PDA

View Full Version : செப்டம்பர் 6, செவ்வாய்க்கிழமை மலேசியாவிலĬ



Mano.G.
06-09-2005, 11:26 AM
இந்தோனிசியாவில் விமானம் விழுந்து நொறுங்கியது : 100 பயணிகள் பலி
இந்தோனிசியாவின் மேடான் நகர விமான நிலையத்தில் இருந்து நேற்று ஜகார்த்தாவுக்கு புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியதில் 117 பயணிகள் பலியானார்கள்.
விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே திடீர் கோளாறு காரணமாக அவ்விமானம் தாறுமாறாக பறந்தது. விமானத்தை உடனடியாக தரை இறக்க முயன்றனர். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி நொறுங்கியது. விழுந்த வேகத்தில் அந்த விமானம் தீ பிடித்துக் கொண்டது.
இவ்விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 100 பேர் உடல் சிதறியும், தீயில் கருகியும் பலியானார்கள். விமான நிலையத்தின் ஓடு தளத்தின் அருகிலேயே இவ்விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------

எண்ணெய் விலையேற்றத்தை குறித்த புதிய திட்டங்கள் அமைச்சரவையில் விவாதிக்கப்படவுள்ளது
தற்போது உலகச் சந்தையில் எண்ணெய் விலை மென்மேலும் அதிகரித்து வருவதை தொடர்ந்து நாட்டு மக்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi அண்மையில் அறிவுறுத்தினார்.
அதிகரித்து வரும் எண்ணெய் விலை நாட்டு மக்களுக்கு பல இன்னல்களை அளிப்பதை தொடர்ந்து, அரசாங்கம் எப்பொழுதும் அவர்களுக்கு உதவிகளை செய்யும் என அவர் நேற்று தெரிவித்தார்.
எண்ணெய் விலையேற்றதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுமைகளைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் பல திட்டங்களை எடுத்துள்ளதாகவும், இத்திட்டங்கள் அனைத்து நாளை அமைச்சரவையில் விவாதிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவையில் நாளை எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும், மக்களின் சுமைகளை சற்று குறைக்கும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் மேலும் கூறினார்.


ஜொகூரில் மாற்று பாலம் அமைக்க பொதுப்பணி அமைச்சு ஒரு போதும் மறுப்பு தெரிவிக்காது
மலேசிய பகுதியில் உள்ள ஜொகூர் பாலத்திற்கு மாற்று பாலம் அமைக்க பொதுப்பணி அமைச்சு ஒரு போதும் மறுப்பு தெரிவிக்காது என பொதுப்பணி துறையின் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு நேற்று தெரிவித்தார். இருப்பினும், இப்பாலத்தின் கட்டுமான திட்டங்கள் குறித்து விவரங்களை முதலில் பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi-யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் எப்பொழுது தொடங்க வேண்டும் எனும் ஆலோசனைகளை பிரதமர் வழங்குவார் எனவும், நிதி அமைச்சு உத்தரவிட்டால் உடனடியாக பணிகளைத் தொடங்க தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
சுமார் 640 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்படவுள்ள இப்பாலத்தின் செலவுகளை, சிங்கப்பூர் அதன் பாதி செலவுகளை ஏற்றுகொள்ள உள்ளதாகவும், இத்திட்டத்தின் வழி ஜொகூர் நீரிணையின் தரத்தை மேலும் அதிகரிக்க முடியும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இலவச ஆணுறை மற்றும் ஊசி வழங்கும் திட்டத்தைத் தவறாக கணக்கிட வேண்டாம்
நாட்டில் பரவி வரும் ஏய்ட்ஸ் நோயை குறைக்கும் நோக்கில் அரசாங்கம் போதை பித்தர்களுக்கு இலவச ஆணுறை மற்றும் ஊசி வழங்க அண்மையில் திட்டமிட்டது. அதன் முதல் கட்டமாக, இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு கொண்டு வரப்படும் என சுகாதார அமைச்சர் Datuk Dr Chua Soi Lek நேற்று முன்தினம் அறிவித்தார்.
இருப்பினும் சில தரப்பினர் இத்திட்டத்தை தவறாக எண்ணுவதாகவும் சரிவர புரிந்துகொள்ளவில்லை எனவும் பிரதமர் துறையின் அமைச்சர் Datuk Dr Abdullah Md Zin நேற்று தெரிவித்தார். மேலும் இத்திட்டம் கட்டுபாட்டிற்குள் உள்ள ஒரு திட்டம் எனவும் மக்கள் அதனை முறையாக புரிந்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
இலவச ஆணுறைகள் மற்றும் ஊசிகள் அனைவருக்கும் வழங்கப்படாது எனவும் மாறாக அவை குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் அவர் விளக்கமளித்தார். இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கோலாலம்பூர், ஜொகூர் பாரு, பினாங்கு, குவாந்தான் மற்றும் பஹாங் மாநிலத்தில் உள்ள சுமார் 1,200 போதை பித்தர்களுக்கு இலவச ஆணுறை மற்றும் ஊசி வழங்கப்படவுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.


ஏழு மாதங்களில் போதை பித்தர்களின் எண்ணிக்கை குறைவு
கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் நாட்டில் போதை பித்தர்களின் எண்ணிக்கை 34.1 விழுக்காடாக குறைந்துள்ளதாக உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் வழி தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 26,739 போதை பித்தர்கள் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் இவ்வருடம் அவ்வெண்ணிக்கை 17,600 பேராக குறைந்துள்ளதாகவும் அத்துறையின் அமைச்சர் Datuk Noh Omar தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இதே ஏழு மாதத்தில் சுமார் 13,321 புதிதாக போதைபொருள் உட்கொள்ளுபவர்கள் கணக்கிடப்பட்டதாகவும், இவ்வாண்டு அவ்வெண்னிக்கை 39.8 விழுக்காடாக குறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், மீண்டும் போதை பொருள் உட்கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையும் 28 விழுக்காடு குறைந்துள்ளதாக அவர் கூறினார். இதனிடையே, நாட்டில் போதை பொருள் வியோகிப்பவர்களின் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என அவர் எச்சரித்தார்.


சாலை விபத்தில் போலீஸ்காரர் பலி ; ஐவர் காயம்
Jalan Muar-Tangkak சாலையின் 4-வது கிலோமீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் போலீஸ்காரர் ஒருவர் பலியானதுடன் ஐவர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் பயணம் செய்த கார் மற்றொரு காருடன் மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது.
22 வயது மதிக்கத்தக்க Avelin Peter என்றழைக்கப்படும் போலீஸ்காரர் இவ்விபத்தில் மரணமடைந்ததாக மூவார் போக்குவரத்து தலைமை அதிகாரி ASP Abdul Rahman Ahmad தெரிவித்தார்.
அவருடன் பயணம் செய்த இரு நண்பர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி கூறினார். விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் இருந்த கணவன் மனைவி மற்றும் அவர்களது குழந்தையும் இவ்விபத்தில் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
--------------------------------------------------------------
சென்னை, குமரியில் மீண்டும் கடல் கொந்தளிப்பு
சென்னை அருகே எண்ணூர் பகுதியில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் மற்றும் பொது மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தமிழக கடலோரப் பகுதிகளில் அடிக்கடி கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை அருகே எண்ணூர் பகுதியிலும், மெரீனா கடற்கரைப் பகுதியிலும் கடல் கொந்தளிப்பும், கடல் உள்வாங்கும் சம்பவங்களும் நடந்தன. இதனால் எண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எண்ணூரில் கடலோரத்தில் உள்ள சில பகுதிகளின் சாலைகளில் கடல் நீர் புகுந்ததால் பீதி அதிகமாகியது.
இருப்பினும் இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நிபுணர்கள் தெளிவுபடுத்தினர். நேற்று வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டதாலும் கடல் நீரைத் தடுக்கும் சுவரைத் தாண்டி கடல் நீர் வந்ததாலும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கன்னியாகுமரி, நாகை உள்ளிட்ட சில இடங்களிலும் இதுபோல கடல் கொந்தளிப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------
(http://www.vanakkammalaysia.com/webpage_email.php?pg=tamil-060905-ind-cnt)
நியூ ஆர்லியன்ஸ் நகர மக்களின் சோகம் தொடர்கிறது
அமெரிக்காவில் 'கத்ரீனா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட நியூ ஆர்லியன்ஸ் நகர மக்களின் சோகம் இன்னும் தீரவில்லை. சட்டம், ஒழுங்கு பிரச்னையை தீர்க்க ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதுடன் கொள்ளை, கற்பழிப்பு, கொலை சம்பவங்களால் பீதியடைந்துள்ளனர். மேலும், பொதுமக்களை போலீசாரே அடித்து உதைத்து சிலர் மீது துப்பாக்கி சூடு நடத்தியும் வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர்.
நியூ ஆர்லியன்ஸ் நகரில் திருட்டு கும்பலின் அட்டகாசத்தை ஒடுக்க ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். நகரில் மீட்பு பணியுடன் சட்டம், ஒழுங்கு பிரச்னையையும் சமாளிக்க வேண்டிய நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. நகரின் அனைத்து பகுதிகளையும் ராணுவ வீரர்களின் கண்காணிப்பில் வைத்திருக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


சீனாவில் சூறாவளிக்கு 56 பேர் பலி
சீனாவின் கிழக்கு பகுதியில் சூறாவாளி வீசியதில் கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 56 பேர் உயிர் இழந்தனர். ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ், ஹாங்காங் மற்றும் சீனாவின் சில பகுதிகள் ஆண்டு தோறும் சூறாவளியால் பாதிக்கப்படும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவின் கிழக்கு பகுதியில் 'தலிம்' என்ற சூறாவளி வீசியதில் கடும் மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சில பகுதிகளில் நிலச்சரிவும் உண்டானது. ஜிஜியாங், ஹன்ஹூய், பியூஜியான் ஆகிய மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
ȡǢ¡ ஒட்டு மொத்தமாக 56 பேர் உயிர் இழந்ததாகவும், அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சீன செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.


விடுதலைப் புலிகள் அலுவலகம் மீது வெடிகுண்டு தாக்குதல்
இலங்கையில் விடுதலைப் புலிகளின் அலுவலகம் மீது நடந்த வெடி குண்டு தாக்குதலில் அவ்வமைப்பைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் இந்த வெடி குண்டு தாக்குதலை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.
புலிகள் அமைப்பிலிருந்து விலகிய அதிருப்தி பிரிவினரே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதனிடையே, இதே பகுதியில் போலீஸ் பாதுகாப்புச் சாவடி மீதும் துப்பாக்கித் தாக்குதல் நடந்துள்ளது. போலீஸ்காரர் ஒருவர் இச்சம்பவத்தில் காயமடைந்தார். இந்த தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு பிளவுப்பட்டது. அதிலிருந்து இலங்கையின் கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் அதன் எதிர் பிரிவினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------
U.S.Open Tennis : Maria வென்றார்
நியூயார்க்கில் U.S.Open Tennis போட்டி நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் நான்காம் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை Sania, ரஷ்யாவின் கவர்ச்சி நாயகி Sharapova-வைச் சந்தித்தார்.
இருவருமே 18 வயது இளம் பெண்கள் என்பதால் போட்டியில் அதிக ஆர்வம் காணப்பட்டது. உலகத் தர வரிசை பட்டியலில் 42-வது இடத்தில் உள்ள Sania துவக்கத்தில் நல்ல போட்டியை கொடுத்து சபாஷ் பெற்றார். முன்னணி வீராங்கனை Maria-வைக் காட்டிலும் அசத்தினார். ஆனாலும் அசுர வேகத்தில் விளையாடிய Maria முதல் செட்டை 6-2 என்ற எண்ணிக்கையில் 32 நிமிடங்களில் வென்றார்.
அடுத்த செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய Maria 6-2, 6-1 என்ற நேர் செட்களில் சுலபமாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். U.S.Open Tennis நான்காம் சுற்றில் விளையாடிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையோடு விடைபெற்றார் Sania.

நன்றி வணக்கம்மலேசியா.காம்


மனோ.ஜி

pradeepkt
06-09-2005, 12:52 PM
செய்திகளுக்கு நன்றி மனோ அண்ணா!
சென்னை சீனா அமெரிக்கா என்று பாகுபாடில்லாமல் இயற்கை அன்னை சீற்றத்தைக் காட்டுகிறாள். அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்.
சானியாவின் முயற்சி கண்டு மகிழ்கிறேன். இன்னும் கொஞ்சம் முயன்றால் பதக்கங்கள் குவியுமே.