஜன்-14* (23 பந்துகள், 2 நான்கு ஓட்டங்கள்)
ஜாகிர்கான்-2 (9 பந்துகள், 0நான்கு ஓட்டங்கள்)

சிம்பாப்பேயின் ஹீத் ஸ்டிரிக் 72 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கட்டைக் கைப்பற்றியுள்ளார்.

பரஞ்சோதி
21-09-2005, 02:15 PM
இளையவனுக்கு மிக்க நன்றி.

விளையாட்டு பகுதியில் சிறப்பான பங்களிப்பு உங்களுடையது.

நானும் ஒரு காலத்தில் கிரிக்கெட் வெறியனாக இருந்திருக்கிறேன், இப்போ வெறுத்து போய் விட்டது. இனிமேல் உங்க கிட்ட நிறைய கதைக்கலாம் என்று இருக்கேன்.

இளையவன்
21-09-2005, 02:23 PM
இளையவனுக்கு மிக்க நன்றி.

விளையாட்டு பகுதியில் சிறப்பான பங்களிப்பு உங்களுடையது.

நானும் ஒரு காலத்தில் கிரிக்கெட் வெறியனாக இருந்திருக்கிறேன், இப்போ வெறுத்து போய் விட்டது. இனிமேல் உங்க கிட்ட நிறைய கதைக்கலாம் என்று இருக்கேன்.


கிரிக்கட் விளையாடுவதில் எனக்குப் பெரிதாக ஆர்வமில்லை. நான் சிறந்த கிரிக்கட் ரசிகனே தவிர உங்கள மாதிரி சிறந்த ஆட்டக்காரன் அல்ல.

பரஞ்சோதி
21-09-2005, 02:39 PM
கிரிக்கட் விளையாடுவதில் எனக்குப் பெரிதாக ஆர்வமில்லை. நான் சிறந்த கிரிக்கட் ரசிகனே தவிர உங்கள மாதிரி சிறந்த ஆட்டக்காரன் அல்ல.

ஆமாம், இது எதுக்கு சொன்னீங்க. இப்படி கிளீன் போல்ட் ஆக்குறீங்களே! :D

சிம்பாவே அணி ஒரு விக்கெட்டை இழந்து விட்டது, பதானுக்கு கிடைத்தது.

இளையவன்
21-09-2005, 02:41 PM
சிம்பாப்பே 13-1

பரஞ்சோதி
21-09-2005, 02:42 PM
இளையவன், அங்கே சிரிலங்கா, பங்களாதேஷை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்குறாங்களே, அதைப்பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.

பெர்ணாண்டோ கேத்ரீனா புயல் மாதிரி கலக்கிட்டு இருந்தாரே!

சமரவீராவும் தில்சனானும் அற்புதமாக விளையாடி அணியை மீட்டி விட்டாங்க தானே.

பரஞ்சோதி
21-09-2005, 02:49 PM
பதானுக்கு இரண்டாவது விக்கெட்.

பிரியன்
21-09-2005, 02:53 PM
ஜிம்பாப்வே - 18/3

பதான் - 2
ஜாகீர் -1

இளையவன்
21-09-2005, 02:53 PM
இளையவன், அங்கே சிரிலங்கா, பங்களாதேஷை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்குறாங்களே, அதைப்பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.

பெர்ணாண்டோ கேத்ரீனா புயல் மாதிரி கலக்கிட்டு இருந்தாரே!

சமரவீராவும் தில்சனானும் அற்புதமாக விளையாடி அணியை மீட்டி விட்டாங்க தானே.

நேற்று சிறிலங்கா 48-4 என்று இருந்த போது என்ர சந்தோசத்துக்கு அளவே இல்லை. ஆனாபாருங்கோ என்ர சந்தோசம் கொஞ்ச நேரம்தான் நிலைச்சுது. சமரவீரவும் டில்சானும் வந்து அடிச்ச அடியில பங்களாதேஸ் பந்துவீச்சாளர்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விட்டது. இலங்கை பந்து வீச்சு தரப்பில் தில்கார பெர்னாண்டோ நன்றாக பந்து வீசி 5 விக்கட்டுக்களை வீழ்த்தி 192 ஓட்டங்களுக்குள் பங்களாதேசை முடக்கினார். இரண்டாவது சுற்றிலும் பெர்னாண்டோ 2விக்கட்டைக் கைப்பற்றி இருந்தார்.

மன்மதன்
21-09-2005, 02:55 PM
இளையவன், பரம்ஸ், பிரியன் முத்தரப்பு ஆட்டம் சூப்பர்.. இளையவன், நம்ம பரம்ஸ் குவைத் லோக்கல் கிரிக்கெட்டில் பதக்கம் எல்லாம் பெற்றவர்..

பரஞ்சோதி
21-09-2005, 02:56 PM
20/3 விக்கெட், கான் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இன்னமும் 2 விழுமா ?

பரஞ்சோதி
21-09-2005, 02:58 PM
இளையவன், பரம்ஸ், பிரியன் முத்தரப்பு ஆட்டம் சூப்பர்.. இளையவன், நம்ம பரம்ஸ் குவைத் லோக்கல் கிரிக்கெட்டில் பதக்கம் எல்லாம் பெற்றவர்..

தம்பி, நம்மை ரன் அவுட் பண்ண பார்க்கிறாயே

இளையவன்
21-09-2005, 03:03 PM
இளையவன், பரம்ஸ், பிரியன் முத்தரப்பு ஆட்டம் சூப்பர்.. இளையவன், நம்ம பரம்ஸ் குவைத் லோக்கல் கிரிக்கெட்டில் பதக்கம் எல்லாம் பெற்றவர்..


பரஞ்சோதி நீங்க சொல்லவே இல்லையே. எம்புட்டுத் திறமையை வைச்சிருக்கறீங்க.

பிரியன்
21-09-2005, 03:04 PM
விழுந்தது நாலாவது விக்கெட். அணித்தலைவர் தைபு ஆட்டமிழந்தார். ஜாகீர்கானுக்கு இரண்டு விக்கெட்

இளையவன்
21-09-2005, 03:07 PM
சிம்பாப்பே அணியில கப்டனைத் தவிர மற்றவர்கள் குறிப்பிடும்படியாக விளையாடமாட்டார்கள். கப்டன் ஆட்டமிழந்ததால் அடுத்த விக்கட்டுக்கள் அடுத்தடுத்து வேகமாகச் சரியுமென்று எதிர்பார்க்கலாம்

பரஞ்சோதி
21-09-2005, 03:09 PM
இங்கே பதிவுகளும், அங்கே சிம்பாவே விக்கெட்களும் போட்டி போட்டு விழுது.

பிரியன்
21-09-2005, 03:19 PM
நீர் சொன்ன நேரம் மழை நின்னுடுச்சு.....

இளையவன்
21-09-2005, 03:48 PM
இன்றைய ஆட்டநேர முடிவில் சிம்பாப்பே 4 விக்கட்டுக்களை இழந்து 39 ஓட்டங்களை எடுத்திருந்தது.

அறிஞர்
21-09-2005, 04:09 PM
எப்படியோ அடுத்த என்ன பண்ணப்போகிறார்கள்...

5 நாட்கள் ஆட்டம். 2.5 நாளில் முடிகிறது....

ஜிம்பாவே டெஸ்ட் அந்தஸ்தை ரத்து செய்யலாம்

மன்மதன்
21-09-2005, 04:34 PM
எப்படியோ அடுத்த என்ன பண்ணப்போகிறார்கள்...

5 நாட்கள் ஆட்டம். 2.5 நாளில் முடிகிறது....

ஜிம்பாவே டெஸ்ட் அந்தஸ்தை ரத்து செய்யலாம்

மேபீ பண்ணினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. கங்குலி என்னமா ஆடவிட்டிருக்கிறார்கள்..:rolleyes: :rolleyes: :D :D

பரஞ்சோதி
22-09-2005, 07:40 AM
இலங்கை அணி, பங்களாதேஷிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி.

ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

இளையவன்
22-09-2005, 08:09 AM
சற்று முன்பு தொடங்கிய இன்றைய ஆட்டத்தில் சிம்பாப்பே தனது 5ஆவது விக்கட்டை இழந்துள்ளது.
பதான் - 2
ஜாகிர்கான் - 3

சிம்பாப்பே 42-5

இளையவன்
22-09-2005, 08:40 AM
சிம்பாப்பேயின் 6 ஆவது விக்கட்டை பதான் வீழ்த்தியுள்ளார்.
சிம்பாப்பே 85-6

இளையவன்
22-09-2005, 08:55 AM
சிம்பாப்பே 6 விக்கட் இழப்புக்கு 102 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.

இளையவன்
22-09-2005, 09:17 AM
சிம்பாப்பே 117-6.

கமில்ரன் - 39*
பிளிக்னோட் - 16*

இளையவன்
22-09-2005, 09:58 AM
சிம்பாப்பே 170-6.

கமில்ரன் - 56*
பிளிக்னோட் - 50*

பரஞ்சோதி
22-09-2005, 10:01 AM
பிளிக்நாட் முன்னர் பல போட்டிகளில் அருமையாக ஆடியவர். இன்று அவருக்கு அதிஷ்டம் அடித்திருக்குது.

இளையவன்
22-09-2005, 10:08 AM
பிளிக்னோட் மற்றும் கமில்ரன் ஆகியோர் சதமடிக்கும் வாய்ப்புள்ளது. பிளிங்னோட் டெஸ்ட் கிரிக்கட்டில் ஆகக் கூடிய ஓட்டங்களாக 98 ஓட்டங்களைப் பெற்றவர். மற்றவர் ஏற்கனவே ஒருமுறை சதமடித்துள்ளார் (119).


சிம்பாப்பே 190-6.

கமில்ரன் - 67*
பிளிக்னோட் - 59*

பரஞ்சோதி
22-09-2005, 10:55 AM
150 அல்லது அதற்கும் மேல் எடுத்து தான் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இது மாதிரி பார்ட்னர்ஷிப்பை உடைக்க புதிய பந்து வீச்சாளர்களை உபயோகிக்க வேண்டும், சேவக், யுவராஜ் எதுக்கு இருக்காங்க.

என்ன கேப்டனோ போங்க.

இளையவன்
22-09-2005, 11:07 AM
சிம்பாப்பே 201-8.
பதான் - 5 விக்கட்

இளையவன்
22-09-2005, 11:12 AM
சிம்பாப்பேயின் 9ஆவது விக்கட்டை கும்ளே எடுத்துள்ளார்.

சிம்பாப்பே 203-9.

pradeepkt
22-09-2005, 11:17 AM
இப்ப என்ன செஞ்சாலும் இன்னொரு தடவை விளையாடணுமா?
எனக்கு இந்த டெஸ்ட் கிரிக்கெட் விதிகள் புரிவதே இல்லை.

இளையவன்
22-09-2005, 11:19 AM
சிம்பாப்பே வீரர்களான கமில்ரன் (71) மற்றும் பிளிக்னோட்டின் (67*)சிறப்பான ஆட்டத்தால் சிம்பாப்பே அணி இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியுள்ளது. சிம்பாப்பே 206-9.

இளையவன்
22-09-2005, 11:24 AM
இப்ப என்ன செஞ்சாலும் இன்னொரு தடவை விளையாடணுமா?
எனக்கு இந்த டெஸ்ட் கிரிக்கெட் விதிகள் புரிவதே இல்லை.

ஆமாம் பிரதீப் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடவேண்டும்

இளையவன்
22-09-2005, 11:35 AM
சிம்பாப்பே அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெறுவதற்கு 19 ஓட்டங்கள் தேவை.

இளையவன்
22-09-2005, 11:40 AM
சிம்பாப்பே 223-10
கமில்ரன் - 77
பிளிக்னோட் - 84*


பதான் 5 விக்கட்
ஜாகிர்கான் 4 விக்கட்
கும்ளே 1 விக்கட்

pradeepkt
22-09-2005, 11:45 AM
இப்ப இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி 19 ரன் எடுத்தால் இந்தியா வெற்றியா மேட்ச் டிராவா?

இளையவன்
22-09-2005, 11:54 AM
வெற்றிக்குத் தேவையான 19 ஓட்டங்களை இந்திய அணி விக்கட் இழப்பின்றி எடுத்ததன்மூலம் இந்திய அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா 19-0 (இரண்டாவது இன்னிங்ஸ்)
கம்பீர் 1*
சேவாக் 14*
உதிரிகள் 4

இளையவன்
22-09-2005, 11:55 AM
இப்ப இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி 19 ரன் எடுத்தால் இந்தியா வெற்றியா மேட்ச் டிராவா?

19 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றாச்சு. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

pradeepkt
22-09-2005, 12:01 PM
வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்.
இந்திய அணிக்கு வாழ்த்துகள்
ரன்னிங் கமெண்டரி கொடுத்த இளையவனுக்கும் வாழ்த்துகள்.

இளையவன்
22-09-2005, 12:05 PM
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளிலும் (2-0)வெற்றிபெற்று இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது

பிரியன்
22-09-2005, 12:05 PM
அப்பாடா ஒரு வழியா ஜெயிச்சாச்சு..... இனி இந்திய கிரிக்கெட்டுக்கு விடிவு காலம்தான்:) :) :) :)

வாழ்த்துகள் இளையவன். என்னை மாதிரி கிரிக்கெட் கிறுக்குங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது தங்களது ரன்னிங் கமெண்டரி

இளையவன்
22-09-2005, 12:13 PM
இரண்டாவது டெஸ்ட்போட்டியில் 2 இன்னிங்ஸிலும் 12 விக்கட்டுக்களை வீழ்த்திய இர்பான்பதான் ஆட்ட நாயகன் விருதுபெறுகிறார். முதலாவது போட்டியிலும் ஆட்ட நாயகனாக இர்பான்தான் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது. இர்பானுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

பிரியன்
22-09-2005, 12:16 PM
அப்ப இர்பாமன்பதான் தான் தொடரின் சிறந்த வீரர்...... வாழ்த்துகள் இர்பான். இந்தியாவிற்கு கிடைத்த மற்றுமொரு ஆல் ரவுண்டர் ( கபிலைப் போல )

இளையவன்
22-09-2005, 01:02 PM
சிம்பாப்பேக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றதன்மூலம் 18ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்துக்கு வெளியே உள்ள நாடொன்றில் தொடரை கைப்பற்றிய பெருமையை இந்திய அணி பெறுகிறது. கடைசியாக 1986 இல் இந்திய அணி இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

pradeepkt
22-09-2005, 01:07 PM
அடடா தகவல் திலகமே.
அப்பப்ப இந்தத் திரியின் தலைப்பை வேற மாத்தி மாத்தி அருமையா ஒரு கமெண்டரி கொடுத்தீங்க இளையவன்
பாராட்டுகள்.

அறிஞர்
23-09-2005, 05:24 AM
சாதனையை என்னன்னு சொல்லுறது... ஆஸ்திரேலியாவுக்கு எதிரா நிகழ்த்தினால் வாழ்த்தலாம்... அடுத்து கென்யாவுக்கு எப்ப டெஸ்ட் அந்தஸ்து வரும்னு பாருங்க.... அது வரை இருந்து.. சாதிக்க கேப்டன் காத்திருப்பார்.

பரஞ்சோதி
23-09-2005, 08:40 PM
இர்பான் பதான், சென்ற ஆண்டில் பாகிஸ்தான் சென்று வந்தப்பின்பு குறிப்பிடும் படியாக விளையாடமால் அணியில் இடம் பிடிக்க படாத பாடுபட்டு இடம் பிடித்து, அருமையாக விளையாடி மீண்டும் சிறந்த பந்து வீச்சாளர் பெயர் பெற்று விட்டார், பாராட்டுகள்.

அறிஞர்
23-09-2005, 11:12 PM
இர்பான் பதான், சென்ற ஆண்டில் பாகிஸ்தான் சென்று வந்தப்பின்பு குறிப்பிடும் படியாக விளையாடமால் அணியில் இடம் பிடிக்க படாத பாடுபட்டு இடம் பிடித்து, அருமையாக விளையாடி மீண்டும் சிறந்த பந்து வீச்சாளர் பெயர் பெற்று விட்டார், பாராட்டுகள். என்ன பண்ணுவது.. பாலாஜிக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என முடிவோடு இருக்கிறார்கள்.. அவருக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தால் பிரகாசித்து இருப்பார்..

aren
24-09-2005, 01:16 AM
ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் இந்தியா வந்தபொழுது தங்களுடைய திறமையம் காண்பித்திருந்தால், இந்த வெற்றியை பாராட்டியிருக்கலாம். ஆனால் இந்தியா சொத்தலான டீமுடன் நன்றாக விளையாடி வெற்றி பெற்றதை எப்படி பாராட்டமுடியும்.

அடுத்த முறை ஸ்ரீலங்காவிடம் விளையாடி வெற்றிவாகை சூடட்டும், நாம் பாராட்டலாம். அதுவரை ................

மன்மதன்
24-09-2005, 04:49 AM
ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் இந்தியா வந்தபொழுது தங்களுடைய திறமையம் காண்பித்திருந்தால், இந்த வெற்றியை பாராட்டியிருக்கலாம். ஆனால் இந்தியா சொத்தலான டீமுடன் நன்றாக விளையாடி வெற்றி பெற்றதை எப்படி பாராட்டமுடியும்.

அடுத்த முறை ஸ்ரீலங்காவிடம் விளையாடி வெற்றிவாகை சூடட்டும், நாம் பாராட்டலாம். அதுவரை ................

அதிலாவது வெற்றி பெற்றதே.. ஒருவேளை இங்கேயும் தோற்றிருந்தா...
(வற்றாத நதிகள் .. என்ற டயலாக் நியாகபம் வருது.:D )

பரஞ்சோதி
24-09-2005, 05:03 AM
அடுத்து வரும் சிரிலங்கா மற்றும் தென் ஆப்பிரிக்காவுடனான போட்டிகளுக்கு நிறைய மாற்றங்கள் தேவை.

ஒரு நாள் போட்டிக்கு டிராவிட் அல்லது கைப் தலைமையிலும், டெஸ்ட் போட்டிகள் டிராவிட் அல்லது கங்குலி கேப்டனாக்க வேண்டும். மிக முக்கியமானவர்களை மட்டுமே இரண்டு அணியிலும் வைக்க வேண்டும். யுவராஜ், கைப், போன்ற இளைஞர்கள் அணி ஒருநாள் போட்டிக்கு மட்டுமே தயார் செய்ய வேண்டும், அப்போ தான் 2007 உலககோப்பைக்கு அரையிறுதிக்காவது தகுதி பெற முடியும். தற்போது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் மட்டுமே நல்ல பலத்தோடு இருக்கின்றன.

aren
24-09-2005, 10:59 AM
ஒரு நாள் போட்டிக்கும் ஒரு டீமும், டெஸ்ட் போட்டிக்கு ஒரு டீமும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் தங்களுடைய தனித்திறமையை காட்டி நன்றாக விளையாட முடியும். அதுபோல் அவர்களுக்குத் தேவையான ஓய்வும் சரியான முறையில் கிடைக்கும்.

ஒரு நாள் போட்டிக்கு ஷேவாக்கும், டெஸ்ட் போட்டிக்கு திராவிடும் தலைவராக இருக்கலாம். கங்குலி இவ்வளவு பிரச்சனையில் மாட்டியிருப்பதால் தலை தப்பிப்பது கடினம். ஆனால் அடுத்த டெஸ்ட் தொடருக்கு அவருக்கு தலைவராக இருக்க சந்தர்பம் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இளையவன்
24-09-2005, 11:29 AM
ஒரு நாள் போட்டிக்கும் ஒரு டீமும், டெஸ்ட் போட்டிக்கு ஒரு டீமும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் தங்களுடைய தனித்திறமையை காட்டி நன்றாக விளையாட முடியும். அதுபோல் அவர்களுக்குத் தேவையான ஓய்வும் சரியான முறையில் கிடைக்கும்.

ஒரு நாள் போட்டிக்கு ஷேவாக்கும், டெஸ்ட் போட்டிக்கு திராவிடும் தலைவராக இருக்கலாம். கங்குலி இவ்வளவு பிரச்சனையில் மாட்டியிருப்பதால் தலை தப்பிப்பது கடினம். ஆனால் அடுத்த டெஸ்ட் தொடருக்கு அவருக்கு தலைவராக இருக்க சந்தர்பம் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

திராவிட் நல்ல வீரர்தான் ஆனால் அவர் தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவரா என்பது சந்தேகம்தான்.

மார்ச் 2004 இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் இரட்டைச் சதத்தை நெருங்கும்போது (194*). ஆட்டத்தை டிக்களயர் செய்து சச்சினை இரட்டைச் சதம் எடுக்கவிடாமல் அதிர்ச்சியளித்தவர். இந்திய வீரர்களிலே அதிகமான இரட்டைச் சதம் எடுத்தவர் ராவிட்தான் அந்த இரட்டைச் சதத்தை சச்சின் பூர்த்தி செய்தால் சச்சின் தன்னுடைய சாதனையை சமன் செய்துவிடுவார் என்ற காரணத்துக்காகத்தான் அவர் அப்படிச் செய்தார் என்று பத்திரிகைகள் குற்றஞ்சாட்டியிருந்தன (உண்மையும் அதுதான்). அப்படியானவர் மற்றவர்களின் சாதனையை ஊக்குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வார் என்பது சந்தேகமே.

aren
26-09-2005, 08:36 AM
திராவிடை அந்த ஒரு விஷயத்தை மற்றும் வைத்து எடை போட முடியாது. திராவிட் சிந்தித்து செயல்படுபவர். ஆகையால் அவரை டெஸ்ட் போட்டிக்கு தலைவராக உபயோகித்த்துக்கொள்ளலாம் என்பது என்னுடைய கருத்து.

rajasi13
26-09-2005, 09:52 AM
அப்பாடா ஒரு வழியா ஜெயிச்சாச்சு..... இனி இந்திய கிரிக்கெட்டுக்கு விடிவு காலம்தான்:) :) :) :)

வாழ்த்துகள் இளையவன். என்னை மாதிரி கிரிக்கெட் கிறுக்குங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது தங்களது ரன்னிங் கமெண்டரி
என்ன நேரம்னு சொன்னாரோ, அணியில் இருக்கப்போவது, கேப்டனா பயிற்சியாளரானு ஆரம்பிசுட்டங்க.

இளையவன்
26-09-2005, 10:18 AM
சேப்பல், தானா? கங்குலியா? என்பதை கிரிக்கட் சபைதான் தீர்மானிக்க வேண்டும் என்று காட்டமாகக் கூறியுள்ளார். நாளை கூட இருக்கும் கிரிக்கட் சபை ஆய்வுக் கூட்டத்தில் இப்பிரச்சினைக்கொரு முடிவு தெரிந்துவிடும். ஒரே அடியாய் கங்குலியை அணியில் இருந்து ஒதுக்க முயலும் சேப்பலின் நடவடிக்கை ஒரு போதும் வெற்றியளிக்கப் போவதில்லை.

kay
02-10-2005, 03:52 PM
ஒரு அணிக்குத் தலைவர் எந்த விதமான சிபாரிசுகளும் இல்லாமல் தன் திறமையாலும் உழைப்பாலும் மட்டும்தான் ஒரு சாதாரண ஆட்டக்காரராக முதலில் தேர்வு பெற வேண்டும். கங்குலி ஒரு நாள் ஆட்டத்துக்கோ டெஸ்ட் ஆட்டத்துக்கோ தேர்வாவதற்கு அருகதை இல்லாமல் தற்போது இருக்கிறார்! இவருக்குப் பின்னால் இருந்து இந்திய கிரிக்கெட்டைக் கெடுப்பது டால்மியாதான். இவர்கள் இருவரையும் களை எடுத்தால் இந்திய கிரிக்கெட் திராவிட், கெய்ப், சேவாக் துணையுடன் உருப்பட்டு விடும்! க்ரெக் சாப்பெல் ஆஸ்த்ரேலியர் ஆனாலும் பெறும் சம்பளத்துக்கு உண்மையாக உழைக்கக் கூடியவர்! இவரைத் துணைக்கொள்வது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது!

பரஞ்சோதி
02-10-2005, 04:55 PM
மிகச்சரியாக சொன்னீங்க நண்பரே!

அப்படியே உங்களைப் பற்றிய அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் கொடுங்களேன்.

அறிஞர்
04-10-2005, 09:37 PM
என்ன அன்பர்களே அனல் தெறிக்க கருத்துக்கள் தொடர்கிறது.....