PDA

View Full Version : துவக்கு இதழின் கவிதைப் போட்டி அறிவிப்பு...



Nanban
09-09-2005, 07:01 AM
நீண்ட நெடுநாளைய கனவு இன்று தான் விடிந்திருக்கிறது.

அறிவிப்பதற்கு முன்னதாக சில முன்னேற்பாடுகள் தேவைப்பட்டதால் சில காலம் தாமதம்.

இது குறித்து சில நண்பர்களுடன் பேசியிருக்கிறோம்.

துவக்கு அமைப்பின் முதல் இலக்கியப் பணியாக கலந்துரையாடல்களும் தகுந்தோர்க்குப் பாராட்டு விழாக்களாகவும் சிறிய சிறிய பணியில் இயங்கி பின்னர் இதழாக வடிவம் கண்டது.இரண்டு இதழ்கள் வந்த பின்னர், எல்லோரும் வடிவம் நன்றாக இருந்தாலும், பிடிஎஃப் கோப்புகள் இறங்க சிரமமாக இருப்பதால் வலைதளமாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்குமே என்று கருதி அப்படியே தகவலும் தந்தனர். நாங்களும் வலைதளமாக மாற்றிக் கொண்டாலும், அது குறித்த தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் சில காலம் தாமதமாகி விட்டது. என்றாலும் மூன்றாவது இதழும் இப்பொழுது தயாராகிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் அதை www.thuvakku.com (http://www.thuvakku.com) என்ற தளத்தில் காண முடியும்.

இப்பொழுது மூன்றாவது கட்டமாக படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணமாக தனது அடுத்த கட்ட பணியினைத் துவங்கியிருக்கிறது துவக்கு.

மன்ற அன்பர்கள் இந்த கவிதைப் போட்டி அறிவிப்பினை பல தளங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். தாங்கள் இயங்கும் வலை தளங்கள் வலைப்பூக்கள் மடலாடற்குழுக்கள் மின்னஞ்சல்கள் தொலைபேசி கைப்பேசி மற்றும் வசதிப்பட்ட ஊடகங்கள் வழியாக இந்த தகவலை எடுத்துச் சென்று பெருமளவில் படைப்பாளிகளை இந்த கவிதைப் போட்டியில் பங்கேற்கச் செய்யவேண்டும் என்ற உதவியை வேண்டுகிறோம்.

நன்றி

அறிவிப்பு கீழே

Nanban
09-09-2005, 07:03 AM
துவக்கு இலக்கிய அமைப்பு
மாற்று கவிதையிதழ், கூடல்.காம் தமிழ் இணைய தளம்

ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும்

புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கான
மாபெரும் கவிதைப் போட்டி.

முதல் பரிசு: உருபா. 10,000
இரண்டாம் பரிசு: உருபா. 7500
மூன்றாம் பரிசு: உருபா. 5000
பாராட்டு பரிசு: உருபா. 1000 பத்து கவிதைகளுக்கு

கவிதைகள் அனுப்பவேண்டிய முகவரிகள்.

இ. இசாக்
P.O. BOX NO: 88256
Dubai - U A E.

சி. சுந்தரபாண்டியன்
மாற்று கவிதையிதழ்
கோணான்குப்பம் - 606 104
விருதாசலம் வட்டம்
தமிழ்நாடு

மின்னஞ்சலில் அனுப்ப
thuvakku@gmail.com
thuvakku@yahoo.com

கவிதைகள் கிடைக்க வேண்டிய இறுதி நாள்: 15.திசம்பர்.2005


விதிமுறைகள்

1. கவிதைகள் புலம்பெயர்ந்த வாழ்க்கையின் உணர்வுகளை பதிவு செய்வதாக இருக்க வேண்டும், தேவையற்ற மாற்று மொழிக் கலப்புகள் தவிர்த்தல் வேண்டும்.

2. ஒரு கவிஞர் எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம், கவிஞரின் புகைப்படம், சிறுகுறிப்பு இணைத்து அனுப்பவேண்டும்.

3. போட்டிக்கான கவிதைகள் சொந்த படைப்பாகவும், வேறு எங்கும் வெளியாகாதவைகளாகவும் இருக்க வேண்டும். இது குறித்த உறுதிமொழி கடிதம் இணைக்க வேண்டும்.

4. கவிதைகள் 35 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மரபுக்கவிதை, புதுக்கவிதை, அய்க்கூ (குறைந்தது மூன்று அய்க்கூகள்) என எந்த வடிவத்திலும் இருக்கலாம்.

5. பரிசுக்குரிய கவிதைகளை முன்னணி கவிஞர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும், தேர்வுக்குழவின் முடிவே இறுதியானது.

6. போட்டிக்கு வரும் கவிதைகள் தகுதியடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தொகுப்பாக வெளியிடப்படும்.
மேலும் விரிவான விபரங்கள் அறிய:

www.thuvakku.com (http://www.thuvakku.com)
மாற்று கவிதையிதழ்
www.koodal.com (http://www.koodal.com)

ஆகியவற்றை பார்க்கவும்.

தொடர்புகளுக்கு:

இ. இசாக்- 00971 50 3418943.

கவிமதி- 00971 50 5823764

நண்பன்- 00971 50 8497285.

சே.ரெ.பட்டணம் அ. மணி- 00971 50 7763653,

சி. சுந்தரபாண்டியன்- 0091 9360021254.

karikaalan
09-09-2005, 07:14 AM
புலம்பெயர்ந்தோர் கவிதைப் போட்டி செவ்வனே நடந்தேற வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

பிரியன்
09-09-2005, 08:17 AM
துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பில் நடத்தப்படும் புலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப்பதிவுக்கான கவிதைப் போட்டியில் பங்கு பெற விரும்பும் நண்பர்கள் தங்கள் பெயர்களை இங்கு தெரிவியுங்கள். மற்றும் இது குறித்து தங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

மன்மதன்
10-09-2005, 04:40 AM
நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்..
(இதை ஸ்டிக்கியாக மாற்றுகிறேன். தமிழ்மன்றம் இது போன்ற முயற்சிகளை எப்பொழுதும் ஊக்குவிக்கும்)

பரஞ்சோதி
10-09-2005, 04:43 AM
துவக்கு இதழ் தொடங்கிய குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்ததமைக்கு அதன் நிர்வாகிகள், இதர ஆசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

கவிதைப்போட்டிகளின் வாயிலாக புதிய கவிஞர்களையும், நல்ல கவிஞர்களையும் இனம் காண முடியும். வாழ்த்துகள்.

பிரியன்
10-09-2005, 10:39 AM
நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்..
(இதை ஸ்டிக்கியாக மாற்றுகிறேன். தமிழ்மன்றம் இது போன்ற முயற்சிகளை எப்பொழுதும் ஊக்குவிக்கும்)

நன்றி மன்மதன். தமிழ் மன்றக் கவிஞர்களின் கவிதைகள் அதிக அளவில் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

மன்மதன்
10-09-2005, 10:54 AM
கண்டிப்பாக பிரியன்.. நிறைய வரும்..

Nanban
10-09-2005, 08:07 PM
நன்றி மன்மதன். (ஒட்டி வைத்ததற்கு.....)

நன்றி பரஞ்சோதி - நீங்களும் கவிதை எழுதி அனுப்பி வையுங்களேன் - சிறு குழந்தைகள் இந்தப் புலம் பெயர்தலில் எவ்வாறு அவதியுறுகிறார்கள் என்று. உங்களுக்குத் தான் - சிறுவர்களுக்காக எழுதுவது மிக இயல்பாக வருகிறதே - முயற்சி செய்யுங்கள்.

மன்மதன் - இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. குடும்பத்தைப் பிரிவது சற்று சிரமம்தான். அந்த சிரமத்தை, ஏக்கங்களை, எழுத்தில் வடிப்பது வெற்றி பெறுவோம் அல்லது மாட்டோம் என்ற எல்லைகளைத் தாண்டிய இன்பம் அல்லவா?
மேலும் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது மோதிரக் கையால் குட்டு பட்டதாக ஆகிடுமே....
தேர்ந்தெடுப்பவர்கள் - இன்குலாப் / மு.மேத்தா / த.பழமலய்

நெறிப்படுத்தித் தருபவர் - அறிவுமதி

தேர்ந்தெடுக்கும் குழுவில் நண்பன் கிடையாது. அதனால் பயப்படாமல் கலந்து கொள்ளலாமே

தலைமை ஆசிரியர் மற்றும் குரு?!!!



வேறென்ன வேண்டும் - இவர்களெல்லாம் உங்கள் கவிதையை ஒருமுறையாவது படிப்பார்கள் அல்லவா?

Nanban
10-09-2005, 08:13 PM
கரிகாலன்ஜி,

நீங்கள் கூட புலம் பெயர்ந்தவர் தானே? தமிழகத்திலிருந்து டில்லிக்கு? புலம் பெயர்தல் என்று நாங்கள் குறிப்பிட்டது - நாடுகளைத் தாண்டி வாழும் வாழ்க்கையை மட்டுமல்ல. இனி திரும்பவே மாட்டோம் என்ற நிலையில் இடம் பெயர்ந்து - ஒரு புது இடத்தின் அனுபவமாக இருக்கக் கூடும் அனுபவங்களையும் தான்.

poo
12-09-2005, 07:12 AM
நம் மன்றக்கவிஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

கால அவகாசம் நிறையவே இருக்கிறது.. நிறைவாக எழுதி நிறைய பரிசுபெற வாழ்த்துக்கிறேன்..

Nanban
12-09-2005, 05:58 PM
நம் மன்றக்கவிஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

கால அவகாசம் நிறையவே இருக்கிறது.. நிறைவாக எழுதி நிறைய பரிசுபெற வாழ்த்துக்கிறேன்..

பூ, நலம் தானே?

மற்றவர்களை வாழ்த்தி விட்டு நீங்கள் எங்கே போகீறீங்க?

நீங்களே ஒரு நல்ல கவிஞர் தானே. எழுதுங்கள். வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்.

அறிஞர்
13-09-2005, 04:50 PM
அருமை அன்பரே... துவக்கு இதழின் போட்டிக்களம் பல கவிஞர்களுக்கு உதவியாகவும், ஊக்குவிப்பாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

மன்றத்தின் கவிஞர்கள் பல கவிதைகளை கொடுத்து வெற்றிக்காண வாழ்த்துக்கள்...
--------
துவக்கு இதழின் தளத்தில் பாண்ட் டவுன்லோடு வேலை செய்யவில்லையே

Nanban
13-09-2005, 06:49 PM
அருமை அன்பரே... துவக்கு இதழின் போட்டிக்களம் பல கவிஞர்களுக்கு உதவியாகவும், ஊக்குவிப்பாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

மன்றத்தின் கவிஞர்கள் பல கவிதைகளை கொடுத்து வெற்றிக்காண வாழ்த்துக்கள்...
--------
துவக்கு இதழின் தளத்தில் பாண்ட் டவுன்லோடு வேலை செய்யவில்லையே

மற்றவர்களுக்கு நீங்கள் வாழ்த்துச் சொல்லி விட்டீர்கள். உங்களுக்கு நான் வாழ்த்துச் சொல்கிறேன். நீங்களும் இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன். தைவான், அமெரிக்கா என்று புலம் பெயர்ந்த வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களை விட இந்தப் போட்டியில் பங்கு பெற வேறு யார் இருக்கிறார்கள்?

Nanban
20-09-2005, 06:51 PM
துவக்கு இதழின் புலம் பெயர்ந்தோருக்கானக் கவிதைப் போட்டிக்கான வரவேற்பு மிகவும் உற்சாகமளிப்பதாக இருக்கிறது. பல்வேறு இணையத் தளங்களும் இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கின்றன. குறிப்பாக சுஜாதாவின் அம்பலம், புதியகீற்று, திண்ணை, பதிவுகள் ஆகிய தளங்களில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இன்னமும் பிற தளங்களும் இது குறித்து செய்தி வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. மேலும் திசைகள் இதழின் ஆசிரியர் மாலன் அவர்கள் எழுத்துருக்களைச் சீர் செய்து மீண்டும் அனுப்புமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க நேற்று மீண்டும் அவருக்குத் தகவல் அனுப்பியுள்ளோம்.

நிற்க - போட்டிக்கான முதல் கவிதையும் வந்து விட்டது.

நீங்கள் எல்லோரும் எப்போது?

kavitha
27-09-2005, 11:03 AM
உற்சாகமான விசயம்தான். நானும் எனக்குத்தெரிந்த நண்பர்களிடம் தெரிவிக்கிறேன். எழுதி அனுப்பவும் முயற்சிக்கிறேன். துவக்கு இதழ் அமைப்பிற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

பிரியன்
27-09-2005, 11:05 AM
நன்றி கவிதா..... வார்ப்பு இணையதளத்திலும் போட்டி குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது....

Nanban
13-10-2005, 01:46 PM
திசைகள் இதழிலும் வெளியாகி இருக்கிறது கவிதைப் போட்டிகள் பற்றிய அறிவிப்பு....

பிரியன்
28-10-2005, 08:33 AM
கவிதைகள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழகத்திற்கும் துபாயிற்கும் வரத்துவங்கிவிட்டது. ஏழைதாசன் சிற்றிதழிலும் இனிய நந்தவனம் இதழலிலும் மேலும் பல சிற்றிதழ்களிலும் போட்டி குறித்தான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இது எங்களை மிகுந்த உற்சாகமடைய செய்துள்ளது.....