PDA

View Full Version : எழுந்திரு இநதியனே



பிரசன்னா
10-09-2005, 11:32 AM
எழுந்திரு இநதியனே
உறங்கியது போதும்...
உறங்கும் உணர்வுகளை
தட்டி எழுப்பி.
இரவில் கிடைத்த சுதந்திரத்தை
இனிமேலாவது விடியச்செய்.............

இறந்துக் கொண்டிருக்கும்
தேசியத்தை தேடி உயிர்கொடு..........
பண்பாட்டை துறந்து
பகுத்தறிவை மறந்து காட்டுமிராண்டிகளாய்
உலவும் இந்திய இளைஞர்களுக்கு
கடிவாளம் கட்டு........
புதுமை அடைவது பண்பாடல்ல
நாகரிகமே என்றுச் சொல்லி
உண்ர்வுகளை தட்டி எழுப்பு.....

இங்கிங்கெனாதபடி எங்கும்
கலந்துவிட்ட ஊழலை
ஒழித்துக் கட்டு.............
ஆடம்பர பொருளாய் மாறிப்போன கல்வியை
அனைவருக்கும் கவித்துக் கொடு...
மூன்றில் உழைக்காமல் இருக்கும்
இரண்டு இந்தியனை
உழைக்கச் சொல்லு..........

தொடரும்.......................

பரஞ்சோதி
10-09-2005, 11:38 AM
புதிய பாரதியாக நம்ம பிரசன்னா அவர்களை பார்க்கிறேன்.

மன்மதன்
10-09-2005, 11:41 AM
ஒரு தமிழ் பேராசிரியரின் மனதில் ஏற்பட்ட கோபம் நியாயமான கவிதையாக வெளியாகியிருக்கிறது. அழகிய துவக்கம்.. தொடர்ந்து கவிதை கொடுங்க பிரசன்னா..

பிரசன்னா
10-09-2005, 12:04 PM
உங்கள் பாரட்டு -எந்தன்
கவிபயணத்துக்கு பாதை
உங்கள் நட்பு-எந்தன்
வாழ்க்கைபயணத்துக்கு கோப்பு.............

பிரியன்
10-09-2005, 12:08 PM
எழுந்திரு இநதியனே
உறங்கியது போதும்...
உறங்கும் உணர்வுகளை
தட்டி எழுப்பி.
இரவில் கிடைத்த சுதந்திரத்தை
இனிமேலாவது விடியச்செய்.............

இறந்துக் கொண்டிருக்கும்
தேசியத்தை தேடி உயிர்கொடு..........
பண்பாட்டை துறந்து
பகுத்தறிவை மறந்து காட்டுமிராண்டிகளாய்
உலவும் இந்திய இளைஞர்களுக்கு
கடிவாளம் கட்டு........
புதுமை அடைவது பண்பாடல்ல
நாகரிகமே என்றுச் சொல்லி
உண்ர்வுகளை தட்டி எழுப்பு.....

இங்கிங்கெனாதபடி எங்கும்
கலந்துவிட்ட ஊழலை
ஒழித்துக் கட்டு.............
ஆடம்பர பொருளாய் மாறிப்போன கல்வியை
அனைவருக்கும் கவித்துக் கொடு...
மூன்றில் உழைக்காமல் இருக்கும்
இரண்டு இந்தியனை
உழைக்கச் சொல்லு..........

தொடரும்.......................

சம்மட்டி அடி வரிகள்.....

பண்பாடு கலாச்சார சீரழிவுகள் பெருகி வரும் இந்தக் காலத்தில் இது போன்ற கவிதைகள் இன்னும் இன்னும் நிறைய வரவேண்டும். நாகரீக வளர்ச்சி என்னும் பெயரில் நமது வேர்களை மெல்ல மெல்ல தொலைத்துக் கொண்டே இருக்கிறோம், அது குறித்தான பிரஞ்னைகூட இப்போது இல்லாமல் இருக்கிறது....காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த போதுகூட மனிதன் நன்றாகத்தான் இருந்திருப்பானோ என்று தோன்ற வைக்கிறது இன்றை மனிதர்களின் குணநலன்கள் . நம் நாடு பெற்றிருக்கும் சாகாவரங்கள்(சாபங்கள்).. சாதியும் ஊழலும்.....

நிச்சயம் ஒரு நாள் எழுந்திருக்கத்தான் வேண்டும் விடியலை தேடி

Mano.G.
12-09-2005, 01:15 AM
நமது மன்றத்துக்கு மன்றத்துக்கு மற்றுமொரு தன்னம்பிக்கை
கவிஞர், வாருங்கள் நம்மால் ஆன தன்னம்பிக்கையூட்டும்
சங்கதிகளை நமது மக்களுக்கு அளிப்போம்.

பேராசிரியரே.

வாழ்த்துக்கள்

மனோ.ஜி

அறிஞர்
12-09-2005, 02:44 AM
அருமை வரிகள் பேராசிரியரே....

இன்னும் பல படைப்புக்களை கொடுங்கள்.....

தொடரும் என்று போட்டுள்ளீர்கள்.. இந்த தலைப்பிலே தொடருங்கள்...