PDA

View Full Version : காதல் தோழி



kalvettu
14-09-2005, 06:25 AM
தோழியிடம் சொல்வதற்கென்ன??
தைரியமாய் சொல்லிப்போ
என்னை காதலிப்பதாய்

உன் உணர்ச்சிகளின்
வடிகால் தானே நான்
இதில்
காமத்திற்கு மட்டுமென்ன விதிவிலக்கு!!?

புரியாத இரவுக்கான எதிர்பார்ப்பில்
புரிந்து கொண்டதாக செய்யப்படும்
(திரு)மணங்களில்
விருப்பமில்லை எனக்கு
வா
புரிந்துகொள்வோம்
நம்
தேவைகளை
அறிந்து கொள்வோம்
நம் மனங்களை.

மனிதனை கொன்று
சம்பிரதாயம்
காக்கத் துடிப்பவர்களுக்கான
தண்டனையாய்
தோற்கடிப்போம்
சம்பிரதாயத்தை

(திரு)மணத்தினால் அல்லாமல்
மனத்தினால் பந்தம்
செய்து கொள்வோம்

விரும்பும் வரை

நீ உன் வீட்டிலும் நான்
என் வீட்டிலும்
தங்கிக்கொள்வோம்

உனக்குத் தேவை
என்கிறபோது
நானும்
எனக்குத் தேவை என்கிறபோது
நீயும்
சமரசம் செய்துகொள்வோம்
விருப்பு வெறுப்புகளை
தீர்த்துக் கொள்வோம்
அது இச்சையே ஆனாலும்.

நீ
எனக்காக பேசு..
பெண்ணியம் பேசு
கலவியில் கூட
வேண்டுவன கேள்
என பேசு.

மனைவி தோழியானால்
ஆச்சர்யம்
தோழி மனைவியானால்
அதிர்ஷ்டம்
சொல்லிப்போ
காதலிப்பதாய்

இப்போதும் நான் உன்
தோழி
இப்போது தான் நான்
தோழி
தைரியமாய் சொல்லிப்போ
என்னை காதலிப்பதாய்

- பிரேம்

gragavan
14-09-2005, 08:27 AM
கல்வெட்டு மிகவும் வீரியமான கருத்தைச் சொல்லியிருக்கின்றீர்கள். இதில் எனக்கும் ஓரளவு ஒப்புதல்.

பிரசன்னா
14-09-2005, 01:41 PM
நல்ல வரிகள். அருமையான கவிதை!

Nanban
14-09-2005, 06:02 PM
கல்வெட்டு -

An act without responsibility என்று சொல்வார்கள் தெரியுமா அது மாதிரி இருக்கிறது.

கமலஹாசன் - இவ்வாறு தான் தன் மனைவியை வைத்திருந்தார். குழந்தைகள் பெற்றுக் கொண்டார். ஆனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கமலஹாசன் ஒரு intellectual ஏன்பதை யாராலும் மறுக்க முடியாது. (வேண்டுமானால் அவர் இயங்கும் தளத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் தன்னை நடத்திக் கொள்ளும் விதத்தையும் விமர்சனம் செய்யலாம்.) ஆனாலும் அவர் இறுதியில் திருமணம் என்ற ஒரு பந்தத்திற்குள் நுழைந்து தான் ஆக வேண்டியதிருந்தது. இந்தக் கவிதையில் குறிப்பிட்டது போல எத்தனை பேர் Living in என்று வெளிநாட்டில் குறிப்பிடப்படும் ஒப்பந்தமின்றி மண வாழ்க்கை என்ற வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ள முடியும்?

சரி கவிதைக்குள் வருவோம்.

சில வரிகள் - கமலதாஸை நினைவு படுத்துகிறது.

Nanban
14-09-2005, 06:29 PM
கமலாதாஸ் எழுதிய சில வரிகள் இதோ:

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4907


மாயக் கண்ணாடி..... கமலா தாஸ்

உன்னிடத்தில் கலவி புரிய
ஒரு ஆணைக் கண்டுபிடிப்பது
உனக்கு எளிது தான்.

ஆனால், பெண்ணாகிய
உன் தேவைகளைப் பற்றி மட்டும்
நேர்மையாக இரு.

.............
.............
...............

இதற்கு மேல் அதை மொழி பெயர்த்தால், அடிக்க வருவீர்கள் என்பதால், பாதியிலேயே விட்டுவிட்டேன்....


ஒரு பெண் தன் தேவைகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என கூறும் வகையில் அமைத்திருக்கும் அந்த கவிதை.

ஆனால் கல்வெட்டு, உங்கள் கவிதையில் உடலுறவிற்காக சமரசம் செய்து கொள்ள விரும்பும் இருவரைத்தான் தெரிகிறதே தவிர வேறு எதுவும் தெரியவில்லை. ஒரு வேளை தமிழில் சில வருடங்களுக்கு முன் ஒரு திரைப்படம் வந்தது - அதாவது ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு மண வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர் என்று. அந்த திரைப்படத்தின் தாக்கமா அல்லது அந்த திரைப்படத்தின் மூல ஆங்கில திரைப்படத்தின் தாக்கமா என்று தெரியவில்லை - உங்கள் கவிதை.

மேலும்...

Nanban
14-09-2005, 06:44 PM
உன் உணர்ச்சிகளின்
வடிகால் தானே நான்
இதில்
காமத்திற்கு மட்டுமென்ன விதிவிலக்கு!!?


மிக மிக சரியான எதிர்பார்ப்புகள் - ஆத்மார்த்மான தோழியுடன் பகிர்ந்து கொள்ளப்படும் காமம். ஆனால் அந்தப் பெண் மற்ற சமூக நிர்ப்பந்தங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் - அது முடியுமா? திருமணம் ஆகாதவளாக இருக்க வேண்டும். இல்லையென்றால் - கலவி கள்ள உறவாகி விடும். அக்கா தங்கைகள் அற்றவளாக இருக்க வேண்டும் - அல்லது இவளின் செயல் அவர்களைப் பற்றியும் பாதிப்பதாக ஆகிவிடும். பெற்றவர்கள் அற்றவளாக இருக்க வேண்டும். அல்லது அவர்கள் தலை குனியும் படி நேரிடலாம். அப்படியானால் அவள் அநாதையாகத் தான் இருக்க வேண்டுமா? அல்ல - அவள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையைக் கடந்தவளாக இருக்க வேண்டும். அவள் குடும்பத்தாரும் சமூக நிர்ப்பந்தங்களை பணபலம் கொண்டு வாயடைக்கச் செய்யும் நிலையில் இருக்க வேண்டும்.

இத்தகைய வலுவான தோழிகள் - மேல் மேல் தட்டில் தான் கிடைப்பார்கள். அல்லது நடிகைகளாக இருக்க வேண்டும்.

Nanban
14-09-2005, 06:58 PM
புரியாத இரவுக்கான எதிர்பார்ப்பில்
புரிந்து கொண்டதாக செய்யப்படும்
(திரு)மணங்களில்
விருப்பமில்லை எனக்கு


திருமணம் முதலிரவிற்காகவோ அல்லது உடலுறவிற்காகவோ நடத்தப்படவில்லை, திருமணங்கள் பல - ஆண் பெண் புரிதல் அன்றி செய்யப்படுகின்றன என்பது உண்மை தான். ஆனால் அந்தப் புரிதல் உடலுறவு எவ்வாறு நிகழ வேண்டும் என்ற புரிதலாகவா இருக்க வேண்டும்? திருமணத்தைப் பற்றிய புரிதல் உங்கள் கண்ணோட்டத்தில் மிகத் தவறானதாக இருக்கிறது. உடலுறவு மட்டுமே காதல் என எண்ணும் நீங்கள் ஆண் / பெண் உறவையே தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள்.


புரிந்துகொள்வோம்
நம்
தேவைகளை
அறிந்து கொள்வோம்
நம் மனங்களை.

எதைப் புரிந்து கொள்ள அழைக்கிறீர்கள். நம் தேவைகள் என்கிறீர்கள். எது நம் தேவை?




உனக்குத் தேவை
என்கிறபோது
நானும்
எனக்குத் தேவை என்கிறபோது
நீயும்
சமரசம் செய்துகொள்வோம்
விருப்பு வெறுப்புகளை
தீர்த்துக் கொள்வோம்
அது இச்சையே ஆனாலும்


விருப்பு வெறுப்புகள் இச்சை - இவையெல்லாம் தான் தேவைகளா? விருப்பு இருக்கலாம். ஆனால் வெறுப்பு எங்கிருந்து வந்தது? திருமணம் என்ற பிணை தேவை அல்ல என்ற பிறகு வெறுப்பு வருகிறதா? அவள் அவளின் அப்பன் வீட்டில் இருந்து கொள்ள வேண்டும். இவன் அவன் அப்பன் வீட்டில் இருந்து கொள்ள வேண்டும். அப்படியிருந்தும் வெறுப்பு வருகிறது என்றால், திருமண பந்தத்திற்குள் இந்த வெறுப்பு வருவதில் தவறென்ன.? உங்களுடைய திருமணமற்ற உடலுறவு - எந்த விதத்தில் உயர்ந்தது.?

Nanban
14-09-2005, 07:32 PM
தோழி என்பது காதலியை விட புனிதமான உறவாகக் கருதுபவன் நான். அந்தத் தோழியையே மனைவியாகக் கிடைக்கும் வரமும் பெற்றவன். இன்னும் மனைவி அளவிற்கு நேசிக்கவும் மதிக்கவும் எனக்குத் தோழிகள் உண்டு. அதனால் தோழிகள் என்ற உறவை கொச்சைப்படுத்தும் வகையில் எழுத வேண்டாம்.

நீங்கள் சொல்ல வரும் கருத்து கிட்டத்தட்ட என்ன என்று என்னால் ஊகிக்க முடிகிறது. ஆனால் அதை சொல்லியவிதம் அல்லது நீங்கள் அத்தகைய உறவை அணுகும் விதம் - இவற்றில் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறீர்கள்.

நீங்கள் சில நேரங்களில் சில மனிதர்கள் - கதை வாசித்திருக்கிறீர்களா? அதில் வரும் கங்கா தன்னுடைய கல்லூரிக் காலத்தில் கற்பழித்தவனையே பின்னாளில் தேடிக்கண்டுபிடித்து, கோபம் தாழ்ந்து பின்னர் ஆத்மார்த்தமான சிநேகமாகி பிறகு பிரிந்து விடுகிறார்கள் - அந்த மனிதனின் குழந்தையின் மனைவியின் விருப்பத்திற்காக என்று வரும். அது ஒரு விநோதமான உறவு. கங்கா - தனித்தவளாக இருப்பாள் ஒரு வயதான் தாயின் துணையுடன். அவன் அவள் வீட்டிற்கு வருவான். மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பான். தன்னுடைய அத்தனை பிரச்னைகளையும் அவளுடன் பகிர்ந்து கொள்வான். அங்கேயே உட்கார்ந்து தண்ணீ கூட அடிப்பான் - அவள் அப்பளம் பொரித்து போட. சில சமயம் அங்கேயே தூங்கியும் கூட போய்விடுவான். ஆனால் ஒரு சமயம் கூட அவர்களுக்கிடையே உடலுறவு நிகழவில்லை. ஆனால் வாசிக்கும் நமக்கோ அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமே என்ற ஆதங்கம் வரும். ஆனால் ஒருபோதும் நம் மனம் ஏங்கியதில்லை எப்பொழுது அவர்கள் உடலுறவு செய்து கொள்வார்கள் என்று. ஏனென்றால் ஆண் / பெண் உறவில் உடலுறவு என்பது ஒரு அங்கமே அல்ல.

உடலுறவு மட்டுமே தேவை தோழியுடன் என்ற உங்கள் கருத்தை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால் கூட, அந்த உறவிலும் ஒரு நேர்மை இருக்க வேண்டுமல்லவா? அதென்ன நீ உன் வீட்டில் நான் என் வீட்டில் ? தோழமை என்பதே ஒருவருக்கு மற்றவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்று தானே? அவரவர் வீட்டில் இருந்து கொண்டு தேவை என்று வந்ததும் சந்தித்து கொள்வீர்களா? உடலுறவிற்கான உந்துதல் மணி அடித்ததும் எழும் பசி மாதிரியா? ஒருவரை மற்றவர் பார்த்து ரசித்து சிறுசிறு அசைவுகளில் மனம் கிளர்ந்து மணம் நுகர்ந்து சிறு சிறு ரகசிய மொழிகள் பேசி பேசி பாதி இன்பத்தை ஒருவர் மற்றவரை தீண்டும் முன்னே அனுபவித்து பின்னரே அந்த இன்பம் நிகழும். நீங்கள் சொல்வது போல உந்துதல் ஏற்பட்டவுடன் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு சுகம் அனுபவிக்கும் முறைமை அல்லப்பா அது.
அதற்கு வேறு பெயர் வைத்திருக்கிறார்கள் - விபச்சாரம். (அவள் வீட்டில், அவன் வீட்டில் - என்றால் வேறு எங்கு வைத்து இச்சை தீர்க்க முடியும் - லாட்ஜில் தானே?)

சார், நீங்க மேலை நாட்டு நாகரீகத்தில் நிகழும் சில தனித்த நிகழ்வுகளைக் கேட்டு எந்த பொறுப்புணர்ச்சியையும் ஏற்றுக் கொள்ள மறுத்து வெறும் உடலுறவிற்காக மட்டும் ஒரு தோழியைத் தேடுகிறீர்கள் - அதுவும் அவளுக்கான செலவுகளைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்து.

ஏற்கனவே எழுதியிருந்தேன் - Living in என்ற முறையைப் பற்றி. இது பெரும்பாலும் Scandinavian countries என்றழைக்கப்படும் வட ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருக்கின்றது. அத்தகைய வாழ்க்கை முறையை ஏற்று வாழ்ந்து வரும் நபரை நான் சந்தித்திருக்கிறேன். சுவீடனைச் சார்ந்தவர். அஸ்ட்ராஜெனிக்கா என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கூடத்தைத் திறப்பதற்காக வந்திருந்தார். அவர் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். குழந்தைகள் உண்டு. திருமணம் ஆகவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் சம்பாதிக்கிறார்கள் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். குடும்பச் செலவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். குழந்தைகளிடம் கடமை உணர்வு மிக்க பெற்றோர்களாக இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரை ஒருவர் மதிக்கும் நண்பர்களாக வாழ்கிறார்கள்.

நான் நினைக்கிறேன் - நீங்கள் சொல்ல வந்ததும் இத்தகைய ஒரு வாழ்க்கை முறையைத் தான். ஆனால் ரொம்பவும் குழம்பிப் போய் இருக்கிறீர்கள். திருமண வாழ்க்கையில் புரிதல் இல்லை என்கிறீர்கள். அங்கு இல்லாத புரிதல் என்பது நான் மேலே குறிப்பிட்ட இந்த ஒருவர் மீது மற்றவருக்கான மரியாதை. Respecting beyond the Egos. Not harming the self esteem of the person. அகங்காரம், அகம்பாவம் அற்ற அடுத்தவரின் தன்மானத்தைப் பாதிக்காத நட்பு. இது தான் ஆண் பெண் உறவின் அடிப்படையாக இருக்க வேண்டும். அதை விட்டு நான் கூப்பிட்டதும் நீ உன் அப்பன் வீட்டில் இருந்து நான் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து விடு என்று அழைப்பது - மகா கேவலம் - It doesn't even qualify for an erotica written by an anonymous author.

Please have respect for others.
மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

பிரியன்
14-09-2005, 08:46 PM
அன்பு நண்பர் கல்வெட்டிற்கு......

பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது உங்கள் கவிதை. அத்தனையும் விவாதத்திற்குரியவை.
நட்பு, காதல், கற்பு, பெண்ணியம், கலாச்சார விழுமியங்கள் எல்லாவற்றை பற்றியுமான உங்கள் எண்ணங்களை சொல்லியிருக்கிறீர்கள்...

ஆனால் எண்ணத்திலும், சொல்லிய விதத்தில் எல்லாம் ஊனமாகி கிடக்கிறது.....

தோழி, காதலி, மனைவி என்று எல்லா நிலைகளிலும் ஒரு தெளிவற்ற தன்மையை மட்டுமே காண முடிகிறது...

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான ஒரே விசயம் இன்பம் தூய்த்தல் என்று முடிவுகட்டி தோழி காதலி மனைவி என எல்லா
உறவு நிலைகளிலும் தேவையே அதுதான் என்ரறு சொல்லி விட்டீர்கள்.....

நட்பு பவித்திரமானது... ஆண் - பெண் நட்பின் குணங்களை மிக அழகாக சொல்லியிருக்கும் கவிதைத் தொகுப்பு அறிவுமதி அண்ணனின் நட்புக் காலம்

துளியே
கடல்
என்கிறது
காமம்
கடலும்
துளி
என்கிறது
நட்பு
xxxxx
ஒரு ஞாயிற்றுக்கிழமை
மதியத்தில் தாமதமாய் வந்து
என்னை எழுப்பாமலேயே
நீ சொல்லியபடி
நான் சமைத்து வைத்திருந்த
உணவை நிதானமாகச்
சாப்பிட்டுவிட்டு
என் பக்கத்திலேயே வந்து
படுத்துத் தூங்கிவிட்டும்
போயிருக்கிறாய் என்பதைச்
சொல்லிப் பரிகசித்தன
என் தலையணையில்
சில
மல்லிகைகள்...

உண்மையான நட்பு அத்தனை ஆழமானது..... அங்கு பேசுபுவை மனங்களின் மொழிதான். உடலின் மொழி அல்ல...

தோழியோ, காதலியோ - தோழனோ காதலனோ உடல்தேவையின் வடிகாலாய் மட்டும் பார்க்கும் போதே அங்கே நட்பும்
செத்து விடுகிறது காதலும் செத்து விடுகிறது.....

திருமண பந்தம், தாலி இவற்றை உதறுவதா பெண்ணுரிமை, பெண்ணியம்.... அது சம்பந்தப்பட்டவர்களின் மனநிலையை பொறுத்தது.
பெண்களுக்கு சம உரிமை, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் என்று அவர்களை சமநிலையில் வைப்பதே.
மாறாக
உடல் சுகத்திற்கான சுதந்திரம்தான் பெண்ணுரிமை , பெண்ணியம் என நினைப்பது அபத்தம்...
மனிதனைக் கொன்று சம்பிரதாயத்தை காப்பவர்களுக்கு தண்டனையாக அந்த சம்பிரதாயத்தை தோற்கடிக்க நினைக்கிறீர்கள்
எப்படி முறையற்ற உறவாலா?

பெரும்பாலான திருமணங்கள் புரிதல் இல்லாமல் நடக்கிறது. ஆகையால் புரிந்து வாழ்வோம் வா என்கிறீர்கள். வரவேற்கக்குடியதே..
ஆண்-பெண்ணிற்கான உறவு ஒருவருக்கொருவரை புரிந்து தேவைகளை அறிந்து இணையும்போது அர்த்தப்படுகிறதே தவிர இரவின் இன்பத்தில் மட்டும் அல்ல.

திருமண பந்தத்தில் இது கிடைப்பதில்லை. ஆனால் மொத்த திருமண வாழ்க்கையை இரவின் சில மணித்துளி இன்பத்திற்காக மட்டுமே என்பதுகண்ணை மூடிக்கொண்டு உலகமே
இருளாக இருக்கிறது என்று சொல்லுவதற்கு சமம்.
சமரசம் புரிவது எதற்காக?
விருப்பு வெறுப்புகளை தீர்ப்பது எதற்காக?
பெண்ணியம் பேசுவது எதற்காக?
எல்லாம் உடல் தேவைக்கு மட்டுமென்று வந்த பிறகு அவள் விபச்சாரியாகவே இருந்துவிட்டு போகட்டுமே.....

( கவிதையில் நீங்கள் சொல்ல நினைப்பதை தெளிவாக சொல்லாதபோது இதுபோன்ற வாசகனின் புரிதல்கள் தவிர்க்க முடியாதவை )

kalvettu
15-09-2005, 07:12 AM
நட்பு பவித்திரமானது... ஆண் - பெண் நட்பின் குணங்களை மிக அழகாக சொல்லியிருக்கும் கவிதைத் தொகுப்பு அறிவுமதி அண்ணனின் நட்புக் காலம்

http://premkalvettu.blogspot.com/2005/07/blog-post_27.html

kalvettu
15-09-2005, 07:20 AM
திருமணம் முதலிரவிற்காகவோ அல்லது உடலுறவிற்காகவோ நடத்தப்படவில்லை, திருமணங்கள் பல - ஆண் பெண் புரிதல் அன்றி செய்யப்படுகின்றன என்பது உண்மை தான்



அதென்ன நீ உன் வீட்டில் நான் என் வீட்டில் ? தோழமை என்பதே ஒருவருக்கு மற்றவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்று தானே? அவரவர் வீட்டில் இருந்து கொண்டு தேவை என்று வந்ததும் சந்தித்து கொள்வீர்களா? உடலுறவிற்கான உந்துதல் மணி அடித்ததும் எழும் பசி மாதிரியா? ஒருவரை மற்றவர் பார்த்து ரசித்து சிறுசிறு அசைவுகளில் மனம் கிளர்ந்து மணம் நுகர்ந்து சிறு சிறு ரகசிய மொழிகள் பேசி பேசி பாதி இன்பத்தை ஒருவர் மற்றவரை தீண்டும் முன்னே அனுபவித்து பின்னரே அந்த இன்பம் நிகழும். நீங்கள் சொல்வது போல உந்துதல் ஏற்பட்டவுடன் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு சுகம் அனுபவிக்கும் முறைமை அல்லப்பா அது.
அதற்கு வேறு பெயர் வைத்திருக்கிறார்கள் - விபச்சாரம். (அவள் வீட்டில், அவன் வீட்டில் - என்றால் வேறு எங்கு வைத்து இச்சை தீர்க்க முடியும் - லாட்ஜில் தானே?)



விரும்பும் வரை

நீ உன் வீட்டிலும் நான்
என் வீட்டிலும்
தங்கிக்கொள்வோம்

திருமணம் செய்தவுடன் பெண்கள் கிளம்பி உங்களுடன் வந்துவிட வேண்டும் என்பது தான் தங்கள் நியாயம் என்றால் மன்னித்துக் கொள்ளவும்

kalvettu
15-09-2005, 07:41 AM
ஆனால் எண்ணத்திலும், சொல்லிய விதத்தில் எல்லாம் ஊனமாகி கிடக்கிறது.....
மனுஷ்யபுத்திரன் சொல்லியதாக ஞாபகம்...

கவிதையினுடைய தளத்தை யாருக்கும் விளக்கவேண்டாம்....எப்போது வாசிப்பவன்
அந்த தளத்தை அடைகிறானோ அப்போது தானாக புரிந்து கொள்வான்...

ஆதலால் ஊனமாகி இருப்பதும் இல்லாததும் அவர் அவர் எண்ண ஓட்டங்களை பொறுத்தது..எடுத்துக் கொள்ளும் முறையை பொறுத்தது.



தோழியோ, காதலியோ - தோழனோ காதலனோ உடல்தேவையின் வடிகாலாய் மட்டும் பார்க்கும் போதே அங்கே நட்பும்
செத்து விடுகிறது காதலும் செத்து விடுகிறது.....



உன் உணர்ச்சிகளின்
வடிகால் தானே நான்
இதில்
காமத்திற்கு மட்டுமென்ன விதிவிலக்கு!!?

இந்த வரிகளில் இருந்துதான் மேற்கூரிய கருத்தை புரிந்து கொண்டீர்களானால்.....
என்னை விட்டு விடுங்கள்....

தோழி...காதலி அல்லது மனைவி இருவருக்குமான வேறுபாடு என்ன என்ற தளத்திலிருந்து யோசித்தால்... கொஞ்சம் அடிவிழாமல் தப்பிப்பேன் என்று நினைக்கிறேன்

kalvettu
15-09-2005, 07:52 AM
கவிதையில் நீங்கள் சொல்ல நினைப்பதை தெளிவாக சொல்லாதபோது இதுபோன்ற வாசகனின் புரிதல்கள் தவிர்க்க முடியாதவை

இன்னும் வாசகன் எவ்வாறு எடுத்துக்கொள்வான் என்று சிந்திக்கும் அளவிற்கு எனக்கு பக்குவம் போதாது என்பதை ஒத்துக்கொள்கிறேன்......

kalvettu
15-09-2005, 08:00 AM
உனக்குத் தேவை
என்கிறபோது
நானும்
எனக்குத் தேவை என்கிறபோது
நீயும்
சமரசம் செய்துகொள்வோம்
விருப்பு வெறுப்புகளை




சமரசம் புரிவது எதற்காக?
விருப்பு வெறுப்புகளை தீர்ப்பது எதற்காக?
பெண்ணியம் பேசுவது எதற்காக?

உனக்கு தேவை என்கிற போது நான் என்னுடைய விருப்பங்களை சமரசம் செய்து கொள்கிறேன்..இதே பொருள்படும்படி எடுத்துக்கொள்ளவும் இதைத்தான் நான் சொல்லவந்தது.

kalvettu
15-09-2005, 08:05 AM
கவிஞன் (நான் இல்ல) சொல்ல வந்ததை வாசகன் தவறாக புரிந்துகொண்டால் பிரச்சனை வரத்தான் செய்யும்...ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் வாசகன் கவிஞனை புரிந்துகொள்ளவேண்டுமா இல்லை கவிஞன் வாசகனையா என்று.

kalvettu
15-09-2005, 08:11 AM
ஒரு வேளை தமிழில் சில வருடங்களுக்கு முன் ஒரு திரைப்படம் வந்தது - அதாவது ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு மண வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர் என்று. அந்த திரைப்படத்தின் தாக்கமா அல்லது அந்த திரைப்படத்தின் மூல ஆங்கில திரைப்படத்தின் தாக்கமா என்று தெரியவில்லை - உங்கள் கவிதை.


மன்னிக்கவும் நீங்கள் எந்த படத்தை சொல்றீங்கன்னு தெரியல...எனக்கு படம் பார்க்கும் பழக்கம் அதிகமாக கிடையாது...நான் பார்த்த படங்கள் உங்கள் விரல்களின் எண்ணிக்கையை விட குறைவாகத்தான் இருக்கும்

பிரியன்
15-09-2005, 08:12 AM
நீங்கள் சொல்லவந்ததில் எல்லா இடங்களில் வந்து ஒட்டிக்கொண்ட இச்சைகள்தான் கவிதையின் செய்தியை மாற்றி விட்டது...

இன்னும் செறிவாக தெளிவாக சொல்லியிருக்கலாம் என்பதுதான் எனது அபிப்பிராயம். உங்கள் கவிதைகளை நான் ஏற்கனவே வேறு தளங்களிலும் வாசித்திருக்கிறேன். ஆண் பெண் நட்பைப் பற்றி எழுதுவது என்பது கத்தியின் மேல் நடந்து கொண்டு ஆடும் நாட்டியம் போல. சுவரம் மாறினால் எல்லாமே வருத்தத்தை தந்துவிடக்கூடும்.

பிரியன்
15-09-2005, 08:14 AM
கவிஞன் (நான் இல்ல) சொல்ல வந்ததை வாசகன் தவறாக புரிந்துகொண்டால் பிரச்சனை வரத்தான் செய்யும்...ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் வாசகன் கவிஞனை புரிந்துகொள்ளவேண்டுமா இல்லை கவிஞன் வாசகனையா என்று.

வாசகன் கவிஞனை புரிந்து கொள்ள வேண்டும், இதில்தான் எனக்கு உடன்பாடு... ஆனால் அதை வளர்க்க வேண்டிய பொறுப்பு கவிஞனின் எழுத்துக்கு இருக்கிறது...

kalvettu
15-09-2005, 11:51 AM
விருப்பு வெறுப்புகள் இச்சை - இவையெல்லாம் தான் தேவைகளா? விருப்பு இருக்கலாம். ஆனால் வெறுப்பு எங்கிருந்து வந்தது? திருமணம் என்ற பிணை தேவை அல்ல என்ற பிறகு வெறுப்பு வருகிறதா?

இதற்கு பதில் எற்கனவே சொல்லிவிட்டேன்....

விமர்சனங்கள் இரண்டாக பிரித்துக்கொள்ளலாம்...ஒன்று சொல்ல வந்த கருத்தை புரிந்துகொண்டு...விமர்சனம் செய்வது இரண்டாவது தானாக கற்பனை செய்துகொண்டோ..இல்லை எடுத்துக்கொண்டோ....விமர்சனம் செய்வது...

முதல் வகை விமர்சனத்திற்கு என்னுடைய பதில்

விமர்சனம் என்பது விழுப்புண்..

இரண்டாவது வகை என்றால்..

http://premkalvettu.blogspot.com/2005/07/blog-post_112247726041098709.html

Nanban
15-09-2005, 12:51 PM
விரும்பும் வரை

நீ உன் வீட்டிலும் நான்
என் வீட்டிலும்
தங்கிக்கொள்வோம்

திருமணம் செய்தவுடன் பெண்கள் கிளம்பி உங்களுடன் வந்துவிட வேண்டும் என்பது தான் தங்கள் நியாயம் என்றால் மன்னித்துக் கொள்ளவும்

நல்லது. அவள் அவளுடைய பிறந்தகத்தில் இருந்து கொள்ளட்டும். விரும்பும் வரை. அப்புறம் எதற்கய்யா இச்சையைத் தீர்க்க மட்டும் சமரசம் செய்து கூட வேண்டும்? திருமணம் எதற்காக செய்ய வேண்டும். இருவரும் இணை ஆக வேண்டும் என்பதற்காகத் தான் திருமணமே செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். உடலும் உடலும் கூடுதலாகும் அந்த கணத்தில் மட்டும் இணைந்தால் போதும் மற்ற பொழுதுகளில் யாரோ எவரோ என பிரிந்தே இருந்து விடலாம் என்கிறீர்களா?

எத்தனை காலத்திற்கு அவள் அப்பன் வீட்டில் இருக்க வேண்டும்? நீங்கள் இணைந்து புரிந்த கலவியில் பிறக்கும் குழந்தை எங்கே போய் இருக்கும்? அரசுத் தொட்டிலிலா?

தர்க்கத்தில் ஒரு விவேகம் இருக்க வேண்டும்! Logic இருக்க வேண்டும். இல்லாமல் நான் அப்படி பேசவில்லை - புரிந்து கொள்ள சக்தியற்றவர்கள் என்று சொல்லும் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.
உங்கள் மனதில் என்ன நினைத்தீர்கள் என்பது யாருக்கும் தேவையற்ற விஷயம். கவிதையில் என்ன மொழியைக் கையாண்டீர்கள் என்பது தான் வாசகன் புரிந்து கொள்வானே தவிர, கவிஞன் என்ன நினைத்துக் கொண்டான் என்று மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு கிளி ஜோசியம் பார்க்கும் வேலை அல்ல வாசகனுடையது.

Nanban
15-09-2005, 01:11 PM
கவிஞன் (நான் இல்ல) சொல்ல வந்ததை வாசகன் தவறாக புரிந்துகொண்டால் பிரச்சனை வரத்தான் செய்யும்...ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் வாசகன் கவிஞனை புரிந்துகொள்ளவேண்டுமா இல்லை கவிஞன் வாசகனையா என்று.

உங்கள் பட்டி மன்றத் தலைப்பு தேவையற்றது. கவிஞன் வாசகன் என்ற இருவருமே தனித்தனி அடையாளங்கள் தாங்கிய மனிதர்கள். இருவரும் ஒரே தலைப்பில் சிந்திக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சரியல்ல. கவிஞன் பாடும் கவிதையில் கையாளப்பட்ட மொழிநடை, குறியீடுகள், படிமங்கள் என்று பலவற்றையும் கொண்டு வாசகன் கவிதையைப் புரிந்து கொள்கிறான்.

உங்கள் கவிதை அத்தனை சிரமமானதே இல்லை. குறியீடுகள் இல்லை, படிமங்கள் இல்லை. நேரிடையான வார்த்தைகளைப் போட்டு தெளிவாக இச்சை தீர்க்க தோழி என்ற கருத்துப் பட எழுதிவிட்டு பின்னர் பட்டிமன்றம் வைக்கலாமே யார் யாரைப் புரிந்து கொள்ளவில்லை என்பது வேடிக்கை தான்.

திருமணத்தின் தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல் அவரவர் வீட்டில் இருந்து கொள்ளலாம் என்கிறீர்கள். பெண்ணியம் பேசு என்கிறீர்கள்.


திருமண வாழ்க்கையில் புரிதல் இல்லை என்கிறீர்கள். அங்கு இல்லாத புரிதல் என்பது நான் மேலே குறிப்பிட்ட இந்த ஒருவர் மீது மற்றவருக்கான மரியாதை. Respecting beyond the Egos. Not harming the self esteem of the person. அகங்காரம், அகம்பாவம் அற்ற அடுத்தவரின் தன்மானத்தைப் பாதிக்காத நட்பு.

திருமணம் செய்து அல்லது செய்யாமல் இணையாக வாழ வேண்டுமானால் முதலில் ஒருவர் மீது மற்றவருக்கு மரியாதை. மீண்டும் மீண்டும் தோழியாக வந்தவள் அவளது தந்தை வீட்டிலே இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதன் காரணம் புரியவில்லை. ஏன் உங்கள் தோழிக்கு உங்கள் மீது நம்பிக்கையில்லையா? அல்லது பொருளாதாரத் தடையா? எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அந்த அன்புப் பிணைப்புத் தோன்றாமல் இருக்கும் அந்த நட்பு தேவை தானா? ஒருவர் விழிகளில் மற்றவரின் அடையாளம் தேடும் அந்தப் பார்வைகள் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்காக ஒரு தோழி தேவையா?

இதில் தோழி மனைவி காதலி இவர்களுக்குள் வித்தியாசம் தெரிந்தால் எனக்கு அடிவிழாமல் தப்பிப்பேன் என்று வேறு கமெண்ட். இந்த மூன்று வார்த்தைகளை நீங்கள் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது தோழி என்பது புனிதமான உறவாகவும் காதலி அல்லது மனைவி வேறுவகையான (மட்டமான?!) உறவாகவும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இறுதியாக உங்கள் தோழி மனைவி ஆவதை அதிர்ஷ்டம் என்று குறிப்பிடுகிறார்.



மனைவி தோழியானால்
ஆச்சர்யம்
தோழி மனைவியானால்
அதிர்ஷ்டம்
சொல்லிப்போ
காதலிப்பதாய்



ஆக நீங்கள் என்ன புரிந்து வைத்து விட்டீர்கள் என்று மற்றவர்கள் மீது பாய்கிறீர்கள். மனைவி தோழியானால் அது வியப்பான செயல் என்று குறிப்பிடும் உங்களுடைய தெளிவையும், ஆனால் தோழி மனைவியாகி விட்டால் அது கிடைக்காத வரம் கிடைத்தது மாதிரி புளகாங்கிதம் அடைவதே உங்கள் மனக்குழப்பத்தின் உச்சம்.

இதையெல்லாம் பட்டி மன்றம் வைத்துப் புரிந்து கொள்ளவேண்டிய அளவிற்கு உசத்தியான சமாச்சாரம் என்று நீங்களாக இறுமாந்து விடுவதும் பட்டி மன்றமின்றியே நகைக்க வைக்கும். மெனக்கெட வேண்டாம் - பிறரை நகைக்க வைக்க. உங்கள் வாதங்களே போதும்.

Narathar
15-09-2005, 01:29 PM
மனைவி தோழியானால்
ஆச்சர்யம்
தோழி மனைவியானால்
அதிர்ஷ்டம்
சொல்லிப்போ
காதலிப்பதாய்

- பிரேம்

உண்மையான வரிகள்

Nanban
15-09-2005, 01:31 PM
மனுஷ்யபுத்திரன் சொல்லியதாக ஞாபகம்...

கவிதையினுடைய தளத்தை யாருக்கும் விளக்கவேண்டாம்....எப்போது வாசிப்பவன்
அந்த தளத்தை அடைகிறானோ அப்போது தானாக புரிந்து கொள்வான்...

ஆதலால் ஊனமாகி இருப்பதும் இல்லாததும் அவர் அவர் எண்ண ஓட்டங்களை பொறுத்தது..எடுத்துக் கொள்ளும் முறையை பொறுத்தது.




உன் உணர்ச்சிகளின்
வடிகால் தானே நான்
இதில்
காமத்திற்கு மட்டுமென்ன விதிவிலக்கு!!?

இந்த வரிகளில் இருந்துதான் மேற்கூரிய கருத்தை புரிந்து கொண்டீர்களானால்.....
என்னை விட்டு விடுங்கள்....

தோழி...காதலி அல்லது மனைவி இருவருக்குமான வேறுபாடு என்ன என்ற தளத்திலிருந்து யோசித்தால்... கொஞ்சம் அடிவிழாமல் தப்பிப்பேன் என்று நினைக்கிறேன்


தோழி காதலி மனைவி இவற்றை எந்த விதத்தில் நீங்கள் வித்தியாசப்படுத்துகிறீர்கள் என்று எதையும் குறிப்பிடாமல் அப்படி யோசியுங்கள் என்று கூறுவது எதை? மேலும் மனைவி தோழியாவதையும் தோழி மனைவியாவதையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதையும் தெளிவாகவே சென்ற பதிவில் சொல்லிவிட்டேன்.

மீண்டும் சொல்கிறேன். நீங்கள் எந்த வார்த்தைகளைக் கூறினீர்களோ அந்த வார்த்தைகளிலிருந்து கிளர்ந்தெழுந்து வரும் பொருளைக் கொண்டு தான் கவிதைகள் விளங்கப்படுமே தவிர, கவிஞனோடு கண்ணாமூச்சி விளையாடுவது வாசகனின் தொழில் அல்ல. வாசகனுக்கு பொழுது போக்குவதற்கு ஆயிரத்தெட்டு வழிமுறைகள் உண்டு. அவனைக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடச் செய்வது தவறு,

உங்களுடைய மன ஓட்டத்திலிருந்து எழுந்த வரிகளைத் தான் வாசகன் படித்தான். ஒரு சொல்லிற்காவது மாற்று பொருள் இருப்பதாக சொல்ல முடியுமா? குறியீடுகளால் ஆனது கவிதை என்று சொல்ல முடியுமா? அப்படி எதுவும் இல்லாது வார்த்தைகளைத் தொகுத்து எழுதி விட்டு பிறகு கவிஞனைப் புரிந்து கொள்ள்வில்லை என்பது ஏற்றுக் கொள்ளப்படாத வாதம்.

மனுஷ்யப்புத்திரனை மேற்கோள் காட்டி இருக்கிறீர்கள். மனுஷ்யப்புத்திரனின் பேட்டியைப் படித்து சொன்னால் மட்டும் பத்தாது. மனுஷ்யப் புத்திரன் கவிதைகளில் - Imagery, Symbols, metaphor allegory என்று பல communicating toolsஐக் கொண்டு எழுதப்பட்டது. அதன் பொருளைப் புரிந்து கொள்வதற்கு மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும். அந்தக் கவிஞனின் பல படைப்புகளையும் படித்திருக்க வேண்டும். தொடர்ந்த வாசிப்புகளில் கவிதை உத்திகளை எவ்வாறு கையாள்கிறான் என்ற அறிமுகம் இருக்க வேண்டும். இத்தனையும் மீறி எல்லா வாசகர்களாலும் புரிந்து கொள்ள முடியாது. சிலருக்கு விளக்கம் சொல்லிப் புரிய வைத்தால் தான் உண்டு,

மனுஷ்யப்புத்திரனின் மேற்கோள் உங்கள் கவிதைக்குப் பொருந்தாது. Please.

Nanban
15-09-2005, 01:45 PM
விமர்சனங்கள் இரண்டாக பிரித்துக்கொள்ளலாம்...ஒன்று சொல்ல வந்த கருத்தை புரிந்துகொண்டு...விமர்சனம் செய்வது

இரண்டாவது தானாக கற்பனை செய்துகொண்டோ..இல்லை எடுத்துக்கொண்டோ....விமர்சனம் செய்வது...

முதல் வகை விமர்சனத்திற்கு என்னுடைய பதில்

விமர்சனம் என்பது விழுப்புண்..

இரண்டாவது வகை என்றால்..

http://premkalvettu.blogspot.com/2005/07/blog-post_112247726041098709.html

தானாக கற்பனை செய்து கொண்டு விமர்சனம் செய்ய வேண்டிய அவசியமுமில்லை - தேவையுமில்லை. தவறான ஒரு கருத்தைச் சொல்லும் கவிதையை தந்துவிட்டு அதற்கு எழும் விமர்சனத்தைத் தாங்க இயலாது புரிந்து கொள்ளவில்லை என்று கூறுவது தவறு.

உங்கள் மீது தனிப்பட்ட எந்த கருத்தையுமோ அல்லது தனிப்பட்ட உங்கள் தோழி மனைவி காதலியைப் பற்றியோ எதுவுமே நான் குறிப்பிடவில்லை, நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியின் மூலம் நீங்கள் அப்படிப்பட்டவர் அல்ல என்பதை நிரூபிக்க முயன்றிருப்பது உங்கள் பதற்றத்தைக் காட்டுகிறது. உங்கள் சுட்டியை நான் படிக்கவில்லை. அது அவசியம் என்றும் தோன்ற வில்லை. இதிலிருந்தே தெரியவில்லையா? நீங்கள் குழப்பத்தைத் தெளிவிக்க மற்றோரு கவிதையைப் படிக்கச் சொல்லும் போதே நீங்கள் தமிழ் மன்றத்தில் எழுதிய கவிதை had failed to communicate the intended meaning என்று.

நீங்கள் கொடுத்த சுட்டியில் உள்ள கவிதையைத் தமிழ் மன்றத்தில் போடுங்கள். பிறகு படிக்கிறேன்.

kalvettu
15-09-2005, 03:43 PM
உங்கள் கவிதை அத்தனை சிரமமானதே இல்லை. குறியீடுகள் இல்லை, படிமங்கள் இல்லை.

ஒத்துக்கொள்கிறேன் இதை எல்லாம் நான் கேள்வி பட்டிருக்கிறேனே தவிர நான் அறிந்ததில்லை...அதனால் அதற்கான சாத்தியங்களே கிடையாது

தர்க்கத்தில் ஒரு விவேகம் இருக்க வேண்டும்! Logic இருக்க வேண்டும். இல்லாமல் நான் அப்படி பேசவில்லை - புரிந்து கொள்ள சக்தியற்றவர்கள் என்று சொல்லும் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள்


அப்படி நான் சொல்லியதாக நீங்கள் நினைத்தால் அது என்னுடைய தவறல்ல...



கவிதையில் என்ன மொழியைக் கையாண்டீர்கள் என்பது தான் வாசகன் புரிந்து கொள்வானே தவிர, கவிஞன் என்ன நினைத்துக் கொண்டான் என்று மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு கிளி ஜோசியம் பார்க்கும் வேலை அல்ல வாசகனுடையது


நான் அதை தவறு என்று சொல்லவில்லையே...தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்




எத்தனை காலத்திற்கு அவள் அப்பன் வீட்டில் இருக்க வேண்டும்? நீங்கள் இணைந்து புரிந்த கலவியில் பிறக்கும் குழந்தை எங்கே போய் இருக்கும்? அரசுத் தொட்டிலிலா?


இப்படித்தான் எடுத்துக்கொள்வேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் நான் ஒன்றும் செய்யமுடியாது


இதையெல்லாம் பட்டி மன்றம் வைத்துப் புரிந்து கொள்ளவேண்டிய அளவிற்கு உசத்தியான சமாச்சாரம் என்று நீங்களாக இறுமாந்து விடுவதும் பட்டி மன்றமின்றியே நகைக்க வைக்கும். மெனக்கெட வேண்டாம் - பிறரை நகைக்க வைக்க. உங்கள் வாதங்களே போதும்.


மீண்டும் சொல்கிறேன்.

நான் எதை பட்டிமன்றம் வைக்கவேண்டும் என்று சொன்னேன் என்று ஒரு முறை பார்த்துவிட்டு சொல்லவும்..வார்த்தைகளை விடுவது தங்கள் பக்குவமின்மையையே காட்டுகிறது



தவறான ஒரு கருத்தைச் சொல்லும் கவிதையை தந்துவிட்டு அதற்கு எழும் விமர்சனத்தைத் தாங்க இயலாது புரிந்து கொள்ளவில்லை என்று கூறுவது தவறு

ஒருவேளை விமர்சனத்திற்கு அஞ்சுவதாக இருந்தால் உங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கமாட்டேன்



had failed to communicate the intended meaning



இன்னும் வாசகன் எவ்வாறு எடுத்துக்கொள்வான் என்று சிந்திக்கும் அளவிற்கு எனக்கு பக்குவம் போதாது என்பதை ஒத்துக்கொள்கிறேன்......

ஏற்கனவே நான் சொன்ன பதில்.




உங்கள் மீது தனிப்பட்ட எந்த கருத்தையுமோ அல்லது தனிப்பட்ட உங்கள் தோழி மனைவி காதலியைப் பற்றியோ எதுவுமே நான் குறிப்பிடவில்லை, நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியின் மூலம் நீங்கள் அப்படிப்பட்டவர் அல்ல என்பதை நிரூபிக்க முயன்றிருப்பது உங்கள் பதற்றத்தைக் காட்டுகிறது

அந்த சுட்டியின் மூலம் நிருபிக்க முயல்வதாக கண்ணைகட்டிக்கொண்டு கற்பனை செய்து கொண்டுள்ளீர்கள்

பிரியன்
15-09-2005, 04:06 PM
எத்தனை காலத்திற்கு அவள் அப்பன் வீட்டில் இருக்க வேண்டும்? நீங்கள் இணைந்து புரிந்த கலவியில் பிறக்கும் குழந்தை எங்கே போய் இருக்கும்? அரசுத் தொட்டிலிலா?


இப்படித்தான் எடுத்துக்கொள்வேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் நான் ஒன்றும் செய்யமுடியாது


வேறெந்த விதத்திலும் எடுத்துக் கொள்ள உங்கள் கவிதை இடம் தரவில்லையே....

நான் முன்பே குறிப்பிட்டு இருந்தேன். காதலி, தோழி என்று சொல்லிவிட்டு அதை காமத்தோடு முடிச்சு போட்டிருப்பதுதானே விவாதித்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது......

நட்பு - காதல் - காமம்- இந்த உணர்வு நிலைகளுக்கான இடையேயான வித்தியாசங்களை உங்கள் கவிதை தரவில்லையே...

பெண்ணின் அகவியல் உணர்வுநிலையாக வெளிப்பட்டிருக்கும் இந்தக் கவிதையில் பிரதானப்பட்டிருப்பது நட்பால் கனிந்த காதலாக இருந்தால் இத்தனை விவாதங்கள் எழும்பி இருக்காது.
நட்பின் பேராலும் காதலின் பேராலும் காமத்தை ஒளித்து வைக்க வேண்டாம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளாதவரை நம்முடைய இந்த விவாதங்கள் அர்த்தமற்றவையே......

தொடர்ந்து எழுத வாழ்த்துகள் கல்வெட்டு.....

kalvettu
16-09-2005, 05:32 AM
பிரியன் அவர்களே நான் ஒத்துக்கொள்கிறேன் என்னுடைய கவிதை சொன்னது அதுவாக இருக்கலாம் ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல என்பது தான் உண்மை..

நான் சொல்ல வராத கருத்தை எடுத்துக் கொண்டு திரும்ப திரும்ப அதில் உள்ள நியாய அநியாயங்களை பேசி என்ன பயன்....

விமர்சனம் கவிதையின் மேல் என்றால் சரி என்னுடைய கவிதை தவறான பொருள் படுகிறது அதோடு முடிந்து விட்டது....ஆனால் நண்பன் அவர்கள் சொல்லும் விமர்சனம்.....பொருளின் மேல் விழும் போது நான் அதை சொல்ல முற்படவில்லை என்பதைத் தானே நான் சொல்ல முடியும்.


இங்கு தவறு கவிதையின் மேல் இருக்கிறது..அல்லது கவிதை எழுதப்பட்ட விதத்தில் இருக்கிறது....மாறாக நான் எழுத நினைத்த கருத்தில் இல்லை...ஆனால் திரும்ப திரும்ப
தங்களுடைய கருத்து தவறு... நீங்கள் எப்படி இதை சொல்லலாம் என்றால் என்ன சொல்வது என்று சொல்லுங்கள்.

நீங்கள் விவாதிப்பது கவிதை எழுதிய நபருடன் தானே....அப்படியானால் எழுதிய நபர் நான் அந்த கருத்தை நான் சொல்ல வரவில்லை என்கிற போது...பொருளின் மீதான விமர்சனம் தேவையில்லாத ஒன்றாக படுகிறது...கவிதை எழுதப்பட்ட விதத்தோடு முடிந்துவிடுகிறது.

பிரியன்
16-09-2005, 08:35 AM
பிரியன் அவர்களே நான் ஒத்துக்கொள்கிறேன் என்னுடைய கவிதை சொன்னது அதுவாக இருக்கலாம் ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல என்பது தான் உண்மை..

நான் சொல்ல வராத கருத்தை எடுத்துக் கொண்டு திரும்ப திரும்ப அதில் உள்ள நியாய அநியாயங்களை பேசி என்ன பயன்....

விமர்சனம் கவிதையின் மேல் என்றால் சரி என்னுடைய கவிதை தவறான பொருள் படுகிறது அதோடு முடிந்து விட்டது....ஆனால் நண்பன் அவர்கள் சொல்லும் விமர்சனம்.....பொருளின் மேல் விழும் போது நான் அதை சொல்ல முற்படவில்லை என்பதைத் தானே நான் சொல்ல முடியும்.


இங்கு தவறு கவிதையின் மேல் இருக்கிறது..அல்லது கவிதை எழுதப்பட்ட விதத்தில் இருக்கிறது....மாறாக நான் எழுத நினைத்த கருத்தில் இல்லை...ஆனால் திரும்ப திரும்ப
தங்களுடைய கருத்து தவறு... நீங்கள் எப்படி இதை சொல்லலாம் என்றால் என்ன சொல்வது என்று சொல்லுங்கள்.

நீங்கள் விவாதிப்பது கவிதை எழுதிய நபருடன் தானே....அப்படியானால் எழுதிய நபர் நான் அந்த கருத்தை நான் சொல்ல வரவில்லை என்கிற போது...பொருளின் மீதான விமர்சனம் தேவையில்லாத ஒன்றாக படுகிறது...கவிதை எழுதப்பட்ட விதத்தோடு முடிந்துவிடுகிறது.


இந்த விவாதம் தனிப்பட்ட மனிதருடன் அல்ல. அவர் உணர்வுகளோடும் அல்ல. கவிதையின் பொருளோடுதான் விவாதமே... நான் சொல்லவந்தது அதுவல்ல கவிதை வேறு விதமாக சொல்லி விட்டது என்பது முரண்பாடாக இருக்கிறது... கவிதை தவறாக பொருள் தருகிறது என்றால் அதற்கு நீங்கள்தானே பொறுப்பேற்றாக வேண்டும்.......

நாங்கள் தவறாக பொருள் கொண்டிருந்தால் நீங்கள் கவிதையில் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்.....

kalvettu
16-09-2005, 09:35 AM
கவிதை தவறாக பொருள் தருகிறது என்றால் அதற்கு நீங்கள்தானே பொறுப்பேற்றாக வேண்டும்.......



கவிதை எப்படி பொறுப்பேற்கும் சொல்லுங்கள்...கவிஞன் தான் பொறுப்பேற்க வேண்டும்..எனக்கு தவறை ஒத்துக்கொள்ள தைரியம் இருக்கிறது......இதைத் தான் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே எனக்கு பக்குவம் போதாதென்று...இல்லை அது போதாதென்றால் எனக்கு கவிதை எழுதத் தெரியாது என்று கூட சொல்லலாம் (அப்படி என்றால் ஏன் இங்கு வருகிறீர்கள் என கேட்கத் தோன்றுகிறதா!!??)

Nanban
16-09-2005, 11:20 AM
இங்கு தவறு கவிதையின் மேல் இருக்கிறது..அல்லது கவிதை எழுதப்பட்ட விதத்தில் இருக்கிறது....மாறாக நான் எழுத நினைத்த கருத்தில் இல்லை...ஆனால் திரும்ப திரும்ப
தங்களுடைய கருத்து தவறு...

நண்பரே, கருத்து என்பது எங்கிருக்கிறது? கவிதையில் தானே? அதைத் தானே நாங்கள் படிக்க முடியும்? உங்களுடைய கருத்து என்னவென்று நாங்கள் கேட்கவில்லை - நீங்களாக சொன்னால் தான் உண்டு. ஆனால் உங்கள் - தனிப்பட்ட கருத்தாக இருக்கும் ஒன்றை விவாதத்திற்குட்படுத்த வேண்டுமென ஆவல் என்னிடத்தில் இல்லை. கவிதை சொல்லும் செய்தினைத் தான் விமர்சிக்கிறேன். நீங்கள் சொன்ன பதிலெல்லாம் - ''நீங்களாக அவ்வாறு நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும்" என்று தான் பதில் சொன்னீர்களே தவிர கவிதை என்ன சொல்ல வருகிறது என்ற விளக்கத்தைத் தர முன் வரவில்லை. கவிதை பேசிய செய்தியை கருத்தை விமர்சித்தோம். விமர்சனத்திற்காகத் தானே கவிதையைப் பொதுவில் வைத்திருக்கிறீர்கள்? விமர்சனம் தேவையில்லையென்றால் இங்கு பிரசுரிக்க வேண்டிய அவசியமும் தேவையும் இல்லை தானே? கவிதை வேறு கருத்து வேறு என்ற புதிய இலக்கணத்தை இன்று தான் உங்கள் மூலம் கேள்விப்படுகிறேன்.



நான் சொல்ல வராத கருத்தை எடுத்துக் கொண்டு திரும்ப திரும்ப அதில் உள்ள நியாய அநியாயங்களை பேசி என்ன பயன்....



உங்களின் குழப்பமான வாதங்களை எத்தனை முறை சுட்டிக்காட்டுவது என்று தெரியவில்லை. ''சொல்ல வராத கருத்து'' எதைப் பற்றி விமர்சித்தேன் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? கவிதையில் எழுதப்படாத ஒரு வாக்கியத்தை விமர்சித்தேன் என்று குறிப்பிட்டுக் காட்ட முடியுமா? முதலில் நீங்கள் சொல்ல வராத கருத்தை எப்படி உணரமுடியும்?



நீங்கள் விவாதிப்பது கவிதை எழுதிய நபருடன் தானே....அப்படியானால் எழுதிய நபர் நான் அந்த கருத்தை நான் சொல்ல வரவில்லை என்கிற போது...பொருளின் மீதான விமர்சனம் தேவையில்லாத ஒன்றாக படுகிறது...கவிதை எழுதப்பட்ட விதத்தோடு முடிந்துவிடுகிறது.


முதலில் நான் குறிப்பிட்டது இதைத்தான். An act without responsibility. ஒரு கருத்தை கவிதையின் மூலமாகவோ அல்லது உரையாடல் மூலமாகவோ முன்வைத்தவர் தான் அந்தக் கருத்தைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டிய கடமையில் உள்ளவர். விவாதங்கள் அந்தக் கருத்தை முன்வைத்தவரிடம் தான் நடத்தப்படும். எனக்கு எதுவும் தெரியாது என் கவிதையைக் கேளுங்கள் என்றால் என்ன செயவது. நீங்கள் சொல்லிய பதில்கள் எல்லாம் ''நீங்கள் அப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் - இப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் '' என்பது தானே தவிர அந்தக் கவிதையில் நான் கூற முன் வந்தது அதல்ல - அது இது தான் என்று குறிப்பிட்டு உங்கள் விளக்கத்தைத் தந்திருந்தீர்கள் என்றால் அதைப் பற்றி மேற்கொண்டு ஏதும் விமர்சன்ம் செய்யாதிருக்கலாம். ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் அதை எங்களின் தவறான புரிதல் என்று நிறுவ முற்பட்டதானால் தான் நீங்கள் கவிதை என்று வழங்கிய வரிகளை மீண்டும் மீண்டும் படித்து நாம் புரிந்து கொள்ளாமல் விட்ட செய்திகள் ஏதும் உண்டா என்று தேட வேண்டியதாயிற்று. அதன் மூலம் கவிதையில் நிலவிய கருத்தியல் குழப்பங்கள், முரண்கள், வெளிப்பாட்டுத் தவறுகள் இவையெல்லாம் பிடிபட அவற்றை குறிப்பிட்டு சுட்டிக் காட்ட வேண்டியதாயிற்று.

Nanban
16-09-2005, 11:53 AM
பிரியன் அவர்களே நான் ஒத்துக்கொள்கிறேன் என்னுடைய கவிதை சொன்னது அதுவாக இருக்கலாம் ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல என்பது தான் உண்மை..



உங்கள் கவிதை சொல்ல வந்த கருத்து "அதுவாக இருக்கலாம்" என்ற ஒப்புதலை இத்தனை வாதங்களுக்குப் பின் சொல்கிறீர்கள். கவிதை என்ன சொன்னதோ அதைத்தான் விவாதிக்க முடியும். நீங்கள் சொல்ல வந்தது வேறாக இருக்கலாம். ஆனால் வாசகர்களால் ஊகிக்கத் தான் முடியுமே தவிர இன்னது தான் கவிஞனின் கருத்து அறுதியிட்டுக் கூற முடியாது. மனதிற்குள் ஒளித்து வைக்கப்படும் கருத்துகளைத் தேடிக் கொண்டிருப்பது வாசகனின் வேலை அல்ல. ஓரளவிற்கு ஊகம் செய்யலாம். அதையும் ஒரு வாசகன் என்ற முறையில் ஊகம் செய்து பார்த்து பதிப்பித்திருந்தேன். இதோ:


Living in என்ற முறையைப் பற்றி. இது பெரும்பாலும் Scandinavian countries என்றழைக்கப்படும் வட ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருக்கின்றது. அத்தகைய வாழ்க்கை முறையை ஏற்று வாழ்ந்து வரும் நபரை நான் சந்தித்திருக்கிறேன். சுவீடனைச் சார்ந்தவர். அஸ்ட்ராஜெனிக்கா என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கூடத்தைத் திறப்பதற்காக வந்திருந்தார். அவர் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். குழந்தைகள் உண்டு. திருமணம் ஆகவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் சம்பாதிக்கிறார்கள் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். குடும்பச் செலவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். குழந்தைகளிடம் கடமை உணர்வு மிக்க பெற்றோர்களாக இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரை ஒருவர் மதிக்கும் நண்பர்களாக வாழ்கிறார்கள்.

நான் நினைக்கிறேன் - நீங்கள் சொல்ல வந்ததும் இத்தகைய ஒரு வாழ்க்கை முறையைத் தான்.

இவ்வாறு என்னால் நினைக்கத்தான் முடியுமே தவிர இது தான் உங்கள் கருத்து என்று சொல்ல முடியாது. ஏனென்றால் உங்கள் கவிதையில் அதற்கான எந்த ஒரு துளி அடையாளமும் கிடையாது என்பதே உண்மை.


கவிஞன் (நான் இல்ல) சொல்ல வந்ததை வாசகன் தவறாக புரிந்துகொண்டால் பிரச்சனை வரத்தான் செய்யும்...ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் வாசகன் கவிஞனை புரிந்துகொள்ளவேண்டுமா இல்லை கவிஞன் வாசகனையா என்று.


கவிதையை எழுதி பதித்து விட்டு அதற்கான பொறுப்பை கவிஞன் தான் ஏற்க வேண்டுமே தவிர நான் அல்ல என்கிறீர்கள். அப்படியானால் யார் அந்தக் கவிஞன்? நான் கேட்டதெல்லாம் அந்தக் கவிஞனைத்தான். நான் அந்தக் கவிஞன் அல்ல என்று ஒதுங்கிக் கொண்டால், பின் யார் வந்து கவிதைக்குப் பொறுப்பேற்பார்கள்? ''அந்த இன்னொரு வாழைப்பழம் எங்கே'' என்று கவுண்டமணி செந்திலிடம் கேட்க, ''அதுதாண்ணே, இது" என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்வாரே அதுபோல ஆகிவிட்டது.

இப்பொழுது அந்தக் கவிஞனையே தேடச்சொல்கிறீர்கள்.

நன்றி. எல்லோரும் தேடுங்கள்.

Nanban
16-09-2005, 12:01 PM
நான் எதை பட்டிமன்றம் வைக்கவேண்டும் என்று சொன்னேன் என்று ஒரு முறை பார்த்துவிட்டு சொல்லவும்..வார்த்தைகளை விடுவது தங்கள் பக்குவமின்மையையே காட்டுகிறது

முதலில் பக்குவம் என்பது என்ன என்று பார்த்து விடுவோமா?


உங்கள் மீது தனிப்பட்ட எந்த கருத்தையுமோ அல்லது தனிப்பட்ட உங்கள் தோழி மனைவி காதலியைப் பற்றியோ எதுவுமே நான் குறிப்பிடவில்லை, நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியின் மூலம் நீங்கள் அப்படிப்பட்டவர் அல்ல என்பதை நிரூபிக்க முயன்றிருப்பது உங்கள் பதற்றத்தைக் காட்டுகிறது. உங்கள் சுட்டியை நான் படிக்கவில்லை. அது அவசியம் என்றும் தோன்ற வில்லை. இதிலிருந்தே தெரியவில்லையா? நீங்கள் குழப்பத்தைத் தெளிவிக்க மற்றோரு கவிதையைப் படிக்கச் சொல்லும் போதே நீங்கள் தமிழ் மன்றத்தில் எழுதிய கவிதை had failed to communicate the intended meaning என்று.

நீங்கள் கொடுத்த சுட்டியில் உள்ள கவிதையைத் தமிழ் மன்றத்தில் போடுங்கள். பிறகு படிக்கிறேன்.

நான் சொல்லியவற்றில் கடைசியில் உள்ள வரியை சாமர்த்தியமாக தவிர்த்து விட்டு மற்றவற்றை மட்டும் மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறீர்கள்.

தமிழ்மன்றம் ஒரு பக்குவப்பட்ட தளம். பிறிதொரு தளத்தில் எழுதப்பட்ட பதிவுகளை இங்கு விமர்சனம் செய்வதில்ல. அதாவது பிறிதொரு தளத்தில் எழுதப்பட்டவை ஒரு பதிவாக தமிழ்மன்றத்தில் பதிக்கப்படாத வரை அதை விமர்சனம் செய்வதில்லை. அதனால் தான் நான் சொன்னேன். அதை ஒரு பதிவாக தமிழ்மன்றத்தில் போடுங்கள் - பிறகு படிக்கிறேன். இது நான் கற்று வைத்திருக்கும் பக்குவம். மன்றத்தின் விதிகளாக இது எங்கும் எழுதி வைக்கப்பட்டிருக்கவில்லை. நாங்களாக நடைமுறையில் ஏற்படுத்திக் கொண்டவை.

மன்றத்தின் இந்த எழுதப்படாத விதிகளை எல்லாம் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.


அந்த சுட்டியின் மூலம் நிருபிக்க முயல்வதாக கண்ணைகட்டிக்கொண்டு கற்பனை செய்து கொண்டுள்ளீர்கள்

இங்கு நடத்தப்படும் விவாதங்களுக்கு விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படும் பதிவுகள் இங்கேயே பதிக்கப்பட வேண்டும் என்பது நடைமுறை. அவ்வாறு கேட்டுக் கொண்டதற்கு நீங்கள் மிக அழகாக பதில் சொல்லியிருக்கிறீர்கள். இது தான் பக்குவமோ?

நான் குறிப்பிட்டது - உங்களைப் பற்றிய தகவல்களை நீங்கள் சொல்வதைக் கொண்டே ஏற்றுக் கொள்வோம். பிறிதொரு தளத்திற்கு சென்று உங்கள் எழுத்துகளைப் பார்த்து வரும் அளவிற்கு எந்த தேவையுமில்லை. பதட்டப்பட வேண்டாம் என்று. உரைநடைகளே சில சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கும் பொழுது கவிதையில் கண்டிப்பாக அந்த சிரமங்கள் நிகழும். அதைத் தவிர்ப்பது கவிதையை படைத்தவரின் கடமி. கவிஞனைக் கேளுங்கள் - நான் இல்ல என்றால் நாங்கள் அழுவதா சிரிப்பதா?

பால்வீதி என்ற கவிதை தொகுப்பு - கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதியது. Surrealism என்ற வடிவத்தை ஒட்டி எழுப்பப்பட்டது. அதாவது மனதின் அடி ஆழத்தின் நிகழ்வுகளைப் படம் பிடிப்பது. பலருக்கும் புரியவில்லை. மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. உடன் விரிவான தனிப் புத்தகம் ஒன்றைப் போட்டு விளக்கம் கொடுத்தார் கவிக்கோ. ஏனென்றால் கவிதை என்பதே மக்களுக்காகத் தான். அவர்களாலயே புரிந்து கொள்ளப்பட வில்லை என்றால் பின் எதற்காக கவிதைகள் என்று கூறியே தன் நிலையை விளக்கி எழுதினார். அது ஒரு உயர்ந்த கவிஞனின் பக்குவத்தைக் காட்டுகிறது.

மைலாஞ்சிக் கவிதைகள் என்று ஒரு கவிதைத் தொகுதியை வெளியிட்டார் கவிஞர் H.G.ரசூல். இஸ்லாமிய மத கோட்பாடுகளைப் பற்றிய சில கேள்விகளை எழுப்பியது கவிதை. மிகப் பெரிய சர்ச்சை உருவாகிவிட்டது. அவரை ஊர் விலக்கி வைக்க வேண்டும் என்றெல்லாம் குரல்கள் உயர்ந்தன. அவரும் விரிவாக விளக்கம் எழுதி கொடுத்தார். அது அவரது பக்குவத்தையேக் காட்டுகிறது.

மனுஷ்யப்புத்திரன் கூறிய சூழ்நிலையை ஏற்கனவே விளக்கி விட்டேன். அவர் கவிதையின் கருவை விளக்கிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் அவர் ஒரு வாசகனிடம் போய் ஏன் என் கவிதையைத் தவறாகப் புரிந்து கொண்டு விமர்சிக்கிறாய் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்க மாட்டார். ஏதோ ஒரு நிலையில் நின்று வாசகன் புரிந்து கொள்கிறான் என்று புன்னகைத்து விட்டு அமைதியாகப் போய்விடுகிறார். எதிர்வினை காட்டுவதில்லை. அது அவரது பக்குவம்.


ஆனால் விளக்கமும் தரமாட்டேன். விமர்சித்தவனை விடவும் மாட்டேன் என்று ஆக்ரோஷிப்பது - உங்கள் பக்குவம்?!

வேறொரு தளத்திற்குச் சென்று உங்களைப் பற்றி அறிந்து வரச் சொல்லும் உங்களுக்கு இந்த தளத்திலே இருக்கும் எனது பதிவுகளையும் என்னைப் பற்றி மற்றவர்கள் வைத்திருக்கும் கருத்துகளையும் படித்து வர மனமில்லதாதது, தங்களின் பக்குவமோ?

எனது பக்குவம் / பக்குவமின்மையை எடை போட பல்லாயிரக்கணக்கான பதிவுகளைப் பதிந்த அன்பர்கள் உண்டு.

ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

- தவறு என்று பட்டவற்றை எடுத்துச் சொல்ல என்றுமே தயங்கியதேயில்லை நான். தோழி காதலி மனைவி என்று ஒரு பெண் எடுக்கக் கூடிய அனைத்து வடிவங்களையும் இகழ்ந்து பேசிவிட்டு, பின் அது எனது கருத்தல்ல. எனது கவிதை சொன்னது அதுவாக இருக்கலாம் ஆனால் என்னுடைய கருத்துகள் வேறு அந்த கவிஞன் நானில்லை என்று முன்னுக்குப் பின் முரணாக விவாதம் செய்து கொண்டிருப்பது தவறு.

உங்களுடைய கருத்துகள் மிக உயர்வானதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சபையில் என்ன பேசினீர்கள் என்பது தான் செய்தியாகுமே தவிர ''அது அவரது தனிப்பட்ட கருத்து'' என்று விளக்கம் கொடுக்கும் அரசியல் கட்சியின் முரண்களோடு விளக்கம் தருவது எவ்வகையிலும் சரியல்ல.

இறுதியாக ஒரு கவிதையைப் பற்றிய விமர்சன விவாதத்திலே தனிநபர் தாக்குதலில் நீங்கள் ஈடுபட விழையும் பொழுது மேலும் உங்களுடன் விவாதம் புரிவது அர்த்தமற்றதாகவேத் தான் இருக்கும். இனியும் இந்தப் பக்கத்திலே எனது நேரத்தை வீணடிப்பது என்னால் இயலாது.

தூங்குகிறவனை எழுப்பலாம். ஆனால் தூங்குவதாக நடிப்பவனை ஒரு போதும் எழுப்பவே முடியாது.

kalvettu
16-09-2005, 12:07 PM
கவிதையை எழுதி பதித்து விட்டு அதற்கான பொறுப்பை கவிஞன் தான் ஏற்க வேண்டுமே தவிர நான் அல்ல என்கிறீர்கள். அப்படியானால் யார் அந்தக் கவிஞன்? நான் கேட்டதெல்லாம் அந்தக் கவிஞனைத்தான். நான் அந்தக் கவிஞன் அல்ல என்று ஒதுங்கிக் கொண்டால், பின் யார் வந்து கவிதைக்குப் பொறுப்பேற்பார்கள்?
ஐய்யய்யோ அந்த "நான் அல்ல" .....நான் ஒரு கவிஞன் அல்ல ஏதோ எழுதுகிறேன் என்ற நோக்கில் சொல்ல வந்தது.More over i tried to use it as an icebreaker.

மன்மதன்
17-09-2005, 05:49 AM
கவிதையும் அதை தொடர்ந்த விமர்சனம் பல கேள்விகளை எழுப்புகின்றன.. கவிதை சொல்ல வந்த கருத்தை கல்வெட்டு அவர்கள் கொடுக்கலாமே.. நண்பன் அவர்களின் விமர்சனம் அருமை.. அது உங்கள் கவிதைக்கு கிடைத்திருக்கும் விமர்சனமே. அந்த விமர்சனத்திற்கு பதிலாக , உங்கள் கருத்துகளை கவிதை சார்ந்து சொல்லுங்க கல்வெட்டு.

இது ஏதோ இரண்டு பேருக்கு இடையே நடக்கும் வாக்குவாதம் போல அமைந்து விட்டது. மன்றத்தில் கவிதை நிறைய எழுதும் நண்ப/நண்பிகள் (பிரியன் தவிர) இதை கண்டுக்காம போகிறார்கள்.. கவிதை ஆர்வலர்கள் நண்பனிடம் விவாதம் / சந்தேகம் கேளுங்கள். கவிதை பற்றிய பல அம்சங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த கவிதை எதையும் சுத்திவளைத்து சொல்ல வந்ததாக தெரிவதில்லை.. நண்பன் தனது நேரங்களை செலவு செய்து இந்தளவுக்கு , இந்த கவிதைக்கு விமர்சனம் செய்தது கண்டிப்பாக பாராட்டு கிடைக்க வேண்டும் என்பதற்காக இருக்காது.. உங்கள் கவிதை தவறான கருத்தில் அமைந்து, இதையே நீங்கள் தொடர்ந்து எழுதிட கூடாது என்ற நல்லெண்ணத்தினால்தான்.

என் மனதில் பட்டதை சொல்லிவிட்டேன். கவிதையின் விமர்சனத்தை பற்றி எழுதும் போது விமர்சகருக்கு கவிதையின் கருத்து கொண்டு பதில் சொல்வதே சிறந்தது. தனிப்பட்ட முறையில் தப்பாக நினைக்கவேண்டாம்.

kalvettu
19-09-2005, 08:25 AM
தோழரே நான் இதுவரை சந்தித்த விமர்சனங்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம்
முதல் வகை . வார்த்தைகளை வைத்து விமர்சனம் செய்பவர்கள்..அதாவது விபச்சாரம் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது என்று சொன்னவர்கள் அது என்ன பொருளில் வருகிறது என்பதெல்லாம் தேவையில்லாதது இவர்களை விட்டு நான் விலகியே வந்திருக்கிறேன்.


இரண்டாவது வகை.இது என்னுடைய நண்பர்களிடம் இவர்கள் கவிதையில் என்ன தெரிகிறது என்பதை விட நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை தெளிவாக புரிந்துகொள்வார்கள் எனென்றால் பெரும்பாலும் கவிதை நாங்கள் சந்தித்த ஒன்றோ இல்லை விவாதித்த ஒன்றாகத் தான் பெரும்பாலும் இருக்கப் போகிறது.ஆதலால் விவாதம் என்றாலும் அதை ஒட்டியே நிகழும் ஆனால் எப்போதுமே விமர்சனத்தை தனிப்பட்ட தாக்குதலாக நினைத்தது கிடையாது.மாற்றுக்கருத்தை கொண்டவர் என்பதால் விலகிக் கொண்டதும் கிடையாது.


உதாரணமாக என்னுடைய கல்லூரி இதழில் கவிதையை திருத்தி வெளியிட ஆசிரியருக்கு உரிமை உண்டு என்று என் நண்பன் சொல்லிய போது தவறு இருந்தால் எழுதியவருக்கு தெரிவித்து அவர் தான் திருத்த வேண்டும் என்று சொல்லி...அப்போது நான் அடித்த கமெண்ட் தான்


அழகாய் தான் இருந்தது
பிறந்த
என் குழந்தை!!
சாயல் மட்டும் வேறாக!?
திருத்தப்பட்ட எனது கவிதை.

மூன்றாவது வகை. நான் இதுவரை சந்திக்காதது கவிதையில் இருந்து புரிந்து கொண்டு விமர்சனம் செய்வது.அதுவும் நான் சிந்திக்காத ஒரு கருத்தை நானே ஏற்றுக்கொள்ளாத ஒரு கருத்தை நான் என் கவிதையில் சொல்லியதாக விமர்சனம் செய்தது..நான் என்ன செய்ய வேண்டும் என்று சுதாரிப்பதற்குள் மிகவும் காட்டமான விமர்சனங்கள்.இப்போது சுதாரிப்பதற்கும் யோசிக்கவும் நேரம் இல்லாமல் தன்னை தற்காத்துக் கொள்ளவே நினைக்கிறது என் மனது .என்னுடைய கருத்து தவறு என்று ஒப்புக்கொள்ள முடியாது எனென்றால் நான் சொல்ல நினைக்காத கருத்து நானே ஏற்றுக்கொள்ளாத கருத்து.இதில் ஏற்பட்ட குழப்பம் தானே ஒழிய வேறு எதுவும் இல்லை.புதிதான ஒன்றை காணும் போது அதை எதிர் கொள்வது எப்படி என்று தெரியாத நிலை தான் என்னுடையது.நன்றி சொல்லத் தெரியாதவன் தான் மன்னிப்புக்கேட்கத் தயங்குவான் எனக்கு இரண்டுமே தெரியும் .ஆதலால் நான் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும்.நான் தங்கள் மீது எந்த தனிப்பட்ட வன்மமும் கொள்ளவில்லை எனபதே உண்மை
இந்த கவிதை உலகிற்கும் சில சிந்தனை மாற்றத்திற்கும் யாரும் எங்களுக்கு வழிகாட்டவில்லை நானும் என் நண்பர்களும் நாங்களே தடுமாறி தடுமாறி வந்தது தான்.நாங்கள் மனுஷ்யபுத்திரனையும்,அறிவுமதியையும் ,அ.மார்க்சையும் நாங்களாக வாசிக்கிறோம் எங்களுக்கு எந்த அளவில் புரிந்து கொள்ளமுடியுமோ அந்த அளவிற்கு புரிந்து கொள்கிறோம். சில இலக்கிய தெரிந்தவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள நினைத்தபோது அவர்கள் எங்களை எப்போதும் மட்டம் தட்டவே முற்பட்டனர் எங்களை இவர்களுக்கு இயந்திரம் மட்டுமே தெரியும் என்றே நினைத்தனர்.
நீங்களும் மனுஷ்யபுத்திரன் சொன்னதை நான் சொன்ன போது நீங்கள் அதற்கு அழித்த பதில் எற்கனவே
எனக்கு எற்பட்ட அனுபவத்தைத் தான் நினைவுக்கு கொண்டுவந்தது.உடனடியாக எனக்கு தோன்றியது வழக்கமாக இருக்கும் இலக்கியத் திமிர் என்று தான்.மற்றபடி நான் தங்கள் விமர்சனத்தை தனிப்பட்ட நபரின் மீதான விமர்சனமாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.
மேலும் நான் கொடுத்திருந்த சுட்டி என்னுடைய தளத்தினுடையது அந்த கவிதை வேறு ஒரு தளத்தில் எற்கனவே கொடுத்துவிட்டதால் நான் அதை இங்கு போடவில்லை இல்லை என்றால் இந்த கவிதைக்கு முன்பாகவே அதை வெளியிட்டிருப்பேன்.எனக்கு பக்குவமில்லை என்பது உண்மை அதை எற்கனவே ஒரு பதிலில் சொல்லிவிட்டேன்.அதற்காக அப்படியே விட்டுவிடுவதுதான் தங்கள் தரப்பு நியாயமோ?
ஒவ்வொருவரும் அப்படியே விட்டுக்கொண்டுப் போனால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.தாங்கள் தங்களுடைய முதல் அனுபவத்தில் என்னைப் போல் தான் நடந்து கொண்டிருப்பீர்கள் என்று சொல்லமுடியாது என்றாலும் என்னைப் போல் நடந்து கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது.இப்பவும் தங்களை பற்றி தெரிந்து கொள்ளாமல் தான் பதில் சொல்கிறேன் யார் என்பதை பொருத்து என்னுடைய பதிலை சொல்லவில்லை. ஒரு மனிதர் இல்லை தோழர் என்று நினைத்தே பதில் சொல்கிறேன்.

jaffer
12-10-2011, 04:01 AM
பாரதி கண்ட புதுமை பெண் போல - கவிதையில் ஒரு பொறி வெறி இருக்கு ஆதங்கம் இருக்கு மொத்தத்தில் கவிதை பிடிச்சிருக்கு