PDA

View Full Version : காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு



kalvettu
02-09-2005, 10:33 AM
http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=1966

யாராவது பார்த்தீர்களா?
இரண்டு நாட்களாக காணவில்லை
அவனை
அடையாளம் தானே கேட்கிறீர்கள்!!??

தனக்கான அடையாளத்தை
தேடித் தேடித்தானே
தொலைந்து போனான்
அவன்...!

வாழ்க்கையை
அவன் வாழவில்லை
அவன் வாழ்க்கையை
அவன்
வாழ்ந்ததில்லை!!!

ஒவ்வொரு முறையும்
உயிர்த்தெழுந்ததும்
எதிர்பார்ப்புகளின் சிலுவையில்
அறையப்படுகின்றன
இவன் ஆசைகள்...!

வாழலாம் என நினைத்தபோது
எதிர்பார்ப்புகள் வாழ்ந்திருந்தது
அவன்
நிகழ்காலத்தை!!??

சாவிற்கு பயப்படாத அவன்
வாழ்க்கை..
சாவதற்கு பயந்து
செத்து செத்து வாழ்ந்தது...!!

அவ்வப்போது
நிராகரிப்பும்
அலட்சியங்களும்
கருகலைப்பு செய்கின்றன
இவன் அடையாளங்களை...!!

கருகலைப்பு செய்யப்பட்டதில்
வழிந்த இரத்தத்தை
தானே துடைத்துக் கொண்டிருப்பான்
மெளனம் கொண்டு!!!
யாராவது பார்த்தால் சொல்லுங்களேன்.

- பிரேம்

kavitha
02-09-2005, 11:07 AM
எதிர்பார்ப்புகள் வாழ்ந்திருந்தது
அவன்
நிகழ்காலத்தை!!??

.....

மெளனம் கொண்டு!!!
யாராவது பார்த்தால் சொல்லுங்களேன்.

- பிரேம்
கவிதை நன்றாக உள்ளது பிரேம். சுட்டியும் வேறு தந்திருக்கிறீர்கள். இதன் அர்த்தம் உங்கள் முகவரியை அங்கே பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதா?

எதிர்பார்ப்பை யாரிடம் எதிர்ப்பார்க்கிறீர்களோ அவர்களிடமாவது நாசூக்காக சொல்லிவிடுங்கள்.

சுவேதா
02-09-2005, 12:06 PM
மிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள்!

anithanhitler
02-09-2005, 03:36 PM
http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=1966

யாராவது பார்த்தீர்களா?
இரண்டு நாட்களாக காணவில்லை
அவனை
அடையாளம் தானே கேட்கிறீர்கள்!!??

தனக்கான அடையாளத்தை
கருகலைப்பு செய்யப்பட்டதில்
வழிந்த இரத்தத்தை
தானே துடைத்துக் கொண்டிருப்பான்
மெளனம் கொண்டு!!!
யாராவது பார்த்தால் சொல்லுங்களேன்.

- பிரேம்

அருமை நண்பரே...
கவிதை புணைபவர்கள் இரண்டு வகை. சொந்த அனுபவத்தால் புணைவது ஒன்று. பிறர் அனுபவத்தை எழுதுவது மற்றொன்று...


இந்த கவிதை சொந்த அனுபவத்தால் எழுதப்பட்டது எனில் வடித்த கவிஞனுக்கு வாழ்த்துக்கள்.
பிறர் அனுபவத்தால் விளைந்தது என்றால்,
கவிஞனுக்கு உள்ளே வாழும் மனிதனுக்கு வாழ்த்துக்கள்.....