PDA

View Full Version : செப்டம்பர் 12, திங்கட்கிழமை மலேசிய செய்திக



Mano.G.
12-09-2005, 09:57 AM
செப்-11 நான்காம் ஆண்டு நினைவு தினம் நேற்று அமெரிக்காவில் அனு║├вக்கப்பட்டது
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் 11-ம் திகதி அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையம், பெண்டகன் ராணுவ தலைமை அலுவலகம் ஆகியவை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் ஏராளமானோர் பலியானார்கள். இன்று 4-ம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய புஷ், தீவரவாதத்தை ஒடுக்க வேண்டும். கடந்த செப்டம்பர் 11-ம் திகதி தீவிரவாதிகளால் நாம் பாதிக்கப்பட்டோம். அதேபோல் தற்போது Katrina சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
--------------------------------------------------------------
வியாபாரிகள் பொருட்களின் விலையை ஏற்ற காரணங்களைக் கூற முடியாது
இன்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட 25 முதல் 80 விழுக்காடு சாலை வரி குறைப்பு திட்டத்தைத் தொடர்ந்து, இனி வியாபாரிகள் பொருட்களின் விலையை ஏற்ற காரணங்களை கூற முடியாது என உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகாரத் துறையின் அமைச்சர் Datuk S.Veerasingam நேற்று தெரிவித்தார்.
எண்ணெய் விலையை காரணம் காட்டி வியாபாரிகள் இனி, பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் அவ்வாறு செய்யும் வியாபாரிகளிடம் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இவ்வாண்டு இறுதி வரையில் எண்ணெய் விலையில் மாற்றம் ஏதும் ஏற்படாது எனவும் இதனால், வியாபாரிகள் பொருட்களின் விலையை ஏற்றக்கூடாது எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
இதனிடையே, பயனீட்டாளர் பொருட்களை வாங்கும் பொழுது கவனமாக இருப்பது மட்டுமல்லால், சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தற்போது, அதிகமாக NGV எனப்படும் எரிப்பொருளை பயன்படுத்த அரசாங்கம் பல திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.


காப்புறுதி நிறுவனங்கள் வாகன காப்பீட்டு கட்டணங்களை உயர்த்தாமல் இருக்க சிறப்பு கண்காணிப்பு
அண்மையில் சாலை போக்குவரத்து வரியை அரசாங்கம் குறைத்ததை தொடர்ந்து, காப்புறுதி நிறுவனங்கள் இதனை காரணம் காட்டி வாகன காப்பீட்டு கட்டணங்களை உயர்த்தாமல் இருக்க நிதித்துறை அமைச்சு எப்பொழுதும் அந்நிறுவனங்களை கண்காணிக்கும் என அத்துறையின் அமைச்சர் Datuk Dr Ng Yen Yen தெரிவித்தார்.
முறையான காரணங்கள் அல்லது ஆதரவுகள் இல்லாமல் காப்புறுதி நிறுவனங்கள் வாகன காப்பீட்டு கட்டணங்களை அதிகரிக்க கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், இதுவரையில் வாகன காப்பீட்டு கட்டணங்கள் விலையேற்றம் குறித்து எந்த ஒரு புகார்களும் கிடைக்கவில்லை எனவும், ஆனால் Kurnia காப்புறுதி நிறுவனம் பேருந்திற்கான காப்புறுதி திட்டத்தை ரத்து செய்யவுள்ளதாகவும் Dr Ng Yen Yen செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


சீன நாட்டு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைவு

மலேசியாவில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு சீனா நாட்டு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக சுற்றுலாத்துறை துணை அமைச்சர் Datuk Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் சுமார் 148,000 சீனா நாட்டு சுற்றுப்பயணிகள் மட்டுமே மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். எனினும், கடந்த ஆண்டு சுமார் 550,000 சுற்றுப் பயணிகள் மலேசியாவிற்கு வருகை தந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, கடந்த காலங்களில் சீன நாட்டு சுற்றுப்பயணிகள் மலேசியாவில் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் பொழுது சில பிரச்சனைகளை எதிர்நோக்கியதாகவும், இதனால் அவர்கள் அடுத்த முறை மலேசியாவிற்கு வர யோசிப்பதாகவும் அவர் கூறினார்.


பிரதமர் லண்டனுக்கு பயணம்
பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi நேற்று லண்டனுக்கு பயணம் மேற்கொண்டார். மலேசியாவில் கிடைக்கப்பெறும் முதலீட்டு வாய்ப்புகளை அங்குள்ள முதலீட்டாளர்களுக்கு விளம்பரப்படுத்தும் நோக்கில் அவர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
Heathrow அனைத்துலக விமான நிலையத்தில் பிரிட்டனுக்கான மலேசிய உயர் ஆணையர் Datuk Abdul Aziz Mohammed மற்றும் இதர பிரமுகர்களும் பிரதமரை வரவேற்க அங்கு கூடியிருந்தனர். லண்டனில் பிரதமர் முதலீட்டுத் தொடர்பான பல கூட்டங்களில் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.


போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு
சுமார் 8 கிலோகிராம் எடைக் கொண்ட RM640,000 மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் சம்பவம் ஒன்று போலீசாரால் முறியடிக்கப்பட்டது. ஆடவன் ஒருவனைப் போலீசார் இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் கைது செய்துள்ளதாக மாநில தலைமை போலீஸ் அதிகாரி ACP Azizan Abu Taat தெரிவித்தார்.
இக்கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆடவன் ஏற்கெனவே பல கடத்தல் சம்பவங்களில்
ஈடுபட்டிருப்பதாக விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து போலீசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் அவ்வாடவன் கைது செய்யப்பட்டதாக அப்போலீஸ் அதிகாரி கூறினார்.
-------------------------------------------------------------
மன்மோகன் சிங் பிரான்ஸ் நாட்டிற்குப் பயணம்
ஒரு வார கால அரசு முறைப்பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலை பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டார். எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.நா.மாநாட்டில் அவர் உரையாற்றவிருக்கிறார்.
அம்மாநாட்டில் கலந்துக் கொண்ட பின்னர் அவர் 17ஆம் திகதி மீண்டும் இந்தியாவிற்குத் திரும்புவார். பிரான்ஸ் நாட்டு பயணத்தின் போது அவர் முஷாராப்பைச் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளார் என தெரிய வந்துள்ளது.
--------------------------------------------------------------
எல்.டி.பி.மகத்தான வெற்றி
ஜப்பான் பொதுத் தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் ஜூனிஜிரோ கொய்சுமியின் ஜனநாயக லிபரல் கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
15 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் முறையாக கூட்டணிக் கட்சிகள் ஆதரவின்றி அரசாங்கத்தை அமைக்கும் அதிகாரத்தை எல்.டி.பி.எனப்படும் ஜனநாயக லிபரல் கட்சி பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்ள 480 இடங்களில் 307 இடங்களை எல்.டி.பி. கட்சி கைப்பற்றியிருக்கலாம் என எதிர் பார்க்கப்படுவதாக தோக்கியோ ஒலிபரப்புக் கழகம் கூறியது. கடந்த மாதம் கொய்சுமி நாடாளுமன்றத்தை கலைத்தபோது நாடாளுமன்றத்தில் எல்.டி.பி.பலம் 249 ஆக இருந்தது.


ஈராக்கில் தங்கியிருந்த அமெரிக்கப் படை பிரிவினர் நியூஆர்லியன்சில் முகாமிட்டு நிவாரணப் பணி
அமெரிக்காவில் கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொண்டிருந்த மீட்பு படையினரின் உயர் அதிகாரி விரைவில் மாற்றப்படுகிறார்.
அமெரிக்காவில் கத்ரீனா சூறாவளி வீசி இரண்டு வாரம் முடிந்து விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களில் அவசரகால மேலாண்மை நிறுவனம் சார்பில் மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே நிவாரண பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.


எகிப்து அதிபராக முபாரக் 5-வது முறையாக வெற்றி
எகிப்து அதிபராக ஹோஸ்னி முபாரக் ஐந்தாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்றார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அதிபராக அவர் பதவி வகிப்பார். எகிப்து அதிபர் அன்வர் சதாத் கடந்த 1981-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
அதன்பிறகு அதிபராக பொறுப்பேற்ற ஹோஸ்னி முபாரக் தொடர்ந்து அப்பதவியில் நீடிக்கிறார். இதற்கு முன் அதிபர் தேர்தல் கருத்து கணிப்பு பாணியில் நடத்தப்பட்டது.
அதிபர் பதவிக்கு ஹோஸ்னி முபாரக் பெயர் மட்டுமே நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படும். அவர் பதவியில் நீடிப்பதா, வேண்டாமா என்று வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். அதிபர் தேர்தலில் அதிகம் முறைக்கேடு நடக்கிறது. அதில், சீர்திருத்தம் செய்ய வேண்டும் என அமெரிக்கா மற்றும் மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தின.
அதன்படி இம்முறை நடந்த தேர்தலில் பல கட்சியினரும் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். முபாரக்கை எதிர்த்து மொத்தம் ஒன்பது பேர் போட்டியிட்டனர்.


இலங்கை பிரதமர் மீது அதிபர் சந்திரிகா புகார்
கட்சிக் கொள்கையை மீறி செயல்படுவதாக இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே மீது அதிபர் சந்திரிகா குமாரதுங்கா குற்றம் சாட்டினார். எதிர்வரும் நவம்பர் 16 முதல் 21-ஆம் தேதிக்குள் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் இலங்கை சுதந்திர கட்சி சார்பில் தற்போதைய பிரதமர் மகிந்தா ராஜபக்சே போட்டியிடுவார் என சந்திரிகா அறிவித்தார்.
அங்குள்ள மார்க்சிஸ்ட் சார்புடைய ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியுடன் பிரதமர் ராஜபக்சே சமீபத்தில் ஒரு ஒப்பந்தம் செய்தார். அந்த 13 அம்ச ஒப்பந்தத்தில் விடுதலை புலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அமைதிப்பேச்சில் நோர்வே குழு ஈடுபடுவதை மறுபரிசீலனை செய்யவும் பிரதமர் ஒப்புக் கொண்டார்.
அதற்கு பதிலாக அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்க ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி ஒப்புக் கொண்டது. இந்த ஒப்பந்தம் அதிபர் சந்திரிகாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
--------------------------------------------------------------
U.S.Open Tennis: பெண்கள் ஒற்றையர் பிரிவில் Kim Clijsters சாம்பியன்
நியுயார்க்கில் நடந்த U.S.Open Tennis பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தின் Kim Clijsters பிரான்சின் Mary Pierce ஆகிய இருவரும் மோதினர்.
இதில் 6-3 , 6-1 என்ற புள்ளிக் கணக்கில் Kim Clijsters, Mary Pierce-சைத் தோற்கடித்தார். இப்போட்டியில் வெற்றி வாகை சூடிய Kim Clijsters-ருக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.


நன்றி வணக்கம்மலேசியா.கா,

மனோ.ஜி

рооройрпНроородройрпН
12-09-2005, 10:14 AM
செய்திகளுக்கு நன்றி மனோ.ஜி