PDA

View Full Version : நெஞ்சில் பதிந்தவளே!



பிரசன்னா
12-09-2005, 04:04 PM
நெருஞ்சி முள்ளாய்
நெஞ்சில் பதிந்தவளே!
குறிஞ்சி மலராய்
கண்டேன்....
உறிஞ்சி கொன்றாயடி
நெஞ்சை................

கணினி என
கண்ணில் பதிந்தவளே!
உன்னை சன்னலாய்
கண்டேன்....
வீசி விட்டாயடி
வீரத்தை...........

கைப்பேசியாய்
கலந்து பதிந்தவளே!
உன்னை மென்பொருளாய்
கண்டேன்.....
மென்று விட்டாயடி
உணர்வுகளை..........

முத்தமிழாய் வந்து
உயிரில் பதிந்தவளே!
உன்னை இசைத்தமிழாய்
கண்டேன்...........
அசைத்து விட்டாயடி
என்னை..........

Nanban
12-09-2005, 07:09 PM
நெருஞ்சி முள்ளாய்

கணினி என
கண்ணில் பதிந்தவளே!
உன்னை வின்டோசாய்
கண்டேன்....
வீசி விட்டாயடி
வீரத்தை...........

...................................
...................................


முத்தமிழாய் வந்து
உயிரில் பதிந்தவளே!
உன்னை இசைத்தமிழாய்
கண்டேன்...........
இசைத்து விட்டாயடி
என்னை..........


சரளமாக நடை போடும் கவிதை மொழியில் இடையிடையே தலை நீட்டும் அந்த ஆங்கில மோகத்தை நீக்கம் செய்தால் கவிதை இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது அபிப்ராயம். ( இதற்கு மாற்று கருத்து கொண்ட அன்பர்கள் பலரும் உள்ளனர். )

கருப்பொருளில் கொஞ்ம் முன்னும் பின்னுமாய் போய் வருகிறீர்கள். ஒரு பக்கம் மென்று விட்டாயடி என்று வேதனைப்படுகிறீர்கள் - இன்னொரு புறம் இசைத்துவிட்டாயடி என்னை என்று புளகாங்கிதம் அடைகிறீர்கள்.

ஒரு கவிதையில் இரண்டு மாற்று கருத்துகள்? ஒன்றை ஒன்று மறிக்கும் அந்த கருத்துகள் கவிதையின் உள்ளடக்கத்தை வலுவிழக்கச் செய்து விடுகின்றன.

தமிழ்ப் பேராசிரியர் என்று கூறியிருக்கிறீர்கள் - இன்னும் வலுவான உள்ளடக்கமும் செறிவான நடையும் கொண்ட கவிதைகளை எதிர்பார்க்கிறோம்.

தொடர்ந்து எழுதுங்கள்.....

பிரசன்னா
13-09-2005, 02:04 PM
அன்பான நண்பரே

இசை என்பது இன்பம் தருவது மட்டுமல்ல..
துன்பத்தின் கனலை மிகுதிபடித்திக்காட்டவும் பயன்படும்.இதற்கு
சங்க இலக்கிய அகப்பாடல்களே சான்று.
தங்களின் மாற்றுக் கருத்துக்காக இசைத்து என்பதை அசைத்து என மாற்றுகிறேன்.
நயமான கருத்துக்கு நன்றி.

மன்மதன்
13-09-2005, 02:33 PM
கணினி என
கண்ணில் பதிந்தவளே!
உன்னை வின்டோசாய்
கண்டேன்....
வீசி விட்டாயடி
வீரத்தை...........


நல்ல கவிதை.. விண்டோசாய் என்பது மட்டும் உறுத்துகிறது.. அதை தமிழில் எப்படி மாற்றுவது??

பிரசன்னா
13-09-2005, 04:37 PM
சன்னலாய் என மாற்றி விட்டேன்
தங்கள் கருத்துக்கு நன்றி

Mano.G.
14-09-2005, 03:37 AM
முத்தமிழாய் வந்து
உயிரில் பதிந்தவளே!
உன்னை இசைத்தமிழாய்
கண்டேன்...........
அசைத்து விட்டாயடி
என்னை..........


வாவ் பிரமாதம் அருமை
என்னச் சொல்லில் செல்ல


மனோ.ஜி