PDA

View Full Version : செப்டம்பர் 15, வியாழக்கிழமை மலேசிய செய்திகMano.G.
15-09-2005, 11:03 AM
கார் குண்டு வெடித்து 150 பேர் பலி
ஈராக் தலைநகர் Baghdad-இல் கார் குண்டு வெடித்தில் குறைந்தது 150 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். Shia முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் Kadhimiya மாவட்டத்தில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது.
தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் கார் நிறைய குண்டுகளை நிரப்பிக் கொண்டு Oruba சதுக்கத்தில் வேலைக்காக கூடியிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் கூட்டத்தில் காரை செலுத்தினான். இதில் குண்டுகள் வெடித்ததில் 150 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 160-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதே Baghdad-ன் சந்தை பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கார் குண்டு வெடித்ததில் பலர் பலியானார்கள். ஒரு ஆண்டு கழித்து மீண்டும் ஒரு கார் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------------
கேலி செய்யும் பழக்கத்தைக் களைய சமூகத்தின் பங்கு
பள்ளியில் மாணவர்களிடையே ஏற்படும் கேலி செய்யும் பழக்கத்தைக் களைய சமூகமும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் Datuk Seri Hishammuddin Tun Hussein தெரிவித்தார்.
அனைத்து தரப்பினரும் ஒன்று பட்டு செயல்பட்ல், இப்பிரச்சனையை உடனடியாக களையலாம் என அவர் மேலும் தெரிவித்தார். மேலும் பள்ளியில் ஏற்படும் கேலி செய்யும் பழக்கத்தின் பிரச்சனைகளை அப்படியே ஆசிரியர்கள் பொறுப்பில் விட்டுவிடாமல் பள்ளி அமைப்பு, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், மக்கள் பிரதிநிதி, பெற்றோர்கள் மற்றும் சமூகம் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என அவர் கருத்து தெரிவித்தார்.
இவ்வாறு அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படும் பொழுது, இப்பிரச்சனையை இலகுவாக களையலாம் என அவர் Kuala Lipis-இல் Betau தேசிய பள்ளியைத் திறந்து வைத்தபோது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


PISA-வில் சம்மன்களைச் செலுத்தும் இடம்
வாகனமோட்டிகள் தங்களது சம்மன் தொகையை சுலபமாக செலுத்துவதற்கு பினாங்கின் PISA அரங்கத்தில் சம்மன்களைச் செலுத்தும் இடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சாலை போக்குவரத்து குற்றங்களைப் புரிந்த வாகனமோட்டிகள் தங்களது சம்மன் தொகையை மூன்று நாட்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் இவ்விடத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் செலுத்தலாம் என அவ்வாட்டாரத்தின் போக்குவரத்து மற்றும் பொது அமைதி துறையின் தலைவர் Mohd Sauti Harun தெரிவித்தார்.
இதன் காரணமாக Balik Pulau தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள போலீஸ் தலைமையகத்தில் சம்மன் தொகையைச் செலுத்தும் அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூடப்படவிருப்பதாகவும் வாகனமோட்டிகள் தங்களது சம்மன்களை PISA அரங்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் செலுத்தலாம் எனவும் அவர் கூறினார்.
சுதந்திர மாதத் தினத்தை முன்னிட்டு சம்மன் தொகையில் 50 விழுக்காடு கழிவு கொடுக்கப்படுவதால் சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து சம்மன் தொகையைச் செலுத்த வேண்டும் எனவும் இந்த வாய்ப்பு 22-ஆம் திகதி செப்டம்பர் வரையில் மட்டுமே நீடிக்க்கப்படும் எனவும் Mohd Sauti Harun விளக்கமளித்தார்.


சிரம்பானில் கள்ள குறுந்தட்டுகள் பறிமுதல்
சிரம்பான் Rahang, Jalan Tuanku Antah வீடமைப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனையில் 30 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள சுமார் 5,000 VCD மற்றும் DVD குறுந்தட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகார அமைச்சின் மாநில அதிகாரி Mohd Aris Ariffin தெரிவித்தார்.
இச்சோதனை நேற்று காலை 11 மணி அளவில் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் பதிப்புரிமை பிரிவு மற்றும் நேரடி விற்பனை தலைவர்கள் உட்பட 10 அதிகாரிகள் உடன் இருந்தாக அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், சோதனை மேற்கொள்ளும் பொழுது அவ்வீட்டில் யாரும் இல்லை எனவும், இக்கள்ள குறுந்தட்டுகள் அருகில் உள்ள இரவு சந்தைகளில் விற்க வைத்திருந்திருக்கலாம் அவர் மேலும் தெரிவித்தார்.


Nicobar தீவில் நிலநடுக்கம்
இந்தியாவின் Nicobar தீவில் நேற்று இரவு 10.32 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 என பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
பினாங்கு மாநிலத்திலிருந்து 984 கிலோமீட்டர் தூரத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தீபகற்ப மலேசியாவில் எப்பகுதியிலும் உணரப்படவில்லை என ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் சுனாமி அலைகளை ஏற்படுத்தவில்லை எனவும் மேலும் இதில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் அம்மையம் தெரிவித்துள்ளது.


மோசடி கும்பல் கைது
குவாந்தானில் வெகுநாட்களாக அதிர்ஷ்டக்குழுக்கு என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி வந்த ஒரு பெண்மணி உட்பட ஏழு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதிலிருந்து 22 வயதுக்குட்பட்டவர்கள் என்பது போலீஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக பகாங் மாநில குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் Supt Zaini Jass தெரிவித்தார்.
Indera Makota என்னும் பகுதியில் அவர்கள் அனைவரும் நேற்று மாலை 6.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். Temerloh மற்றும் Maran பகுதிகளிலிருந்து பொது மக்கள் பலர் இந்த ஏமாற்று வேலைகளின் தொடர்பில் போலீசாருக்குக் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக அப்போலீஸ் அதிகாரி கூறினார்.
போலீசாரின் மேல் விசாரணைக்கு உதவும் பொருட்டு இக்கும்பலால் ஏமாற்றப்பட்ட பொது மக்கள் போலீசாருடன் தற்பொழுது தொடர்புக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
----------------------------------------------------------------------
தொடர் வெற்றியாக அமைந்த மன்மோகனின் பிரான்ஸ் பயணம்
பிரதமர் மன்மோகன் சிங்கின் பிரான்ஸ் பயணம் வெற்றியாக அமைந்தது. அதை நிருபர்களிடம் விவரித்த வெளியுறவுச் அமைச்சர் ஷியாம் சரண், 'இந்தியாவின் எரிசக்தி உற்பத்திக்குத் தேவைப்படும் ஆக்கப்பூர்வமான பயன்பட்டிற்கான அணுப்பொருட்களைத் தருவதில் பிரான்ஸ் ஒத்துழைக்க முன்வந்திருக்கிறது,' என்று குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், பிரான்சில் இருந்து நாம் வாங்கும் 'நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள்' விலை என்ன என்பதைக் கூற மறுத்துவிட்டார்.
பிரான்ஸ் நாட்டின் பெரிய வர்த்தகர்கள் பிரதமர் மன்மோகனைச் சந்தித்தனர். அப்போது அவர்களிடையே பேசிய பிரதமர், 'சிவில் அணுசக்தித் துறையில் மூலதன முதலீடு செய்தால், அதற்கான உரிய வசதிகள் செய்து தரப்படும்' என்று குறிப்பிட்டார்.
-----------------------------------------------------------------------
கத்ரீனா பாதிப்பை சரிசெய்ய மேலும் நிதி
அமெரிக்காவில் கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மேலும் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி நிதியுதவியை அதிபர் புஷ் நிர்வாகம் எதிர்பார்க்கும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஏற்கனவே இரண்டு முறை அவசரகால மசோதாவை அதிபர் புஷ் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி நிதியுதவிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களில் மேலும் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி கேட்டு அதிபர் புஷ் மீண்டும் ஒரு மசோதாவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகைக்கும் அனுமதி அளிக்கப்படும்.

நேப்பாளத்தில் துப்பாக்கி சூடு
நேப்பாளத்தில் நடைபெறும் மன்னராட்சியை எதிர்த்து தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மகேந்திர ரத்னா கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் ராணுவ வாகனம் ஒன்றை சூழ்ந்துகொண்ட மாணவர்கள், அதில் இருந்த வீரர்களைத் தாக்கினர். இந்த தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க ராணுவம் வானத்தை நோக்கி சுட்டது. இதனால், ஏற்பட்ட மோதலில் 12 மாணவர்களும் காயமடைந்தனர்.


50 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஈராக்கிலிருந்து இந்த ஆண்டு வாபஸ்
ஈராக்கில் இருந்து இந்த ஆண்டு இறுதியில் 50 ஆயிரம் படை வீரர்களை அமெரிக்கா வாபஸ் பெற்றுக்கொள்ளும் என ஈராக் அதிபர் ஜலால் தலபானி தெரிவித்துள்ளார். ஈராக் அதிபர் ஜலால் தலபானி வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் புஷ்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை படிப்படியாக திரும்ப பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்த ஆண்டின் இறுதியில் ஈராக்கிலிருந்து 50 ஆயிரம் படை வீரர்களை அமெரிக்கா திரும்ப பெற்றுக்கொள்ளும் என நம்புகிறேன்.
அமெரிக்க வீரர்கள் தாயகம் திரும்புவதால் ஏற்படும் பாதுகாப்பு பிரச்னையை ஈராக்கின் படைவீரர்களை கொண்டு நிவர்த்தி செய்துகொள்வோம். இவ்வாறு ஜலால் தலபானி தெரிவித்தார். ஈராக்கில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க படை வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------------
காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட்
காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட்டையும் சேர்க்க ஆர்வமாக இருக்கிறது இந்தியா. வரும் 2010ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், தலைநகர் டில்லியில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கி விட்டன.
டில்லி, நேரு ஸ்டேடியத்தில் காமன்வெல்த் போட்டிகளுக்கான அலுவலகம் நேற்று முன்தினம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும், 2010 காமன்வெல்த் போட்டி அமைப்புக்குழுத் தலைவருமான சுரேஷ் கல்மாடி அளித்தப் பேட்டியில், '2010 காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட்டையும் சேர்க்க விரும்புகிறோம்.
வழக்கமாக 15 விளையாட்டுக்கள் மட்டுமே இடம் பெறும். காமன்வெல்த் அமைப்பிடம் நாங்கள் பேசி, 20 விளையாட்டுக்களுக்கு ஒப்புதல் வாங்கியிருக்கிறோம். 50 ஓவர் போட்டி அல்லது ட்வென்டி / 20 போட்டி... எந்த வகையில் நடத்துவது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் போர்டு ஆகியவற்றிடம் ஆலோசனை கேட்டிருக்கிறோம்.
அதேசமயம், முன்னணி வீரர்கள் பங்கேற்றால் மட்டுமே, கிரிக்கெட்டை சேர்ப்பது என்பதில் உறுதியாக இருக்கிறோம்,' என்றார்.

நன்றி வணக்கம்மலேசியா.காம்

மனோ.ஜி