PDA

View Full Version : செப்டம்பர் 8, வியாழக்கிழமை மலேசிய செய்திக



Mano.G.
08-09-2005, 11:50 AM
சாலை போக்குவரத்து வரியை 25 விழுக்காடு முதல் 80 விழுக்காடு குறைவு
அதிகரித்து வரும் எண்ணெய் விலை நாட்டு மக்களுக்கு பல இன்னல்களை அளிப்பதை தொடர்ந்து, அரசாங்கம் எப்பொழுதும் அவர்களுக்கு உதவிகளை செய்யும் என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi அன்மையில் தெரிவித்தார்.
அதன் முதல் கட்டமாக, மக்களின் சுமையை குறைக்கும் நோக்கில் அரசாங்கம் சாலை போக்குவரத்து வரியை 25 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரையில் குறைக்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் இம்மாதம் 12-ம் திகதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படும் என பிரதமர் அலுவலகத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது. தற்போது அமலில் இருக்கும் பள்ளி பேருந்தின் சாலை போக்குவரத்து வரி பத்து ரிங்கிட்டிலிருந்து இரண்டு ரிங்கிட்டுக்கு குறைக்கப்படுள்ளது எனவும் 1,000 cc-க்கு கீழ் இருக்கும் தனிநபர் வாகனமோட்டிகளின் சாலை வரியும் 30 ரிங்கிட்டாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 1,000 cc முதல் 1,600 cc வரையில் உள்ள தனிநபர் வாகனமோட்டிகளின் சாலை வரியும் 151cc முதல் 250 cc வரையில் உள்ள மோட்டார் சைக்கிளோட்டிகளின் சாலை வரியும் 50 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் வர்தகத்திற்கு உபயோகிக்கும் வாகணங்களின் சாலை வரியும் 25 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------

அனைத்து பள்ளிகளும் ŢŸ Ǣǡ வேண்டும் - பிரதமர்
அனைத்து பள்ளிகளும் குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகள் 'smart schools' எனப்படும் ŢŸ பள்ளிகளாக மாற்றுவதற்கான தகுந்த நடவடிக்கைகளை கல்வி அமைச்சு விரைந்து செயல்படுத்த வேண்டும் என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.
கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு இடையேயும் நகர்ப்புற பள்ளிகளுக்கு இடையேயும் இருக்கின்ற பாகுபாட்டைக் களையவே இந்நடவடிக்கை அவசியம் என அவர் கூறினார்.
இதற்கு சற்று கூடுதலான கால அவகாசம் தேவைப்பட்டாலும் மாணவர்களின் நலன் காக்க இந்நடவடிக்கை அவசியம் செயல்படுத்தப்பட வேண்டும் என கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.

உலகமயமாக்குதல் கொள்கையை முழுமையாக ஏற்காதீர் - மகாதீர்
உலகமயமாக்குதல் தொடர்பாக மலேசியா மிக கவனமாக இருக்க வேண்டும் எனவும் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் சிந்தித்து செயல்பட வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad தெரிவித்தார்.
உலகமயமாக்குதல் எனும் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு முன்பே மலேசியா வளர்ச்சியடைந்த நாடாக திகழ்ந்துள்ளது எனவும் பொருளாதார உயர்விற்கு உலக சந்தை நமக்கு தேவைப்பட்டதால் உலகமயமாக்குதல் கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோ ம் எனவும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் விற்பனை சந்தையை மட்டும் நம்பியிருப்பதை விடுத்து,பரந்த விற்பனை சந்தையையும் அதிகளவிலான மக்கள் தொகையையும் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தை நாம் விரிவுப்படுத்தி கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

80,000 ரிங்கிட் மதிப்புள்ள டீசல் எண்ணெய் பறிமுதல்
உள்நாட்டு வாணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு தொடர்பான Taiping கிளை 80,000 ரிங்கிட் மதிப்புள்ள டீசல் எண்ணெயை பறிமுதல் செய்துள்ளது. கனரக வாகனத்தில் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இந்த டீசல் எண்ணெய் கைப்பற்றப்பட்டதாக உள்நாட்டு வாணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு தொடர்பான Taiping கிளையின் துணைத் தலைவர் Zulkifli Pandak தெரிவித்தார்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து நேற்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அவ்வமைச்சின் அதிகாரிகளால் இந்த டீசல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
சுமார் 14,000 லிட்டர் டீசல் எண்ணெய் உட்பட டீசல் எண்ணெயை ஊற்ற உதவும் கருவி மற்றும் இதர பத்திரங்களையும் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார். இதன் தொடர்பில் மேலும் விசாரணை நடந்து வருவதாக அவர் கூறினார்.


Banda Sea-இல் நிலநடுக்கம்
Banda Sea-இல் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இப்பகுதி Makassar-ரிலிருந்து 1,042 கிலோமீட்டர் தொலைவிலும் தென்கிழக்கு Tawau-விலிருந்து 1,605 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
இந்நிலநடுக்கம் 6.0 என ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டதாக வானிலை ஆராய்ச்சி மையத்தின் இலாகா வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் உணர்ந்திருக்கக்கூடும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் இந்நிலநடுக்கம் சுனாமி அலைகளை ஏற்படுத்தவில்லை எனவும் இதனால் பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.



போலியோ அபாயத்தை தடுக்க....
போலியோ நோய் பரவி வருவதைத் தொடர்ந்து அந்நோய்க்கான தடுப்பு மருந்துகள் மருத்துவமனைகள்,மருந்தகங்கள் மற்றும் கிளினிக்குகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் Datuk Dr Ismail Merican தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் இதுவரை 225 பேர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மலேசியாவில் உள்ளவர்களுக்கும் போலியோ அபாயம் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு ( WHO ) அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக,கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் பலர் போலியோ நோய்க்கான தடுப்பு மருந்து கிடைக்கப்பெறாமல் இருப்பதால் போலியோ நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
--------------------------------------------------------------
காவிரியில் வெள்ளப் பெருக்கு: 1000 பேர் பாதிப்பு
ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான குடிசைக்குள் தண்ணீர் புகுந்தது. ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு தற்போது கணிசமான நீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக உபரி நீர் அனைத்தும் அப்படியே வெளியேற்றப்பட்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 36,000 கன அடி உபரி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட சில காவிரிக் கரையோர மாவட்டங்களில் குடிசைப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கரையைத் தாண்டி தண்ணீர் ஓடுகிறது. இதனால் பள்ளிப்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
குடிசைகளில் வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 5000 குடிசைகள் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து கர்நாடக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
--------------------------------------------------------------
தைவானில் நிலநடுக்கம்
தைவானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் மக்கள் கடும் பீதியடைந்தனர். தைவானில் உள்ள ஹூவாலியன் நகருக்கு கிழக்கே 63 கி.மீ.தொலைவில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 என பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. தைவானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். தைவானில் கடந்த 1999ம் ஆண்டு கடுமையான பூகம்பம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.6 என பதிவான இந்த பூகம்பத்தில் 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 50 ஆயிரம் கட்டடங்கள் சேதம் அடைந்தன.


மீண்டும் அதிபராக ஆசையா? மறுக்கிறார் ரஷ்ய அதிபர் புடின்!
'வரும் 2008ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை' என ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் கிரெம்ளின் மாளிகையில் நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், '2008ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை எனவும் நாட்டிற்கு நிலைத்தன்மையே மிகவும் முக்கியம் எனவும் நினைப்பதாக கூறினார்.
நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்பது அரசியல் சட்டமே. அதனால், அரசியல் சட்டத்தை திருத்த மாட்டேன். பதவியில் இருப்பவர்கள் தொடர்ந்து அதில் நீடிக்க வேண்டும் என நினைப்பது இயற்கையான ஒன்றே,' என அவர் தெரிவித்தார்.


யூப்ரடீஸ் பாலங்கள் மீது யு.எஸ்.விமானத் தாக்குதல்
சிரியா எல்லை அருகே யூப்ரடீஸ் நதியின் மீது அமைந்துள்ள இரு பாலங்களை அமெரிக்க ஜெட் போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.
இந்தப் பாலங்கள் வழியாக பாக்தாத் மற்றும் இராக்கின் இதர முக்கிய நகரங்களுக்குள் வெளியிலிருந்து Al-Qaeda பயங்கரவாதிகள் நுழைவதையும், வெடிபொருள்கள் கடத்தி வரப்படுவதையும் தடுப்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமை தெரிவித்தது.
பாக்தாத் நகருக்கு 300 கிலோ மீட்டர் மேற்கே இந்தப் பாலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
--------------------------------------------------------------
.S.Open Tennis: காலிறுதியில் Hewitt
U.S.Open Tennis காலிறுதிக்கு முன்னேறினார் ஆஸ்திரேலியாவின் Lleyton Hewitt. நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் நான்காம் சுற்று போட்டியில் Hewitt, சுலோவாக்கியாவின் Dominik Hrbaty-யை எதிர்த்து களமிறங்கினார்.
3-ஆம் நிலை வீரரான Hewitt 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் எளிதான வெற்றி பெற்றார். இவர் காலிறுதியில் பின்லாந்தின் Jarkko Nieminen-னைச் சந்திக்கிறார். மற்றொரு போட்டியில் 24 வயதான Jarkko, ஸ்பெயினின் Fernando Gonzalez-வை 6-2, 7-6(8/6), 6-3 என்ற செட்களில் வென்றார்.
இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறும் முதல் பின்லாந்து வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.

நன்றி வணக்கம்மலேசியா.காம்

மனோ.ஜி

பரஞ்சோதி
08-09-2005, 01:58 PM
இன்றைய செய்திகளுக்கு நன்றி அண்ணா.

டென்னிஸ் போட்டிகள் பார்த்து வருகிறீங்களா?