PDA

View Full Version : செப்டம்பர் 9, வெள்ளிக்கிழமை மலேசிய செய்திMano.G.
09-09-2005, 10:19 AM
டத்தோ சுப்ரா 'நிழல்' யுத்தம் நடத்துகிறாரா?
ம.இ.கா தலைமை பதவியை கைப்பற்ற கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ எஸ். சுப்பிரமணியம் 'நிழல்' யுத்தம் நடத்துவதாக ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு குற்றஞ்சாட்டினார்.
கடந்த 1989-ம் ஆண்டில் நடைபெற்ற கட்சித்தலைவர் தேர்தலில் தோல்வி கண்டது முதல் டத்தோ சுப்ரா தமக்கெதிராக மறைமுகப் போரில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, இந்த மௌனமான போரை தனது நெருங்கிய நண்பருக்குச் சொந்தமான மலேசிய நண்பன் பத்திரிக்கையின் வழி அவர் இத்தனை நாட்களாக மேற்கொண்டு வந்ததாகவும் நேற்று இங்குள்ள பூச்சோங் 14-வது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக் கொண்ட பின் செய்தியாளர்களிடன் தெரிவித்தார்.
மேலும், ம.இ.கா மற்றும் இந்தியர் சார்ந்த அரசியலில் குழப்பத்தையும் பிரச்சனைகளையும் மலேசிய நண்பன் பத்திரிகை தொடர்ந்து ஏற்படுத்தி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அப்பத்திரிக்கையின் தற்போதைய குழப்பத்திற்கு நான் தான் காரணம் என்பது போலவும் ஒரு வதந்தி நடந்து வருவதாகவும், அங்கு நடந்து கொண்டிருப்பது பங்குதாரர்களுக்கிடையிலான போராட்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
--------------------------------------------------------------
முன்னதாக சாலை போக்குவரத்து வரிக்கு விண்ணப்பித்தவர்களின் பணம் திரும்ப கொடுக்கப்படும்
எண்ணெய் விலையேற்றத்தை தொடர்ந்து, நாட்டு மக்களின் சுமையை குறைக்கும் நோக்கில் அரசாங்கம் சாலை போக்குவரத்து வரியை 25 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரையில் குறைக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் திங்கட்கிழமை காலாவதியாகும் சாலைவரியை முன்கூட்டியே எடுப்பதற்கு கூடுதல் கட்டணத்தை செலுத்திய வாகன உரிமையாளர்கள் அந்தப் பணத்தை திரும்ப மீட்டுக்கொள்ள முடியும் என சாலை போக்குவரத்து துறையின் தலைவர் Datuk Emran Kadir தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகள் தங்களின் பணத்தைப் பெற சாலை போக்குவரத்து துறையிடம் மனுச் செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், கூடுதலாக செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெறுவதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. புதிய கட்டன விகிதத்தின் கீழ் நன்மையை பெருவதற்கு தகுதி பெற்ற வாகன உரிமையாளர்களிடம் அவர்கள் செலுத்திய கூடுதல் தொகை திரும்ப ஒப்படைக்கப்படும் என அவர் கூறினார்.

'Mas' புதிய நிர்வாக இயக்குனராக Idris Jala
Mas எனப்படும் மலேசிய ஏர்லைன்சின் புதிய நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் Idris Jala நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இத்தலைமை நிர்வாக பதவியை இவ்வாண்டு டிசம்பர் மாதம் 1-திகதி முதல் பதவி ஏற்பார் என Mas வெளியிட்ட அறிக்கையின் வழி தெரியவந்துள்ளது. 1982-ம் ஆண்டு ஜூன் மாதம் Shell நிறுவனத்தில் சேர்ந்த Idris படிப்படியாக முன்னேறி தற்சமையம் அதன் முக்கிய பிரிவு ஒன்றின் நிர்வாகியாக பாணியாற்றுகிறார்.

லண்டன் மற்றும் இலங்கையில் உள்ள Shell நிறுவன பிரிவுகளிலும் Idris பணியாற்றிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ICT தொடர்பான வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வீர் - பிரதமர்
ICT எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு துறை தொடர்பான வாய்ப்பு வசதிகளை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.
ஆற்றலையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ள குறிப்பாக தொழில்துறையினருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு துறை தொடர்பான தகவல்களும் அறிவு திறனும் மிக அவசியம் என அவர் மேலும் கூறினார்.
எடுத்துக்காட்டாக, இணையம் வழி, நாம் எண்ணற்ற தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும் எனவும் பொது அறிவை பெருக்கி கொள்ள முடியும் எனவும் பிரதமர் கூறினார். KEPALA BATAS-இல் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.


நேரடி தகவல் சேவையில் புதிய முறைகள்
மக்களுக்கு நேரடியாக தகவல்களை அளிப்பது தொடர்பாக புதிய முறைகளை தேசிய தகவல் இலாகா கையாள வேண்டும் என தகவல் அமைச்சர் Datuk Seri Abdul Kadir Sheikh Fadzir தெரிவித்தார்.
தற்போது, வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ்கள் மற்றும் இணையம் வழி மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடிவதால் நேரடி தகவல் சேவை விரும்பத்தகாத ஒன்றாகி விட்டது எனவும் நேரடி தகவல் சேவை மூலம் மக்களைக் கவர தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கோலாலம்பூரில் நடந்த தகவல் இலாகாவின் 60-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டபோது அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய பணக்காரராக ரோபர்ட் குவோக்
தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய பணக்காரராக, மலேசிய கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் விளங்குகிறார். அவருடைய மொத்த சொத்து மதிப்பு 530 கோடி டாலர் என தெரியவந்துள்ளது.82 வயது ரோபர்ட் குவோக் பத்திரிக்கை, ஓட்டல் மற்றும் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே Maxis தொலைபேசி மற்றும் ஆஸ்ட்ரோ கேபிள் டி.வி உரிமையாளரான ஆனந்த கிருஷ்ணன், 510 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் நிலையில் இருக்கிறார்.

மூன்றாவது இடத்தில், சிங்கப்பூர் ஓட்டல் உரிமையாளர் குவேக் லெங் பெங்கின் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 400 கோடி டாலர் ஆகும்.
Manado-வில் நிலநடுக்கம்
சபா, Tawau-விற்கு அருகில் 1,133 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள Manado என்னும் பகுதியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நண்பகல் 12.09 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிலநடுக்கம் 5.5 என பதிவு செய்யப்பட்டது.
இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தீபகற்ப மலேசியாவில் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் இந்நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் நிகழவில்லை எனவும் மேலும் இது சுனாமி அலைகளை ஏற்படுத்தவில்லை எனவும் அவ்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.


தீ விபத்தில் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு
ஈப்போவிலுள்ள Jalan Sultan Idris Shah-இல் அமைந்துள்ள உல்லாச மையம் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் சுமார் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு ஏற்பட்டது. மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டதால் இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்ககூடும் பேராக் வட்டார தீயணைப்பு படை துணை இயக்குனர் Abu Obidat Mohamad தெரிவித்தார்.
இத்தீ விபத்து அதிகாலை மணி 4.15-க்கு நிகழ்ந்ததாகவும் மேலும் இவ்விபத்தில் உயிருடர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார். எனினும் இத்தீ விபத்திற்கான உண்மையான காரணம் தொடர்பில் போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
--------------------------------------------------------------
டோனி பிளேர் அப்துல் கலாமைச் சந்தித்தார்

இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் தலைமையில் வந்துள்ள ஐரோப்பிய கூட்டமைப்பு குழு ஜனாதிபதி அப்துல் கலாமை நேற்று முன்தினம் சந்தித்து பேசியது.
30 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின் போது எரிசக்தி துறையில் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை பிரதமர் டோ னி பிளேர் சந்தித்துப் பேசினார்.
வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் உடன் இருந்தார். இதற்கிடையில், சிம்லாவில் நேற்று, டோ னி பிளேர் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசுவதாக இருந்த கூட்டம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. டில்லியிலேயே இந்த சந்திப்பு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------
ஈராக்கில் குண்டு வெடித்து 16 பேர் பலி
ஈராக் நகரான பாஸ்ராவில் உள்ள சந்தைகள் உள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் இச்சம்பவத்தில் 21 பேர் காயமடைந்தனர் என அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தெரிவித்தனர்.
இக்குண்டு வெடிப்பிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனவும் இதன் தொடர்பில் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


மீண்டும் குண்டுவெடிக்கும் அபாயம்: வங்காளதேசத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
வங்காளதேசத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்று முன்தினம் 25 பேர் கைது செய்யப்பட்டனர். வங்காளதேசத்தில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. மொத்தம் உள்ள 64 மாவட்டங்களில், ஒரு மாவட்டத்தைத் தவிர அனைத்திலும் குண்டுகள் வெடித்தன.
500க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த தொடர் குண்டுவெடிப்பு வங்கதேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு நடைபெற்ற இடங்களில் தடை செய்யப்பட்ட ஜமாத் & உல் & முஜாகிதீன் என்ற தீவிரவாத இயக்கத்தின் துண்டு பிரசுரங்கள் கிடந்தன.
இதைத் தொடர்ந்து அந்த இயக்கத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரை வங்காளதேச போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவங்கள் மீண்டும் நடக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
போலீசார் வீடு வீடாகச் சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விமானம் மற்றும் ரயில்வே நிலையங்களில் மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு தீவிர சோதனை நடத்தப்படுகிறது.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி ஆதரவு தொடரும்
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவு தொடரும் என தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி நேற்று முன்தினம் தெளிவுப்படுத்தியது.
தனி தெலுங்கானா மாநிலம் உருவாக வேண்டும் என இந்த கட்சி போராடி வருகிறது. இதை நிறைவேற்றாவிடில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என இக்கட்சியினர் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------------
U.S. Open Tennis : அரையிறுதிக்கு முன்னேறினார் Mary Pierce
U.S. Open Tennis பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் பிரான்சு நாட்டு வீராங்கனை Mary Pierce சக நாட்டு வீராங்கனையான Amelie Mauresmo-வை 6-4 மற்றும் 6-1 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார்.
இதன் மூலம் U.S. Open Tennis பெண்கள் ஒற்றையர் அரையிறுதிக்கு Mary Pierce முன்னேறினார் .

நன்றி வணக்கம்மலேசியா.காம்


மனோ.ஜி

pradeepkt
09-09-2005, 12:33 PM
செய்திகளுக்கு நன்றி மனோ அண்ணா