PDA

View Full Version : வீடியோகான் கோப்பை இறுதிப் போட்டி.



பிரியன்
06-09-2005, 08:43 AM
வீடியோகான் கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்கிறது..

சற்றுமுன்னர் கிடைத்த நிலவரப்படி இந்தியா 89 ரன்னுக்கு ஒரு விக்கெட் இழந்துள்ளது.

ஸ்கோர் விபரம்
சேவாக் - 45*(42) - 9*4
கங்குலி - 31(44) - 5*4
கைப் - 5*(12)

பிரியன்
06-09-2005, 08:57 AM
அற்புதமான சிக்சருடன் சேவாக் அரை சதம்(53*(46) = 9*4, 1*6) -
இந்தியா - 106/1(18)

பிரியன்
06-09-2005, 09:03 AM
20 ஓவர்கள் முடிவில் இந்தியா 121 /1
கைப்*26(26)
சேவாக்*54(52)

பரஞ்சோதி
06-09-2005, 09:06 AM
போட்டு தாக்குங்க பிரியன்.

பிரியன்
06-09-2005, 09:12 AM
இந்தியா 145/1 (23)

சேவாக்*73(62) -12*4, 1*6
கைப்* 31 (34) -4*4

ஜீவா
06-09-2005, 09:23 AM
நண்பர்கள் யாராவது ஆடீயோ கேட்க வேண்டுமென்றால், இங்கு யாகு மெஸென்ச்சர் ஐடி கொடுங்கள்.. நான் உங்களை இன்வைட் பண்ணுகிறேன்..

பிரியன்
06-09-2005, 09:25 AM
இந்தியா 158/3 (26)
சேவாக் -75 (65)
டிராவிட் 0(2)
கைப்* - 40(45)
யுவராஜ்சிங்* - 2(4)

பரஞ்சோதி
06-09-2005, 09:36 AM
30 ஓவரில் 170/3 இருக்குது. தடவ ஆரம்பிச்சிட்டாங்க. ஷேன் வேறு வருவார் 5 ஓவர் இருக்குது.

பிரியன்
06-09-2005, 09:40 AM
இது போதுமய்யா - கைப் செட்டாயிட்டாரு- யுவராஜ் பொறுமையாக விளையாடி 40 ஓவர் வரை தொடர்ந்தால் நன்றாக இருக்கும். கடைசி 6-7 ஓவர்களில் பார்த்துகலாம்

மன்மதன்
06-09-2005, 09:43 AM
நண்பர்கள் யாராவது ஆடீயோ கேட்க வேண்டுமென்றால், இங்கு யாகு மெஸென்ச்சர் ஐடி கொடுங்கள்.. நான் உங்களை இன்வைட் பண்ணுகிறேன்..

manmadan_dubai@yahoo.com

மன்மதன்
06-09-2005, 09:51 AM
நன்றி ஜீவா.. இப்பொழுது நான் கமெண்ட்ரி கேட்டுகிட்டிருக்கேன்..

பிரியன்
06-09-2005, 09:56 AM
இந்தியா 188/4 (35)
கைப்*50(65)
வேணுகோபால் -1*(4)

பரஞ்சோதி
06-09-2005, 10:08 AM
நன்றி ஜீவா.. இப்பொழுது நான் கமெண்ட்ரி கேட்டுகிட்டிருக்கேன்..

நாங்க படிச்சிட்டு இருக்கோம், நீர் கேட்கிறீரா?

பரஞ்சோதி
06-09-2005, 10:09 AM
வேணு வுட்டான் பாரு ஒரு சிக்ஸூ

மன்மதன்
06-09-2005, 10:11 AM
யாரோ ஒருத்தர் மவுத்.. சாரி அவுட்..யாருப்பா அது?? :D (கமெண்ட்ரி ஆஃப்பாயில் ஆயிடுச்சிபா..)

பரஞ்சோதி
06-09-2005, 10:13 AM
வேணு தான் மவுத்தாயிட்டார். விட்ட சிக்ஸீ மாதிரி விட பார்த்தார்.

பரஞ்சோதி
06-09-2005, 10:17 AM
210 40 ஓவரில், இன்னம் 10 ஓவர், 5 விக்கெட், எவ்வளவு வரும் ?

மன்மதன்
06-09-2005, 10:29 AM
300 தான் வரும்....

பரஞ்சோதி
06-09-2005, 10:46 AM
ரன்னுக்கு போட்டியா விக்கெட் விழுது, பரவாயில்லை 3 போர் அடித்து விட்டார்கள். 280 வரும்.

பிரியன்
06-09-2005, 10:55 AM
இந்தியா 258/8 (47)
கைப் 84*
பதான் 2*

பிரியன்
06-09-2005, 11:08 AM
இந்தியா 276 ஆல் அவுட்.
கைப் 93*

இக்பால்
06-09-2005, 11:11 AM
இப்பத்தான் உள்ளே வருகிறேன்.

அதற்குள் ஆல் அவுட் என்கிறீர்களே.

கைப் அவர்களுக்கு நன்றியுடன் பாராட்டுகள்.

இளையவன்
06-09-2005, 01:26 PM
18ஆவது ஓவரில் 2 விக்கட்களைக் கைப்பற்றி இந்திய அணிக்கு புது உத்வேகத்தைக் கொடுத்துள்ளார் சேவாக். நியூசிலாந்து அணி 2விக்கட்களை இழந்து 21 ஓவர்களில் 132 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்

இளையவன்
06-09-2005, 02:07 PM
நியூசிலாந்து அணி 3விக்கட்களை இழந்து 35ஓவர்களில் 197 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்
(3விக்கிட்டுக்களுக்கும் சொந்தக்காரன் நம்ம சேவாக்)

இளையவன்
06-09-2005, 02:19 PM
நியூசிலாந்து அணி 4விக்கட்களை இழந்து 38 ஓவர்களில் 208 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். (நான்காவது விக்கட்டைக் கைப்பற்றியவர் யுவராஜ்சிங்)

பரஞ்சோதி
06-09-2005, 02:56 PM
ஊத்திக்கிச்சுங்கோ,

அடுத்தது என்ன செய்வது, திட்ட ஆரம்பிக்கலாமா? ஜாலியா இருக்கும்.

இளையவன்
06-09-2005, 02:59 PM
நியூசிலாந்து அணி 6 விக்கட்டுக்களால் இந்திய அணியைத் தோற்கடித்து வீடியோன் கோப்பையைச் சுவீகரிக்கின்றனர். இந்திய அணியின் துடுப்பாட்டம் நன்றாக இருந்தபோதும் இந்திய பந்து வீச்சாளர்களின் மோசமான பந்துவீச்சால் இந்திய அணியினர் தோல்வியடைந்தனர்.

மன்மதன்
06-09-2005, 03:09 PM
276 எடுத்தும் ஜெயிக்க முடியலை.. பணமய்யா..பணம்... கிரிக்கெட் வெறுத்து போச்சி...

பரஞ்சோதி
06-09-2005, 03:15 PM
கடைசி பத்து ஓவரில் ரன் எடுக்கவில்லை, பந்து வீச்சில் ரன் எடுப்பதை கட்டுப்படுத்தவில்லை.

pradeepkt
07-09-2005, 05:10 AM
கிரிக்கெட்டில் அவ்வளவாக விருப்பம் இல்லாத போதும் கொஞ்ச நேரம் பார்த்தேன், வெறுத்தேன்.
தேவையில்லாத ரத்தக் கொதிப்புதான் மிஞ்சுகிறது. கிரிக்கெட் பார்க்க வேண்டாம் என்ற என் எண்ணத்திற்கு மீண்டும் மதிப்பு கொடுக்கிறேன்.

பரஞ்சோதி
07-09-2005, 05:19 AM
தம்பியின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன், விரைவில் என் அவதாரத்தையும் மாற்ற இருக்கிறேன். போங்கடா நீங்களும் (கங்குலி அணி), உங்க கிரிக்கெட்டும்.

மன்மதன்
07-09-2005, 06:22 AM
ஆமாம்.. இப்ப விளையாடிய இந்திய அணிக்கு யாரு கேப்டனா இருந்தா??(அதாவது யாரு நிறைய சம்பாதிச்சா?? :D :D)

aren
07-09-2005, 08:39 AM
நம்ம பசங்களுக்கு கடைசி ஆட்டம் என்றாலே கொஞ்சம் உதற்ல்தான். ஆபரேஷன் வெற்றி ஆனால் நோயாளி இறந்துவிட்டான் என்பது போலாகிவிட்டது நம்ம பசங்க கடைசி ஆட்டம் ஆடுவது.

இது தலைவரால் வருகிறதா அல்லது நம்ம பசங்களுக்கே முதுகெலும்பு இல்லையா?

இப்படி ஒவ்வொரு முறையும் கடைசி ஆட்டத்தில் இப்படி கோட்டை விடுகிறார்களே?

நம் இந்தியர்கள் டிவியில் மாட்ச் பார்ப்பதையே விட்டுவிடப்போகிறார்கள் இந்த மாதிரி நம் மக்கள் விளையாடினால். அப்புறம் டால்மியா போன்றவர்கள் யாரையும் எடுத்தெறிந்து பேசமாட்டார்கள்.

பரஞ்சோதி
07-09-2005, 09:03 AM
முன்பு எல்லாம் ஒரு கோப்பையை கை விட்டாலும் கேப்டனை தூக்கிடுவாங்க, ஏன் கங்குலியை மட்டும் 15 கோப்பைகளுக்கும் மேல் கோட்டை விட்ட பின்பும் வைத்திருக்காங்க.

இளையவன்
07-09-2005, 12:02 PM
கப்டனை மட்டுமல்ல ஒரு போட்டியில் சரியாக விளையாடாத வீரர்களையும் அடுத்த போட்டியில் ஆடுவதில் இருந்து தடைசெய்தாற்தான் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் அவர்கள் நன்றாக விளையாடுவார்கள் என்பது எனது கருத்து. மற்றும் ராகுல் சிம்பாப்பேயில் நடந்த ஒரு போட்டியில் கூட நன்றாக ஆடவில்லை அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

பரஞ்சோதி
07-09-2005, 03:56 PM
முன்பு டெண்டுல்கருக்கும் கங்குலிக்கும் புகைச்சல் என்பார்கள், இப்போ அது டிராவிட்டுக்கு மாறிவிட்டதா?