PDA

View Full Version : நட்பு



பிரசன்னா
12-09-2005, 12:19 PM
நட்பு



சாதியை
சம்பத்தை
மேல்கீழ்
வர்க்கத்தை
பஞ்சத்தை
படாடோபத்தை
மண்குடிலை
மாளிகையை
இன்னும்
இடைப்பட்ட
பல்லாயிரம்
பேதத்தை
தகர்த்தும்
தாண்டியும்
பெயர்த்தும்
பிடுங்கியும்
தூர எறிந்து விட்டு
தோளோடு
தோள் தழுவித்
துடைப்பது தான்
தூய நட்பு..................
அங்ஙனம் அமைந்திடாத
நட்பு! நட்பல்ல ஒப்பு....

மன்மதன்
12-09-2005, 12:45 PM
சரியா சொன்னிங்க.. அதுதானே நட்பு..

பிரசன்னா
12-09-2005, 12:54 PM
நன்றி மன்மதரே

mukilan
12-09-2005, 03:59 PM
அங்ஙனம் அமைந்திடாத
நட்பு! நட்பல்ல ஒப்பு....

நல்ல வரிகள். அருமையான கவிதை!

Nanban
12-09-2005, 07:16 PM
நட்பிற்கு நல்ல வடிவம்.

பாராட்டுகள்

Mano.G.
13-09-2005, 02:30 AM
நட்பு என்பதற்கு விளக்கம்
நட்பு எப்படி இருத்தல் வேண்டும் என்பதற்கு உவமை
அருமை அருமை

தொடருங்கள்


மனோ.ஜி