PDA

View Full Version : என் அறிமுகம்



kalvettu
05-09-2005, 07:10 AM
வணக்கம் தோழர்களே,
என் பெயர் பிரேம் குமார் நான் திருச்சி மண்டலப் பொறியியற் கல்லூரியில் என் கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு தற்போது பெங்களுரில்(IBM) வேலை செய்கிறேன்.என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி அருகில் உள்ள வள்ளியூர்.

http://premkalvettu.blogspot.com

பிரியன்
05-09-2005, 07:26 AM
வாங்க பிரேம். இங்கு ஏற்கனவே ஒருவர் மண்டல கல்லூரியில் படித்தவர் இருக்கிறார். அவர் பிரதீப். நீங்கள் இருவரும் அறிமுகமானவர்களா

மன்மதன்
05-09-2005, 07:35 AM
நல்வரவு பிரேம்குமார்.. கல்வெட்டு என்ற பெயரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்.. தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்..

gragavan
05-09-2005, 09:10 AM
வாங்க பிரேம்குமார் வாங்க. வள்ளியூரா ஒங்க ஊரு. அங்கதான் எனக்கு ஒரு பிரண்டு இருந்தான். சண்முகமுன்னு பேரு. இப்ப அவனும் பெங்களூருலதான் இருக்கான்.

உங்கள் வரவு நல்வரவாகுக.

இக்பால்
05-09-2005, 09:13 AM
வாங்க பிரேம்குமார் தம்பி...

பெங்களூர் காரங்க கூட்டம் அதிகம் ஆகுதே. :)

-அன்புடன் இக்பால்.

thempavani
05-09-2005, 09:20 AM
அட நம்மூருக்காரரு இந்தக் கல்வெட்டு..வாருங்கள் பிரேம்குமார்..வள்ளியூரா உங்கள் ஊர்..எனது அம்மாவிற்கு தெற்கு கள்ளிகுளம்..வாருங்கள் மன்றத்தில் உங்களுக்கு நிறைய உறவுகள் கிடைக்கும்...

kalvettu
05-09-2005, 11:00 AM
நல்வரவு பிரேம்குமார்.. கல்வெட்டு என்ற பெயரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்.. தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்

மன்மதன் அவர்களே கல்வெட்டு என்பது நண்பர்கள் எனக்கு வைத்த பெயர்...அதற்குப் பின்னால் பெரிய கதையே இருக்கிறது தோழரே



அட நம்மூருக்காரரு இந்தக் கல்வெட்டு..வாருங்கள் பிரேம்குமார்..வள்ளியூரா உங்கள் ஊர்..எனது அம்மாவிற்கு தெற்கு கள்ளிகுளம்..வாருங்கள் மன்றத்தில் உங்களுக்கு நிறைய உறவுகள் கிடைக்கும்

தேம்பாவனி அவர்களே என்னுடைய சொந்த ஊர் கள்ளிகுளம் அருகில் உள்ள செளந்திரபாண்டியபுரம்..இன்னும் நெருங்கிவிட்டீர்கள்

மன்மதன்
05-09-2005, 11:30 AM
மன்மதன் அவர்களே கல்வெட்டு என்பது நண்பர்கள் எனக்கு வைத்த பெயர்...அதற்குப் பின்னால் பெரிய கதையே இருக்கிறது தோழரே

எங்களுக்காக சுவாரஷ்யமான கட்டுரை ஒன்று காத்திருக்கிறது..:)

சுவேதா
05-09-2005, 11:39 AM
வாருங்கள் பிரேம் குமார் அண்ணா! உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

thempavani
05-09-2005, 11:42 AM
தேம்பாவனி அவர்களே என்னுடைய சொந்த ஊர் கள்ளிகுளம் அருகில் உள்ள செளந்திரபாண்டியபுரம்..இன்னும் நெருங்கிவிட்டீர்கள்

நல்லது பிரேம்குமார்... சொந்திரபாண்டிய புரத்தில் நாராயணபெருமாள் என்றொரு அரசியல்வாதி தெரியுமா..அவர் என் பெரியம்மா மகளை மணந்திருக்கிறார்..அவர் தம்பி கூட கனரா வங்கியில் பணிபுரிகிறார்...

நல்ல அத்தான் எங்களுக்கு...ஆனால் அவரைக் கண்டால் இன்றும் எங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் பயம் உண்டு...

பாரதி
05-09-2005, 01:25 PM
தமிழ்மன்ற குடும்பத்தில் இணைந்திருக்கும் நண்பர் பிரேம்குமார் அவர்களை வரவேற்பதில் மன்றத்தினருடன் நானும் மகிழ்கிறேன். உங்கள் வலைப்பூவில் நிறைந்திருக்கும் கவிதைகள் போல உங்கள் பதிவுகளால் மன்றமும் நிரம்பட்டும்.

pradeepkt
06-09-2005, 03:24 AM
அடடே...
வணக்கம் பிரேம் குமார்.
நானும் அதே மண்டலப் பொறியியற் கல்லூரியில்தான் குப்பை கொட்டிவிட்டு வெகுநாள் பெங்களூர் வாசத்திற்குப் பிறகு இப்போது ஹைதராபாதில் குப்பை கொட்டுகிறேன்.
உங்கள் வலைப்பதிவைக் கண்டேன். நன்று.
எங்கள் பேட்ச்சில் உங்களைப் போலே வள்ளியூரில் இருந்து வந்து படித்து இன்னும் ஐபிஎம்மில் வேலை செய்யும் ஒரு நண்பன் இருக்கிறான். தற்சமயம் அமெரிக்காவில் இருக்கிறான். வேறு விவரங்கள் வேண்டுமெனில் தனிமடல் செய்யவும்.

வாழ்த்துகள்

pradeepkt
06-09-2005, 03:27 AM
எங்களுக்காக சுவாரஷ்யமான கட்டுரை ஒன்று காத்திருக்கிறது..:)
மன்மதா அங்கே வைக்கும் பெயருக்கெல்லாம் ரொம்ப எதிர்பார்க்கக் கூடாது.
முதல் வருடத்தில் என் வகுப்புத் தோழனிடம் ஜஸ்ட் லைக் தட் வந்து உனக்கு ஜக்கு, மக்கு, ஜிக்கு இதில் எந்தப் பெயர் பிடித்திருக்கிறது என்றார்கள். அவன் சொல்லிப் பார்ப்பதற்காக ஜக்கு... என்று ஆரம்பித்தான். உடனே கூட்டமாக என்னவோ பிறந்த பிள்ளைக்குப் பேர் வைத்ததைப் போல ஜக்கு ஜக்கு ஜக்கு என்று அலறிவிட்டு ஓடி விட்டார்கள்.

இன்று வரை அவன் பெயரை நேரடியாகச் சொன்னால் யாருக்குமே தெரியாது.

அறிஞர்
06-09-2005, 07:43 PM
வாருங்கள் பிரேம்..... இங்குள்ள படைப்புக்களை படியுங்கள்.... ரசியுங்கள்... நீங்களும் தாருங்கள்

பிரசன்னா
11-09-2005, 02:18 PM
உங்களை வரவேற்கிறேன்................
கவிபாடி கலக்குங்கள்

Narathar
11-09-2005, 11:23 PM
உங்கள் ஆக்கங்களும் கல்வெட்டாக இங்கு பதியட்டும்..........

kavitha
21-10-2005, 11:20 AM
கல்வெட்டு அவர்களை (தாமதமாக என்றாலும்)வரவேற்பதில் மகிழ்ச்சி.
வித்தியாச சிந்தனைகளுடன் எழுதுகிறீர்கள். உங்கள் பாணியில் நீங்கள் சிறக்க வாழ்த்துகள்