PDA

View Full Version : ஆற்றங்கரைமன்மதன்
03-09-2005, 02:50 PM
எனக்காக ஒரு கவிதை..

நான் கோபப்படாத
கணங்களில்
மௌனமே என் கோபமாய்..

நான் காதல் வயப்படாத
நாட்களில்
என் தனிமையே
என் காதலாய்..

நான் மௌனம்
காத்த பல தருணங்களில்
என் குணமே எனக்கு பலமாய்..

நான் போகக்கூடாத
இடங்களில் சென்ற
பொழுதெல்லாம்
என் தயக்கமே என் குருவாய்..

நான் கவிதை
எழுதும் பொழுதுகளில்
என் மனமே விரல்களாய்..

நான் நானாக
மாற நான்
யாராக மாற ??


http://img.photobucket.com/albums/v372/manmathan/Thanimai.jpg


நான் வீசி எறிந்த கல்
ஆற்று தண்ணீரை கிழித்து
சென்றதை கண்டு மகிழ்ந்த
என் மனது

சுவாசிக்க வெளியே
எட்டிய
ஒரு மீனை பதம் பார்த்ததை
கவனிக்க தவறிவிட்டது...

என்னை தொடர்ந்தோ
அல்லது முந்தியோ
என் நண்பர் கூட்டமும்
அந்த மீனை
காயப்படுத்தியிருக்க வேண்டும்..

அந்த மீன் நீந்தி
வந்து என்னிடம்
சொன்னது..

கல்லெறி..
எறிவதற்கு முன்
நீரின் வெளித்தோற்றத்தை
பார்த்த மாதிரி
குனிந்து உள்ளேயும் ஒருமுறை பார்த்துவிடு.

மீனிடம் மன்னிப்பு கேட்க
மீன் மொழி தேவையில்லைதான்..
மானசீக மன்னிப்பு
கேட்டும், என் கரைப்பக்கத்தில்
ஒதுங்க அந்த மீன் வரவேயில்லை..

-
மன்மதன்

Nanban
03-09-2005, 06:41 PM
ஆஹா......

kalvettu
05-09-2005, 05:22 AM
கல்லெறி..
எறிவதற்கு முன்
நீரின் வெளித்தோற்றத்தை
பார்த்த மாதிரி
குனிந்து உள்ளேயும் ஒருமுறை பார்த்துவிடு

அருமையான வரிகள் நண்பரே

வார்த்தை கற்களில்
காயப்பட்டது மீன் தானா
இல்லை மீன்விழியாள் தானோ?

gragavan
05-09-2005, 06:32 AM
மன்மதன், உன்னுடைய இரண்டாவது கவிதை எனக்கு ஒரு திருக்குறள் வரியை நினைவூட்டுகிறது. "நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில் நலம்". அதாவது அறிவில்லாதவனுடைய எழில் நலம் என்று வருகிறது.

மேலாக பார்த்து எதையும் எடை போடக் கூடாது. உள்ளேயும் பார்க்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மலையாள கிருத்துவ நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் நெற்றியில் மதச்சின்னங்களை அணிந்திருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதை மதச்சின்னம் என்பதை விட ஒரு அலங்காரமாகத்தான் அணிகிறேன்.

நான் மதச்சின்னங்களை அணிவதைத் தவிர்க்க வேண்டுமென்றார். அதற்குக் காரணம் என்னைப் பார்க்கின்றவர்கள் நான் அவர்களோடு சேர்ந்தவன் என்று கருதி எனக்கு உதவி செய்வார்கள். அது தவறு என்றார். நான் இரண்டு கேள்விகள் கேட்டேன்.

1. இது எனக்கு மட்டுந்தானா? எல்லாருக்குமா? கிருத்துவ பாதிரியார் வருகையிலும் கிருத்துவர்கள் அவர்களுக்குச் சகாயமாக நடந்து கொள்ளாமல் இருக்கப் போகிறார்களா?

2. ஒரு வேளை என்னுடைய மதத்தைப் பிடிக்காதவன் எனக்கு எதிராக எதுவும் செய்தால்?

நான் சொல்ல வந்தது என்ன வென்றால், நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். வெளித்தோற்றத்தைக் கண்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்பதற்காகவும் தான்.

சுவேதா
05-09-2005, 11:43 AM
மிகவும் அருமையான கவிதை வரிகளோ பிரமாதம் வாழ்த்துக்கள் மன்மதன்!

pradeepkt
06-09-2005, 04:25 AM
நான் நானாக
மாற நான்
யாராக மாற ??
---
அருமையான வரிகள்.
கொஞ்ச நாளைக்கு முன் நான் எனக்கு என்ன வேண்டும் என்றெனக்குத் தெரிய எனக்கு என்ன வேண்டும் என்று குழம்பி இருந்தேன்.
அதே நிலை பலர்க்கும் உண்டு போலும்.

பிரசன்னா
09-09-2005, 05:24 PM
அருமையான வரிகள்

பென்ஸ்
18-02-2006, 01:38 PM
மன்மதா....

என்னபா இது... கலக்கி இருக்க ஆனா இதை கணுகாம இருந்து
இருக்கிறேனா....

ஆற்றங்கரையிம் முதல் கரை... நான் யார் என்னும் கேள்வியுடன்...
ஒருவன் சிறந்தவனாக அவன் கொள்ள வேண்டிய பண்புகளில் ஒன்று,
சுயம் அறிதல் (self-awareness)... அறிந்திருக்கிறொமோ இல்லையோ,
அறிய முற்படும் முதல் சிரமம்... அருமையாக வந்திருக்குபா....

இரண்டாம் கரை....
சேரனின் படத்தின் வெற்றிக்கு காரணம் அவர் நம்
அனேகரது வாழ்க்கையில் நடக்கும் , நடந்திருக்கும் சம்பவங்களை
படம்பிடித்து ஒரு "இது என் கதை அல்லவா??" என்ற ஒரு உணர்வை
ஏற்படுத்துதல்....

இந்த கவிதையை வாசித்தபோது அந்த உணர்வு... கல்லூரியின்
நாட்களில் மீன்விழியாட்கள் எங்கள் முன் நீந்துகையில் நண்பர்களோடு
சேர்ந்து கேலி கற்க்களை தண்ணீரை கிழிப்பதாய் மகிழ்ந்து ஏறிந்து
காயபடுத்தி, மீனிடம் மன்னிப்பு கேட்டு காயப்பட்டு.... மீண்டும் நன்
கரை வராத மீன்விழிகள்......

ஆனாலும் ஒரு சுய பச்சாதாபம்... ஒரு இன்பகீறல்...

மீண்டும் சுயம் அறியும் நிலை....

வாழ்த்துகள் மன்மதா....

விரைவில் மீண்டும் மன்றம் வர என் பிராத்தனைகள்....

sarcharan
20-02-2006, 03:25 AM
நல்ல கவிதை. அழகான வரிகள்....

தாமரை
20-02-2006, 04:56 AM
!!!!!

பென்ஸ்
13-02-2007, 01:21 PM
இன்றோருமுறை ரசித்து படித்தேன் மன்மதா....
சில படைப்புகள் எத்தனை முறை படித்தாலும் புதியதாய்...

அறிஞர்
13-02-2007, 01:54 PM
மன்மதனின் படைப்பை நீண்ட நாளுக்கு பின் படித்தேன்..

அருமை....

புதிய கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

ஷீ-நிசி
13-02-2007, 02:22 PM
அருமையான கவிதை இது.. மிக அருமை... மன்மதன் அவர்களே மிக நன்றாக உள்ளது....

ஓவியா
28-04-2007, 09:58 PM
நான் வீசி எறிந்த கல்
ஆற்று தண்ணீரை கிழித்து
சென்றதை கண்டு மகிழ்ந்த
என் மனது

சுவாசிக்க வெளியே
எட்டிய
ஒரு மீனை பதம் பார்த்ததை
கவனிக்க தவறிவிட்டது...

இந்த வரிகளில் பல அர்த்தம் உள்ளது.
கவிதையின் அத்தனை வரிகளும் முத்துபோல் இருந்தது.


ஒரு பெண்ணுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கவிதையின் கரு மிகவும் நெருக்கமாக பொருந்தியது.

அழ சிந்தித்தால் அருமையான கவிதை.

பாராட்டுகிறேன் மன்மதன்.

அமரன்
05-10-2007, 05:48 PM
அருமை..அருமை.
அக்கரை இக்கரை என ஆற்றுக்கு இரு கரைகள். அதற்கேற்ப கவிதைக்குள் இரு கருக்கள்..தலைப்பே பொருத்தமாக. கவிதை அற்புதமாக..
பென்ஸண்ணாவின் விமர்சனம் கவிதையை சிறப்பான கோணத்திலிருந்து பார்த்து வெளிப்பட்டு இருக்கு...இரண்டையும் இரசித்து பல கற்றுக்கொள்ள முடிகிறது...
நன்றி.

ஆதவா
06-10-2007, 06:02 AM
மன்மதன்,

ஒவ்வொரு குணத்திலும் ஒரு உயர்குணம்.. உண்மையில் கவிஞர் இப்படித்தான் இருப்பாரோ என்கிற எண்ணம்.இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக்கொண்டு தன்னை திருப்தி படுத்திக் கொள்வது... இங்கே கவனிக்கிறேன்.

நாம் நாமாகவே மாறவேண்டும்.. யாரின் சாயலாகவும் இல்லாமல்..

வாழ்த்துக்கள் நிரம்ப
---------------------

மீனை ஒரு பெண்ணாகவே பார்க்க முடிகிறது எனக்கு... ஆனாலும் நேரிடையாக சொன்னால் மீனைப் பதம் பார்க்கும் நம் மனதைப் பற்றியும் கவிதை சொல்வதாக தோன்றுகிறது. இருவிதவடிவில் கவிதை...

மீனிடம் மன்னிப்பு கேட்க
மீன் மொழி தேவையில்லைதான்..
மானசீக மன்னிப்பு
கேட்டும், என் கரைப்பக்கத்தில்
ஒதுங்க அந்த மீன் வரவேயில்லை..

உண்மைதான் மன்மதன் அவர்களே! கவிதை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது.. வாழ்த்துக்கள்.