PDA

View Full Version : செப்டம்பர் 5, திங்கட்கிழமை மலேசிய செய்திக



Mano.G.
05-09-2005, 05:31 AM
ஹெலிகாப்டர் விழுந்ததில் மூவர் பலி
Kuching-இல் Kapit பகுதியில் வெட்டு மர நடவடிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த மூன்று பேர் பலியாயினர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் மூன்று மணி அளவில் ஏற்பட்டதாகவும், மரனமடைந்த மூவரும் ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் சரவாக் மாநில போலீஸ் தலைமையகத்தின் அதிகாரி Cif Insp Ibrahim Dunggak தெரிவித்தார்.
தற்போது மரணமுற்ற மூவரின் உடல்களும் Kapit பருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மரணடைந்தவர்கள் 49-வயது Anatoli Seleznev, 26-வயது Andrei Gritsenko மற்றும் 38-வயது Istomin Alexey என அவர் தெரிவித்தார்.
விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் Hua Xin Heli Harvesting Sdn Bhd நிறுவனத்திற்கு சொந்தமான என்பது குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------------
இலவச ஆணுறை மற்றும் ஊசி வழங் திட்டம் அடுத்த ஆண்டு லுக்கு வரும்
நாட்டில் பரவி வரும் ஏய்ட்ஸ் நோயை குறைக்கும் நோக்கில் அரசாங்கம் போதை பித்தர்களுக்கு இலவச ஆணுறை மற்றும் ஊசி வழங்க அமையில் திட்டமிட்டது. அதன் முதல் கட்டமாக, இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு கொண்டு வரப்படும் என சுகாதார அமைச்சர் Datuk Dr Chua Soi Lek தெரிவித்தார்.
சமய போதகர்களின் ஆதரவு இல்லாததால் அரசாங்கம் இத்திட்டத்தை தள்ளி போடவுள்ளதாக வெளிவந்த கூற்று தவறானது எனவும், இத்திட்டத்தை அமலுக்கு கொண்டு சில கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எடுத்துக்காட்டாக, இத்திட்டத்தை செயல்படுத்தும் முன் மருத்துவ ஊழியர்களுக்கு தகுந்த பயிற்சிகளை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கோலாலம்பூர், ஜொகூர் பாரு, பினாங்கு, குவந்தான் மற்றும் பஹாங் மாநிலத்தில் உள்ள சுமார் 1,200 போதை பித்தர்களுக்கு இலவச ஆணுறை மற்றும் ஊசி வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பினாங்கு பாலத்தின் TOLL கட்டணத்தை உயர்த்துவதற்குமுன் விளக்கம் தேவை
பினாங்கு பாலத்தின் TOLL கட்டணத்தை உயர்த்துவதற்குமுன் பினாங்கு பாலத்தை நிர்வகிக்கும் நிறுவனமான Penang Bridge Sdn Bhd (PBSB) தனது நிதி நிலவரம் தொடர்பாக விளக்கவுரை அளிக்க வேண்டும் என பினாங்கு மாநிலத்தின் முதல்வர் Tan Sri Dr Koh Tsu Koon தெரிவித்தார்.
பினாங்கு பாலத்தின் TOLL கட்டணத்தை மேலும் ஒரு ரிங்கிட் 50 சென் - ஆக உயர்த்துவதற்கு PBSB நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பான விளக்கவுரையை விரைவில் அளிக்க பொதுப்பணி அமைச்சர் Datuk Seri S. Samy Vellu அவர்களும் உறுதியளித்திருந்தார் என Tan Sri Dr Koh Tsu Koon கூறினார். பினாங்கில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

துன் மகாதீரின் வியக்கத்தக்க சிந்தனையாற்றல்
கடந்த வாரம், IIUM எனும் மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் மலேசியர்களின் சிந்தனை திறன் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. சிந்தனை திறன் தொடர்பாக பல கோணங்களிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினரான முன்னாள் பிரதமர் TUN DR MAHATHIR MOHD அவர்களின் சிறந்த சிந்தனை திறன் பலராலும் பாராட்டப்பட்டது.நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகோலும் வகையில் செயலாற்றிய TUN DR MAHATHIR MOHD-டின் வியக்கத்தகு சிந்தனையாற்றல் வெகுவாக பாராட்டப்பட்டது.

நாம் வெறுமனே சிந்தனை செய்தால் மட்டும் போதாது;சிந்தித்தை செயல்படுத்தும் திறன் கொண்டிருக்க வேண்டும் எனவும் கிடைத்த வெற்றியை நிலைநாட்ட பாடுபட வேண்டும் எனவும் TUN DR MAHATHIR MOHD தெரிவித்துள்ளார்.
ISA இன்னும் பணியில் ஈடுபட்டு வருகிறார்
பண அரசியலில் ஈடுபட்டதால் கடந்த ஜூன் மாதம் கூட்டரசு பிரதேச அமைச்சர் Tan Sri Mohamed Isa Abdul Samad அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.
பதவியிலிருந்து அவர் விலக்கப்பட்டாலும் இன்னும் அமைச்சர் பணியில் ஈடுபட்டு வருகிறார் என அவ்வமைச்சின் தலைமைச் செயலாளர் Datuk Dr Zulkarnain Awang தெரிவித்தார்.
ISA பல முக்கிய பத்திரங்களுக்குக் கையெழுத்திடுவது, முக்கிய கூட்டங்களுக்கு தலைமைத் தாங்குவது போன்ற பணிகளை இன்னும் மேற்கொண்டு வருவதால் அவரின் பணி நீக்கம் அவ்வமைச்சுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என அவர் கூறினார்.

பணியில் ஈடுபட்டு வருவதால் அவரது பதவி நீக்கம் மேம்பாட்டு திட்டங்களுக்கு எந்தவொரு பாதிப்பையும் கொண்டு வரவில்லை என அவர் மேலும் விளக்கமளித்தார்.

Nias தீவு அருகே மீண்டும் நிலநடுக்கம்
இந்தோனிசியா Nias தீவு அருகே நேற்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆáய்ச்சி மையம் அறிவித்தது. 5.0 ரிக்டர் அளவில் பதிவான இந்நிலநடுக்கம் Nias தென்மேற்கு பகுதியில் ஏற்பட்டதாக அம்மையம் மேலும் அறிவித்தது.

இந்நில அதிர்வை தொடர்ந்து சுனாமி ன்ற பேரலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், தீபகற்ப மலேசியாவில் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அம்மையம் மேலும் அறிவித்தது.

திரங்கானுவில் சுற்றுப்புற தூய்மை மனநிறைவை அளிக்கவில்லை
திரங்கானு மாநிலத்தில் துப்புரவு பணிகளும் அவ்வட்டாரங்களை அழகுப்படுத்தும் நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்ட போதிலும் அம்மாநிலத்தின் சுற்றுப்புற தூய்மை தமக்கு இன்னும் மனநிறைவை அளிக்கவில்லை என திரெங்கானு Menteri Besar, Datuk Seri Idris Jusoh தெரிவித்தார்.
இருப்பினும் சில தரப்பினரின் முயற்சியால் முன்பு போல் அம்மாநிலம் இல்லாமல் தபொழுது பொழிவடைந்து காணப்படுவதாக அவர் கூறினார்.
சுற்றுப்புற தூய்மை ஓரளவு மேன்மை கண்டாலும் சில பகுதிகளின் சுற்றுப்புறங்கள் தமக்கு இன்னும் மனநிறைவை அளிக்கவில்லை என அவர் மேலும் கூறினார்.
--------------------------------------------------------------
ஸ்ரீநகரில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் பலி
ஸ்ரீநகர் பகுதியில் உள்ள துங்காநாத் கோயிலுக்கு பக்தர்கள் பலர் ஒரு மினி பஸ்சில் கிளம்பினர். பஸ் நார்கோட்டா பகுதிக்கு வந்தபோது நிலை தடுமாறி மலையில் இருந்து உருண்டது.
இதில் 10 பேர் பலியாயினர்.15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்பேருந்தில் பயணம் செய்த பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்ற மீட்பு பணியினரும் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
--------------------------------------------------------------
மூன்று மாதங்களுக்கு சண்டை நிறுத்தம் : நேப்பாள தீவிரவாதிகள் அறிவிப்பு
நேப்பாளத்தில் மூன்று மாதங்களுக்கு சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ளப் போவதாக தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். நேப்பாளத்தில் பிரதமர் தலைமையில் இருந்த அரசை ரத்து செய்து விட்டு அதிகாரத்தை மன்னர் கைப்பற்றினார்.
இதை எதிர்த்து தீவிரவாதிகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நேப்பாளம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. நேப்பாளத்தில் நிலவிவரும் அரசியல் குழப்பத்தை தீர்க்க வழி ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், இன்னும் மூன்று மாதங்களுக்கு சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.
இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது. தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாலியல் பலாத்கார குற்றவாளிகளை செயற்கைகோள் மூலம் கண்காணிக்க முடிவு
அமெரிக்காவில் பாலியல் பலாத்காரம் குற்றவாளிகளை செயற்கைகோள் மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்னஸ்சி மாநிலத்தில் பலாத்கார குற்றவாளிகள் அதிகம். இவர்களை கட்டுப்படுத்துவது என்பது சிரமமான காரியமாக உள்ளது.
பிரச்னை ஏற்படும் போது சிறையில் அடைப்பதும், தண்டனை காலம் முடிந்து மீண்டும் அவர்கள் வெளியே வந்து கைவரிசையை காட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதற்காக டென்னஸ்சி மாநிலத்தில் குற்றவாளிகளை விடுதலை செய்து அவர்களை கண்காணிக்க ஒரு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியம் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடவுள்ளது. முதல் கட்டமாக 650 பலாத்கார குற்றவாளிகளின் கணுக்காலில் வளையம் ஒன்றும், இடுப்பில் டசார்ஜ் வசதி கொண்ட பெல்டும் மாட்டப்படும்.
அதில் இருந்து கிடைக்கும் சிக்னல்களை செயற்கை கோள் மூலம் பெறும் வசதி உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட குற்றவாளி எந்த பகுதியில் இருக்கிறார் என்பதை உடனே அறிந்து விட முடியும். டென்னஸ்சி மாநிலத்தில் 11 பகுதிகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.


ஷியா பிரிவினரை தாக்கிய வழக்கு : அக்டோ பர் 19-இல் சடாமிடம் விசாரணை
ஈராக்கில் கடந்த 1982ம் ஆண்டு ஷியா பிரிவு முஸ்லிம்களை கொலை வழக்கில் முன்னாள் அதிபர் சடாம் உசேன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் அக்டோ பர் 19ம் தேதி விசாரணை துவங்குகிறது.
ஈராக்கில் சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த சடாம் உசேனை அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஈராக்கில் தற்போது ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஆட்சி நடந்து வருகிறது. இதன் பின்னணியில் அமெரிக்கா செயல்படுகிறது.
இந்த அரசு சார்பில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்களிடம் ஆதரவு பெற கருத்து கணிப்பு நடத்தப்படவுள்ளது. இந்த கருத்து கணிப்புக்கு பின்னரே சடாம் உசேன் மீதான வழக்கு விசாரணை துவங்கும். அக்டோ பர் 15ம் தேதி இந்த கருத்து கணிப்பு நடக்கும் நிலை உள்ளதால் வழக்கு விசாரணை அக்டோ பர் 19ம் தேதி துவங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
--------------------------------------------------------------
நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் J Henin-Hardenne
US Open Tennis தொடரில் J Henin-Hardenne நான்காம் சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் இத்தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன.
ஏழாம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் J Henin-Hardenne, தென் கொரியாவின் Yoon Jeong Cho-வை எதிர்த்து விளையாடினார். முதல் செட்டை மிக எளிதில் கைப்பற்றிய Henin, இரண்டாவது செட்டில் கடுமையாக போராடினார். இறுதியில் இவர் 6-0, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த வெற்றியை பெற Henin-க்கு 1 மணி 24 நநிமிடங்கள் தேவைப்பட்டது. மற்றொரு போட்டியில், ரஷ்யாவின் Elena Dementieva 6-1, 4-6, 7-6 என்ற செட்களில் சக நாட்டு வீராங்கனையான Anna Chakvetadze-வை போராடி வென்றார்.

நன்றி வணக்கம்மலேசியா.காம்

மனோ.ஜி