PDA

View Full Version : கோல மயில்



மன்மதன்
15-09-2005, 11:52 AM
கோல மயில்


மண்டியிட்டு வரைந்த
ஓவியத்தை ஒருதடவை
உற்று பார்க்கையில்...

எவ்வளவு கவனமாக
இருந்தும் வந்துவிட்டதே
ஓவியப்பெண் முகத்திலும்
சோகம்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/arting.jpg

சாலையில்
வரைந்த ஓவியத்தை
சரிபார்க்க ஒரு தடவை
உற்றுப்பார்த்தேன்.

ஓவியத்தில்
இருந்த பெண்ணின்
முகத்திலருகே ஒரு நீர்த்துளி..

Nanban
16-09-2005, 05:31 PM
மண்டியிட்டு வரைந்த
ஓவியத்தை ஒருதடவை
உற்று பார்க்கையில்...

எவ்வளவு கவனமாக
இருந்தும் வந்துவிட்டதே
ஓவியப்பெண் முகத்திலும்
சோகம்..

சாலையில்
வரைந்த ஓவியத்தை
சரிபார்க்க ஒரு தடவை
உற்றுப்பார்த்தேன்.

ஓவியத்தில்
இருந்த பெண்ணின்
முகத்திலருகே ஒரு நீர்த்துளி..


எந்த ஒரு படைப்பும் படைப்பவனின் உணர்வுகளை எங்காவது ஓரிடத்தில் பிரதிபலிக்கத் தான் செய்யும். அப்படி பிரதிபலிக்காமல் ஒரு படைப்பை உண்டாக்கிவிட முடியும் என்று பித்துக்குளித்தனமாக சிலர் பேசலாம்.

படைப்பினூடாக படைத்தவன் தன் பயணத்தைத் தொடர்கிறான். அதை அவன் வேண்டுமென்றே செய்தாலும் அல்லது தன்னையறியாமலே நிகழும் செயலாக இருந்தாலும் அவன் தன் ஆத்மாவின் ஒரு பகுதியையாவது தன் படைப்புகளில் விட்டுச் செல்லவே செய்கிறான். தவிர்க்க இயலாத நிகழ்வு.

எத்தனை கவனமெடுத்தாலும் இந்த சோகம் விலக மாட்டேனென்கின்ற கவிஞன் உணரவில்லை - அந்த சோகம் அந்த ஓவியத்தில் இல்லை - தன்னுள்ளே இருக்கிறது. எப்படி ஒரு தாய் அல்லது தந்தையின் பிம்பத்தை நாம் குழந்தைகளிடம் தேடுகிறோமோ அது போலத் தான் - கவிஞன் தன் படைப்பை மீண்டும் வாசிக்கும் பொழுது தன் துயரத்தை, உற்சாகத்தை, இன்பத்தை என்று அனைத்து உணர்வுகளையும் அங்கு தேடுகிறான். அதானால் அந்த படைப்பில் அவனது பிம்பம் படிந்ததில் வியப்பில்லை.

அந்த ஓவியம் வரைந்து தன் உணர்வுகளை அந்த ஓவியத்திடம் பதியவைத்து விட்டு, பின் ஒரு ரசிகனாக அந்த ஓவியத்தை உற்று நோக்கி ஒரு சொட்டு கண்ணீரை உகுக்கிறான் தெரிகிறதா, அப்பொழுது தான் அந்த ஓவியத்தின் சோகம் முழுமையடைகிறது. அந்த ஓவியத்தை முழுமையடையச் செய்தவன் - படைத்தவன் அளவிற்கு அதை ரசிக்கும் ஒரு ரசிகனால் கூட செய்ய முடியும். எந்த ஒரு படைப்பும் ரசிகன் இல்லாமல் முழுமையடைவதில்லை.

தன் முனைப்பின்றி ஆழ்மனதின் மறைவுகளிலிருந்து தன்னிச்சையாக எழுந்து வரும் படிமங்களை ஒன்றோடொன்று நெருக்கமான வெளிகளில் அல்லது இணக்கமான தொடர்புகளில் நிறுத்தி வைத்து படைப்பாக்கித் தருவது ஒரு உத்தி. இந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு வடிவம் - சர்ரியலிசம் என்பர்.

சோகத்தை படைக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்ததா இல்லையா என்பது வெளிப்படையாக சொல்லவில்லை தான். ஆனால் மனதின் எங்கோ ஒரு மூலையில் உன்னுள்ளே இருக்கின்ற சோகத்தை இன்று எங்கள் மீதும் இறக்கி வைத்து விட்டாய் - ரசிக்கும் படியாக.

Manmathan watching is interesting.

Nanban
16-09-2005, 06:01 PM
ஆனாலும் இப்படி அநியாயத்துக்கு அழகான படங்களை எங்கேயா பிடிக்கிறீர்? உங்களுக்கு வேண்டாமென்ற சில படங்களை எங்களுக்கும் அனுப்பி வைக்கிறது! நாங்களும் இப்படி சில செஞ்சு பாப்போம்ல.!!!

மன்மதன்
17-09-2005, 04:43 AM
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது... சொல்ல வார்த்தைகள் இல்லை.. உங்களுக்கு இல்லாத படங்களா.. கண்டிப்பாக அனுப்பிவைக்கிறேன்... கவிதையை எங்களுக்கு பரிமாறுங்கள்..
(நண்பர்கள் நல்ல படங்களை மன்றத்தில் பதிக்கலாமே..)

kavitha
17-09-2005, 05:18 AM
ஆனாலும் இப்படி அநியாயத்துக்கு அழகான படங்களை எங்கேயா பிடிக்கிறீர்? உங்களுக்கு வேண்டாமென்ற சில படங்களை எங்களுக்கும் அனுப்பி வைக்கிறது! நாங்களும் இப்படி சில செஞ்சு பாப்போம்ல.!!!
ஏற்கனவே சொல்லிட்டேன். நீயா போடலைனா அப்புறம் உன் ஃபோட்டாவெல்லாம் இறக்குமதி பண்ணிடுவேன் ஜாக்கிரதை. (அந்த பாலிவுட் ஹீரோ படத்தையும் சேர்த்துதான் சொல்றேன் :D )

படம், கவிதை இரண்டுமே நன்றாக இருந்தது.

மன்மதன்
17-09-2005, 05:32 AM
நன்றி கவிதா.. (இப்ப, உன் போட்டோவை போட்டு கவிதை எழுதலாம்னு யோசிக்கிறேன்..

Nanban
17-09-2005, 05:42 PM
நன்றி கவிதா.. (இப்ப, உன் போட்டோவை போட்டு கவிதை எழுதலாம்னு யோசிக்கிறேன்..

தாராளமாக அனுமதி வாங்கி செய்யுங்கள்.

kavitha
20-09-2005, 08:24 AM
ஆஹா... எனக்கே ஆப்பா....

ஆஃப் ஆன - கவிதா

mythili
21-09-2005, 09:38 AM
கவிதையும் படமும் நல்லா இருந்தது :)

அன்புடன்,
மைத்து

poo
21-09-2005, 11:18 AM
அருமை மன்மதன்!! கலக்கல்..

(மன்மதன்.. காட்சியை போட்டு நிறைய கவிதைகளை பிடுங்கலாமே??!)..


காட்சியில் விழுந்த நீர்த்துளி..

சோகங்கள் மறந்தன..
சுகங்கள் தெரிந்தன..

கரையத் தொடங்கியது
ஓவியம்..
வானிலிருந்து விழுந்த
நீர்த்துளி..

வழிந்தோடும் வண்ணங்களால்
வருத்தமில்லை...
வண்ணமயமாகும் விவசாயி..
எண்ணங்களில்...

என்ன...
நேற்று அவன் வயிறு..
இன்று என் வயிறு..

மனதுகளின் சமரசங்கள்
சந்தோச சன்னல்கள்!

gragavan
21-09-2005, 11:24 AM
நண்பனின் கருத்துதான் என்னுடையதும். அவரே இவ்வளவு விளக்கமாகச் சொன்னபிறகு நான் என்ன சொல்ல.

படமும் அழகு. படத்தோடு சேர்ந்த ஓவியமும் அழகு.

படைப்பதினால் நான் பிரம்மன் என்றார் கண்ணதாசன். நான் ஒரு ரசிகன். அவ்வளவே என்றார் விசுவநாதன். கண்ணதாசனின் தன்னம்பிக்கையும் விசுவநாதனின் ரசிப்புத்தன்மையும் சிறப்பாகவே வெளிப்பட்டன என்பதைச் சொல்ல வேண்டுமோ! அப்படிப்பட்ட நிலைதான் நீ குறிப்பிடும் ஓவியருக்கும். பார்த்துப் பார்த்துச் செய்தாலும் பாத்திரத்துப் பக்குவத்தில் சுயபாந்தம் ஒட்டிக் கொள்கிறது.

Nanban
21-09-2005, 04:52 PM
ஏற்கனவே சொல்லிட்டேன். நீயா போடலைனா அப்புறம் உன் ஃபோட்டாவெல்லாம் இறக்குமதி பண்ணிடுவேன் ஜாக்கிரதை. (அந்த பாலிவுட் ஹீரோ படத்தையும் சேர்த்துதான் சொல்றேன் :D )

படம், கவிதை இரண்டுமே நன்றாக இருந்தது.

இது நன்றாக இல்லை.

நேருக்கு நேராக சந்தித்ததும் நெருக்கம் கூடி தனி அணி அமைத்து சங்கேத மொழிகளில் பேசுவதும் மற்றவர்களைத் தலையைப் பிய்த்துக் கொள்ள வைப்பதும் நன்றாக இல்லை.

அன்று சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் யாராவது ஒருவர் உண்மையைச் சொல்லித் தான் ஆக வேண்டும்.....

kavitha
27-09-2005, 06:19 AM
(மன்மதன்.. காட்சியை போட்டு நிறைய கவிதைகளை பிடுங்கலாமே??!)..

ஆதங்கம் எல்லோருக்குமேவா? :) :)



காட்சியில் விழுந்த நீர்த்துளி..

சோகங்கள் மறந்தன..
சுகங்கள் தெரிந்தன..

கரையத் தொடங்கியது
ஓவியம்..
வானிலிருந்து விழுந்த
நீர்த்துளி..

வழிந்தோடும் வண்ணங்களால்
வருத்தமில்லை...
வண்ணமயமாகும் விவசாயி..
எண்ணங்களில்...

என்ன...
நேற்று அவன் வயிறு..
இன்று என் வயிறு..

மனதுகளின் சமரசங்கள்
சந்தோச சன்னல்கள்!

இறுதிவரி அருமை பூ. தனி கவிதையாகவும் போட்டிருக்கலாமே!

kavitha
27-09-2005, 06:22 AM
இது நன்றாக இல்லை.

நேருக்கு நேராக சந்தித்ததும் நெருக்கம் கூடி தனி அணி அமைத்து சங்கேத மொழிகளில் பேசுவதும் மற்றவர்களைத் தலையைப் பிய்த்துக் கொள்ள வைப்பதும் நன்றாக இல்லை.

அன்று சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் யாராவது ஒருவர் உண்மையைச் சொல்லித் தான் ஆக வேண்டும்..... __________________
அன்புடன்
நண்பன்



இப்போதுதான் இந்தப்பக்கம் மீண்டும் வரமுடிந்தது நண்பன். பகுதிக்கு தொடர்பில்லாமல் உளறியிருந்தால் மன்னிக்கவும்.

அந்த ஃபோட்டோ கதை பற்றி தனி ஆலாபனை & அர்ச்சனை செய்யவேண்டியிருக்கிறது. எனவே தயவுசெய்து பொறுத்தருளுங்கள். எனது சகோதரிகளும் வரட்டும். வைத்துக்கொள்கிறேன் கச்சேரியை......

பிரசன்னா
06-10-2005, 08:03 PM
எவ்வளவு கவனமாக
இருந்தும் வந்துவிட்டதே
ஓவியப்பெண் முகத்திலும்
சோகம்..



கவிதை நன்றாக இருந்தது.
படமும் நல்லா இருந்தது

இளசு
06-10-2005, 10:16 PM
பொருளில்லா பாட்டானாலும்
பொருளையே போட்டுச் செல்வார்..
காசி படத்தில் ஒரு பாட்டின் வரிகள்..

சந்தையிலே விற்கும் பொருளாகி விட்டாலும்
படைப்பாளியின் மனமும் விரல் அல்லது குரலும்
ஆத்ம தொடர்பு கொண்டவை என்பதால்..
இந்தக்கோலம்...

மன்மதனின் கவிதைகள் மெருகேறும் காலம்..

மன்மதன்
08-10-2005, 05:32 AM
நன்றி பிரசன்னா...

நன்றி இளசுஅண்ணா...................