PDA

View Full Version : நடந்தேன்..

மன்மதன்
03-09-2005, 01:27 PM
தண்டவாளத்தில்
நடந்து
சென்றுக்கொண்டிருந்தேன்.

அசரீரி கேட்டது.
திரும்பி பார்த்தேன்..
ரயில் ஒன்று வேகமாக
வந்து கொண்டிருந்தது..

அதன் தடதட சத்தம்
எப்படி என் காதில்
விழவில்லை.

உன் நினைவுகளை
அசை போட்ட படி
அசரீரிக்கு நன்றி
சொல்லி விட்டபின்..

தண்டவாளத்தை
ஒட்டி நகர்ந்து
நடந்தேன்...

http://img.photobucket.com/albums/v372/manmathan/Track.jpg

மன்மதன்

சுவேதா
03-09-2005, 01:51 PM
சூப்பர் கவிதையும் படமும் கலக்கல் வாழ்த்துக்கள் மன்மதன்!

பிரசன்னா
09-09-2005, 05:28 PM
வாழ்த்துக்கள்

pradeepkt
12-09-2005, 05:28 AM
அசரீரிக்கும் நன்றி.
உனக்கும் பாராட்டுகள் மன்மதன்.
நிறைய சிந்திக்கிறாய் இக்காலத்தே.

gragavan
12-09-2005, 05:48 AM
இப்படி மெய் மறந்து நடந்தா
மெய் மறஞ்சு போகுமப்பா....பாத்து.....

நல்ல கவிதை. பாராட்டுகள் மன்மதன்.

Nanban
12-09-2005, 07:31 PM
பாராட்டுகள் மன்மதன்

வெறும் காதல் கவிதைகளாகக் கிறுக்கிக் கொண்டிருந்த பொழுது நன்றாக எழுதினாக ஞாபகம்.

அசரீரி கேட்டது.

உன் நினைவுகளை
அசை போட்ட படி
அசரீரிக்கு நன்றி
சொல்லி விட்டபின்

ஆபத்திற்குள் நடத்திச் சென்றது எது?

அவளின் நினைவுகளா?

அப்படியாயின் அசரீரியாய் வந்த குரல் யாருடையது.?

நீ சொல்ல வந்தது என்ன? உன் நினைவுகளில் மதி மயங்கி நான் நடந்து கொண்டேன். நல்லவேளையாக ஏதோ ஒரு அசரீரி வந்து சொன்னது - பின்னால் புகைவண்டி வருகிறது என்று. அதனால் பிழைத்துக் கொண்டேன். அந்த அசரீரிக்கு நான் நன்றி சொன்னேன் என்று தானே வரும்.

அதாவது உன்னால் அல்ல - நான் காக்கப்பட்டது அசரீரியில் தான் என்று தானே சொல்ல வருகிறாய்?

காதலியின் நினைவு - போற்றப்பட வேண்டியதல்ல. புகழப் பட வேண்டியதல்ல. அது அசட்டுத்தனம்.

ஆனால் அசரீரி அப்படியல்ல. அது ஆளைக் காக்கும். அதற்கு நன்றி சொல்லி பாராட்ட வேண்டும் என்று தான் பொருள் வருகிறது.

அப்படியானால் கவிதையின் கரு எதைப் போற்றுகிறது. காதலை என்றால் - காதலியினால் தான் காக்கப் பட்டதாக சொல்ல வரலாம். அசரீரியை என்றால் - அந்த அசரீரி எது? புகைவண்டி? புகைவண்டி எதனின் குறியீடு என்று தெரியுமா?

புகைவண்டி - காலத்தின் - மாறிக்கொண்டேயிருக்கும் காலத்தின் அளவு. நிறைய படங்களில் பலகாலங்கள் கடந்து போயிற்று என்பதைக் காட்ட புகைவண்டிகள் அங்குமிங்கும் போய்வருவதாக காட்டிக் கொண்டிருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று முறை என்று. அதாவது காலம் நிற்காமல் கடந்து போய்க் கொண்டிருக்கிறது என்று அர்த்தமாகும். (பயணம் செல்வதன் பொருளே - காலம் போய்க் கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.)

அதாவது காதலியின் நினைவில் காலம் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அந்த நீண்ட தண்டவாளத்தில் போய்க் கொண்டிருக்கும் பொழுது உணர்ந்ததாக எழுதியிருக்கிறாய். மேலும் தண்டவாளம் என்பது என்றுமே இணையாத கோடுகள். தண்டவாளத்தை நட்பிற்காக குறியீடாய் பயன்படுத்துவார்கள். காதலிற்காக அல்ல.

எல்லோருக்கும் ஒரு காதல் கவிதையாக தோன்றும் பொழுது நீ மட்டும் இந்தக் காதல் கடைசியில் நட்பாய் முடியப் போகிறது என்பதை உணர்ந்து காலத்திற்கு நன்றி சொல்லி விட்டு, தண்டவாளத்தை விட்டு விலகி நடக்கிறாய். அதாவது, காதல் என்றால் மட்டுமே அவள் வேண்டும் - நட்பாகப் போகுமென்றால் விலகி நடந்து விடலாம் என்று முடிவெடுத்து.....

(இப்படியெல்லாம் சிந்தித்து எழுதவில்லை என்று தெரியும். ஆனால் காதல் கவிதை எழுதுகிறேன் என்று சிரமப்பட்டு வார்த்தைகளைத் தொகுத்து எழுதி வருந்த வேண்டாம். இயல்பாக வரும் வரை காத்திருக்கலாம். மீண்டும் மீண்டும் வாசித்துப் பார் எழுதிய கவிதை - பொருள் நேராக இருக்கிறதா அல்லது சொல்ல வந்ததற்கு முற்றிலும் மாறாக போய் விட்டதா? என்று,)

சரி, சரி,

இந்த அளவிற்கு தோண்டித் துருவி எல்லாம் சொல்ல வேண்டாம் தான். ஆனால் தண்டவாளம், ரயில், அசரீரி என்று கனத்த குறியீட்டு சொற்களை உபயோகிக்கும் பொழுது கவனம் தேவை...

பாராட்டுகிறேன்.

நீ எழுதிய கோணத்திலிருந்து பொருள் பிழை படுகிறது என்று தான் எழுதினேன். ஆனால் - காதல் இல்லையென்றால் விலகிப் போகவே விரும்பும் பல ஆண்கள் / பெண்கள் உண்டு தான். அவர்களைச் சாடாமல் புகழ முயற்சித்தது போலிருந்தது அதனால் தான் பொருள் பிழையாக இருக்கிறது என்று சொல்ல வந்தேன்.

அறிஞர்
12-09-2005, 11:35 PM
அருமை மன்மதா.....

நண்பனின் எழுத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன.... மன்மதா பதில் கொடுங்களேன்

மன்மதன்
13-09-2005, 01:46 PM
உங்கள் கருத்தை முழுதும் படித்து பார்த்தேன். கண்டிப்பாக நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நான் முழுநேர கவிஞன் அல்ல.. இருந்தாலும் அவ்வப்போது இது மாதிரி எழுதிப்பார்ப்பது உண்டு. உங்களின் இந்த விமர்சனம் என்னை கொஞ்சமாவது நல்ல படியாக எழுத வைக்க கண்டிப்பாக உதவும்.

தண்டவாளம், அசரீரி என்பது கவிதை உலகில் மிகப்பெரிய அர்த்தம் பொதிந்த சொல் என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும்.. நான் எதேச்சையாக எழுத இப்படி அமைந்துவிட்டது. மன்னித்து விடுங்கள்.

இப்படியெல்லாம் சிந்தித்து எழுதவில்லை என்று தெரியும்.

எப்படி சிந்தித்திருந்தாலும் அடிக்கும் கூத்துக்களுக்கிடையில் கவிதையும் எழுதுகிறோம் என்ற திருப்தி இருக்கிறது. இப்பத்தான் தத்தி தத்தி நான் எழுதுகிறேன்..

வெறும் காதல் கவிதைகளாகக் கிறுக்கிக் கொண்டிருந்த பொழுது நன்றாக எழுதினாக ஞாபகம்.

இப்பொழுதும் நன்றாக எழுத முயற்சி பண்ணுகிறேன். உங்கள் விமர்சனத்திற்கு நன்றி..

Nanban
13-09-2005, 06:30 PM
உங்கள் கருத்தை முழுதும் படித்து பார்த்தேன். கண்டிப்பாக நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நான் முழுநேர கவிஞன் அல்ல.. இருந்தாலும் அவ்வப்போது இது மாதிரி எழுதிப்பார்ப்பது உண்டு. உங்களின் இந்த விமர்சனம் என்னை கொஞ்சமாவது நல்ல படியாக எழுத வைக்க கண்டிப்பாக உதவும்.
-----
-----

இப்பொழுதும் நன்றாக எழுத முயற்சி பண்ணுகிறேன். உங்கள் விமர்சனத்திற்கு நன்றி..

முழுநேர கவிஞன் அல்ல என்றெல்லாம் சொல்ல வேண்டாம். மன்றத்தின் நண்பர்களுக்குள் பாராட்டு பெற்றால் மட்டும் போதாது. மற்ற இடங்களிலும் பாராட்டப் பட வேண்டுமென்றால் கொஞ்சம் அக்கறை எடுத்து தான் செய்ய வேண்டும். அப்பொழுது இன்னும் கவிதை பற்றிய தெளிவுகள் இருக்க வேண்டும் என்றே சொன்னேன்.

மற்றபடிக்கு. மன்றத்தின் சிறப்பான - எளிமையான கவிதைகளை இப்பொழுது நீ எழுதிக் கொண்டிருக்கிறாய் என்பதில் எந்தளவும் சந்தேகமில்லை.

மன்மதன்
14-09-2005, 04:15 AM

கண்டிப்பாக நண்பன்.. மிக்க நன்றி... கவனம் எடுத்து எழுதுகிறேன்.. :)

kavitha
15-09-2005, 11:11 AM
காதலியை நினைத்து தண்டவாளத்தில் நடக்கையில் ரயில் வருவது அறியாமல் நினைவுகளில் பிண்ணி, அசரீரி (ஹார்ன் ஒலி?) யில் தப்பித்ததாகச் சொல்லியிருப்பது ஏதோ அவளே விபத்திலிருந்து காப்பாற்றியதாக என் பார்வைக்குத் தெரிகிறது. எப்படியோ 'தப்பித்த' கவிதை அருமை மன்மதன்.

Nanban
15-09-2005, 02:07 PM
காதலியை நினைத்து தண்டவாளத்தில் நடக்கையில் ரயில் வருவது அறியாமல் நினைவுகளில் பிண்ணி, அசரீரி (ஹார்ன் ஒலி?) யில் தப்பித்ததாகச் சொல்லியிருப்பது ஏதோ அவளே விபத்திலிருந்து காப்பாற்றியதாக என் பார்வைக்குத் தெரிகிறது. எப்படியோ 'தப்பித்த' கவிதை அருமை மன்மதன்.

அவளின் நினைவுக்குள் மூழ்கி நடக்கும் பொழுது, அவளின் நினைவுகள் அவனை விழிப்படைய வைக்க முடியாது. விழிப்படைய வைத்த ஒலி அவள் நினைவுகள் எழுப்பியதல்ல என்பது தான். நீரினுள்ளே மூழ்கிவிட்டு யாராவது காப்பாற்றி கரையில் போட்டால் நன்றியை மூழ்க வைத்த நீருக்குச் சொல்வோமா அல்லது காப்பாற்றியவருக்கு சொல்வோமா?

ஒரு சிந்தனையிலிருந்து விடுபட முற்றிலும் வேறுபட்ட பொருள் தரும் இடையூறாக இருந்தால் தான் முடியுமே தவிர அந்த சிந்தனையே சுய உணர்வையும் தரும் என்பது சாத்தியமற்றது.

நிர்வாகப் பயிற்சி தருபவர்கள் Lateral thinking என்ற விஷயத்தைத் தொடாமல் பயிற்சியை முடிப்பதில்லை. அதாவது எந்த ஒரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் ஒரே தளத்தில் சிந்தித்து முரண்டு பிடிக்காதீர்கள் - விடை கிடைப்பதில்லை. அந்த சிந்தனையை விட்டு விட்டு முற்றிலும் வேறான வேறு ஒரு தளத்திலிருந்து சிந்தியுங்கள் என்று தான். ஒரு சிந்தனையிலிருந்து விடுபட - விடை கிடைக்க வேறொரு தளத்திலிருந்து செய்யப்படும் சிந்தனை அல்லது செயல்.

காதலியின் நினைவில் - எத்தனை மூழ்கி விட்டேன் - என்று சொல்வதற்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால் மன்மதன் அவரையும் அறியாமல் உபயோகித்த குறியீடுகள் கவிதையை எந்த விதத்தில் பொருள் கொள்ள வைக்கின்றன என்று தான் விளக்கம் சொன்னேன். குறியீடுகளை மறந்து விட்டாலும் இறுதி வரிகளில் வரும் - விட்டு விலகி நடந்தேன் - என்பது ஒரு எதிர்மறையான கருத்து தானே? விலகி நடந்தேன் என்கும் பொழுது காதலை துறந்து தான் நடப்பதாக பொருள் தருமே தவிர இணைவதாக அல்ல.

மன்மதன்
17-09-2005, 04:13 AM
நிர்வாகப் பயிற்சி தருபவர்கள் Lateral thinking என்ற விஷயத்தைத் தொடாமல் பயிற்சியை முடிப்பதில்லை. அதாவது எந்த ஒரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் ஒரே தளத்தில் சிந்தித்து முரண்டு பிடிக்காதீர்கள் - விடை கிடைப்பதில்லை. அந்த சிந்தனையை விட்டு விட்டு முற்றிலும் வேறான வேறு ஒரு தளத்திலிருந்து சிந்தியுங்கள் என்று தான். ஒரு சிந்தனையிலிருந்து விடுபட - விடை கிடைக்க வேறொரு தளத்திலிருந்து செய்யப்படும் சிந்தனை அல்லது செயல்.

Think Outside Box என்று சொல்வார்களே.. இதை பற்றி எதிலேயோ படித்திருக்கிறேன்.. கருத்துகளுக்கு நன்றி நண்பன், கவிதா..