PDA

View Full Version : இராணுவ பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிக



இளையவன்
07-09-2005, 01:00 PM
தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் அரசியல் கடமையாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் அனைவரும் முழுமையாக இன்று புதன்கிழமை வெளியேறிவிட்டனர்.


யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்று அப்பிரதேசங்களில் நிராயுதபாணிகளான அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளைக் குறிவைத்து தொடர்ந்து படுகொலை செய்து வந்தது சிங்கள இராணுவம். இந்தப் படுகொலைக்கு ஆயுதக் குழுக்களை சிங்கள இராணுவம் பயன்படுத்தியது.

கடந்த ஒருவாரத்தில் தென்தமிழீழத்தில் தமிழீழ அரசியல்துறை பணிமனைகள் மீது குண்டுத்தாக்குதல் நடாத்துவதும் விடுதலைப் புலிகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துவதும் தொடர்ச்சியாக சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல்களில் ஐந்து விடுதலைப் புலிப் போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் நிராயுதபாணிகளாக உள்ள அரசியல்துறை போராளிகளை கடத்திச் செல்லவும் சிங்கள இராணுவப் புலனாய்வுத்துறையும், ஆயுதக்குழுக்களும் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்தது.

வட தமிழீழத்திலும் மன்னார், வவுனியா உள்ளிட்ட அரசியல்துறை பணிமனைகள் மீது தொடர்ந்து கைக்குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வந்தன.

மூன்றரை ஆண்டுகால யுத்த நிறுத்த காலத்தில் தென் தமிழீழத்தில் அரசியல் கடமையாற்றி வந்த அரசியல்துறை பொறுப்பாளர்களான கௌசல்யன், பாவா உள்ளிட்ட பலரை விடுதலைப் புலிகள் இழக்க நேரிட்டது.

சில மாதங்களுக்கு முன்பாக இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்திற்குள் சென்ற 50 பேர் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடாத்தப்பட்டு ஒரு போராளி படுகாயமடைந்தார். அந்த சம்பவத்தையடுத்து சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் விலக்கிக் கொள்ளப்படக் கூடும் என்று கூறப்பட்டது.

இருப்பினும் சிறிலங்கா அரசுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பாதுகாப்பு தொடர்பாக கண்காணிப்புக் குழுவினூடாக பேச்சுகளை நடாத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பாதுகாப்பு அணியை அரசியல்துறை போராளிகளுக்கு பயன்படுத்தினால் யுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் சிங்கள இராணுவம் எதையும் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து ஆயுதக்குழுக்கள் உதவியுடன் தாக்குதலை நடாத்தி வருகிறது.

இதனிடையே அமைதிப் பேச்சுக்கள் தொடங்கக் கூடும் என்பதற்கான நகர்வுகளை நோர்வே அனுசரணையாளர்கள் மேற்கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பேச்சுக்கு உடனடியாக இணக்கம் தெரிவித்தனர்.

ஆனால் அரசியல் குழப்பங்களில் சிக்கியுள்ள சிறிலங்கா அரச தரப்பு இப்பேச்சுக்கான நகர்வுகளை முன்வைத்து அரசியல் லாபங்களைப் பெறும் வகையில் வழமையான இழுத்தடிப்புகளையே மேற்கொண்டது.

தென்னிலங்கையில் அரசுத் தலைவர் கூத்துகள் தொடங்கிவிட்ட நிலையில் அமைதிப் பேச்சுகள் நடாத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகவே இருந்து வந்தது.

இந்தத் அரசியல் குழப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு சிங்கள இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை போராளிகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடாத்தி படுகொலை செய்து வந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளை போருக்குச் சீண்டிவிடும் இத்தகைய தாக்குதல்களுக்கும் இழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழீழ தேசியத் தலைமை இம்முடிவை மேற்கொண்டதாக விடுதலைப் புலிகளின் தரப்பு தெரிவிக்கிறது.

இதையடுத்து வட, தென் தமிழீழப் பிரதேசங்களில் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் பகுதிகளில் உள்ள தமிழீழ அரசியல்துறை போராளிகள் அனைவரும் வெளியேறி தமிழீழ நிர்வகாப் பகுதிக்கு வந்தடைந்துள்ளனர்.

நன்றி: புதினம் (www.puthinam.com)

பரஞ்சோதி
07-09-2005, 04:00 PM
எவ்வளவோ பொறுத்தாச்சு, இன்னமும் கொஞ்சம் பொறுக்கலாம், அதையும் மீறி இலங்கை ராணுவத்தினர் வம்பு செய்தால் அவர் எலும்பை நொறுக்கலாம்.

இளையவன்
08-09-2005, 06:38 AM
73 அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட கொலைச் சம்பவங்களில் 253 பேர்வரை கொல்லப்பட்டனர். இரண்டு சரக்குக் கப்பலில் 14 போராளிகள் கேணல் சங்கர் கடற்புலிகளின் தளபதி கங்கைஅமரன் உட்பட 5 போராளிகள் அரச படைகளின் ஆள ஊடுருவித்தாக்கும் படையினரால் கொல்லப்பட்டனர். சுமார் 56 இடங்களில் அரச படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதும் தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டங்கள் மீதும் மேற்கொண்ட தாக்குதலில் 389 பொதுமக்கள் காயமடைந்தும் 57 போராளிகள் வரை காயமடைந்தும் உள்ளனர். சுமார் 29 சம்பவங்களில் 96 போராளிகள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். தமிழர் புனர்வாழ்வுக்களகத்தின் பல கோடி பெறுமதியான வாகனங்கள் சொத்துக்கள் காரியாலயங்கள் சேதமாக்கப்பட்டு 2 கோடிருபாய் பணமாகவே பறிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் காரியாலயங்கள் மன்னார் வவுனியா மட்டகளப்பு திருகோணமலை அம்பாறை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 29 முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இவ்வாறு சுமார் 862 தடவைகள் கொலைக்கான எத்தணிப்புக்கள் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


போராளிகளின் கொலைகளின் காலங்களும் சம்பவங்களும்.

06.09.05 வாகரைப்பகுதியில் 3 போராளிகள் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

04.09.05 களுவாஞ்சிக்குடி விடுதலைப் புலிகளின் அலுவலகம் தாக்கப்பட்டு போராளி கொல்லப்பட்டார்.

02.09.05 விடுதலைப் புலிகளின் புலனாய்வு உறுப்பினர் என்று கூறி வென்னப்புவவில் தமிழ் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டார்.

30.08.05 வாகரைப் பகுதியில் விடுதலைப் புலிகள் மீது மேற்கொள்ளபட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் போராளி படுகாயமடைந்தார்.

18.08.05 விடுதலைப் புலிகள் என்று கூறி தமிழ் இளைஞன் கொழும்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யபட்டார் களுத்துறையில்.

10.08.05 இரண்டு விடுதலைப் புலிப்போராளிகள் திருக்கோவில் பகுதியில் படுகொலை செய்யபட்டார்கள்.

07.08.05 ஏறாவூர் பகுதியில் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர் படுகொலை செய்யப்பட்டார்.

20 யூலை 2005 கல்முனையில் சுட்டுக்கொல்லப்பட்ட கிராமசேவகர் பிரதேசவாதத்தை எதிர்த்த ஈரோஸ் முக்கியஸ்தர்.

15.07.05 அக்கரைப்பற்றில் மூன்று தமிழர்கள் புலி ஆதரவாளர்கள் என்று சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

14.07.05 திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளியொருவர் அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

13.07.05 புத்தளத்தில் புலி உளவாளி என்று கூறிக்கொண்டு தமிழ் இளைஞர் அரச புலனாய்வுப் பிரிவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

12.07.05 விடுதலைப் புலிகளின் உளவாளி என்று கூறி ஏறாவூரில் பாடசாலை மாணவன் அரச புலனாய்வுப்பிரிவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

10.07.05 திருகோணமலையில் இரண்டு தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

07.07.05 விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் வாழைச்சேனையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

05.07.05 பொலநறுவ மாவட்டத்தில் தமிழ் இளைஞப் புலி உளவாளி என்ற சந்தேகத்தில் அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

04.07.05 மட்டகளப்பு அரிசி ஆலைக்கு குண்டு வீசியதில் அப்பாவிப் பொதுமகன் சிங்களப் படைகளால் கொல்லப்பட்டார்.

29.06.05 கல்முனையில் பத்திரிகை வினியோகித்தவர் அரச புலனாய்வுப்பிரிவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

26.06.05 40 போராளிகளைக் கொல்வதற்குக் கண்ணிவெடித் தாக்குதல் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டது.

21.06.05 யாழ்ப்பாணக்கடலில் ஒரு பொதுமகன் அரச கடற்படையினரால் கொல்லப்பட்டார்.

21.06.05 மூதூரில் புலி உளவாளி என்று கூறி பொதுமகன் ஒருவர் அரச படைகளால் கொல்லப்பட்டார்.

15.06.05 கல்முனையில் இரண்டு அப்பாவிப் பொதுமக்கள் புலிகளின் உளவாளி என்று கூறி அரச படைகளால் கொலை செய்யப்பட்டார்கள்.

15.06.05 விடுதலைப் புலிகளின் உளவாளி என்று கூறி ஆரயம்பதியில் பொதுமகன் ஒருவர் அரச படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

13.06.05 விடுதலைப் புலி ஆதரவாளரின் சாவீட்டிற்கு குண்டுத் தாக்குதலை அரச படைகள் மேற்கொண்டதில் 1 பொதுமகன் கொல்லப்பட்டு 16 பொதுமக்கள் காயமடைந்தனர்.

09.06.05 செங்கலடியில் புலிகளின் ஆதரவாளர் ஒருவர் அரச படைகளால் சுடப்பட்டார்.

08.06.05 இரண்டு விடுதலைப் புலிப் போராளிகள் மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

06.06.05 விடுதலைப் புலிகளின் உளவாளிகள் எனக்கூறி இரண்டு இளைஞர்கள் கொழும்பில் கொல்லப்பட்டனர்.

05.06.05 மேலும் இரண்டு தமிழ் இளைஞர்கள் கொழும்பில் புலி உளவாளி எனக்கூறி அரச படைகள் சுட்டுக்கொன்றனர்.

30.05.05 விடுதலைப் புலி ஆதரவாளர் ஒருவர் வானில் வரும் போது அரச படைகளால் மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

29.05.05 ஏறாவூரில் அரசபடைகள் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் தமிழ்ப் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார்.

21.05.05 மட்டக்களப்பு விடுதலைப் புலிகளின் காரியாலயத்திற்கு வீசப்பட்ட கைக்குண்டு வீச்சில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.

17.05.05 திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஒருவர் இராணுவத்தால் கொல்லப்பட்டார்.

16.05.05 மட்டக்களபப்பில் ஆட்டோ சாரதி ஒருவர் அரச படைகளால் புலி உளவாளி என்று சந்தேகித்து சட்டுக்கொல்லப்பட்டார்.

09.05.05 வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் இறந்தார் சந்திவெளி இராணுவத்தினர் இதனை மேற்கொண்டிருந்தனர்.

07.05.05 இரண்டு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மட்டக்களப்பிலவ் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

08.04.05 மூதூரில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலையொன்று தாக்கப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார் அரச படைகள் இதனை மேற்கொண்டிருந்தனர்.

15.03.05 கறப்பொலவில் இரண்டு தமிழ் இளைஞர்கள் அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

07.03.05 விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

05.03.05 அம்புஸ் தாக்குதலில் விடுதலைப் புலிப்போராளி கொல்லப்பட்டார்.

04.03.05 இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 பொதுமக்கள் மட்டக்களப்பில் கொல்லப்பட்டனர்.

20.02.05 விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஒருவர் அனுராதபுரத்தில் கொல்லப்பட்டார்.

08.02.05 தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் கொல்லப்பட்டார்.

07.02.05 மட்டு அம்பாறை மாவட்ட தளபதி கௌசல்யன் அரச படைகளால் கொல்லப்பட்டார்.

09.01.05 மட்டக்களப்பில் மரணவீட்டில் அரச படைகள் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

22.12.04 விடுதலைப் புலிகளின் போராளியொருவர் மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

15.12.04 விடுதலைப் புலிகளின் உளவாளி என்ற சந்தேகத்தில் ஒருவர் மட்டக்களப்பில் அரச படைகளால் கொல்லப்பட்டார்.

19.11.04 வல்வெட்டித்துறையில் இருவர் அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

16.11.04 அனுராதபுரத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அரச படைகளால் இப்படுகொலையானது மேற்கொள்ளப்பட்டது.

17.10.04 விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஒருவர் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

04.10.04 மட்டக்களப்பில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் விடுதலைப் புலிகளின் தொடர்பாளர் என்ற சந்தேகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

02.10.04 தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஒருவார் மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

29.09.04 அம்பாறையில் இரண்டு விடுதலைப் புலிகளின் ஆதரவாளரும் கிரானில் ஒரு விடுதலைப் புலி ஆதரவாளரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

28.09.04 இராணுவத்தின் எறிகணை வீச்சுத் தாக்குதலில் பொதுமகன் கொல்லப்பட்டார்.

12.09.04 புல்லுமலையில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

24.08.04 விடுதலைப் புலி ஆதரவாளர் அக்கரைப்பற்றில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

20.08.04 அம்புஸ் தாக்குதலில் இரண்டு விடுதலைப் புலிப் போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

19.06.04 ஏறாவூரில் இரண்டு பண்ணைத் தொழிலாளர்கள் அரச படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
21.05.04 மேலும் ஒரு தமிழீழ விடுதலைப்புலிப் போராளி மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

01.05.04 மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப்புலிப் போராளி சுட்டுக்கொல்லப்பட்டார்.

26.04.04 குருநாகல் பகுதில் தமிழ் இளைஞர் அரச படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

26.04.04 7 விடுதலைப்புலிப் போராளிகள் மட்டக்களப்பில் அரச படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
20.01.04 கிழக்கு மாகாணத்தில் இரண்டு தமிழர் அரச படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

01.12.03 பொலிசாரால் தமிழ் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

03.10.03 இரண்டு தமிழ் இளைஞர்களை வாகனத்தால் மோதி அரச படையினர் கொலை செய்தனர்.

03.09.03 சம்மாந்துறையில் அரச படைகளால் தமிழ் இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

02.06.03 ரெலோ உறுப்பினர் ஒருவர் புலி உளவாளி என்று அரச படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

19.05.03 மட்டக்களப்பில் விடுதலைப் புலி ஆதரவாளர் ஒருவர் அரச படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

18.04.03 மட்டகளப்பு சேனை ஊரில் அரச படைகளால் பொதுமகன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

14.04.03 ஆரயம்பதியில் புலி ஆதரவாளர்கள் எனக்கூறி அரச படையினர்; இருவரைச் சுட்டுக்கொன்றனர்.

15.02.03 கிழாலிப் பிரதேசத்தில் அரச படையினர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதiலை மேற்கொண்டிருந்தனர்.

07.02.03 3 கடற்புலிகள் கடலில் வைத்து அரச கடற்படையால் கொல்லப்பட்டனர்.

31.12.02 கடற்படையினர் சுட்டதில் மீனவர் ஒருவர் பலியானார்.

09.10.02 விசேட அதிரடிப்படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுட்டதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் 20 பேர் காயமடைந்தனர்.

25.07.02 அர படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் வந்து தாக்குதல் தொடுக்கப்பட்டது.

28.06.02 சாவகச்சேரியில் அரச படைகளால் தமிழ் இளைஞர் கொல்லப்பட்டார்.

14.05.02 விசேட அதிரடிப்படையினரால் அப்பாவிப் பொதுமகன் புலி என்ற சந்தேகத்தில் சித்திரவதை செய்யப்பட்டார்.

02.05.02 வாகரையில் அரச கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

05.04.02 மூதூரில் இரண்டு தமிழர்கள் அரச புலனாய்வுப்பிரிவின் சதியால் கொல்லப்பட்டார்கள்.

நன்றி: நிதர்சனம்

இளையவன்
08-09-2005, 06:48 AM
எமது போராளிகளை தொடர்ச்சியாக நாம் இழந்து கொண்டிருக்க முடியாது எனவே அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அரசியல்துறைப் போராளிகளை வெளியேறுமாறும் அனைத்துப் போராளிகளையும் நிர்வாகப் பகுதிக்குள் அழைத்துச் செல்லுமாறும் எங்கள் தேசியத் தலைவர் பணித்திருக்கிறார் என தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்திருக்கிறார்.

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசங்களிலிருந்து அரசியல்துறைப் போராளிகளை திரும்ப அழைத்தது, ஐ.நா. படைக்கான அழைப்பு ஆகியவை குறித்து தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் ஆசிய ஒளிபரப்பு சேவையில் இன்றைய நிலமைகள் நிகழ்ச்சியில் நேற்று புதன்கிழமை, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாவது:

அண்மைக்காலமாக தென் தமிழீழத்தில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் எங்களுடைய போராளிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

இது முழுக்க முழுக்கவே சிறிலங்கா படைத்தரப்பினுடைய ஒழுங்கமைப்பின் கீழ் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இதை நாம் ஆதாரத்துடன் பலமுறை கண்காணிப்புக் குழு ஊடாக சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

ஆனால் அவர்கள் இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இன்னும் இன்னும் எமது போராளிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்திக் கொண்டே போகிறார்கள்.

தொடர்ச்சியாக எமது போராளிகளை நாம் இழந்து கொண்டிருக்க முடியாது. எனவே அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து அரசியல்துறைப் போராளிகளை வெளியேறுமாறும், அனைத்துப் போராளிகளையும் எங்கள் நிர்வாகப் பகுதிக்குள் அழைத்துச் செல்லுமாறும் எங்கள் தேசியத் தலைவர் பணித்திருக்கிறார்.

தேசியத் தலைவரின் இந்தப் பணிப்பை எங்கள் போராளிகளுக்குத் தெரிவித்து எமது நிர்வாகப் பிரதேசத்திற்குள் வரச் செய்துள்ளோம். இதற்கான முழுப் பொறுப்பும் சிறிலங்கா அரசுதான் ஏற்க வேண்டும்.

ஏனெனில் தமிழீழப் பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எங்களுடைய அரசியல்துறைப் போராளிகள் பணிகளை மேற்கொள்ளலாம் என்பது யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலே ஏற்கப்பட்ட விதிமுறை. இதற்கு முரணாக சிறிலங்கா படைத்தரப்பு யுத்த காலம் போலவே எங்கள் போராளிகளை படுகொலை செய்து தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.

இதனால் எங்கள் போராளிகளை அப்பகுதியிலேயே இருக்க வைத்து இழப்புகளை சந்திக்க அனுமதிக்க முடியாது என்பதால் எமது போராளிகளைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்பான பகுதிக்கு வருமாறு எங்கள் தலைவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை கூட இப்போது ஒரு கேள்விக் குறியாகி இருக்கிறது. ஏனெனில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அமுல்படுத்த முடியாத நிலையை சிறிலங்கா படைத்தரப்பு தோற்றுவித்திருக்கிறது. இதனால் யுத்த நிறுத்தச் சூழல் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.

இது பற்றி இன்று நோர்வே தூதுவருடனும் கண்காணிப்புக் குழுத் தலைவருடனும் தீவிரமாக விவாதிக்க இருக்கிறோம். எங்களுடைய நிலைப்பாடுகளை உறுதியாகத் தெரிவிக்க இருக்கிறோம். இதையடுத்து எமது அடுத்த கட்ட நகர்வுகள் என்ன என்பதை வெளிப்படுத்த இயலும்.

கேள்வி: போராளிகளை மீளப் பெற்றுள்ளது என்பது போருக்கான தயாரிப்பா?

பதில்: இது போருக்கான தயாரிப்பு என்பதை விட போருக்கான தூண்டுதல் இது. போர்ச் சூழலை உருவாக்கும் வகையில்தான் சிறிலங்கா படைத்தரப்பின் நடவடிக்கைகள் எங்களுக்குத் தெரிகின்றது.

ஏனெனில் நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும், பலமுறை எங்களுக்கு உத்தரவாதம் அளித்த பின்பும் போராளிகள் கொல்லப்படுகின்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

சிறிலங்கா படைத்தரப்பு ஆயுதக்குழுக்களை தங்களது படை முகாம்களுக்கும் பாதுகாப்புக்குள்ளேயும் வைத்து அவர்களுடன் இணைந்துதான் இந்தத் தாக்குதல்களை மேற் கொண்டு வருகின்றன.

இந்த நிலைமையை நாங்கள் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. பொறுக்க முடியாது. பொறுத்துக் கொண்டு இருக்கவும் முடியாது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் எங்களுடைய போராளிகளை பாதுகாப்பாக எமது நிர்வாகப் பகுதிக்குள் வரவழைத்து இருக்கின்றோம். அடுத்த கட்ட நிலைமைகளைப் பொறுத்துதான் அடுத்த கட்ட முடிகளை எமது தலைமைப்பீடம் எடுக்கும்.

கேள்வி: சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் ஜே.வி.பி.ன் 12 நிபந்தனைகளையும் ஜாதிக ஹெல உறுமயவின் 11 நிபந்தனைகளையும் மகிந்த ராஜபக்ச ஏற்றுள்ளது குறித்து?

பதில்: இதில் ஆச்சரியப்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்போது வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள்.

அதாவது ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய முன்வைத்து இருக்கும் நிபந்தனைகள்தான் இப்போது நடைமுறையில் இருக்கின்றன. ஏனெனில் இந்தப் பொதுக்கட்டமைப்பு, அமைதிப் பேச்சுவார்த்தை, யுத்த நிறுத்த அமுலாக்கம் உள்ளிட்ட அவர்கள் நிபந்தனைகளாக எதனையெல்லாம் வெளிப்படுத்தி இருக்கிறார்களோ அவ்வளவும் இப்போது நடைமுறையில் இருக்கிறது. அதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு அறிவித்துள்ளார்கள்.

இவர்கள் கூறுகிற இந்த நிபந்தனைகள் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதால்தான் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதிப் பேச்சுகள் முடங்கிக் கிடக்கின்றன.

யுத்த நிறுத்த சூழல் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. யுத்தம் மற்றும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அவசரமான மனிதாபிமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு மிகவும் மோசமான வாழ்நிலையைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் தமிழ் மக்கள் விரக்தியும் சலிப்பும் அடைந்துள்ளனர்.

இப்படியாக தற்போது உள்ள நடைமுறைச் சூழலைத்தான் நிபந்தனையாக்கி புதிதாக ஏதோ ஒன்றை சொல்ல வருவது போல் காட்டுகிறார்கள்.

சிங்களதேசம் தமிழ் மக்களுக்கு எதையுமே வழங்கப் போவதில்லை என்பதை இதன்மூலம் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தங்களுடைய தலைவிதியை, தீர்வை தாங்களே பெற்றுக்கொள்வதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு எந்த மாற்று வழியும் இல்லை என்பதை நோக்கியே சிங்கள தேசமும், சிங்களத் தலைமைகளும் எங்களைத் தள்ளிக் கொண்டு இருக்கின்றன என்பதற்கு முக்கிய வெளிப்பாடாக இது இருக்கின்றது. இதை சர்வதேச சமூகம் நிச்சயமாக கவனத்தில் எடுக்கும் என்றுதான் நம்புகிறோம்.

கேள்வி: போராளிகள் மீளப்பெறப்பட்டுள்ளது தொடர்பாக மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது?

பதில்: சிறிலங்கா இராணுவ கட்டுப் பாட்டு பகுதியில் உள்ள தமிழ் மக்கள், ஆயுதமற்ற நிலையில் போராளிகளை நீங்கள் இங்கு அனுப்பவது நீங்களே அவர்களை கொல்வதற்காக இங்கே கொடுப்பது போல் இருக்கிறது என்று எங்களிடத்திலே வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்கிற ஒரு உறுதியான தீர்வைப் பெற்ற பிறகே அரசியல் பணிகளில்
இன்று நோர்வே அனுசரணையாளர்கள் மற்றும் கண்காணிப்புக் குழுவினருடன் இது குறித்து பேச உள்ளோம். அவர்களுடைய உத்தரவாதம் சாதகமாக அமையாவிட்டால் நிலைமைகள் மோசமடையும் என்று தான் நினைக்கிறேன்.

கேள்வி: நோர்வே தரப்பை வெளி யேற்றிவிட்டு ஐ.நா படையை சிறிலங்கா அரசு அழைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளனவே?

பதில்: தற்போது ஊடகங்களில்தான் இந்தச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து நாம் புரிந்து கொள்ள இயலாமல் இருக்கிறோம்.

இருந்தாலும் புதிய வெளிவிவகார அமைச்சரும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் இந்தக் கருத்தை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தற்போது நோர்வேத் தரப்பு மிகுந்த அர்ப்பணிப்போடு இந்த சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சிறிலங்கா படைத்தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தால்தான் அனைத்து சமாதான முன்னெடுப்புகளும் நகர்வுகளும் முடக்கமடைந்துள்ளதே தவிர அனுசரணையாளர்கள் மற்றும் கண்காணிப்பா ளர்களின் செயற்பாடுகளால் முடக்கம் அடைந்துவிடவில்லை.

இப்படி செயற்படுகிற சிறிலங்கா படைத் தரப்பானது ஐ.நா. படையை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கைவிடுவது முறையற்றது. காலம் காலமாக எங்களுக்கு ஒரு பட்டறிவு இருக்கிறது. இலங்கைத் தீவின் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண எடுக்கப்படுகிற முயற்சிகள், அதற்கு அனுசரணை வழங்குவது அல்லது மத்தியஸ்தம் செய்வது என்ற பொறுப்பில் இருப்பவர்களை சிங்களப் பேரினவாதம் ஏற்றுக்கொண்டது இல்லை.

உண்மையான நீதியான தீர்வை நடுநிலையாளர்கள் உருவாக்குகிற சூழலின் போது அல்லது அவர்கள் ஒரு கருத்தை முன்வைக்கின்ற போது அது ஏதோ தமிழர்களுக்கு சார்பாக முன்வைக்கப்படுகிற முடிவாக ஒரு தோற்றத்தைக் காட்டி அவர்கள் மீது குற்றங்களைச் சுமத்தி அவர்களை வெளியேற்ற முயற்சி செய்வது என்பது இன்று நேற்றல்ல. சிங்களப் பேரினவாதம் காலம் காலமாக மேற்கொள்ளுகிற நடைமுறை. இது தொடர்பில் எத்தனையோ பட்டறிவுகளும் அனுபவங்களும் எங்களுக்கு இருக்கின்றது.

இப்போது நோர்வேத் தரப்புக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. இன்று இன்னொருவர் மத்தியஸ்தப் பணி மேற்கொண்டால் அவர்களுக்கும் இதே நிலைமைதான் ஏற்படும். ஆகவே இந்தக் கோரிக்கை ஒரு அர்த்தமற்றது. சர்வதேச சமூகத்தின் முழு ஆதரவுடன்தான் அனுசரணைப் பணியை நோர்வே முன்னெடுத்து வருகிறது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தினுடைய- சிங்கள படைத்தரபினுடைய- சிங்களப் பேரினவாதத்தினுடைய தமிழர் விரோத நடவடிக்கைகள், போக்குகள்தான் சூழலை சீர்குலைத்துக் கொண்டு இருக்கின்றன.

தங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கும், தங்களுடைய தமிழர் விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக் கொள்வதற்குமே இப்படியான குழப்பகரமான கோரிக்கைகளையும் குற்றச்சாட்டுகளையும் வைத்து குழப்பத்தை உருவாக்குவதுதான் இவர்களுடைய வழமை. அதனுடைய வெளிப்பாடாகத்தான் இந்த கோரிக்கை வெளிப்பட்டு இருக்கிறது.

ஆனால் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட தூதுவர் இப்போது சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளார். அவர் கொழும்பில் பல்வேறு நேர்காணல்களை அளித்திருக்கிறார். அவர் நோர்வே தரப்பு வெளியேற்றப் படுவதை முற்றாக மறுத்துள்ளார்.

நோர்வே தரப்பை வெளியேற்றிவிட்டு ஐ.நா. தலையிடுவது என்பது சாத்தியமல்ல என்றும் அதை ஐ.நா. ஏற்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆகவே இதை நாங்கள் பெரிய செய்தியாகக் கருதவில்லை. சிங்களப் பேரினவாதிகள்- சிங்களப் பேரினவாத ஊடகங்கள் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு- தமிழ் மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு காலம் காலமாக செய்துவருவதன் வெளிப்பாடாகவே இதை பார்க்கிறோம்.