PDA

View Full Version : தலைப்புகளில் சிக்கிக் கொள்வதில்லை உணர்ச



kalvettu
09-09-2005, 05:22 AM
"காதலைத் தான் காதலித்தேன்
காதலியை அல்ல!!!"
காதலில் தோற்றவர்களுக்கும்
காதலி கிடைக்காதவர்களுக்கும்
பிள்ளையார் சுழி
இந்த வரிகள்....!!??

இதில் நான் எந்த இடத்தில்
எல்லைக் கோடு யாருடையது?
கேட்டால் என்னவென்று சொல்வது

மிகப்பெரிய காயத்தை
யாசித்து பெற்றுக்கொண்டேன்
உன் சிறு காயத் தளும்பை
மறைப்பதற்காக..

யாருக்கும்
பிடிக்காமல் போவேன் எனத்
தெரிந்திருந்தால்!!
உதாசினப்படுத்தியிருக்க மாட்டேனடி
உன்னை!!??

என்னையும் ஒருத்திக்கு
பிடிக்கும்..!
என்பதற்கு சாட்சியாகவாவது
இருந்திருப்பாய்.

இங்கு
திரெளபதிக்கு ஆசைப்பட்டு
அர்ஜுனன் கூட
சகுனியாகிப் போனானடி!?

சேரனின் அம்புகள் கூட
பாண்டியன் திரும்பி இருக்கும்
தருணம் பார்த்தே பாய்கிறது

நன்றி கெட்டவர்களை
நினைத்து வற்றிப்போனதடி
நெஞ்சின் ஈரங்கள்

வா
உன் கூந்தலின் ஈரத்தில்
வந்து நனைத்து
விட்டுப்போ.

முதுகில் காயப்பட
இடமும் இல்லை
நெஞ்சிலோ கீறல் கூட
இல்லை

சித்திரவதைக் கூடத்தை
நானே திறந்து வைக்கிறேனடி
வந்து அணுஅணுவாக
சித்திரவதை செய்.

என் கண்ணீரின் ஈரத்தில்
உன் கோபத்தை தணித்துக்கொள்.

இது கவிதையும் அல்ல
புலம்பலும் அல்ல

இரத்தங்கள்

நினைவுகளின் தளும்புகளை
குத்திக் கொண்டதின்
விளைவுகள்

வெகு நாளைக்கு பிறகு
ஆசைப்படுகிறேனடி
முகவரி இன்றி தொலைந்து போக.

வா வந்து சொல்லிவிட்டுப்போ
உன்னை காதலிக்கிறேன் என்று.

- பிரேம்

kavitha
09-09-2005, 06:26 AM
உணர்ச்சிக்குமுறல்களாய் வந்து விழுந்திருக்கின்றன வார்த்தைகள். கவிதை அருமை பிரேம்.

உன்னை எனக்குப் பார்க்கப்பிடிக்கவில்லை
உன்னிடம் எனக்குப் பேசப்பிடிக்கவில்லை
உன் திசை எதுவென்றும் எனக்குத் தெரியவேண்டாம்
எங்கோ எங்கோ நீ எங்கோ இருக்கிறாய்
அது போதும்
காட்டுத்தீயை மூட்டும்
சிறுப்பொறியாய் இருக்க
எனக்கு ஆசையில்லை
தெறிக்கும் கனலையோ
கொப்பளிக்கும் ரத்தத்தையோ
நான் பார்க்கவே வேண்டாம்.
எங்கோ நீ
அமைதியாய் இருந்தால்
அதுவே போதும்.

gragavan
09-09-2005, 06:56 AM
கல்வெட்டுக் கவிதைக்குக் கவிதாவின் கவிதை. இருவருக்கும் எனது வாழ்த்துகள்.

சமீம காலமாக நமது மன்றத்தின் கவிதைப் பக்கங்கள் கலகலப்பாகின்றன.
யாரோ வரகவி எங்கோ ஒரு மூலையில் பிறந்திருக்கிறான் போல.

kalvettu
09-09-2005, 09:27 AM
நன்றி கவிதா அவர்களே.


காட்டுத்தீயை மூட்டும்
சிறுப்பொறியாய் இருக்க
எனக்கு ஆசையில்லை

வரிகள் அருமை.. தோழி


கல்வெட்டுக் கவிதைக்குக் கவிதாவின் கவிதை. இருவருக்கும் எனது வாழ்த்துகள்

நன்றி தோழரே

Iniyan
09-09-2005, 12:12 PM
என்னையும் ஒருத்திக்கு
பிடிக்கும்..!
என்பதற்கு சாட்சியாகவாவது
இருந்திருப்பாய்.

இழந்து போன காதலுனுக்காக இரங்கல் பா பாடும் போது கவிஞனுக்கு சுய பச்சாதாபமும், தன் மீதான கோபமும் தெறிக்கும் வரிகள். வாழ்த்துக்கள் கல்வெட்டு அவர்களே

Iniyan
09-09-2005, 12:13 PM
எங்கிருந்தாலும் வாழ்க என்பதை இதை விட குமுறலாய் புதுக்கவிதையில் சொல்ல முடியாது என நான் நினக்கிறேன் கவிதா

pradeepkt
09-09-2005, 12:39 PM
பிரேம்.
அசத்தலான கவிதை.
இதை வைத்தே பயரியன் ஸ்பிரிங்கில் உங்கள் பங்களிப்பை என்னால் உணர முடிகிறது.
வாழ்த்துகள்.

kalvettu
09-09-2005, 12:55 PM
இதை வைத்தே பயரியன் ஸ்பிரிங்கில் உங்கள் பங்களிப்பை என்னால் உணர முடிகிறது
அதன் தமிழ் பகுதிக்கு நான் தான் ஆசிரியராக இருக்க நேர்ந்தது பிரதீப் அவர்களே

பிரசன்னா
09-09-2005, 05:12 PM
கவிதை நன்றாக இருந்தது

பென்ஸ்
18-02-2006, 02:10 PM
ஒரு காதல் கதையை முழுமையாக கொடுத்திருக்கிறிர்கள்....

ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு முட்கள்... ரத்தம் வழிய வழிய,
கண்ணிரால் கழுவி ஆழம் பார்க்கும் மனது....

உணர்வுகள் கழுத்தை இறுக்கிப்பிடித்து கொண்டு நெஞ்சில் பாரமாய்
இறங்கும் போது அனலாய் பேனா கக்கும் வார்தைகள்...

கலக்கல் கல்வேட்டு (பிரேம்)

என்ன பணிபழு அதிகமா???? அப்படியே நாளைக்கு போரம்
வாங்க... நண்பர்கள் சந்திக்கிறோம்....

இளந்தமிழ்ச்செல்வன்
18-02-2006, 05:21 PM
குமுறல்கள் அருமை பிரேம். கவிதாவின் கவிதை வழக்கம்போல் பளீர் ரகம்.