PDA

View Full Version : நல்லதோர் வீணையே!kavitha
02-09-2005, 04:06 AM
எந்தன் வீணையே!
வீணாய்ப் போனதேனோ?

நகரும் போதை மாயைக்குள்
உன் தந்திகள்
புதைந்துப் போயினவோ?

நீ
சுரத்தையின்றி சுருண்டால்
நற்சுரங்கள் அழாதோ?

காய்ச்சலுக்காக மருந்துண்ணலாம்.
மருந்தே உணவானால்...?
அது உன்னை உண்டுவிடாதா?

வாழ்க்கையில்
களிப்புகள் இருக்கலாம்.
களிப்பே வாழ்க்கையானால்
எதிர்காலம் என்னாவது?

நீ
மிச்சமின்றி துய்த்த
எச்சத்தில்
மிஞ்சிக்குப் பூசைகளா?

நாளைய அரை நாள்
இன்றைய ஒரு நாளுக்குச் சமமாம்.
களித்தது போதும்.
இன்றே எழுந்திரு!

உன்னிடமுள்ள சுரமே
சுரத்தை ஓட்டும் மருந்து.

நீ
மீட்ட மீட்ட
தூசுகள் தானே ஓடிவிடும்.

உன் சுரம் நான் கேட்கிறேன்.
நல்லதோர் வீணையே!
புழுதியில் கிடக்காதே!

Nanban
02-09-2005, 07:20 AM
நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ என்று பாரதியார் பாடியபொழுது, அது வீணையை எறிந்த்வர்களைச் சாடியது. வீணையை அல்ல.
ஆனால் இப்பொழுது கவிதாவின் கவிதை ஒரு படி மேலே போய், புழுதியில் கிடக்கும் வீணையையே அழைக்கிறது - தூசு தட்டி எழச் சொல்கிறது.
காலம் தான் எத்தனை மாறிவிட்டது,
வீணைகளே தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் காலம் வந்து விட்டது.
பெண்கள் எச்சரிக்கையாக இல்லையென்றால் பெண்மையைப் பறி கொடுக்க வேண்டி வந்து விடும். மாணவர்கள் விழிப்புடன் இல்லையென்றால் கல்விக் கூடத்திற்குள் நுழையவே முடியாது என்றாகி விடும் போலிருக்கிறது. இளைஞர்கள் கவனத்துடன் இல்லையென்றால் நாளை தீவிரவாதிகளாகவும௠ ?, குற்றவாளிகளாகவும௠ ? திரிக்கப்பட்டு கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டுவிடலா஠ ?்.
ஆனால், இந்த வீணைகளின் நிலைக்குக் காரணம் - வீணையை வீதியில் எறிந்தவர்கள் தான் காரணம். ஆம். பாரதம் என்ற அழகிய வீணையை அன்று விடுதலை கிடைத்ததும் புழுதியில் வீசி விட்டுப் போனார்கள் அரசியல்வாதிகள். அவர்களின் வழித்தோன்றலான வாரிசு அரசியல்வாதிகள் அந்த வீணையை முற்றிலுமாக அழித்து விடுவதற்குத் துடிக்கிறார்கள். வடிவத்தை மட்டும் அழிப்பதல்ல அவர்களது நோக்கம். நல்லதோர் வீணை என்ற ஒன்று இருந்தது என்ற நினைவுத் தடங்களையே அழித்து விட வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் இயங்கி வருகின்றனர்.
__________________
-----------------------------------------------
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,

kavitha
02-09-2005, 09:27 AM
--------------------------------------------------------------------------------

இதுதான் சகோதரி கவிதா சொல்ல வந்தது. சகோதரரே... இப்போது நான் எழுதியுள்ளதாவது புரிகிறதா என்று சொல்லுங்கள் ... :(

திஸ்கியுடன் குஸ்தி போட்டு ஓய்ந்த- கவிதா

kavitha
02-09-2005, 09:28 AM
.
காலம் தான் எத்தனை மாறிவிட்டது,
வீணைகளே தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் காலம் வந்து விட்டது.
பெண்கள் எச்சரிக்கையாக இல்லையென்றால் பெண்மையைப் பறி கொடுக்க வேண்டி வந்து விடும். மாணவர்கள் விழிப்புடன் இல்லையென்றால் கல்விக் கூடத்திற்குள் நுழையவே முடியாது என்றாகி விடும் போலிருக்கிறது. இளைஞர்கள் கவனத்துடன் இல்லையென்றால் நாளை தீவிரவாதிகளாகவும௠ ?, குற்றவாளிகளாகவும௠ ? திரிக்கப்பட்டு கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டுவிடலா஠ ?்.
ஆனால், இந்த வீணைகளின் நிலைக்குக் காரணம் - வீணையை வீதியில் எறிந்தவர்கள் தான் காரணம்.
நான் சொல்ல விழைந்ததும் இதைத்தான். நன்றி நண்பரே. :)

anithanhitler
02-09-2005, 03:11 PM
இதுதான் சகோதரி கவிதா சொல்ல வந்தது.

எந்தன் வீணையே!
வீணாய்ப் போனதேனோ?
......

உன் சுரம் நான் கேட்கிறேன்.
நல்லதோர் வீணையே!
புழுதியில் கிடக்காதே!

இதுல வீணை யாரு, வீசுனது யாருன்னு தெரியலயே ?
நான் என்ன பண்றது?

Nanban
02-09-2005, 03:58 PM
இப்பொழுது நன்றாக வாசிக்க முடிகிறது கவிதா...

kavitha
03-09-2005, 04:35 AM
இதுல வீணை யாரு, வீசுனது யாருன்னு தெரியலயே ?
நான் என்ன பண்றது?
வீணையும் அவர்களே.. வீணாய்ப்போனதும் அவர்களே..
கடமைகள் தவறி கேளிக்கையில் திளைப்பவர்களைப்பற்றியதே கவிதை.
மீட்டாத வீணை தூசு பட்டு பட்டு அதன் தந்திகள் துருப்பிடித்துவிடுவது போல்
சாதிக்கும் இளமை பருவத்தை நகரும் போதையில் புதைத்து விடுகிறார்களே என்கிற ஆதங்கமே இந்தக்கவிதை அனிதன்.

நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று நாங்கள் எப்படி சொல்வது?

கவிதை குறித்த உங்களது கருத்தை தெரிவியுங்களேன். :)

kavitha
03-09-2005, 04:36 AM
இப்பொழுது நன்றாக வாசிக்க முடிகிறது கவிதா...
__________________

அன்புடன்

நண்பன்

-----------------------------------------------

நன்றி நண்பரே :)

பரஞ்சோதி
03-09-2005, 04:40 AM
நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ என்று பாரதியார் பாடியபொழுது, அது வீணையை எறிந்த்வர்களைச் சாடியது. வீணையை அல்ல.
ஆனால் இப்பொழுது கவிதாவின் கவிதை ஒரு படி மேலே போய், புழுதியில் கிடக்கும் வீணையையே அழைக்கிறது - தூசு தட்டி எழச் சொல்கிறது.
காலம் தான் எத்தனை மாறிவிட்டது,
வீணைகளே தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் காலம் வந்து விட்டது.
பெண்கள் எச்சரிக்கையாக இல்லையென்றால் பெண்மையைப் பறி கொடுக்க வேண்டி வந்து விடும். மாணவர்கள் விழிப்புடன் இல்லையென்றால் கல்விக் கூடத்திற்குள் நுழையவே முடியாது என்றாகி விடும் போலிருக்கிறது. இளைஞர்கள் கவனத்துடன் இல்லையென்றால் நாளை தீவிரவாதிகளாகவும௠ ?, குற்றவாளிகளாகவும௠ ? திரிக்கப்பட்டு கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டுவிடலா஠ ?்.
ஆனால், இந்த வீணைகளின் நிலைக்குக் காரணம் - வீணையை வீதியில் எறிந்தவர்கள் தான் காரணம். ஆம். பாரதம் என்ற அழகிய வீணையை அன்று விடுதலை கிடைத்ததும் புழுதியில் வீசி விட்டுப் போனார்கள் அரசியல்வாதிகள். அவர்களின் வழித்தோன்றலான வாரிசு அரசியல்வாதிகள் அந்த வீணையை முற்றிலுமாக அழித்து விடுவதற்குத் துடிக்கிறார்கள். வடிவத்தை மட்டும் அழிப்பதல்ல அவர்களது நோக்கம். நல்லதோர் வீணை என்ற ஒன்று இருந்தது என்ற நினைவுத் தடங்களையே அழித்து விட வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் இயங்கி வருகின்றனர்.
__________________
-----------------------------------------------
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,

அருமையான கருத்துகள் நண்பன் அவர்களே!

பரஞ்சோதி
03-09-2005, 04:41 AM
சகோதரி, அருமையான கவிதை, ஆரம்பத்தில் புரியவில்லை, அனைவரின் கருத்துகள் படித்தப் பின்பு நன்றாக விளங்குகிறது.

anithanhitler
03-09-2005, 05:07 AM
வீணையும் அவர்களே.. வீணாய்ப்போனதும் அவர்களே..
கடமைகள் தவறி கேளிக்கையில் திளைப்பவர்களைப்பற்றியதே கவிதை.
மீட்டாத வீணை தூசு பட்டு பட்டு அதன் தந்திகள் துருப்பிடித்துவிடுவது போல்
சாதிக்கும் இளமை பருவத்தை நகரும் போதையில் புதைத்து விடுகிறார்களே என்கிற ஆதங்கமே இந்தக்கவிதை அனிதன்.

நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று நாங்கள் எப்படி சொல்வது?

கவிதை குறித்த உங்களது கருத்தை தெரிவியுங்களேன். :)

தோழி கவிதாவுக்கு காலை வணக்கம். ( இந்திய நேரப்படி இது காலை ).

உங்கள் கவியில் வார்த்தைகள் அழையா விருந்தாளியைப்போல் வருகின்றன.... வாழ்த்துக்கள்!!!

ஆனால் தனிப்பட்ட மனிதனின் செயல்களை , அவனுக்காகவே சாடுவது தவறு.
சமூகத்திற்காக சாடினால் அதை ஏற்றுக்கொள்ள்லாம்.( புரிகிறதா ). அதாவது ஒரு செயலை செய்வதால் இந்த சமூகம் பாதிக்கப்படுமானால் அதை நாம் சாடலாம். எ.கா. வாக ஊழல், லஞ்சம், சமூக நெறிகள், கற்பு நெறி, மதத்தன்மை.. (இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து)... தனிப்பட்ட மனிதனின் செயலை தவறு என சொல்ல நமக்கு அதிகாரம் இருக்கிறதா?.... உங்கள் கருத்து என்ன சொல்லுங்களேன் !!!!

kavitha
03-09-2005, 06:44 AM
சகோதரி, அருமையான கவிதை, ஆரம்பத்தில் புரியவில்லை, அனைவரின் கருத்துகள் படித்தப் பின்பு நன்றாக விளங்குகிறது.
நன்றி அண்ணா. புரியும்படி எழுத முயற்சிக்கிறேன்.

kavitha
03-09-2005, 06:48 AM
தோழி கவிதாவுக்கு காலை வணக்கம். ( இந்திய நேரப்படி இது காலை ).

உங்கள் கவியில் வார்த்தைகள் அழையா விருந்தாளியைப்போல் வருகின்றன.... வாழ்த்துக்கள்!!!

ஆனால் தனிப்பட்ட மனிதனின் செயல்களை , அவனுக்காகவே சாடுவது தவறு.
சமூகத்திற்காக சாடினால் அதை ஏற்றுக்கொள்ள்லாம்.( புரிகிறதா ). அதாவது ஒரு செயலை செய்வதால் இந்த சமூகம் பாதிக்கப்படுமானால் அதை நாம் சாடலாம். எ.கா. வாக ஊழல், லஞ்சம், சமூக நெறிகள், கற்பு நெறி, மதத்தன்மை.. (இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து)... தனிப்பட்ட மனிதனின் செயலை தவறு என சொல்ல நமக்கு அதிகாரம் இருக்கிறதா?.... உங்கள் கருத்து என்ன சொல்லுங்களேன் !!!!

உங்கள் கருத்திற்கு நன்றி அனிதன்.
சமுதாயம் என்பது தனிமனிதர்களின் கூட்டு தானே!
இங்கே நான் தனிமனிதனை சாடுவதாக எழுதவில்லை.
(அப்படியே சாடினாலும் தவறில்லை என்பதுதான் எனது கருத்து)
சுரமே வீணையைப்பார்த்து கேட்பதாகத்தான் அதுவும் ஆதங்கமாகத்தான் எழுதியிருக்கிறேன்.

அப்புறம் அழையாவிருந்தாளி என்று சொல்வது எனக்கு விளங்கவில்லை. கவிதையோடு வார்த்தைகள் சேரவில்லை என்கிறீர்களா? சரி. எப்படியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்?

pradeepkt
06-09-2005, 04:11 AM
அருமையான கவிதை.
வீணைகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாது சமுதாயம் செழிக்க இசையும் பரப்ப அழைக்கிறது கவிதை.
சுரங்கள் அழைப்பது புதுமை.

anithanhitler
06-09-2005, 12:10 PM
அப்புறம் அழையாவிருந்தாளி என்று சொல்வது எனக்கு விளங்கவில்லை. கவிதையோடு வார்த்தைகள் சேரவில்லை என்கிறீர்களா? சரி. எப்படியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்?

நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்...
அழையாத விருந்தாளி என்று நான் குறிப்பிட்டதூ உங்கள் கவியில் உள்ள சொல் வளமையைத்தான்...
விளக்கம்: கவிஞனுக்கு வார்த்தைகள் அழையா விருந்தாளி போல் வரவேண்டும்... அதாவது நம் வீட்டிற்கு வரும் எதிர்பாராத விருந்தாளி போல் நம் கவிப் பொருளைத் தேடி அழையாமல் வரவேண்டும்.மேலும் விருந்தாளியைப்போல் அந்த வார்த்தை இனிமையாக இருக்க வேண்டும்.... இப்படித்தான் உங்களை பாராட்டினேன்... புரிந்ததா....

(அப்படியே சாடினாலும் தவறில்லை என்பதுதான் எனது கருத்து)

ஓஷோ சொல்வார் " பெற்றோரே உங்கள் குழைந்தைகள் உங்களுடையவை அல்ல. அவர்கள் உங்கள் மூலமாக இந்த உலகிற்கு வந்தவர்கள் உங்கள் எண்ணங்களோடு அல்ல. அவர்கள் தம் சொந்த எண்ணங்களோடு இங்கே வாழ வந்திருக்கிறார்கள். அவர்கள் மேல் உங்கள் எண்ணங்களை திணிக்க வேன்டாம்."...
அதாவது பெற்றோருக்கே தம் பிள்ளைகளுடைய எண்ணத்தில் தலையிட உரிமை இல்லாத போது நமக்கு எப்படி வரும். ( தனிப்பட்ட எண்ணத்தில்... ஏனெனில் நீங்கள் உங்கள் கவிதையில் குறிப்பிடுவது ஒரு மனிதனின் தனிப்பட்ட செயலே).....

விவேகானந்தர் சொல்வார், " தனிப்பட்ட மனிதனின் சாதனைகளைவிட ஒரு சமூகத்திற்கு அவன் செய்த அவனுடைய பணி தான் மகத்தானது "... அப்படிப்பார்த்தால் நம்மைபோல் கவிதை எழுதிக்கொன்டும் , இயற்கையை ரசித்துக்கொண்டுமிருப்பவர்களும் கூட புழுதியில் விழுந்த வீணை தானோ என எனக்கு தோன்றுகிறது ????

kavitha
08-09-2005, 09:02 AM
அருமையான கவிதை.
வீணைகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாது சமுதாயம் செழிக்க இசையும் பரப்ப அழைக்கிறது கவிதை.
சுரங்கள் அழைப்பது புதுமை. நன்றி பிரதீப்நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்...
அழையாத விருந்தாளி என்று நான் குறிப்பிட்டதூ உங்கள் கவியில் உள்ள சொல் வளமையைத்தான்...
விளக்கம்: கவிஞனுக்கு வார்த்தைகள் அழையா விருந்தாளி போல் வரவேண்டும்... அதாவது நம் வீட்டிற்கு வரும் எதிர்பாராத விருந்தாளி போல் நம் கவிப் பொருளைத் தேடி அழையாமல் வரவேண்டும்.மேலும் விருந்தாளியைப்போல் அந்த வார்த்தை இனிமையாக இருக்க வேண்டும்.... இப்படித்தான் உங்களை பாராட்டினேன்... புரிந்ததா....ஓஷோ சொல்வார் " பெற்றோரே உங்கள் குழைந்தைகள் உங்களுடையவை அல்ல. அவர்கள் உங்கள் மூலமாக இந்த உலகிற்கு வந்தவர்கள் உங்கள் எண்ணங்களோடு அல்ல. அவர்கள் தம் சொந்த எண்ணங்களோடு இங்கே வாழ வந்திருக்கிறார்கள். அவர்கள் மேல் உங்கள் எண்ணங்களை திணிக்க வேன்டாம்."...
அதாவது பெற்றோருக்கே தம் பிள்ளைகளுடைய எண்ணத்தில் தலையிட உரிமை இல்லாத போது நமக்கு எப்படி வரும். ( தனிப்பட்ட எண்ணத்தில்... ஏனெனில் நீங்கள் உங்கள் கவிதையில் குறிப்பிடுவது ஒரு மனிதனின் தனிப்பட்ட செயலே).....

விவேகானந்தர் சொல்வார், " தனிப்பட்ட மனிதனின் சாதனைகளைவிட ஒரு சமூகத்திற்கு அவன் செய்த அவனுடைய பணி தான் மகத்தானது "... அப்படிப்பார்த்தால் நம்மைபோல் கவிதை எழுதிக்கொன்டும் , இயற்கையை ரசித்துக்கொண்டுமிருப்பவர்களும் கூட புழுதியில் விழுந்த வீணை தானோ என எனக்கு தோன்றுகிறது ????

விளக்கத்திற்கு நன்றி அனிதன். நீங்கள் சொன்ன- அழையா விருந்தாளி எனக்கு வீட்டிற்கு சென்ற பிறகே பொறி ( புழுதி? ) தட்டியது. எனினும் நீங்களே சொன்னபிறகே நிம்மதி பிறந்தது. :)

குழந்தைகள் குறித்த நீங்கள் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. அந்த வரிசையில் கலீல் அவர்களின் கவிதைகளும் எனக்கு மிகப்பிடித்தவை. நமது எண்ணங்களை திணிக்கக்கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சீர்க்கெட்ட பாதையில் சேர்வதோ அல்லது பயனின்றி தம்மை கெடுத்துக்கொள்வதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? எந்த பெற்றோராலும் சகித்துக்கொள்ள முடியாது. எந்த அளவிற்கு திணித்தல் என்பது தவறானதோ
அதைக்காட்டிலும் பன்மடங்கு வழிகாட்டாமல் இருப்பது தவறானது.

அப்புறம், கவிஞர்கள் குறித்த வாதத்திற்கு வருகிறேன்.
இயற்கை ரசிக்கும்போது நீங்கள் புத்துணர்வு அடைகிறீர்கள்.
காலைக்கதிரவனும், மாலைத்தென்றலும் மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தையே அளிக்கிறது.தேவையற்ற போதைதான் புழுதி. புழுதி எப்போது சேரும்? அதிலேயே கிடக்கும்போது.
நாம் கவிதையில் இருக்கும்போது நாம் பாடுபொருளாகவே மாறி விடுகிறோம். அங்கே 'நான்' என்பதே அழிந்துபோய் விடுகிறது. அதேபோல் அதிலேயும் இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. இயற்கையை ரசிப்பது- இயற்கையோடு இணைவது -
இயற்கைச் சார்ந்த வாழ்க்கை முறை இவைகளை அதிகம் விரும்பினாலும் செயற்கை சாதனங்களை நாம் மறுப்பவர்களாக இல்லை. நடைமுறையோடு ஒத்துப்போகவேண்டியே இருக்கிறோம். வேறுபட்டவர்களாக உங்களை நீங்களாகவோ, மற்றவர்களாலோ உணரும்போது அந்த மகிழ்ச்சி அக்கணத்திலேயே அழிந்து போகிறது. ஒரு தீவுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு சிறைக்குச் சமம். நிற்க!

தனிமனித ஒழுங்குகள் அமைந்துவிட்டாலே சமுதாய ஒழுங்கு அமைந்து விடும் என்பதே இந்தக்கவிதையின் அடித்தள நாதம். சட்ட ஒழுங்கு என்பதும் அவசியமற்றதாகி விடும். அவரவர் கடமைகளைச் செவ்வனே செய்துவிட்டால் பொழுது போக்கிற்கு மிகக்குறைவான நேரமே இருக்கும். சில சமயங்களில் பார்த்தால் அதுகூட இருக்காது. என்னைக்கேட்டால் பொழுதுபோக்கைக்கூட அர்த்தமுள்ள அரட்டைகளாக பிரயோகிக்கவேண்டும் என்பேன். தேவைக்கேற்ற பணம் மட்டுமல்ல நேரமும் கூட சில சமயங்களில் தனிமனிதனுக்கு எதிரியாகி விடுகிறது. சந்தர்ப்பங்கள் சாமானியரை எளிதில் சூறையாடிவிடுகிறது. புத்திசாலிகளோ சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். வல்லவர்களாக இருப்பதைவிட நல்லவர்களாக இருப்பதென்பது மிகக்கடினம். இருப்பது என்பதைவிட வாழ்வது என்பதே சிறந்தது.
தாமாக விழையும் பட்சத்தில் தான் அந்த புனிதத்தை, அதன் இனிமையான ராகத்தை உணர முடியும்.

anithanhitler
10-09-2005, 11:50 AM
உங்களுடைய நீண்ட விளக்கம் அருமையாக இருந்தது...தனிமனித ஒழுங்குகள் அமைந்துவிட்டாலே சமுதாய ஒழுங்கு அமைந்து விடும் என்பதே இந்தக்கவிதையின் அடித்தள நாதம். சட்ட ஒழுங்கு என்பதும் அவசியமற்றதாகி விடும். அவரவர் கடமைகளைச் செவ்வனே செய்துவிட்டால் பொழுது போக்கிற்கு மிகக்குறைவான நேரமே இருக்கும். சில சமயங்களில் பார்த்தால் அதுகூட இருக்காது. என்னைக்கேட்டால் பொழுதுபோக்கைக்கூட அர்த்தமுள்ள அரட்டைகளாக பிரயோகிக்கவேண்டும் என்பேன். ..
.
சரி கவிதா,
தனி மனித ஒழுக்கம் என்று எப்படி வரைமுறைப்படுத்துவீர்கள்.. இந்திய சமுகத்தில் தவறாக கருதப்படும் குடிப்பழக்கம் , மேலை நாட்டில் தவறாக இல்லையே .. அப்படியானால் தாங்கள் சொல்லும் தனி மனித ஒழுக்கம் மனம் சார்ந்ததா அல்லது சூழ் நிலை சார்ந்ததா? அப்படியேயானாலும் இந்திய சமுகம் வரையறுத்தது தான் சரி என்று யார் சொன்னது? .. நான் ஒன்று கேட்கிறேன். இந்த உலகில் எது சரி? எது தவறு ? என யாரேனும் வரையருக்க முடியுமா?... ஒரு நாட்டில் சரியாக கருதப்படும் ஒன்று மற்றொரு நாட்டில் தவறாக உள்ளதே?( எ.கா. உடை விசயத்தில் முஸ்லிம் நாட்டில் தவறாக கருதப்படும் நிலை மேலை நாடுகளில் சரியாக உள்ளது )..
அதை விடுங்கள் , கொலை செய்வது குற்றம் என அனைத்து நாடுகளிலும், சமுகங்களிலும் எற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால் அதே கொலையை நாட்டுக்காக செய்தால் அது தேசத்தொண்டாம்????. கொலை செய்யப்பட்டவன் அவனுடைய நாட்டிற்க்கு தேசத் தியாகி, கொலை செய்தவன் நாட்டிற்கு தேசத்துரோகி?? என்னே முரண்பாடு????...

அப்படியானால் சரி, தவறு, ஒழுக்கம் இவைகளை தீர்மானிப்பது யார்?.....
உங்களுக்கு தவறாக பட்ட குடிப்பழக்கம் கண்ணதாசனுக்கு சரியாக பட்டுறுக்கிறதே ?

சரி கவிதா ,ம்ம்ம் எது சரி, எது தவறு என்பதற்கான வரைமுறையாக - எல்லோருக்கும் பொருந்தும்வண்ணம் நீங்கள் என்ன நினக்கிறீர்கள்?

அமரன்
25-10-2007, 05:19 PM
புழுதி(தீ)யில் மூழ்கியுள்ள வீணைக்கு
எழுச்சி உன் கைகளிலென விளம்பி
புத்துணர்ச்சி அளித்த கவிக்கு எனது பாராட்டுதல்..!

அழகிய வீணையை தேடிப் பிடித்து
தற்காலத்துக்கு ஏற்ப புரியும் மொழியில்
மாற்றித்தந்த ரசிகனுக்கு எனது அன்புகள்..!

வீணையின் நாதத்தில் நனைய -உங்கள்
பார்வைக்கு கொண்டு வருவதில் பேருவை..!