PDA

View Full Version : நீயூ ஓர்லேன்ஸ்பிரியன்
02-09-2005, 09:38 AM
வீதிகளெங்கும் ஓலம்
விண்ணதிரும் பசியின் குரல்கள்
ஊரெங்கும் வெள்ளம்
தாகம் தீர்க்க மட்டும்
ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை

கிடக்கும் பிணங்களைப் போலவே
அகதிகளாய் அனாதைகளாய்
சாலைகளிலே கழியும் இரவுகள்.

மாடுகளோடும் குதிரைகளோடும்
மகிழப் போய்விட்ட
அதிபருக்கு மட்டும் ஏனோ
கேட்கமலே போய்விட்டது...

kalvettu
02-09-2005, 10:16 AM
கிடக்கும் பிணங்களைப் போலவே
அகதிகளாய் அனாதைகளாய்
சாலைகளிலே கழியும் இரவுகள்

அருமையான வரிகள்.....நண்பரே

Nanban
02-09-2005, 04:07 PM
கூரையேறி
கோழிபிடிக்க முடியாதவன்
வானமேறி
வைகுண்டம் போன கதை இது.

தன்னைத் தானே
ஒழுங்குபடுத்திக் கொள்ள
இயலாதவன்
மற்றவர்க்கெல்லாம்
சட்டம் பேசுகிறான்.

பாக்தாதில்
சத்தாம் வீழ்ந்ததும்
சத்தமாக அனைத்தும்
கொள்ளை போன
அன்று
நீ அரற்றினாய் -
பக்குவப்படாத மக்கள்
இவர்களென்று.

இன்று கற்றுக் கொள் -
உன் மக்களிடம்.

பசி வந்தால்
பத்தும் பறந்து போமென்று.

நாகரீகங்கள்
உனக்கு மட்டுமே
சொந்தமில்லை என்று.

kavitha
03-09-2005, 04:28 AM
மாடுகளோடும் குதிரைகளோடும்
மகிழப் போய்விட்ட

தனியார் நிறுவனங்களிடம் இர(ற) ங்கி வந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள்தான் பாவம்!
கொள்ளையர்கள் ஒருபுறம்....இயற்கை மற்றொரு புறம் என்று திண்டாடுகிறார்கள்.

கவிதையில் வடித்தாலும் மக்களின் துயர் வடியுமா?

பரஞ்சோதி
03-09-2005, 04:48 AM
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என் மன வருத்தங்கள்.

அமெரிக்கா தன்னைத் தானே அறிந்துக் கொள்ள இறைவன் கொடுத்த வாய்ப்பு.

நண்பன் சொன்னது போல் அன்றைய தினத்தை அடிக்கடி படம் பிடித்து காட்டிய தொலைக்காட்டி சேவைகளே! இன்று மட்டும் அமெரிக்காவில் மக்களின் நிலையை படம் பிடித்து காட்டாதது ஏனோ.

பாக்தாத்தின் மக்கள் அனைவரையும் திருடர்களாக காட்டியதை பார்த்து என் மனம் கொதித்தது, மீடியாக்கள் கையில் இருப்பதால் இப்படி எல்லாம் காட்டி உலகை ஏமாற்ற முடிகிறதே, இவர்களின் வண்டவாளம் என்றைக்கு வெளியே வருமோ என்று நினைத்திருக்கிறேன்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும், அதில் அமெரிக்காவின் மானமும் போய்விட்டது.

பிரியன்
03-09-2005, 08:00 AM
கவிதையில் வடித்தாலும் மக்களின் துயர் வடியுமா?

சத்தியமாக வடியாது. கவிஞன் தனது உணர்வுகளை, விமர்சனங்களை கவிதையாக்குகிறான். உலகத்தில் சட்டாம்பிள்ளைதனம் செய்வதை விட்டு விட்டு உள் நாட்டை கவனித்தாலே போதும் என்பதை அமெரிக்காவிற்கு உணர்த்தி விட்டது இயற்கை. மீட்புபணிகள் படு மந்தமாக உள்ளதாகவும் சாவு எண்ணிக்கை 10000 ஆயிரத்தை தொடும் என்றூ வரும் செய்திகள் கவலையைத் தருகிறது....


புவியின் சொர்க்கம் அமெரிக்கா என்ற முகமுடியை நார் நாராய் கிழித்துவிட்டது இந்த சுறாவளி..

மன்மதன்
03-09-2005, 09:11 AM
புவியின் சொர்க்கம் அமெரிக்கா என்ற முகமுடியை நார் நாராய் கிழித்துவிட்டது இந்த சுறாவளி..

இயற்கைக்கு எல்லாம் ஒண்ணுதான்.. கவிதையின் சாராம்சம் அருமை..