PDA

View Full Version : செப்டம்பர் 14, புதன்கிழமை மலேசியசெய்திகள்Mano.G.
14-09-2005, 09:23 AM
நாட்டின் பாதுகாப்புக்கு வலிமை அவசியம்-Najib
மலேசியாவிற்கு நேரடி ராணுவ மிரட்டல் இல்லாவிட்டாலும் பாதுகாப்பு தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதில் நாம் பின்தங்கி விடக் கூடாது என துணைப் பிரதமர் Datuk Seri Mohd Najib Tun Abdul Razak நேற்று தெரிவித்தார்.
தற்காப்பு மட்டுமின்றி பொருளாதாரம், விவசாயம், மருத்துவம், கல்வி மற்றும் ஒட்டுமொத்த அரசாங்க நிர்வாகத்தையே ஊடுருவக்கூடிய தொழில்நுட்ப மிரட்டலை மலேசியா சாதார½மாக கருதி விட முடியாது என துணைப் பிரதமர் தெரிவித்தார்.
அறிவியலும் தொழில் நுட்பமும் 21-ஆம் நூற்றான்டில் ஆற்றும் பங்கு மிகப்பெரியது எனவும், அறிவியலும் தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்கும் நாடு பெரும்பாலும் போரில் ஆதிக்கம் கொண்டிருப்பதகவும் அவர் மேலும் விளக்கினார்.
இதனால், மலேசியாவும் பாதுகாப்பு அம்சங்களில் பின்தங்கி விடாமல் இருôÀது உறுதி செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
-------------------------------------------------------------

கோரிக்கை¸û கிடைத்தால் பழுதடைந்த அரசாங்க கட்டிடங்கள் மற்றும் பள்ளிகள் மறுசீரமைக்கப்படும்
நாட்டில் பழமை வாய்ந்த அரசாங்க கட்டிடங்கள் அனைத்தும் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது என்றும் பழமை வாய்ந்த அரசாங்க கட்டிடங்கள் அனைத்தையும் பொதுப்பணித் இலாகா புதுபித்து அல்லது சீர்படுத்தி விட்டதாகவும் அத்துறையின் அமைச்சர் Datuk Seri S. Samy Vellu நேற்று தெரிவித்தார்.
அனால் ஒரு சில பழைய கட்டிடங்களில் மட்டும் கறையான் அரித்திருக்கும் எனவும் ஆனால் பொதுப்பணி இலாகா அவைகளை உடனடியாக சீர் செய்து விடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட இலாகாவிடமிருந்து கோரிக்கை வந்ததும் பொதுப்பணித் துறை பழுதடைந்த அரசாங்க கட்டிடங்கள் மற்றும் பள்ளிகளை உடனடியாக மறுசீரமைப்பு செய்யும் தயாராக உள்ளது என அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், பழுதடைந்த பள்ளிகளை மறு சீரமைப்பு செய்ய முதலில் கல்வி அமைச்சு உத்தரவு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். இதனிடையே, தற்போது பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள பழைய கட்டிடங்கள் அனைத்தும் பழுது பார்க்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால் தோட்டப்புறங்களில் உள்ள சில பள்ளிகள் இன்னும் பழுது பார்க்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் Datuk Seri Hishammuddin Tun Husein உத்தரவிட்டால் உடனடியாக பழுதடைந்த பள்ளியின் மறுசீரமைப்பு பணி விரைவில் தொடங்கும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

STRIDE தனது திறமையை மேலும் அதிகரிக்க வேண்டும் - நஜீப்
மலேசியா மற்ற நாடுகளுக்கு இணையாக நவீன இராணுவ ஆயுதங்களை பெற்றிருக்க STRIDE எனப்படும் தற்காப்பு தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆய்வு மையம் தனது திறமையை மேலும் அதிகரிக்க வேண்டும் என துணைப் பிரதமர் Datuk Seri Mohd Najib Tun Abdul Razak தெரிவித்தார்.
தயாரிக்கப்படும் இராணுவ சாதனங்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும் எனவும் அச்சாதனங்களின் மீது சிறப்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மலேசியா நியாயமான விலையில், தரமான ராணுவ தளவாடங்களை பெற STRIDE முக்கிய பங்கு வகிக்கும் எனவும் இதனால் மலேசிய ராணுவ படையின் தரத்தை மேலும் வலுவடைய செய்யலாம் எனவும் அவர் காஜாங்கில் STRIDE அரங்கத்தை திறந்து வைத்தபோது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மலாக்கா நீரிணை பாதுகாப்பானதே...
மலாக்கா நீரிணையில் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அது பாதுகாப்பாகவே இருக்கின்றது எனவும் அரச மலேசிய போலீஸ் படை நேற்று அறிவித்துள்ளது.
இந்த நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் தினமும் ஈடுபட்டு வருவதாக உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதி இலாகாவின் துணை இயக்குனர் DCP Mohd Anuar Mohd Zain தெரிவித்தார்.
மலேசியா, இந்தோனிசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு படையினர் ஒருங்கிணைந்து அங்கு தினசரி பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த நீரிணையில் கடத்தல், கடற்கொள்ளை ஆகிய சம்பவங்கள் நடக்காமல் இருக்க பல நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருவதா¸வும் அவர் கூறியுள்ளார்.


பேருந்து தடம் புரண்டதில் 27 பேர் காயம்
பினாங்கு Bukit Permandangan Indah, Paya Terubong- சாலையில் பேருந்து ஒன்று தடம் புரண்டதில் 27 பேர் காயமடைந்தனர். சீன குடும்பம் வாடகை பேருந்தில் இடுகாட்டிற்கு செல்லும் வழியில் இவ்விபத்து நிகழ்ந்ததாக அவ்வாட்டார போக்குவரத்து போலீஸ் அதிகாரி Insp Mohd Sauti Harun தெரிவித்தார்.
இவ்விபத்தில் மூவர் படுகாயமடைந்ததாகவும் இதர பயணிகள் சிறு காயங்களுக்கு ஆளானதாகவும் அப்போலீஸ் அதிகாரி கூறினார். இவ்விபத்து நேற்று காலை 11.30 மணியளவில் நிகழ்ந்ததாகவும் பேருந்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.காடுகளில் தீ...
பந்திங், Kampung Lombong-கில் 41.3 ஹெக்டர் நிலப்பரப்பு காடு 3 நாட்களுக்கு முன் தீப்பற்றிக் கொண்டது. கடுமையான வெயில் மற்றும் வறட்சி காரணமாக அக்காட்டில் பற்றிக் கொண்ட தீயை அணைக்க இன்னும் ஒரு வார காலமாகும் என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
Kuala Langat மற்றும் Kuala Selangor-இன் தீயணைப்பு படையின் சுமார் 60 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி¢ல் பலத்த காற்று வீசுவதால் தீ அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவுவதாகவும் இதனால் தீயை அணைக்க சிரமமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே Batang Berjuntai மற்றும் Kuala Selangor-இல் உள்ள காடுகளிலும் தீப்பற்றி எரிவதாக அவர் தெரிவித்தார்.
--------------------------------------------------------------
பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து : 5 பேர் பலி
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டி என்ற இடத்தில், பட்டாசுத் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு தீபாவளியையொட்டி பட்டாசுத் தயாரிப்பு நடந்து வருகிறது.
நேற்று மாலை பட்டாசுகளைக் காய வைப்பதற்காக ஒரு அறையில் போட்டு வைத்திருந்தனர். அந்த அறையில் தீப்பற்றியதால் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலையில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
--------------------------------------------------------------
பிலிப்பைன்ஸ் போலீஸ் முகாமில் குண்டுகள் வெடித்தன
நேற்று முன்தினம் இரவு பிலிப்பைன்ஸ் போலீஸ் முகாமில் குண்டுகள் வெடித்தன. இதில் சில கட்டடங்களில் தீ பிடித்தது. மேலும் சில கட்டடங்களில் பிளவு ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


கம்போடியன் விமான கடத்தல் முடிவுக்கு வந்தது
கம்போடியாவிற்குச் சொந்தமான விமானம் நேற்று இரவு புளோரன்சியாவிற்கும் நவியாவுக்கும் இடையே பறந்து கொண்டிருந்த போது ஆயுதங்கள் ஏந்திய இரண்டு பேர் அந்த விமானத்தை கடத்தினர்.
அதில் 25 பேர் இருந்ததாக தெரிகிறது. உடனே அந்த விமானம் பகோடாவில் தரையிறக்கப்பட்டது. அதன்பின் அரசு அதிகாரிகளுக்கும் விமான கடத்தல் காரர்களுக்கும் இடையே பேச்சுவார்தை நடந்தது.
2 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின் கடத்தர்காரர்களான அப்பாவும் மகனும் சரணடைந்தனர். அதன் பின் விமானத்தில் பயணித்த 25 பேரும் விடுவிக்கப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்ட அப்பா, மகன் இருவரையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


துபாயில் ரசாயனக் கிடங்கில் தீ: இந்தியர்கள் உட்பட 80 பேர் காயம்

துபாயில் நேற்று அதிகாலை ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்தியர்கள் உட்பட 80 பேர் படுகாயம் அடைந்தனர். இரண்டு கிடங்குகளும் தொழிலாளர்களின் முகாம் ஒன்றும் தீயில் எரிந்து சாம்பலாகின.
அந்த முகாமில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்களும் தங்கியிருந்தனர். அவர்களில் 80 பேர் இந்த தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். சார்ஜா மக்கள் பாதுகாப்புப் படையினர் மற்றும் அஜ்மான், துபாய் ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர் என தெரிய வந்துள்ளது.


ஈராக் பிரதமரை கொன்றால் ரூ.45 லட்சம் பரிசு - தீவிரவாத அமைப்பு அறிவிப்பு
ஈராக் பிரதமர் இப்ராகிம் ஜாபாரியைக் கொல்பவர்களுக்கு ரூ.45 லட்சம் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு தீவிரவாத அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. ஈராக்கில் அமெரிக்க ஆதரவுடன் பிரதமர் இப்ராகிம் ஜாபாரி தலைமையிலான அரசாங்கம் நடைபெற்று வருகிறது.
இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஈராக்கை சேர்ந்த தீவிரவாத இயக்கங்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், தீவிரவாத இயக்கம் ஒன்றின் தலைவர் தங்களின் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு இணையத்தளம் மூலம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
தேதி ஏதும் குறிப்பிடப்படாத அந்த இணையத்தள செய்தியில், ஈராக் பிரதமரை கொல்லும் தீவிரவாத இயக்கத்தை சார்ந்த நபர்களுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் (ரூ.45 லட்சம்) பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் ஈராக் உள்துறை அமைச்சர் பயான் ஜாபர் தலைக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலரும் (ரூ.22 லட்சத்து 50 ஆயிரம்), ராணுவ அமைச்சரின் தலைக்கு 30 ஆயிரம் அமெரிக்க டாலரும் (ரூ.13 லட்சத்து 50 ஆயிரம்) பரிசுத்தொகையை அறிவித்துள்ளார்.
இந்த தகவல் எதுவும் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. ஆனால், இணையத்தளத்தில் இடம் பெற்றிருந்த தீவிரவாதிகளின் அடையாளக்குறி (Logo) மூலம் இந்த தகவல் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் அமெரிக்க மற்றும் ஈராக்கின் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
-------------------------------------------------------------
வெற்றி பெற்ற West Ham அணி
West Ham மற்றும் Aston Villa அணிகளுக்கிடையே நடைபெற்ற காற்பந்தாட்டத்தில் West Ham அணி 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் Aston Villa அணியை வீழ்த்தியது. ஆட்டம் தொடங்கிய 25-வது நிமிடத்தில் West Ham அணியின் முதல் கோலை Harewood புகுத்தினார்.
அவ்வணியின் இரண்டாவது, மூன்றாவது கோலை Harewood மீண்டும் ஆட்டத்தின் 29-வது மற்றும் 50-வது நிமிடத்தில் Harewood புகுத்தினார். மேலும், ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில் அவ்வணியின் நான்காவது கோலை Benayoun புகுத்தினார். Harewood இவ்வாட்டத்தில் தலா மூன்று கோல்களை புகுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வாணக்கம்மலேசியா.காம்


மனோ.ஜி