PDA

View Full Version : காதல் கொ(ண்)டேன்!!!



ஜீவா
11-09-2005, 08:21 AM
இது என் மனதினில் தோன்றிய கதை.. படமாக வரவேண்டும் என்ற ஆசை கூட.. என்னுடைய ஓய்வு நேரங்களில் மன்றத்தில் பதிந்து பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்..

http://i4.photobucket.com/albums/y148/meenukutty/kathalkonden.jpg

ஜீவா!!! ஏ மாடு, இருட்டுதுல்ல.. வீட்டுக்கு வரனும்ன்னு அறிவில்லையா.. அம்மாவின் குரல் தூரத்தில் கேட்டது.. மணல் வெளியில் விளையாடி கொண்டிருந்த நான் தலை தெறித்து வீட்டிற்கு ஓடினேன்..

புள்ளையாரு.. புள்ளையாரு. அம்மா என்னை அடிக்க கூடாது. என்னை அடிக்க கூடாது.. என்று மனதினில் கும்பிட்டு கொண்டே வீட்டிற்குள் நுழைந்தேன்.. நான் எப்போது வினாயகரை நினைத்தாலும், நான் நினைத்தபடி நடக்கும்.. அப்போதில் இருந்தே எனக்கு வினாயகர் மேல் ஒரு தீவிர பக்தி..

ஜீவா.. நாளைக்கு உனக்கு பத்தாம் வகுப்பு காப்பரிட்சை ஆரம்பிக்குதுள்ள.. இப்படி விளையாண்டா என்ன அர்த்தம்.. அப்புறம் உங்க அப்பா மாதிரி ஊரை விட்டு ஓட வேண்டியதுதான்.. அம்மா தனது புராணத்தை ஆரம்பித்தார்கள்..

எனக்கு இரண்டு அக்கா, ஒரு அண்ணன் உண்டு.. அம்மாவிற்கு மூன்று அண்ணன்கள்.. அனைவரும் நன்றாக படித்து பெரிய பெரிய வேலைகளில் இருந்து கல்யாணம் பண்ணி போய்விட்டார்கள்.. அந்த காலத்தில், பெண்கள் கல்வி முக்கியத்துவம் இல்லாத்தால், அம்மா படிக்கவில்லை.. இருந்தும், என் அப்பா அந்த காலத்திலே, வெத்தலை வியாபாரம் பண்ணிகொண்டிருந்தார்.. என்னுடைய அம்மாக்கு அப்போது ஒரு கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கட்டாயத்தில் என் அப்பாவை பற்றி சரியாக விசாரிக்காமல், கல்யாணத்தை நடத்தினார்கள்.. அப்பா ஆரம்பித்தலிருந்தே ஒரு குடிகாரார்.. அம்மாவை கல்யாணம் கட்டியவுடன், திடிரென்று வந்த அதிகமாக காசினான், திக்கு முக்காடி, அதிகமாக குடிக்க ஆரம்பித்தார்.. நான் பிறந்தப்ப, என் அப்பா என் அம்மாவின் வீடு, நகைகள், காடு என எல்லாம் அழித்து ஊருக்குள்ளும் கடன் வாங்க ஆரம்பித்தார்.. என் வயது வந்த இரு அக்காகளும், பள்ளிக்கி செல்லாமல், தின வேலைக்கு திப்பெட்டி தயார் பண்ண செல்வார்கள்.. அவர்கள் சம்பளத்தை வைத்துதான் குடும்ப செலவும், அண்ணனின் படிப்பு செலவும் ஓடிக்கொண்டிடுந்தது.. நாட்கள் நகர, அப்பா வாங்கிய கடனால் தொல்லை அதிகரித்தது.. ஒரு சமயத்தில், அப்பா இதற்கு மேல் இருக்க முடியாது என்ற நிலையில், ஊரை விட்டே ஓடி விட்டார்.. அன்று அழுக ஆரம்பித்த அம்மா, இன்று வரை மீள முடியாமல் அழுது கொண்டே இருக்கிறார்கள்.. நல்ல வேளையாக, என் மாமாக்கள் (அம்மாவின் அண்ணன்கள்) உதவியால் இரண்டு அக்காவிற்கும் கல்யாண்ம் முடிந்தது.. அவர்கள் வசதியாக வாழவில்லையென்றாலும் பிரச்சினை இல்லாமம் தின வாழ்க்கை அவர்களுக்கு ஓடியது.. நான் தினமும், பள்ளி முடிந்தவுடன், இரவு 12 மணி வரை வேலை செய்து விட்டு வீடு திரும்புவேன்.. என் இள விடலை வயது வாழ்க்கை கஷ்டத்திலே ஓடியது.. எப்போதாவது அம்மா என்னிடம் அன்பாக பேசி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.. ஆனால் அது கிடைக்கவே இல்லை..

ஏய் மாடு, படிக்க சொன்னா, ஏன்ன யோசிப்பு என்று தலையில் ஒரு கொட்டு விழ என் இயல்பு நிலைக்கு திரும்பினேன்.. ஒரு வழியாக பத்தாம் வகுப்பு முடித்தேன்.. என் அண்ணனும், ஏதோ ஒரு வேளையில் கொஞ்சம் சம்பாதித்து விட்டு, அந்த பணத்தை வைத்து ஒரு கடை போடாலாம் என யோசனையுடன் என் அம்மாவை கூட்டி கொண்டு சென்னை பக்கம் சென்று விட்டான்.. எனது படிப்பு நிக்க கூடாது என்று என்னை என் அக்கா வீட்டில் தங்க வைத்து விட்டார்கள்.. 12 முடியும் வரை, என்னால், என் அக்காவிற்கு தினம் தினம் அவர்கள் நாத்தனாரிடமிருந்து தொல்லை.. சண்டை.. நானும் வீடுண்டு, பள்ளியுண்டு என்று இருக்க ஆரம்பித்தேன்.. என் மனம் அன்பிற்கு துடித்தது... அதை காட்ட ஆளில்லை.. அக்காவிற்கும் என்னால் தொல்லை.. இருந்தும் படித்தேன்.. 12 முடித்தவுடன், மாமாவின் உதவியுடன், அவர் வேலை பார்த்த கல்லூரியில் சேர்ந்த்தேன்..

கல்லூரி விடுதியில் தங்கி படிக்க ஆரம்பித்தேன்.. என் கல்லூரி வாழ்க்கை என்னவோ எல்லாமே புதுமையாக இருந்தது.. விடுதிக்கு மற்ற நண்பர்களின் அப்பா அம்மா வந்து அவர்களை அன்போடு பேசி, விரும்பியதை வாங்கி கொடுத்து போகும் மத்தியில், நான் மட்டும் தனித்திருந்து மாதம் மாதம் வரும் மணி ஆர்டருக்ககா மட்டும் காத்திருப்பேன்.. ஆக அம்மா அப்பா இருந்தும் ஆதரிவில்லா அனாதை போல கல்லூரி வாழ்க்கை சென்றது.. அப்போதுதான், என் கூட படிக்கும் விக்னேஷ் என்னை அவன் வீட்குக்கு அழைத்து சென்றான்.. அங்கு, அவன் அம்மா, எல்லா விதமான சமையலையும் தயார் செய்து சாப்பிட சொன்னார்கள்.. நான் தயங்கி சாப்பிடும்போது, விக்னெசுக்கு அவன் அம்மா ஊட்டி விட்டார்கள்.. "விக்னேஷ் சாப்புடுப்பா.. சொன்னா கேளு" என்று அன்பு அங்கு விளையாடும்போது, என் மனதினுள், ஒரு பெரும் போராட்டமே எழுந்து கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.. பின் விடுதிக்கு வந்து தனிமையில் கண்ணீர் தீரும் வரை அழுதேன்.. என் மனதினுள் யாராவது என்னை அன்போடு அரவணைக்க மாட்டார்களா என்ற ஏக்கத்திலே வாழ்ந்தேன்.. என் கல்லூரி வாழ்க்கையும் முடிந்தது.. எனக்கும் சென்னையில் வேலை கிடைத்தது.. அந்த வேளையில், அம்மாவும் அண்ணனும் வியாபாரத்தில் நஷ்டமடைந்த்தால் சொந்த ஊருக்கே திரும்பி விட்டார்கள்..

பாகம் 2
=====
மீனா.. நான் சொன்னா கேட்க மாட்ட.. இப்ப உனக்கு அவசியம் காலேஜ் சேரணுமா.. நீயும் உன் அக்கா போல, அந்த கால் செண்டர் வேலையில சேரலாம் இல்லையா..

இல்லப்பா.. இது ரொம்ப நல்ல காலேஜ்.. இத முடிச்சா, உடனே வேலை கிடைக்கும்.. நான் படிக்கிறேம்பா..

ஆமப்பா..மீனா படிக்கட்டும்.. என்று மீனாவின் அக்கா ரேவதியும் சொல்ல..

என்னமோ யாரும் என்னோட பேச்சை கேட்க போறதா இல்ல.. எப்படியும் போங்க.. என்று அப்பா கோபத்துடன் வெறியேற, எல்லோருடைய முகத்திலும் சோக இலை ஓடியது..

மீனா.. ஒன்னும் வருத்தபடாதே.. நீ என்ட்ரன்ஸ் நல்லா பண்ணு.. மத்ததை அப்புறம் பாக்கலாம்.. அதுவரைக்கும் இப்ப போய்கிட்டு இருக்கிற வேலைக்கு போ என்றாள் ரேவதி..

மீனா.. மிகவும் சுட்டி.. கல கல வென இருக்கும் அவள் இருக்கும் இடம்.. போரடித்தால், பெயிண்டிங் பண்ண ஆரம்பித்து விடுவாள்..
டிப்ளமோ முடித்து விட்டு, B.E கம்யூட்டர் சயின்சுக்கு முயற்சி பண்ணி கொண்டிருக்கிறாள்.. அதுவரை, ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் டைரெனியாக மிக குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கிறாள்.. அப்பா ஒரு டீ.வி மெக்கானிக்.. மிக வசதியாக வாழ்ந்த அவர்கள், சொந்தங்களிடம் ஏமாந்து, இப்போது சராசரி வாழ்க்கையில் பயணித்து கொண்டிருக்கிறார்கள்.. எவ்வளவு கஷ்டம் வந்தாலும், இரு பொண்ணுகளையும், அம்மா மிக அன்புடன் கவனித்து வந்தார்.. மீனாவிற்கு பத்து படிக்கும் போது, அவள் சொந்தக்கார பையன் ஒருவன் ஒரு பொண்னை காதலித்து ஓடிவிட்டான்.. அந்த பையனின் அம்மா, அதை தாங்க முடியாமல், கதறி கதறி அழுதனர்.. அதை பார்த்த மீனாவின் சித்தி, "நல்லா பார்த்துக்கோங்கம்மா.. உங்க அம்மா அப்பாக்கு சம்பாதிச்சு கொடுக்கலன்னாலும் பரவாயில்ல.. அவங்கள அழுக மட்டும் வச்சிடாதீங்க" என்று சொன்னது பசு மரத்தாணி போல அவள் மனதில் பதிந்தது..

தொடரும்..

பிரியன்
11-09-2005, 08:34 AM
வாழ்த்துக்கள் ஜீவா. தொடருங்கள்... நல்ல துவக்கம்.
மேற்கொண்டு நீங்கள் எழுதுவதை வைத்து கதை பற்றியான என் கருத்தைச் சொல்கிறேன்

pradeepkt
12-09-2005, 06:29 AM
நல்ல நடை ஐயா உமது.
அப்படியே கதை சொல்லுவது கைவந்த கலை ஆகி இருக்கிறது.
தொடருங்கள்.

மன்மதன்
12-09-2005, 07:13 AM
நல்லா போகிறது. நன்றாக எழுதுகிறீர்கள்.. இன்னும் சுவாரஷ்யம் கூட்டுங்க..

ஜீவா
12-09-2005, 08:18 AM
இது காதல் மூவி மாதிரி ஒரு லைன் கதை.. நான்தான் அதை உணர்ச்சி பூர்வமா கொடுக்க, கதாபாத்திரங்களின் சூழ்நிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி உள்ளது.. விரைவில் முழுகதையும் வரும்.. அப்போது சொல்லுங்கள் உங்கள் எண்ணங்களை..

ஜீவா
12-09-2005, 08:22 AM
பாகம் 3
=====
கஷ்டப்பட்டு சேர்ந்த அந்த வேலை எனக்கு அந்த நேரத்தில் மிகுந்த உதவியாய் இருந்தது.. அதே நேரத்தில், அங்குதான் முதன் முதலாக, கணினியில் சாட்டிங் செய்தேன்.. அதே நேரத்தில், நிறைய படித்து நிறைய சம்பாத்திக்க வேண்டும் என்ற வெறியும் இருந்தது.. நான் என்னுடைய ஓய்வு நேரங்களில் நான் செய்த ஒரு ஜாவா சாட்டிங் சாப்ட்வேரை ஒரு தளத்தில் போட்டேன்.. அதன் மூலம் எனக்கு தினமும் 5 மெயிலாவது வந்து விடும்.. அந்த சாப்ட்வேரின் கோடிங் கேட்டு.. நானும் முடிந்த வரை உதவினேன்..
இந்த நிலையிலும், அவ்வப்போது, தனியாக சென்று, அவ்வப்போது அழுவேன்.. இன்னும் ஆழ்மனது, யாரோ ஒருவரின் அன்புக்காக ஏங்கி கொண்டிருந்தது.. அப்போதுதான், திடிரென்று என் கணினியில்..

பாகம் 4
======
எல்லோரும் ஒரு நிமிசம் என்னை பாருங்க.. என்று மீனா ஆபிசில் எல்லோரையும் தன் கவனத்தில் ஈர்த்தாள்.. அவள் தன் கையை தூக்கி "hi everybody!! meena says, good morning to all" என்று சொல்லி அமைதியாக தன் இருக்கையில் அமர்ந்தாள்.. அவள் காலையில் நடந்ததை அப்போதெ மறந்து விட்டாள்.. தனது ப்ராஜெக்ட் லீடர் ஜெயராம், மீனா , பாமினி டீமிடம் வந்து, இன்றைக்கி
அந்த ஜாவா சாட் ப்ராசெக்டை எப்படியாவது முடித்து விடுங்கள்.. இல்லையென்றால் M.D கோபபடுவார் என்று எச்சரிக்கை விடுத்து போனார்.. உடனே, மீனாவும் பாமினியும் ஒருவர் மாதிரி ஒருவர் பார்த்து கொண்டே இருந்தனர்.. சரி, வா.. இன்டெர்நெட்டில் தேடலாம் என்றும் இருவரும் தேட ஆரம்பித்தார்கள்.. அப்போதுதான், ஜீவாவின் சாட் பிராஜெக்ட் கிடைத்தது.. பாமினியிடமும் காட்டினாள்..

இதுதாண்டி நமக்கு வேணும், எப்படியாவது ஜீவாகிட்ட இருந்து கோடு வாங்கனும் என்றாள் பாமினி..

ம்.. முயற்சி பண்னலாம்

பாகம் 5
=====
ஹலோ சார், திடிரென்று ஒரு சாட் விண்டோ மீனா என்ற பெயரில் வந்து விழ்ந்தது..
எப்படி சார் இருக்கிங்க..
நான் நல்லா இருக்கேன்.. நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாம்..
நான் மீனா சார்.. மதுரையில ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை செய்யுறோம்.. எங்களுக்கு உங்க சாட் கோடு வேணும் சார்..
ம்.. கொடுக்கிறேன்.. ஆனா, அத நீங்க அப்படியே போடாமே, புரிஞ்சிகிட்டு நீங்களே முயற்சி பண்ணி பாருங்க..
ரொம்ப நன்றி சார்.. நாங்க அப்ப அப்ப தொல்லை கொடுப்போம்.. :)
ஹா ஹா.. பரவால்ல மீனா..
ஒகே சார் டாடா..
ஒகே மீனா. பிர்லா..
ஆ.. அது என்ன சார் பிர்லா..
நிங்க டாடா சொன்னிங்க .. நான் பிர்லா சொன்னேன்..
ஹா ஹா.. குட் ஜோக்.. பை பை..

என்னமோ , அவள் போன சில நேரம் கழித்தும் மனசு இயல்பு நிலைக்கு திரும்ப சில நேரம் ஆனது.. ஏன் அப்படி ஆனது என்று தெரியவில்லை.. ஆனால், அவளுடன் பேசிய அந்த சில நேரம் சந்தோசமா இருந்தேன்..

pradeepkt
12-09-2005, 08:49 AM
சும்மா மென்பொருள் நிறுவனச் சூழலை அப்படியே கொண்டு வரீங்க.
நடத்துங்க நடத்துங்க.

சுவேதா
14-09-2005, 02:04 AM
அண்ணா கதை சூப்பர்!

Joe
19-09-2005, 04:33 PM
அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன்...

மன்மதன்
20-09-2005, 04:27 AM
சினிமாவுக்காக என்றால் கதை நிகழும் சூழலை இன்னும் விரிவாக சொல்லுங்க ஜீவா.. ஒவ்வொரு பாகமும் ஒரு பதிவாக இருக்கட்டுமே. நன்றாக எழுதுகிறீர்கள்.. இன்னும் நன்றாக எழுத வேண்டும்..

இளசு
08-10-2005, 10:57 PM
ஜீவா அவர்களுக்கு
பாக்யராஜ் திரைக்கதை சொன்னால் அப்படியே படம் பார்ப்பது போல் இருக்குமாம் - முந்தானை முடிச்சு கதை கேட்டு ஏ.வி.எம். சரவணன் அவர்கள் சொன்னது.
சிலர் கதை எழுத மாட்டார்கள்.. ஆனால் திரைக்கதை பொறுப்பை அழகாய் செய்வார்கள் - (ஆரம்பகால) பாரதிராஜா மாதிரி.
சதயஜித் ரே கதை -வசன ஏடுகளில் உடை, பாவனை, இடம் எல்லாம் சின்ன சின்ன கோட்டோவியங்களாய் வரைந்து வைத்துக் கொள்வாராம்...
காதல் படத் திரைக்கதை புத்தகமாய் வந்திருக்காமே...
சுஜாதா கூட திரைக்கதை எழுதுவது பற்றி ஒரு நூல் எழுதி இருக்கார்.
ஜீவா,
உங்களிடம் ஆரவம், திறமை இரண்டும் இருக்கிறது.. நேரம்தான் கிடைக்கலை போல..
தலைப்பில் ண்-ஐ அழித்து ஒரு புதுமை.. அருமை!

சில இடங்களில் கதையாக..
சில இடங்களில் திரைக்கதை - வசனமாக..
புதிய யுக்தியில் நீங்கள் தொடங்கிய இப்பதிவு தொடரவேண்டும்..

_______

பின்னாளில் படமாய் வரும்போது மன்றம் பெயரையும் டைட்டிலில் போடுவீங்கதானே???!!!!!

சுபன்
30-01-2006, 12:12 AM
மீதி கதை எங்கே

aren
30-01-2006, 02:18 AM
ஜீவாவிற்கு நேரம் கிடைக்கவில்லை போலிருக்கிறது.

மீனாவுடன் நடந்த உரையாடல் அருமை.

தொடருங்கள் ஜீவா. நீங்கள் சீக்கிரம் கதையை முடிக்கவேண்டும்.

சினிமாவிற்கு கதை எழுதவந்துவிட்டால் எங்களை மறக்காதீர்கள்.

உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
23-05-2007, 04:42 PM
ஜீவா இபோது வரும் திரைப்படங்களில் கதையை சுழியோடித்தான் பிடிக்க வேண்டியிருக்கின்றது. அப்படியான நிலையில் இக்கதை பாராட்டப்படக்கூடிய ஒன்று. தொடராமல் இறுதியில் விட்டதன் காரணம் என்னவோ?

அக்னி
23-05-2007, 10:52 PM
சிறந்த ஒரு படைப்பு பாதியிலேயே நிற்பது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனாலும் ஜீவா மன்றத்திற்கு வந்து போவது தெரிகிறது. நேரம்தான் கிடைக்கவில்லை என நினைக்கின்றேன். இயலுமான போது இக்கதையை தொடருங்கள் ஜீவா...