PDA

View Full Version : செப்டம்பர் 13, செவ்வாய்கிழமை மலேசிய செய்தி



Mano.G.
13-09-2005, 05:13 AM
மலேசிய - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்
மலேசிய-தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என துணைப்பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வு மற்றும் ஒருமைப்பாடு ஆகிய பண்புகளால் மட்டுமே இது சாத்தியம் என அவர் மேலும் கூறினார்.
தாய்லாந்தில் தீவிரவாத நடவடிக்கைகள் எதுவும் இல்லை என கூறிய அமைச்சர் இரு நாட்டு நல்லுறவு மேலும் வலுவடைய இரு நாட்டு அரசும் தகுந்த நடவடிக்கைகலை மேற்கொள்ளும் என கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
-------------------------------------------------------------
மலாக்கா நீரிணையில் எந்த ஆபத்தும் இல்லை
மலாக்கா நீரிணையில் எந்த ஆபத்தும் இல்லை. அது பாதுகாப்பாகவே இருக்கின்றது என்று போக்குவரத்து அமைச்சர் Datuk Seri Chan Kong Choy நேற்று அறிவித்தார்.
அண்மையில் கடலோர அண்டை நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு நீரிணை பாதுகாப்பாகவே இருப்பதாக அவர் கூறினார்.
இந்த நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்ய மலேசியா, இந்தோனிசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மிக அணுக்கமாகப் பணி¡ற்றுகின்றன என அவர் விளக்கமளித்தார். மலாக்கா நீரிணை போக்குவரத்துக்கு பாதுகாப்பானது அல்ல என்று சொல்லப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


குத்தகையாளர்களின் சேவை தரத்தை உயர்த்த கட்டுமான தொழில்துறைக்கான நன்னெறி கோட்பாடுகள்
நாடு தழுவிய நிலையிலுள்ள சுமார் 63,000 குத்தகையாளர்களின் திறனையும் சேவை தரத்தையும் உயர்த்துவதற்கு கட்டுமான தொழில்துறைக்கான நன்னெறி கோட்பாடுகளை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
கட்டுமானப்பணிகளில் குத்தகையாளர்கள் ஈடுபடும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறி கோட்பாடுகளையும் அரசாங்கம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளதாக பொதுப்பணியமைச்சர் Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.
குறிப்பாக அரசாங்கம் சம்பந்தப்பட்ட கட்டுமானப்பணிகளில் குத்தகையாளர்கள் சில நன்னெறி கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கூறினார்.
பொறியியலாளர்களுக்கு இதுபோன்று கோட்பாடுகள் ஏற்கெனவே அமலில் இருந்து வருவதாகவும் ஆனால் குத்தகையாளர்களுக்கு இன்னும் அமல்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார். குத்தகையாளர்களின் செயல் திறனையும் சேவை தரத்தையும் உயர்த்துவதற்கு இந்த நன்னெறி கோட்பாடுகள் துணை புரியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.


அரசாங்க துறைகளின் சேவை தரத்தை வலுப்படுத்த வேண்டும்
ஒரு மில்லியன் பணியாளர்களைக் கொண்டுள்ள அரசாங்க துறைகள் சேவை தரத்தை வலுப்படுத்த வேண்டும் என துணைப்பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 60 நாடுகளில் மலேசிய அரசு துறைகளின் தரம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக Geneva-வில் உள்ள IMD எனப்படும் மேம்பாடு தொடர்பான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது என அவர் கூறினார்.
16-ஆம் இடத்திலிருந்த மலேசியா தற்போது 28-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.இதுவே உலக பார்வையில் மலேசியாவின் நற்பெயரை சீர்குலைப்பதாக இருந்து விடக்கூடாது எனவும் அரசாங்க துறைகள் சேவை தரத்தை வலுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கூறினார்.


வீடு புகுந்து கொள்ளையிட்ட ஆசாமிகள் கைது
வீடு புகுந்து கொள்ளையிடுதல் தொடர்பாக 3 பேர்களை பினாங்கு போலீசார் கைது செய்துள்ளனர். 19 வீடு புகுந்து கொள்ளையிடுதல் சம்பவங்கள் தொடர்பாக அவர்கள் Majistret நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
Georgetown பகுதிகளில் சுமார் 1 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை களவாடிய குற்றத்தை அம்மூவரும் எதிர்நோக்கியுள்ளனர். கணிணிகள், மின்பொருட்கள், கைத்தொலைப்பேசிகள், காமிராக்கள் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றை அவர்கள் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரை அவர்கள் இக்குற்றத்தைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.


மாமன்னர் Sweden மற்றும் Finland நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம்
மாமன்னர் Yang di-Pertuan Agong Tuanku Syed Sirajuddin Syed Putra Jamalullail மற்றும் அவரது துணைவியார் Raja Permaisuri Agong Tuanku Fauziah Tengku Abdul Rashid அவர்களும் Sweden மற்றும் Finland நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு அமைச்சர் Datuk Seri Dr Rais Yatim அவர்களு இந்த பயணத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.
Sweden-னுக்கான தனது 3 நாள் பயணத்தை மாமன்னர் நாளைத் தொடங்கவிருப்பதாகவும் Finland-னுக்கான மூன்று நாள் பயணத்தை திங்கட்கிழமை தொடங்கவிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. தனது பயணத்தை முடித்துக் கொண்டு மாமன்னர் எதிர்வரும் 24 செப்டம்பரில் நாடு திரும்புவார்.


கடத்தல் சிகரெட் மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த ஆடவன் கைது
Kota baharu, Gua Musang-கில் சுமார் 38,000 ரிங்கிட் மதிப்புள்ள 1000 கடத்தல் சிகரெட் பொட்டலங்களையும் மற்றும் 100 போதை மாத்திரைகளையும் வைத்திருந்த ஆடவன் ஒருவன் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டான்.
45 வயது மதிக்கத்தக்க அவ்வாடவன் Taman Damar-இல் உள்ள அவனது வீட்டில் போலீஸ் மற்றும் Gua Musang போதைத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டான்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து அவ்வாடவன் கைது செய்யப்பட்டான் Gua Musang வட்டாரத்தின் தலைமைப் போலீஸ் அதிகாரி Supt Ahmad Sofian Mohamed Yasin கூறினார்.
------------------------------------------------------------
பிரான்ஸ் உடனான நல்லுறவை இந்தியா மேலும் வலுப்படுத்தும் - மன்மோகன் சிங்
பிரான்ஸ் உடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஐநா மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் வழியில், பிரான்ஸில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள ஞாயிற்றுக்கிழமை பாரீஸ் புறப்பட்டபோது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, விண்வெளி, ஆக்கப்பூர்வ அணுசக்தி, உயர் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார, பண்பாட்டு உறவுகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதே இந்தியாவின் நோக்கம் என அவர் கூறினார்.
இதன் தொடர்பில் பிரான்ஸில் பிரதமர், முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.
--------------------------------------------------------------
Los angeles, Melbourne நகரங்களில் அடுத்த தாக்குதல் : Al-Qaeda புது மிரட்டல்
நியுயார்க் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட 4-ம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்ட நேற்று முன்தினம் , Al-Qaeda புது மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளது.
இப்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான ஏ.பி.ஸியின் பாகிஸ்தான் அலுவலகத்திற்கு வந்த வீடியோ ஒலிப்பதிவு நாடாவில் இந்த மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதனை ஏ.பி.ஸி தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது.


பாகிஸ்தானில் குண்டுகள் வெடித்ததால் மின்சார விநியோகத்தில் பாதிப்பு
பாகிஸ்தானில் நேற்று இரண்டு வெடிகுண்டுகள் திடீரென வெடித்தது. இதில் கராச்சி துறைமுகப் பகுதியில் 70 சதவீத மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடித்ததற்கான காரணத்தையும், பாதிப்படைந்த மின் விநியோகத்தையும் சரிசெய்யும் பணியும் அப்பகுதியில் நடந்து வருகிறது. இதனிடையே பாகிஸ்தான் சிறையில் இருந்த 435 இந்திய கைதிகள் நேற்று வாகா எல்லைப் பகுதி வழியாக இந்தியா அனுப்பப்பட்டார்கள்.
இதில் 371 பேர் மீனவர்களும் அடங்குவர். இதே போல் இந்திய சிறைகளில் இருந்த 152 பாகிஸ்தானியர்களும் வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் அனுப்பப்பட்டார்கள்.


ஜார்கண்டில் தீவிரவாதிகள் தாக்கி 15 பேர் பலி
ஜார்கண்ட்டில் உள்ள கிரிதி மாவட்டத்தில் சுமார் 100 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் கிராமங்களில் புகுந்து தாக்கியதில் பெல்பாத்தரி என்ற கிராமத்தில் 15 பேர் பலியாகினர் ; இச்சம்பவத்தில் அக்கிராமத்திலுள்ள பலர் காயமடைந்தனர்.
பாதுகாப்பு பணிகளை மேலும் வலுப்படுத்த அப்பகுதிக்கு போலீஸார் விரைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
--------------------------------------------------------------
FORMULA 1 கார் பந்தயத்தில் நரேன்
FORMULA 1 கார் பந்தயத்தில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் தமிழகத்தின் நரேன் கார்த்திகேயன். இவர் ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்சில் துவங்கி பதினைந்து ரேஸ்களை முடித்து விட்டார். இவற்றில் பெரிய அளவில் சாதிக்காத இவர் தனது 16வது சவாலை நேற்று சந்தித்தார்.
ஸ்பா நகரில் நடந்த பெல்ஜியம் கிராண்ட் பிரிக்ஸ் ரேசில் புதிய ரக காருடன் களமிறங்கிய நரேனின் வேகத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட இவர் 11வது இடம் பிடித்தார்.
துவக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்த மெக்லாரன் மெர்சிடஸ் அணியின் கிமி ரெய்கோனன் (பின்லாந்து) 44 சுற்றுகளை 1 மணி நேரம் 30 நிமிடம் 1.0295 வினாடிகளில் கடந்து முதலிடம் பெற்றார்.
இந்த ஆண்டில் இவர் வெல்லும் ஆறாவது சாம்பியன் கோப்பை இது. இரண்டாவது இடத்தை ரெனால்ட் அணியின் பெர்னாண்டோ அலோன்சாவும் (ஸ்பெ-யின்), பார் ஹோண்டா அணி வீரரான ஜென்சன் பட்டன் (பிரிட்டன்) மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

நன்றி வணக்கம்மலேசியா.காம்

மனோ.ஜி

பரஞ்சோதி
13-09-2005, 05:48 AM
இன்றைய செய்திகளுக்கு நன்றி அண்ணா.

ஏன் இந்த ஆண்டு ஷீமேக்கர் வெற்றி பெற முடியவில்லை ?