PDA

View Full Version : நான் பிரதீப்



pradeep_kovai
12-09-2005, 06:02 AM
வணக்கம். எனது பெயர் பிரதீப். பெங்களூரில் இருக்கிறேன். ராகவன் என்னை மன்றத்திற்கு அறிமுகப் படுத்தினார். உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

அன்புடன்,
பிரதீப்

மன்மதன்
12-09-2005, 06:04 AM
என்ன இது??? பிரதீப் என்னாச்சுப்பா??

thempavani
12-09-2005, 06:07 AM
மன்மதன் என் தம்பி ஹைதராபாத் பிரதீப்..அதனால் இது நிச்சயம் புது பிரதீப்பாகத்தான் இருக்க முடியும்..

thempavani
12-09-2005, 06:08 AM
வாருங்கள் பிரதீப்..ராகவன் அண்ணாவின் அணியினரிடம் கொஞ்சம் கவனமாக இருக்கவும்..

(ராகவன் அண்ணா பக்கத்து சீட்டா உங்களுக்கு...)

mukilan
12-09-2005, 06:08 AM
வாங்க பெங்களூர் பிரதீப். இங்கே ஹைதராபாத் காரர் ஒருத்தர் உங்கள் பெயரிலேயே இருக்கிறார். நீங்களும் அவரைப் போன்றே அருமையான பல பதிவுகள் இட்டு மகிழ்விக்க வாழ்த்துகிறேன். அதோடு ராகவன் அவர்களின் அறிமுகம் வேறு! சொல்லவா வேண்டும்.வருக! வருக!!

gragavan
12-09-2005, 06:16 AM
வா பிரதீப் வா. நீ மன்றத்தில் சேர்ந்ததில் மகிழ்ச்சி.

நீயும் ஐவரணியில் ஒருவராக இருக்க அழைக்கிறேன். எதிரணியினியில் சேர வேண்டாமென்று எச்சரிக்கிறேன்.

(அதென்னவோ நான் மன்றத்துக்கு அறிமுகப் படுத்துறவங்கள்ளாம் பிரதீப்புன்னே இருக்காங்க....)

thempavani
12-09-2005, 06:19 AM
பிரதீப் என்ற பெயர் மீது உங்களுக்கு ஒரு கண் என நான் நினைக்கிறேன்..

மன்மதன்
12-09-2005, 06:26 AM
வாங்க பிரதீப்.. இராகவன் கூட வேலை செய்கிறீர்களா..??
ஹைதராபாத் திராட்சை கூட பெயர் குழப்பம் வராமல் இருக்கணும்...

thempavani
12-09-2005, 06:34 AM
என்ன ராகவன் அண்ணா பத்தி விபரம் கேட்கப்போறியா...ரெம்ப அக்கரையா கேக்கிறாப்ல இருக்கு...

gragavan
12-09-2005, 06:35 AM
பிரதீப் என்ற பெயர் மீது உங்களுக்கு ஒரு கண் என நான் நினைக்கிறேன்..ஆமா கண்ணு காது மூக்கு எல்லாம் சொல்லுங்களேன். நீங்க வேற. நம்ம அலுவலக நண்பருங்க. அதான். நல்ல பையன்.

gragavan
12-09-2005, 06:37 AM
வாங்க பிரதீப்.. இராகவன் கூட வேலை செய்கிறீர்களா..??
ஹைதராபாத் திராட்சை கூட பெயர் குழப்பம் வராமல் இருக்கணும்...பார்ப்போம் என்ன ஆகிறது என்று. சபாஷ் சரியான போட்டி.

thempavani
12-09-2005, 06:37 AM
ஆமா கண்ணு காது மூக்கு எல்லாம் சொல்லுங்களேன். நீங்க வேற. நம்ம அலுவலக நண்பருங்க. அதான். நல்ல பையன்.
இப்படியேல்லாம் சான்றிதழ் கொடுத்து அணிக்கு ஆள் சேர்க்கக் கூடாது ஆமா சொல்லிபுட்டேன்

poo
12-09-2005, 06:51 AM
வணக்கம்.. நண்பரே,,
தங்கள் வருகையால் மன்றம் மேலும் சிறப்படையட்டும்!!

(பெயரில் சிறியதாக மாற்றம் செய்து கொள்ளுங்களேன்...)

gragavan
12-09-2005, 06:51 AM
இப்படியேல்லாம் சான்றிதழ் கொடுத்து அணிக்கு ஆள் சேர்க்கக் கூடாது ஆமா சொல்லிபுட்டேன்அட! அணிக்கு ஆள் சேக்குறது யாரு? நீங்க அணிக்கு தலைவர் தேடுறீங்களாமே.......

pradeep_kovai
12-09-2005, 06:53 AM
வணக்கம் நண்பர்களே!!!!!!!! என்னை ராகவன் அண்ணன் அரிமுக படுத்தி இருக்கிறார்......நான் இப்பொழுதுதான் டைப் அடிக்க பலகிகொண்டிருக்கிரேன்....அது வரை சற்று பொருத்து கொல்லுங்கள் அன்பார்களே!!!!

பிரியன்
12-09-2005, 06:58 AM
வணக்கம் நண்பர்களே!!!!!!!! என்னை ராகவன் அண்ணன் அரிமுக படுத்தி இருக்கிறார்......நான் இப்பொழுதுதான் டைப் அடிக்க பலகிகொண்டிருக்கிரேன்....அது வரை சற்று பொருத்து கொல்லுங்கள் அன்பார்களே!!!!.....

வாங்க கோவை பிரதீப். என்ன உங்க உதடு சிவப்பா இருக்குமா:)

ராகவன் நண்பரா.. அப்ப அடுத்து நீங்களும் ஹைதராபாத்தானா:D :D

gragavan
12-09-2005, 07:00 AM
வணக்கம் நண்பர்களே!!!!!!!! என்னை ராகவன் அண்ணன் அரிமுக படுத்தி இருக்கிறார்......நான் இப்பொழுதுதான் டைப் அடிக்க பலகிகொண்டிருக்கிரேன்....அது வரை சற்று பொருத்து கொல்லுங்கள் அன்பார்களே!!!!கவலையே வேண்டாம். பெயர்க் குழப்பம் வரவே வராது. பதிப்பை வைத்தே எந்த பிரதீப் என்று கண்டு பிடித்து விடலாம்.

pradeepkt
12-09-2005, 07:06 AM
வாங்கய்யா வாங்க !!
ராகவனின் மற்றோர் அறிமுகம்...
அதுவும் ஒரு குகைக்குள்ளே இரு சிங்கங்கள்...
சரி, நீங்க ராகவனோட வேலை பார்க்குறீங்களா?
போற போக்குல குழப்பத்தை எல்லாம் என் தலையில கட்டீறாதீங்க சாமி!! :D
சும்மா சொன்னேன்... மன்றத்தில் உலாவி நிறைய நிறையப் பதித்து எங்கள் மனங்களில் வாழ வாழ்த்துகள்.

அன்புடன்,
ஹைதராபாத் பிரதீப் (அடப்பாவிகளா கடைசியில எனக்கும் ஊர் பேரா)

பிரியன்
12-09-2005, 07:08 AM
வாங்கய்யா வாங்க !!
ராகவனின் மற்றோர் அறிமுகம்...
அதுவும் ஒரு குகைக்குள்ளே இரு சிங்கங்கள்...
சரி, நீங்க ராகவனோட வேலை பார்க்குறீங்களா?
போற போக்குல குழப்பத்தை எல்லாம் என் தலையில கட்டீறாதீங்க சாமி!! :D
சும்மா சொன்னேன்... மன்றத்தில் உலாவி நிறைய நிறையப் பதித்து எங்கள் மனங்களில் வாழ வாழ்த்துகள்.

அன்புடன்,
ஹைதராபாத் பிரதீப் (அடப்பாவிகளா கடைசியில எனக்கும் ஊர் பேரா)

அன்புடன்

ஹைதராபாத் பிர(ரி)யாணி பிரதீப்
என்று போடுங்க:) :) :)

pradeepkt
12-09-2005, 07:14 AM
ஏன் கடைசியில என்னை எல்லாரும் பிரியாணி பண்ணிப் பிரயாணம் அனுப்பவா? :D

gragavan
12-09-2005, 07:33 AM
ஏன் கடைசியில என்னை எல்லாரும் பிரியாணி பண்ணிப் பிரயாணம் அனுப்பவா? :Dபேசாம ரெண்டு பிரியாணி வாங்கிக்கிட்டு பெங்களூர் வரைக்கும் ஏரோபிளேனில் வந்து கொடுத்திட்டுப் போங்க. பிரியாணி பண்ணுன மாதிரியும் இருக்கும். பிரயாணம் பண்ணுன மாதிரியும் இருக்கும். நானும் உங்களுக்கு ஒரு வாழ்க போடுவேன்.

பரஞ்சோதி
12-09-2005, 07:37 AM
வாங்க பிரதீப்

உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

ஏற்கனவே பிரதீப் என்று ஒருவர் இருப்பதால், தாங்கள் ஏதாவது நல்ல புனைப்பெயரை தேர்வு செய்யலாமே.

(வாலிபன், புகழேந்தி, மைந்தன், இப்படி, தயவு செய்து சத்யராஜ் படம் பெயரான சுயேட்சை எம்.எல்.ஏ எல்லாம் வேண்டாம்).

பரஞ்சோதி
12-09-2005, 07:38 AM
ஆமா கண்ணு காது மூக்கு எல்லாம் சொல்லுங்களேன். நீங்க வேற. நம்ம அலுவலக நண்பருங்க. அதான். நல்ல பையன்.

ரொம்ப ஆச்சரியமாக இருக்குதே :D :D

gragavan
12-09-2005, 07:41 AM
பரஞ்சோதி, பிரதீப்பின் பெயரில் கோவை இருப்பதால் குழப்பம் வராது என நினைக்கிறேன். அப்படியே இருக்கட்டுமே. அதிலும் பிரதீப் தமிழில் தட்டுவதைப் பார்த்தால் இன்னும் ஒரு ஆண்டு ஆகும் போல. அதனால் பிரச்சனையிருக்காது என்று நினைக்கிறேன்.

பரஞ்சோதி
12-09-2005, 07:47 AM
பரஞ்சோதி, பிரதீப்பின் பெயரில் கோவை இருப்பதால் குழப்பம் வராது என நினைக்கிறேன். அப்படியே இருக்கட்டுமே. அதிலும் பிரதீப் தமிழில் தட்டுவதைப் பார்த்தால் இன்னும் ஒரு ஆண்டு ஆகும் போல. அதனால் பிரச்சனையிருக்காது என்று நினைக்கிறேன்.

இல்லை இல்லை, மாற்றத் தான் வேண்டும், மன்மதன் என்று ஒருவர் வந்தார், அவரை பெயரை அழைக்கும் போது எல்லாம் மன்மதன் என்று யார் நினைவுக்கு வருகிறார்கள், ஏதோ ஒன்று இடிக்கத் தான் செய்யும், தயவு செய்து மாற்றச் சொல்லுங்கள்.

gragavan
12-09-2005, 07:48 AM
இல்லை இல்லை, மாற்றத் தான் வேண்டும், மன்மதன் என்று ஒருவர் வந்தார், அவரை பெயரை அழைக்கும் போது எல்லாம் மன்மதன் என்று யார் நினைவுக்கு வருகிறார்கள், ஏதோ ஒன்று இடிக்கத் தான் செய்யும், தயவு செய்து மாற்றச் சொல்லுங்கள்.சரி. பேசுகிறேன். மாற்றிக் கொள்ளலாம்.

thempavani
12-09-2005, 08:12 AM
அன்புடன்

ஹைதராபாத் பிர(ரி)யாணி பிரதீப்
என்று போடுங்க:) :) :)

ஹைதராபாத் பிராணி என்று சொல்லாமல் விட்டதற்கு பிரியனுக்கு நன்றி

(தம்பி சார்பாக..)

thempavani
12-09-2005, 08:13 AM
ரொம்ப ஆச்சரியமாக இருக்குதே :D :D

ராகவன் அண்ணா பரம்ஸ் அண்ணா சொன்னதைக் கவனிக்கவில்லையா..

(அப்பாடா போட்டுக் குடுத்தாகிவிட்டது)

பரஞ்சோதி
12-09-2005, 08:29 AM
ராகவன் அண்ணா பரம்ஸ் அண்ணா சொன்னதைக் கவனிக்கவில்லையா..

(அப்பாடா போட்டுக் குடுத்தாகிவிட்டது)



ரெண்டு பிளேட் பிரியாணியுடன் 5 முட்டை சாப்பிட்ட திருப்தி இருக்குமே. :angry: :angry:

pradeepkt
12-09-2005, 08:54 AM
ஹைதராபாத் பிராணி என்று சொல்லாமல் விட்டதற்கு பிரியனுக்கு நன்றி

(தம்பி சார்பாக..)



ரொம்ப முக்கியம், நல்லா எடுத்துக் கொடுங்க... :mad:
நல்ல அக்கா எனக்குன்னு வந்து வாய்ச்சீங்களே

pradeepkt
12-09-2005, 08:56 AM
சரி. பேசுகிறேன். மாற்றிக் கொள்ளலாம்.
அப்ப அவரு பேரை மட்டும் மாத்திட்டாச் சரியா
அவர் பதிவுகளிலெல்லாம் பிரதீப்பு பிரதீப்புன்னுதானே எழுதுவாரு ...

மீண்டும் சண்டையைத் துவக்கும்,
ஹை. பி.

gragavan
12-09-2005, 09:00 AM
அப்ப அவரு பேரை மட்டும் மாத்திட்டாச் சரியா
அவர் பதிவுகளிலெல்லாம் பிரதீப்பு பிரதீப்புன்னுதானே எழுதுவாரு ...

மீண்டும் சண்டையைத் துவக்கும்,
ஹை. பி.அப்படியில்லைன்னாலும் அப்படியே எழுதச் சொல்றேன்.

pradeepkt
12-09-2005, 09:03 AM
எப்படியில்லைன்னாலும் எப்படியே எழுதச் சொல்றீங்க?

pradeepkt
12-09-2005, 09:04 AM
அது அந்த பிரதீப்போட தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்காதா...???

சுதந்திரன்,
ஹை.பி. (போகப் போக எனக்கு ஹை பி.பி எகிறப் போவுது)

gragavan
12-09-2005, 09:10 AM
அது அந்த பிரதீப்போட தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்காதா...???

சுதந்திரன்,
ஹை.பி. (போகப் போக எனக்கு ஹை பி.பி எகிறப் போவுது)அந்த பிரதீப்புக்கு சுதந்திர பாதிப்பு இருந்தா என்ன இல்லைன்னா என்ன....ஹை.பின்னு செட்டில் ஆயிட்டீங்களே. அப்புறமென்ன...சின்னப் பய அவன். விட்டுருங்க....பேரு போடாம எழுதச் சொல்றேன்.

அறிஞர்
12-09-2005, 05:08 PM
வாருங்கள் அன்பரே.... பிரதீப்-1, பிரதீப்-2 என அழைக்கலாம்....

சுவேதா
13-09-2005, 01:54 AM
வாருங்கள் 2 பிரதீப் அண்ணா! உங்கள் வரவு நல்வரவாகட்டும்
வாழ்த்துக்கள்!

pradeepkt
13-09-2005, 07:10 AM
அது சரி பேரையே சுஜாதா கதையில வர ஜீனோக்கள் மாதிரி ஆக்கீட்டீங்களே
கடைசியில பிரதீப் 1093948 (x/y)^2-a/b எல்லாம் வரப்போவுது,

pradeep_kovai
13-09-2005, 10:31 AM
ஆஹா என்ன இது ஜெயில் கைதி மாதிரி நம்பர் எல்லாம் சொல்லி கூபிடுரிங்கலே..அதுக்கு பதிலா கோவை பிரதீப் னு கூபிடலாமே......சரி உங்களுக்கு எது வசதியோ அப்படியே கூபிடுங்க!!!!!1

பரஞ்சோதி
13-09-2005, 10:33 AM
வாங்க பிரதீப்,

உங்களுக்கு பிடித்தமான வேறு பெயர் இருக்கிறதா? அந்த பெயருக்கு நீங்க மாறலாமே.

விட்டால் மக்கள், 703, 527 என்று போலிஸ்காரர் மாதிரி நம்பர் சொல்லி அழைக்கக்கூடும்.

pradeepkt
13-09-2005, 10:51 AM
நான் அதான் சொன்னேனே...
இப்படித்தான் நடக்கும் ... வேணுமின்னா மிஸ்டர் எக்ஸ் னு வச்சிக்கலாமா.
நாளப்பின்ன உதவுமே....

பரஞ்சோதி
13-09-2005, 10:55 AM
தம்பி நீ பஸ்ஸில் ஏறினாத் தான் பக்கத்துல உட்கார மத்தவங்களுக்கு சீட்டு கிடைக்காதுன்னு நெனச்சேன், ஆனால் பெயரிலும் கூடவா?

மன்மதன்
13-09-2005, 11:10 AM
தம்பி நீ பஸ்ஸில் ஏறினாத் தான் பக்கத்துல உட்கார மத்தவங்களுக்கு சீட்டு கிடைக்காதுன்னு நெனச்சேன், ஆனால் பெயரிலும் கூடவா?

ஹாஹ்ஹாஹ்.. :D :D :rolleyes: :rolleyes:

pradeepkt
13-09-2005, 11:24 AM
:mad: :mad: அண்ணா.............. :mad: :mad:

Mathu
13-09-2005, 06:49 PM
வாருங்கள் கோவை பிரதீப், ராகவன் அண்ணாவின் அறிமுகம், நிச்சயம் அவரை போலவே மன்றத்தை கலகலப்பாக்க நிறைய பங்களிக்க என் வாழ்த்துக்கள்.

Narathar
14-09-2005, 04:12 PM
பிரதீப்பை இங்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்

kavitha
15-09-2005, 10:54 AM
ஆமா கண்ணு காது மூக்கு எல்லாம் சொல்லுங்களேன். நீங்க வேற. நம்ம அலுவலக நண்பருங்க. அதான். நல்ல பையன்.

கோவை பிரதீப் அவர்களை மன்றம் சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சி. ராகவன் அண்ணனின் வழி, தாங்களும் சிறந்த பதிவுகள் தந்து பிரதீப் பெயரைக்காப்பாற்றுவீராக! :)