PDA

View Full Version : தமிழ் மன்றம்.காம்



பிரசன்னா
12-09-2005, 12:52 PM
தமிழ் மன்றம்.காம்


கவி முத்துக்களை
கரைக்கே வந்து கொட்டும்
ஆழ்கடல்....
இல்லை இல்லை
கவிக்கடல்...
கருத்துக்களை
சித்தரிக்கும்
கலைக்கூடம்
இல்லை இல்லை
காவியக்கூடம்

உலகத் தமிழர்களின்
எண்ணத்து உணர்வுகளுக்கு
ஏணி
இல்லை இல்லை
வடிகால்
இணையத்து நட்புக்கு
இது ஒரு காப்பியம்
இல்லை இல்லை
இது ஒரு புதுக்கவிதை
இலக்கணங்களை
மீறாத
இணையம்
இல்லை இல்லை
இலக்கு.............

thempavani
12-09-2005, 12:56 PM
பிரசன்னா அருமையாக வடித்துள்ளீர்கள்..நம் மன்றத்தை இணைய பக்கங்கள் என்பதைவிட நன் உறவுகளைச் சந்திக்கும் சரணாலயம் என்பதே தகும்...உண்மையான உறவுகள், நட்பு வளையங்களை உருவாக்கிய பெருமையுடைத்து நம் மன்றம்...

பிரசன்னா
12-09-2005, 12:58 PM
நன்றி தேம்பாவனியாரே

pradeepkt
12-09-2005, 01:47 PM
அருமையான கவிதை பிரசன்னா.
நம் மன்றத்தின் முக்கிய நோக்கு தமிழ் மக்கள் ஒன்று சேர்தல்.
அதைக் கண்டு விட்டதாகவே நான் உணர்கிறேன்.
நன்று உங்கள் சிந்தனை

pradeepkt
12-09-2005, 01:48 PM
நன்றி தேம்பாவனியாரே
எனக்கென்னமோ அக்காவை இனிமேல் இப்படியே கூப்பிடுவது நலம் என்று தோன்றுகிறது :D

mukilan
12-09-2005, 04:02 PM
மிகச் சரியாகச் சொன்னீர்கள். தமிழ்மன்றம் எனக்கு பல நல்ல புதிய நண்பர்களைத் தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. மேலும் பல நல்ல கவிகள் புணைய வாழ்த்துக்கள்.

Nanban
12-09-2005, 07:13 PM
இணைய உலகம் ஒரு அற்புதமான உலகம் தான். அதை முறைப்படி கையாளத் தெரிந்திருந்தால். மன்றத்தின் பல தளங்களிலும் ஒரு சுற்று சுற்றி வாருங்கள். நெகிழ்ச்சியான பாசம் எங்கும் பெருகி நிற்பதை காண்பீர்கள்

Mano.G.
13-09-2005, 02:33 AM
நமது தமிழ்மன்றத்துக்கு
இப்படி ஒரு கவுரவிப்பு
எதிர்பார்க்கவில்லை கவிஞரே

அருமையிலும் அருமை

வாழ்த்துக்கள்


மனோ.ஜி

lolluvathiyar
04-09-2007, 12:37 PM
அருமையான கவிதை நீண்ட காலத்துக்கு முன் எழுதியது.
படிக்கவே நன்றாக இருந்தது.

மன்மதன்
04-09-2007, 12:39 PM
மன்றத்தை வாழ்த்திய பிரசன்னா மீண்டும் மன்றத்தில் உலா வரவேண்டும் ..

இளசு
04-09-2007, 09:43 PM
படிக்க மனம் நிறைகிறது...

நன்றியும் பாராட்டும் − பிரசன்னா..

மீண்டும் உங்கள் மன்றப் பிரசன்னம் நிகழ ஆசை! வருவீர்களா?