PDA

View Full Version : செப்டம்பர் 10, சனிக்கிழமை மலேசிய செய்திகள்



Mano.G.
10-09-2005, 05:53 AM
புதிய வாகன வரி திட்டம் மூலம் அரசாங்கத்திற்கு 544.3 மில்லியன் ரிங்கிட் இழப்பு
எண்ணெய் விலையேற்றம் நாட்டு மக்களுக்கு பல இன்னல்களை அளிப்பதை தொடர்ந்து, அவர்களின் சுமையை குறைக்கும் நோக்கில் அரசாங்கம் சாலை போக்குவரத்து வரியை 25 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரையில் குறைக்க திட்டமிட்டுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைமுறையில் வரவிருக்கும் இப்புதிய திட்டத்தினால், அரசாங்கம் சுமார் 544.3 மில்லியன் ரிங்கிட்டை இழக்க நேரிடும் என போக்குவரத்து அமைச்சர் Datuk Seri Chan Kong Choy நேற்று தெரிவித்தார்.
மேலும், தனிநபர் வாகன வரிகளின் மூலம் சுமார் 323.75 ரிங்கிட் இழக்க நேரிடும் எனவும், வர்த்தகத்திற்கு உபயோகிக்கும் வாகன வரிகளின் மூலம் 178.35 மில்லியன் ரிங்கிட்டை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, மோட்டார் சைக்கிள்களின் மூலம் சுமார் 37.03 மில்லியன் ரிங்கிட்டும் பொது பேருந்து மூலம் 6.7 மில்லியன் ரிங்கிட்டும் மற்றும் பள்ளி பேருந்து மூலம் 120,292 ஆயிரம் ரிங்கிட்டும் இழக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
------
நான் எப்பொழுதும் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவேன் - டத்தோ சுப்ரா
ம.இ.கா தலைமை பதவியை கைப்பற்ற கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ எஸ். சுப்பிரமணியம் 'நிழல்' யுத்தம் நடத்துவதாக ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டினார்.
இவ்விவகாரம் தொடர்பில், தாம் எப்பொழுது ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலுவிற்கு மரியாதை அளிப்பதாக டத்தோ எஸ். சுப்பிரமணியம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று முன்தினம் தாம் 'நிழல்' யுத்தம் நடத்துவதாக டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு செய்தியாளர்களிடம் கூறியதை குறித்து தாம் எந்த ஒரு வருத்தமும் அடையவில்லை எனவும், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு எனவும் டத்தோ சுப்ரா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

மேலும், அவர் மீது கொண்டிருக்கும் மரியாதை ஒரு போதும் குறையாது எனவும், எப்பொழுதும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என டத்தோ சுப்ரா கூறினார்.


அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் அரசாங்கத்தின் முழு உதவி பெறும் பள்ளிகளாக வேண்டும்
நாட்டிலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் அரசாங்கத்தின் முழு உதவி பெறும் பள்ளிகளாக வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சரும் ம.இ.கா-வின் தேசிய தலைவருமான Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.
இது தொடர்பாக,கல்வி அமைச்சர் Datuk Seri Hishamuddin Tun Hussein அவர்களிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் இதுவரை கல்வி அமைச்சு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 524 தமிழ்ப்பள்ளிகளில் 160 பள்ளிகள் மட்டும் அரசாங்க முழு உதவி பெறும் பள்ளிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது
பினாங்கு பாலம் மற்றும் நெடுஞ்சாலை தொடர்பான சாலை போக்குவரத்து வரியை உயர்த்தாமல் இருக்கும் அரசின் நடவடிக்கை பெரிதும் வரவேற்கத்தக்கது என அம்மாநில முதல்வர் Tan Sri Dr Koh Tsu Koon தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தோடு இது தொடர்புடையது என்றாலும் மக்களின் சுமையை குறைக்கும் வகையில் அமைந்திருக்கும் அரசின் இந்நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது என அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், இவ்விஷயம் தொடர்பாக பினாங்கு பாலத்தை நிர்வகித்த PBSB நிறுவனம் முறையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

Port Dickson-இல் ஏழு திருட்டு மோட்டார் சைக்கிள் ஏற்றுமதி இடங்கள் கண்டுபிடிப்பு
திருட்டு மோட்டார் சைக்கிள்களை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஏழு இடங்களை Port Dickson கடலோரப் பகுதிகளில் போலீசார் கண்டு பிடித்துள்ளனர். இக்கும்பல், திருட்டு மோட்டார் சைக்கிள்களை அண்டை நாடுகளுக்கு கடத்தி செல்வதாகவும், இதில் மலேசியர்களும் அண்டை நாட்டவர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் Port Dickson மாவட்ட போலீஸ் தலைவர் Supt Hairol Nordin தெரிவித்தார்.
இக்கும்பல் Port Dickson மாவட்டத்தில் மட்டுமல்லாது கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் செயல்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார். இதனிடையே அண்மையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், எட்டு திருட்டு மோட்டார் சைக்கிள்களைக் கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இவ்வாண்டில் அவ்வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட 98 மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களில் 55 சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக Hairol Nordin செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதிய சுற்றுலா தளங்கள்
பேராக் மாநிலத்தில் உள்ள Royal Belum, Hutan Paya Bakau Matang மற்றும் Gua Tempurung ஆகிய 3 இடங்கள் சிறந்த சுற்றுலா இடங்களாக மாறத்தக்கவை என EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்விடங்கள் நாட்டின் மிக சிறந்த சுற்றுலா தளங்களாக உருவாக பேராக் மாநில அரசிற்கு EU உதவிக்கரம் நீட்டும் என அம்மாநில Menteri Besar Perak Datuk Seri Mohd Tajol Rosli Ghazali தெரிவித்தார்.

தொழில்நுட்பம், ஆராய்ச்சி போன்றவை தொடர்பாக EU உதவி புரிய தயாராய் இருப்பதாகவும் அது தொடர்பாக கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்படவிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். ஈப்போவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.


திரெங்கானுவில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
திரெங்கானு மாநிலத்திற்கு வருகை புரியும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடம் 1.8 மில்லியனாக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
அம்மாநிலத்தில் சுற்றுலா தொடர்பான பல நடவடிக்கைகளும் மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அங்கு வருகை புரியும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக திரெங்கானு மாநிலத்தின் தொழிலியல் மற்றும் சுற்றுலா மேம்பாடுத் துறையின் நிர்வாகி Datuk Mohamed Awang Tera தெரிவித்தார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் திரெங்கானுவிற்கு வருகை புரியும் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடம் 16 விழுக்காடு அதிகரிக்கும் என அவர் கூறினார். அம்மாநிலத்திற்கு வருகை புரியும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
-------------------------------------------------------
பிரதமர் மன்மோகன்சிங்குடன் டோனி பிளேர் பேச்சுவார்த்தை
பிரதமர் மன்மோகன்சிங்குடன் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் இடையிலான பேச்சுவார்த்தை ராஜாஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் துவங்கியது.
ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் ஐ.நா.சபையில் நிரந்தர இடம் கிடைக்க பிரிட்டன் ஆதரவு அளிக்க வேண்டும் என்பது மற்றும் ராணுவ, வர்த்தக ãதியான நட்புறவு குறித்து விவாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக டோனி பிளேர் தெரிவித்தார். மீண்டும் ராஜாஸ்தான் வர விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
------------------------------------------------------------
Al-qaeda தீவிரவாதிகள் 5 பேர் சவுதியில் சுட்டுக்கொலை
சவுதி அரேபியாவில் குடியிருப்புப் பகுதியில் மறைந்து இருந்த Al-qaeda தீவிரவாதிகள் ஐந்து பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மூன்று நாட்களாக அப்பகுதியில் நடந்த தொடர் துப்பாக்கிச் சண்டைக்கு பிறகே தீவிரவாதிகளை அழிக்க முடிந்தது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கத்ரீனா சுறாவளியால் பெரும் பாதிப்பு
வல்லரசு நாடான அமெரிக்காவில் 'கத்ரீடனா' சூறாவளி வீசியதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர் என்ற தகவல் ஒருபுறம் இருக்க, பொருளாதார பாதிப்பும் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிப்போகும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. 'கத்ரீடனா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் முதல் கட்டமாக ரூ. 47 ஆயிரத்து 250 கோடி நிதி கேட்டு அதிபர் புஷ் அறிக்கை தாக்கல் செய்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், மேலும் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. இத்தொகையை அனுமதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் புஷ் இரண்டாவது முறையாக அறிக்கை தாக்கல் செய்வார், அதை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


ஊழல் புகார் அதிகரிப்பால் உக்ரைன் அரசு கலைப்பு

உக்ரைன் நாட்டின் அரசை கலைத்து அந்நாட்டு அதிபர் விக்டர் யுஷென்கோ உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதிபரின் ஆலோசகர்கள் அனைவரும் ஊழல் பேர்வழிகளாக உள்ளனர்.
இந்த அரசில் நான் அங்கம் வகிக்க விரும்பவில்லை' என்று கூறி உக்ரைன் துணை பிரதமர் நிகோலாய் டொமென்கோ நேற்று ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து உக்ரைன் அரசை கலைத்து அதிபர் விக்டர் யுஷென்கோ உத்தரவிட்டார்.
அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் செயலரும் பதவி நீக்கம் செய்யப்பட்டார். உக்ரைன் கிழக்கு மண்டல தலைவராக உள்ள யூரியெகானுரோவ் தற்காலிக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். உக்ரைன் அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------
US Open Tennis: அரையிறுதியில் Lleyton Hewitt, Roger Federer
US Open Tennis அரையிறுதிக்கு முன்னேறினார் ஆஸ்திரேலியாவின் Lleyton Hewitt. நியூயார்க்கில் நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் போட்டியில் Hewitt, finland-ன் Jarkko Nieminen-ஐ எதிர்த்து களமிறங்கினார்.
3-ம் நிலை வீரரான Hewitt 2-6, 6-1, 3-6, 6-3,6-1 என்ற செட்களில் போராடி வெற்றி பெற்றார். மற்றொரு காலிறுதியில் உலகின் முதல் நிலை ஆட்டகாரரான சுவிஸ் வீரர் Roger Federer Argentina-வின் D Nalbandian-னை 6-2,6-4,6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தில் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

நன்றி வணக்கம்மலேசியா.காம்.


மனோ.ஜி

மன்மதன்
10-09-2005, 07:02 AM
US Open Tennis இல் ரோஜர் ஃபெடரர்தான் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறேன்.. சமீபத்தில் இவரின் கட்டுரை படித்தேன். சமீபகால ஆட்டங்களில் 50 போட்டிகளில் 47 போட்டிகளில் வெற்றி பெற்றாராம்..