PDA

View Full Version : பிரதீப்புக்கு ஒரு கவிதை..மன்மதன்
30-08-2005, 05:20 AM
இராகவனுக்கு பிரதீப்பை பற்றி சொல்ல கை அரிக்குது என்ற கேள்விபட்டவுடனேயே , இங்கே அன்பு நண்பன் 'பிரதீப்' படத்தை போட்டு , இராகவனை தொடர்ந்து அனைவரும் பிரதீப்பை பற்றி இரண்டு வரிகளாவது கவிதை எழுத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..இந்த போட்டோவை பார்க்கும் பொழுது உங்களுக்கு இவர் ஏவிஎம் சரவணம் மாதிரி அமைதியானவரோ என்ற அதிர்ச்சி எழுலாம்.. மாற்றிக்கொள்ளுங்கள். கலகல லகலக ப்பானவர்.. இராகவா.நீ வா...

என்னுடைய ஜாலிக்கூ..

பார்த்தவுடனே
தோன்றியது நீ இல்லையென்று
பிரதீப்...

இவரை பற்றிய டாப் 10 யாராவது கொடுங்க.. :D

mania
30-08-2005, 05:34 AM
அடக்கமான தோற்றம் ஒரு மாயை....!!!!!:rolleyes:
திறந்தால் மூடமாட்டார் வாயை.....:D
பின் ஏன் இந்த ஓசி மாயை....?:rolleyes:
கேள் பின்னே இருக்கும் ஏசியை....:D
ஹி....ஹி...ஹி...
ஓசி கவிஞன்:rolleyes:
மணியா....:D

mukilan
30-08-2005, 05:35 AM
மைக்ரோசாப்டின் மது(ரை)ரக் கவி!

நான் ஒரு வரிதான் கொடுப்பேனாக்கும்!

gragavan
30-08-2005, 05:37 AM
குழம்பிய தலை
குழம்பாத அறிவு
தோற்றத்தில் பழம்
பழக்கத்தில் வெங்களம்

நல்லவர் என்பவரைத்
தேடினால் கிடைக்கமாட்டார்
பிரதீப்பைத் தேடுங்கள்
நல்லவர் கிடைப்பார்

கல்வி கரையில
இவருக்கு வரையில!
ஆர்வத்திற்கு ஆர்வம்
வருகையிலெல்லாம்
இவரைத்தான் தேடும்!
புதுமையை நாடும்!

மொத்தத்தில் நல்லவர்!
சில்லரையாகவும் நல்லவரே!

பிரியன்
30-08-2005, 05:39 AM
அதிர்வேட்டுப் பேச்சு
அதிர வைக்கும் தோற்றம்
ஆனாலும் மனதில்
முட்கள் இல்லா
ரோஜா இவன்

மன்மதன்
30-08-2005, 05:39 AM
கவிதையில் குறும்பு கொப்பளிக்கிறது ..பிரதீப்பை போலவே.. பார்ப்போம்..(தலை ஒரு கவிதை ?? கொடுத்ததோட நம்ம வேலை முடிஞ்சிடவில்லை.. அடிக்கடி கொடுக்கணும் ஆமா.. :D :D)
கொஞ்ச நேரம் கழித்து இராகவனை ரிலீஸ் பண்ணுவோம்..:rolleyes: :rolleyes: ) :D

mukilan
30-08-2005, 05:41 AM

அட சீக்கிரம் நான் தூங்கப் போறதுக்குல்ல எல்லோரையும் ரிலீஸ் ப (ன்)ண்ணுங்க.

pradeepkt
30-08-2005, 05:42 AM
அடடா...
தலை ஏற்கனவே இந்தப் போட்டோவைப் பத்தி ஒரு கமெண்ட் அடிச்சிருந்தாரே... கரெக்டா இதே போட்டோவைப் போட்டிட்டயே..
என்னைப் பற்றியும் கவி(ஞர்)கள் கவிகள் படிப்பாரென்று நான் கனவிலும் கண்டதில்லை.
காணாததைக் காண வைத்த கவி(ஞர்)களுக்குக் காலந்தோறும் நன்றி. நன்றி.

மன்மதன்
30-08-2005, 05:43 AM
பிரதீப், ராகவனை பற்றிய கவிதை ரெடி பண்ணி வையுங்க..:rolleyes:

gragavan
30-08-2005, 05:47 AM
கவிதையில் குறும்பு கொப்பளிக்கிறது ..பிரதீப்பை போலவே.. பார்ப்போம்..(தலை ஒரு கவிதை ?? கொடுத்ததோட நம்ம வேலை முடிஞ்சிடவில்லை.. அடிக்கடி கொடுக்கணும் ஆமா.. :D :D)
கொஞ்ச நேரம் கழித்து இராகவனை ரிலீஸ் பண்ணுவோம்..:rolleyes: :rolleyes: ) :Dஏம்மா ஒனக்கிந்த வம்பு? உங்கள் அன்புச் சிறையிலிருந்து என்னை ரிலீஸ் செய்யாமலே விட்டு விடுங்கள். ஹி ஹி

pradeepkt
30-08-2005, 05:51 AM
ஆகா, நானும் காத்துக்கிட்டு இருக்கேன்.
ராகவனைப் பத்தி ஒரு கவிதை எழுதிறதுன்னா சும்மாவா?

gragavan
30-08-2005, 05:55 AM
ஆகா, நானும் காத்துக்கிட்டு இருக்கேன்.
ராகவனைப் பத்தி ஒரு கவிதை எழுதிறதுன்னா சும்மாவா?ஏன்? என்னப் பத்தி எழுதுனா காசு தர்ராங்களா?

(அது சரி தமிழ்க் காசிலிருந்துதான் ஆங்கிலக் கேஷ், பிரெஞ்சுக் காஸ் வந்தது தெரியுமா?)

mania
30-08-2005, 05:58 AM
ஏன்? என்னப் பத்தி எழுதுனா காசு தர்ராங்களா?

(அது சரி தமிழ்க் காசிலிருந்துதான் ஆங்கிலக் கேஷ், பிரெஞ்சுக் காஸ் வந்தது தெரியுமா?)

:D :D ஹா.....ஹா.....ஹா..... நேச்சுரல் காஸ்......(பத்த வைச்சா நல்லாவே எரியும் ):D :D
அன்புடன்
மணியா:D

mukilan
30-08-2005, 05:58 AM
ஏன்? என்னப் பத்தி எழுதுனா காசு தர்ராங்களா?

(அது சரி தமிழ்க் காசிலிருந்துதான் ஆங்கிலக் கேஷ், பிரெஞ்சுக் காஸ் வந்தது தெரியுமா?)
நாம் பண்டைய காலங்களில் நாணயம் தானே பயன் படுத்தினோம். காசு என்ற சொல்லையும் கையாண்டோமா? புதிய செய்தியாக இருக்கிறது. மேல் விபரம் இருந்தால் கூறுங்களேன்.

pradeepkt
30-08-2005, 06:07 AM
காசு என்பது தமிழ் வார்த்தைதான்.
வெண்பாக்களின் இலக்கணத்தில் அவை நாள் (நேர்), மலர் (நிரை), காசு (நேர்பு), பிறப்பு (நிரைபு) என்றுதான் முடிய வேண்டும் என்கிறது தொல்காப்பியம்.
ஆனால் காசு என்பது பணம் என்ற பொருளில் வந்ததா என்றால் கூற இயலாது, ஏனெனில் வெகுகாலம் பண்டமாற்று வழங்கி வந்தது. அது அரிசிக்குத் தங்கமானாலும் சரி.

மன்மதன்
30-08-2005, 06:09 AM
ஏம்மா ஒனக்கிந்த வம்பு? உங்கள் அன்புச் சிறையிலிருந்து என்னை ரிலீஸ் செய்யாமலே விட்டு விடுங்கள். ஹி ஹி

போட்டோ ஒண்ணு நான் போடட்டுமா தமிழ் மன்ற கவிதை பார்த்து,
பார்ததவும் எழுதுவாரே பிரதீப் ஒரு வேட்டு..:D :D

பரஞ்சோதி
30-08-2005, 06:30 AM
வார்த்தைகளில் எனக்கு தம்பி
தோற்றத்தில் எனக்கு அண்ணன்

- கவித்தம்பி பரம்ஸ்

மன்மதன்
30-08-2005, 06:34 AM
வார்த்தைகளில் எனக்கு தம்பி
தோற்றத்தில் எனக்கு அண்ணன்

- கவித்தம்பி பரம்ஸ்

இங்கே பாருங்கயா லொள்ள. எந்த கடையிலே நீ அரிசி வாங்குறேன்னு கேட்கிற மாதிரி இருக்கு..:rolleyes: :rolleyes:
ப.வ.மன்மதன்

pradeepkt
30-08-2005, 06:52 AM
யோவ் அண்ணா ஏதோ ஒரு நல்லெண்ணத்தில பாட்டு எழுதினா, நீ வேற ஏம்ப்பு, அடுத்து உனக்கு எழுதுறேன் பாட்டு.

மன்மதன்
30-08-2005, 07:37 AM
எனக்கு வைக்காதப்பா வேட்டு..:D

gragavan
30-08-2005, 07:37 AM
போட்டோ ஒண்ணு நான் போடட்டுமா தமிழ் மன்ற கவிதை பார்த்து,
பார்ததவும் எழுதுவாரே பிரதீப் ஒரு வேட்டு..:D :Dஅட எந்த ஃபோட்டோவச் சொல்ற?

மன்மதன்
30-08-2005, 07:45 AM
அட எந்த ஃபோட்டோவச் சொல்ற?

அந்த போட்டோவைத்தான்..;) ;)

பரஞ்சோதி
30-08-2005, 07:51 AM
எனக்கு வைக்காதப்பா வேட்டு..:D

மன்மதராசாவின் புகைப்படம் இருக்குது, கவிதை எழுத தயாரா?

- வெடி வைத்த பரம்ஸ் :D

பிரியன்
30-08-2005, 07:53 AM
புகைப்படத்த போடுமய்யா. அணுகுண்டே போட்டிடுவோம்

gragavan
30-08-2005, 07:55 AM
மன்மதராசாவின் புகைப்படம் இருக்குது, கவிதை எழுத தயாரா?

- வெடி வைத்த பரம்ஸ் :Dநான் தயார்..................

மன்மதன்
30-08-2005, 07:59 AM
மன்மதராசாவின் புகைப்படம் இருக்குது, கவிதை எழுத தயாரா?

- வெடி வைத்த பரம்ஸ் :D

தொலைச்சுபுடுவேன்..தொலைச்சு... நீ அந்த போட்டோவை தொலைக்கலேன்னா.:D :D
(வேணாம்யா..:rolleyes: :rolleyes: )

pradeepkt
30-08-2005, 08:02 AM
நானும் தயார், என் வில்லில் நாணும் தயார்.
அம்பைத் தாங்க மன்மதன் தயாரா?

மன்மதன்
30-08-2005, 08:11 AM
நானும் தயார், என் வில்லில் நாணும் தயார்.
அம்பைத் தாங்க மன்மதன் தயாரா?

அம்பை தாங்க நான் தயார் :D :D .. ஆனாலும் அது வம்பாயிடம்யா..:rolleyes: :rolleyes:

babu4780
30-08-2005, 08:12 AM
பிரதீப் , உங்கள் எடை என்ன ??
இந்தக் கேள்வி கேட்டு 6 மாதங்கள் ஆகிறது...இன்னும் பதில் வந்தபாடில்லை !!!.
புதிய எடை இயந்திரம் ஆர்டர் செய்துள்ளீரோ??
-பெரி.

பரஞ்சோதி
30-08-2005, 08:51 AM
பிரதீப் , உங்கள் எடை என்ன ??
இந்தக் கேள்வி கேட்டு 6 மாதங்கள் ஆகிறது...இன்னும் பதில் வந்தபாடில்லை !!!.
புதிய எடை இயந்திரம் ஆர்டர் செய்துள்ளீரோ??
-பெரி.

ஹா! ஹா!
என்னடா பெரியை காணவில்லையே என்று நினைத்தேன்.

pradeepkt
30-08-2005, 08:54 AM
பிரதீப் , உங்கள் எடை என்ன ??
இந்தக் கேள்வி கேட்டு 6 மாதங்கள் ஆகிறது...இன்னும் பதில் வந்தபாடில்லை !!!.
புதிய எடை இயந்திரம் ஆர்டர் செய்துள்ளீரோ??
-பெரி.
பாத்தியா???
உன் போட்டோவைப் போடலைன்னுதானே இந்த ஆட்டம் ஆடுற
தம்பி, உன் போட்டோ என்கிட்ட இருக்கு, கவனம். :mad:

மன்மதன்
30-08-2005, 09:06 AM
அப்பாடா.. பெரியின் போட்டோவை பிரதீப் போடுவார் என நம்புவோம்.. :D :D நாராயணா.. :D

pradeepkt
30-08-2005, 09:07 AM
அதை அவன் சொல்லட்டும்
போடறேனா இல்லையான்னு பாரு

மன்மதன்
30-08-2005, 09:08 AM
என்ன பெரி.. உங்களை இப்படி சொல்றாரு.. நீங்க பார்த்துகிட்டு இருக்கிங்க..:D :D
போ.கு
மன்மதன்

Mathu
30-08-2005, 10:35 AM
மீண்டும் நன்றி மம்முதா....... ;)

படமே சொல்கிறது பிடதீப்பை,
அமைதியான தோற்றம் :cool: ஆழ்கடல்.

pradeepkt
30-08-2005, 10:39 AM
அமைதியான தோற்றம்,
நானே என்னைப் பத்திச் சொல்லிக்கிறக் கூடாது.
ஊரில எல்லாரும் என்னை அமைதிக்கு மறுபெயராத்தான் சொல்லுவாங்க, :D
நன்றி மதன்.

gragavan
30-08-2005, 10:44 AM
இங்க ஆபீசுல பழைய ஆளுங்களக் கேளுங்க.....அடேங்கப்பா பிரதீப்புன்னு சொல்லுவாங்க....ரொம்ப அமைதி.........ஆனா பயங்கர தில்லாலங்கடி...........நாந்தான் அவர் எடத்துல போய் உக்காந்து கிட்டு அவர வேலை செய்ய விடாம அரமணி நேரம் பேசீட்டு வருவேன். நடுவுல அவர வேல செய்யச் சொல்லி தொந்தரவு பண்ணுறவங்கள ஏசீட்டு வருவேன்.

Mathu
30-08-2005, 10:45 AM
மன்மதராசாவின் புகைப்படம் இருக்குது, கவிதை எழுத தயாரா?

- வெடி வைத்த பரம்ஸ் :D
தொலைச்சுபுடுவேன்..தொலைச்சு... நீ அந்த போட்டோவை தொலைக்கலேன்னா.:D :D
(வேணாம்யா..:rolleyes: :rolleyes: )

இந்த சலசல்ப்புக்கெல்லாம் மிரண்டிடுவாரா பரம்ஸ், பார்க்கலாம் :confused:

மம்முதனா பரம்ஸா என்று... :eek:

Mathu
30-08-2005, 10:51 AM
அமைதியான தோற்றம்,
நானே என்னைப் பத்திச் சொல்லிக்கிறக் கூடாது.
ஊரில எல்லாரும் என்னை அமைதிக்கு மறுபெயராத்தான் சொல்லுவாங்க, :D
நன்றி மதன்.

அதுக்கு பின்னால இன்னும் ஒரு சொல்லும் இருக்கு பிரதீப் அதையும்
கண்டுகோங்க.

ஆனா இங்க ராகவன் அண்ணா பொறாமைலா ஏதேதோ புகழ்ராபோல
இருக்கு அதையும் கண்டுகோங்க... :p :rolleyes:

babu4780
30-08-2005, 11:04 AM
பாத்தியா???
உன் போட்டோவைப் போடலைன்னுதானே இந்த ஆட்டம் ஆடுற
தம்பி, உன் போட்டோ என்கிட்ட இருக்கு, கவனம். :mad:
ரைட்டு , விடுங்க ,நமக்குள்ள என்ன பிரதீப்,

மன்மதன்
30-08-2005, 11:07 AM
ஆஹா.. பெரி .. என்ன இது.. பிரதீப் கிட்ட சரண் அடைஞ்சிட்டிங்க :D :D
(நடக்கலையே நாராயணா..ஹிஹி..)

pradeepkt
30-08-2005, 11:21 AM
ரைட்டு , விடுங்க ,நமக்குள்ள என்ன பிரதீப்,
அப்பன்னா சரி,
இந்த மன்மதன் போட்டோ போட்டிருக்கேன்ல,
நீ அங்க போயி ஒரு கவிதை எழுதி உன் ஆத்திரத்தைத் தீத்துக்க :D

babu4780
30-08-2005, 11:22 AM
ஆஹா.. பெரி .. என்ன இது.. பிரதீப் கிட்ட சரண் அடைஞ்சிட்டிங்க :D :D
(நடக்கலையே நாராயணா..ஹிஹி..)
ஹி ஹி ..எல்லாம் மன்றத்தின் நன்மை கருதிதான்..
ஏற்கெனவே ஒரு திருஷ்டி பொம்ம மன்றத்துல இருக்கில்லயா...அதான்...

மன்மதன்
30-08-2005, 11:41 AM
ஹி ஹி ..எல்லாம் மன்றத்தின் நன்மை கருதிதான்..

ஏற்கெனவே
ஒரு திருஷ்டி
பொம்ம
மன்றத்துல
இருக்கில்லயா...

அதான்...

ஆஹா.. பிரதீப்பை பற்றிய கவிதை அருமை பெரி..:D :D

thempavani
30-08-2005, 11:48 AM
பிரதீப் பற்றி பெரி நன்றாகச் சொல்லிவிட்டதால் நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை..ஹி.ஹி.ஹி..(சரக்கு இல்லைங்கோ)

pradeepkt
30-08-2005, 12:24 PM
ஆஹா.. பிரதீப்பை பற்றிய கவிதை அருமை பெரி..:D :D
அடப்பாவி, அவனே சும்மா இருக்கான்,,... :mad:

இக்பால்
30-08-2005, 01:43 PM
அதெல்லாம் சரி...அதென்ன முன்னாலே ஒரு கண்ணாடி டம்ளர்?

gragavan
30-08-2005, 01:46 PM
அதெல்லாம் சரி...அதென்ன முன்னாலே ஒரு கண்ணாடி டம்ளர்?அதுலதான் அவரு ஐசுகீரீம எதோ ஜூசுல கலந்து குடிச்சாரு.....பச்ச பாட்டில்ல இருந்ததெ...........ஆங்.....செவன் அப்பு....

இக்பால்
30-08-2005, 01:50 PM
இராகவன் தம்பியும் கூடத்தான் இருந்தாரா?

ஐஸ்க்ரீமை ஏதோ ஜூஸ்ல கலந்து...அப்புறம் செவன்-அப் வேற...

(இப்பவும் இரண்டு பேரும் ஒன்றாகத்தான் இருப்பீர்கள் போல)

pradeepkt
30-08-2005, 03:05 PM
இல்லைண்ணா ரெண்டு பேரும் 500 கி.மீ தொலைவில இருக்கோம்.
பெங்களூரில இருந்தா அப்பப்ப சந்திச்சிக்கிருவம்.
அங்க தலையோட ஸ்பெஷல் மாக்டெயில் அது... அதைக் குடிச்சேன் நானு... :D

kavitha
31-08-2005, 06:09 AM

Ƹɡ

š á
Ģ 󾾢 á

ġ -
ﺸġ

þ
ɡ -

ɢ

mania
31-08-2005, 06:21 AM
கவிதாவின் வேற்றுமொழி பாடலின் தூய தமிழாக்கம்....கவி மணியா.....:D :D

பார்த்தால் பசு
பழகினால் பால்
செந்தமிழுக்குத் தருவார் அகராதி
பதிலில் தந்ததில்லை அகராதி
கள்ளமில்லா உள்ளமப்பா - அதை
வஞ்சகமில்லா உருவம் சொல்லுமப்பா
பிரதீப் மன்றதுக்குக் கிடைத்த
இன்னொரு செல்லம் - அவர்
எங்கள் நெஞ்சில் எப்போதும்
இனிக்கும் வெல்லம்

gragavan
31-08-2005, 06:25 AM
அடேங்கப்பா.........பிரதீப்ப எல்லாரும் போட்டுத் தாக்குறீங்க..........நடக்கட்டும். நடக்கட்டும்.

கவிதாவின் கவிதையும் இனிமை.

kavitha
31-08-2005, 06:47 AM
கவிதாவின் வேற்றுமொழி பாடலின் தூய தமிழாக்கம்....கவி மணியா.....:D :D

பார்த்தால் பசு
பழகினால் பால்
செந்தமிழுக்குத் தருவார் அகராதி
பதிலில் தந்ததில்லை அகராதி
கள்ளமில்லா உள்ளமப்பா - அதை
வஞ்சகமில்லா உருவம் சொல்லுமப்பா
பிரதீப் மன்றதுக்குக் கிடைத்த
இன்னொரு செல்லம் - அவர்
எங்கள் நெஞ்சில் எப்போதும்
இனிக்கும் வெல்லம்

வேற்று மொழியாஆஆஆ? மக்களே இதற்கொரு தீர்வு சொல்லுங்களேன்.

pradeepkt
31-08-2005, 07:20 AM
ஆகா, மிக்க நன்றி சகோதரி இவை அனைத்தையும் எனக்கே எனக்காகத் தொகுத்து வைத்துக் கொண்டேன்.
சகோதரி, நீங்க மாண்டரின்ல கவிதை எழுதுறதைதான் தலை அப்படிச் சொல்லுறாரு. ஆமா, திஸ்கி மேல உங்களுக்கு அப்படி என்ன அலாதி ஈர்ப்பு?

mania
31-08-2005, 07:26 AM
ஆகா, மிக்க நன்றி சகோதரி இவை அனைத்தையும் எனக்கே எனக்காகத் தொகுத்து வைத்துக் கொண்டேன்.
சகோதரி, நீங்க மாண்டரின்ல கவிதை எழுதுறதைதான் தலை அப்படிச் சொல்லுறாரு. ஆமா, திஸ்கி மேல உங்களுக்கு அப்படி என்ன அலாதி ஈர்ப்பு?

:D :D இப்படி சொன்னா அவளுக்கு புரியாது......சீனிவாசன்னு பேரை சொல்லி சொல்லு.....????:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D

மன்மதன்
31-08-2005, 12:04 PM
கவிதா திஸ்கியில் அடிக்காதேம்மா. விஸ்கி விஸ்கி அழுது உன் எழுதெல்லாம்.. :D :D இனி யுனி கோட்டில் அடி..உதை. சரியா. :D

kavitha
01-09-2005, 05:51 AM
கவிதா திஸ்கியில் அடிக்காதேம்மா. விஸ்கி விஸ்கி அழுது உன் எழுதெல்லாம்.. :D :D இனி யுனி கோட்டில் அடி..உதை. சரியா. :Dசரி :)

சுவேதா
03-09-2005, 01:49 PM
பார்த்தால் பெரியவர்
கதையில் சிறியவர்

பார்வைக்கு
அமைதியானவர்
கதைத்தால்!!!

மிகவும் பாசமுள்ளவர்
அன்பானவரும் கூட
அவர் கதையை
பார்த்தால் சிறியவர்
போல் படத்தை
பார்த்ததும்
பெரியவராக
மரியாதை தோன்றுகிறது
என் அண்ணன் என்பதைவிட
என் சிறிய தகப்பன் என்பதே
பெறும்! :):)

பிரியன்
03-09-2005, 02:41 PM
பார்த்தால் பெரியவர்
கதையில் சிறியவர்

பார்வைக்கு
அமைதியானவர்
கதைத்தால்!!!

மிகவும் பாசமுள்ளவர்
அன்பானவரும் கூட
அவர் கதையை
பார்த்தால் சிறியவர்
போல் படத்தை
பார்த்ததும்
பெரியவராக
மரியாதை தோன்றுகிறது
என் அண்ணன் என்பதைவிட
என் சிறிய தகப்பன் என்பதே பெறும்! :):)

பிரதீப் அடிச்சார்யா பம்ப(ஞ்ச)ர் பரிசு.....:mad: :mad: :) :) :)

மன்மதன்
03-09-2005, 02:51 PM
சித்தப்பாஆஆஆஆஆஆஆஆ...

சுவேதா
03-09-2005, 07:23 PM
:):):):):):)

pradeepkt
06-09-2005, 04:21 AM
அடப்பாவிகளா,
நான் இதை இப்பத்தானே பார்த்தேன்.
சுவேதா இந்த மன்மதன் என்னமோ பண்ணி என் போட்டோவை இப்படி ஆக்கிட்டான்.
நான் உனக்கு வேற சுட்டி தரேன்...

மன்மதன்
06-09-2005, 04:25 AM
அடப்பாவிகளா,
நான் இதை இப்பத்தானே பார்த்தேன்.
சுவேதா இந்த மன்மதன் என்னமோ பண்ணி என் போட்டோவை இப்படி ஆக்கிட்டான்.
நான் உனக்கு வேற சுட்டி தரேன்...

அந்த சுட்டியை எனக்கு தரணும் ;) ;) சுவேதா பல நடிகர்களை இன்னும் போட்டோவில் கூட பார்த்ததில்லையாம்...:D :D

pradeepkt
06-09-2005, 05:23 AM
ஏதோ படத்தில கவுண்டமணிக்கு ஸ்ரீதேவி போட்டோவைக் காட்டி செந்தில் தன் தங்கையைக் கலியாணம் செய்து வைப்பாரே... அப்படி நினைச்சியா.
அடப்பாவி, செய்யிறதையும் செஞ்சிட்டு...
இருக்கட்டும் இருக்கட்டும்... உன் போட்டோவையும் அடுத்து நான் சென்னைப் பாராயணத்தில் போடப் போறேன்.
சுவேதா, நீ என்ன நெனைச்சிம்மா இப்படிச் சொன்ன? இந்தப் பய லொள்ளு தாங்க முடியலையே.

மன்மதன்
06-09-2005, 05:25 AM
சித்தப்பா...... என் படம் ஏற்கனவே நீங்க போட்டு காட்டிடிங்களே.. அவளுக்கு என்னை நன்றாக தெரியும்..:rolleyes: :rolleyes: :rolleyes:

pradeepkt
06-09-2005, 05:42 AM
உனக்குன்னே நான் வேற படம் இக்பால் அண்ணாகிட்ட இருந்து வாங்கி வைக்கறேன். கவலைப் படாதே.

gragavan
06-09-2005, 06:19 AM
அடாடா! என்ன இது அட்டூழியம். பிரதீப்பை சித்தப்பா என்றது யார்? சுவேதாவா? இதென்ன கொடுமை.....ரத்தம் கொதிக்கிறது.........சரி. சரி. ஆனது ஆச்சு....அவரு ஐதராபாத்து வெயில்ல காஞ்சி போயி கருவாடாட்டம் இருந்தா இப்படியா கிண்டல் பண்றது..........இனிமே தினமும் ரெண்டு பிரியாணி சாப்புட்டு தேத்திக்கிருவாரு.

மன்மதன்
06-09-2005, 06:27 AM
காஞ்சி போயிருக்கும் போதே இப்ப'டின்னா' டின் கட்டினார்னா?? அடேயப்பா.. அவ பெரியப்பா என்றுள்ள கூப்பிடுவா :D :D

gragavan
06-09-2005, 06:43 AM
அடடா! அவரு மெலிஞ்சி போயிருக்காருய்யா.......அங்கயிருக்குற வெயில்ல தாளாமாட்டாம ஒடம்புத் தண்ணியெல்லாம் வத்திப் போயி பத்திக்குச்சி கணக்கா இருக்காரு. அவரப் போயி நீ இப்படி சொல்றியே!

மன்மதன்
06-09-2005, 06:48 AM
அச்சச்சோ... ஐ யாம் சாரி பிரதீப். உடம்பை நல்லா கவனிச்சிக்கோ.. நல்லா சாப்பிடு. அப்பப்ப நீராகாராம் சாப்பிடு.. ஜூஸ் குடிமா.. உன்னோட ரீஜண்ட் போட்டோவ அனுப்பிவை...
பாசத்துடன்
மன்மதன்

சுவேதா
06-09-2005, 10:38 AM
அடப்பாவிகளா,
நான் இதை இப்பத்தானே பார்த்தேன்.
சுவேதா இந்த மன்மதன் என்னமோ பண்ணி என் போட்டோவை இப்படி ஆக்கிட்டான்.
நான் உனக்கு வேற சுட்டி தரேன்...

சரி அண்ணா! நான் சும்மாதான் சித்தப்பா என்றேன் கவலை படாதைங்க....ஒகே.

சுவேதா
06-09-2005, 10:40 AM
அடப்பாவிகளா,
நான் இதை இப்பத்தானே பார்த்தேன்.
சுவேதா இந்த மன்மதன் என்னமோ பண்ணி என் போட்டோவை இப்படி ஆக்கிட்டான்.
நான் உனக்கு வேற சுட்டி தரேன்...

அந்த சுட்டியை எனக்கு தரணும் ;) ;) சுவேதா பல நடிகர்களை இன்னும் போட்டோவில் கூட பார்த்ததில்லையாம்...:D :D

:D:D:D:D:D

சுவேதா
06-09-2005, 10:42 AM
ஏதோ படத்தில கவுண்டமணிக்கு ஸ்ரீதேவி போட்டோவைக் காட்டி செந்தில் தன் தங்கையைக் கலியாணம் செய்து வைப்பாரே... அப்படி நினைச்சியா.
அடப்பாவி, செய்யிறதையும் செஞ்சிட்டு...
இருக்கட்டும் இருக்கட்டும்... உன் போட்டோவையும் அடுத்து நான் சென்னைப் பாராயணத்தில் போடப் போறேன்.
சுவேதா, நீ என்ன நெனைச்சிம்மா இப்படிச் சொன்ன? இந்தப் பய லொள்ளு தாங்க முடியலையே.

அண்ணா நான் எதுவும் நினைக்கவில்லை கவலை வேண்டம் சரியா:)

pradeepkt
06-09-2005, 12:48 PM
சரி என்னமோ சமாதானம் ஆயிட்டேன்...
ரீஜண்ட் போட்டோவை அனுப்பி நீ இன்னும் ஏதாச்சும் கமெண்ட் அடிக்கவா?
இருக்கட்டும் சாமி கொஞ்ச நாள் கழிச்சே அனுப்பறேன்.

சுவேதா
06-09-2005, 04:04 PM
சரி சீக்கிரம் கொடுங்கள்!

பிரசன்னா
10-09-2005, 02:06 PM
எண்ண ஓட்டத்தை பிடிக்க முடியாமல் முடங்கி
கிடக்கிறதோ உன்கைகள்?
எண்ணில் அடங்காத கவிதைகள் படித்து
வெறித்து விட்டதோ உன் கண்கள்?
அட கடிகாரம் கூட கவிழ்ந்து விட்டதே
நீ காலத்தை வெல்வாயென..............

pradeepkt
12-09-2005, 05:41 AM
அட... புது நண்பரிடமிருந்து கவிதை.
மிக்க நன்றி பிரசன்னா.
இத்தனை பேர் கேக்கிறோம் உங்களைப் பற்றி ஒரு அறிமுகம் தரலாமே.
ஏற்கனவே போட்டிருந்தால் மன்னிக்க.

தாமரை
10-07-2006, 08:41 AM
காசு என்பது தமிழ் வார்த்தைதான்.
வெண்பாக்களின் இலக்கணத்தில் அவை நாள் (நேர்), மலர் (நிரை), காசு (நேர்பு), பிறப்பு (நிரைபு) என்றுதான் முடிய வேண்டும் என்கிறது தொல்காப்பியம்.
ஆனால் காசு என்பது பணம் என்ற பொருளில் வந்ததா என்றால் கூற இயலாது, ஏனெனில் வெகுகாலம் பண்டமாற்று வழங்கி வந்தது. அது அரிசிக்குத் தங்கமானாலும் சரி.

படிக்காசு தந்த பெருமானை கேள்விப்பட்டதில்லையோ? காசு என்பது தமிழில் பணத்திற்காக வழங்கப் பட்ட ஒரு சொல்தான்..

ஓவியா
10-07-2006, 09:51 AM
பிரியன், கவி சுவேதா, மற்றும் பிரசன்னா எழுதிய கவிதைகள் தூள்

அமைதியான உருவம்
ஆர்ப்பாட்டம் இல்லாத முகம்
இதுதானா சமாதான புலி பிரதீப்.!!!!!!!!!!!!

கண்டதில் சந்தோஷம்......:D :D

பின் குறிப்பு
பெண் பார்க்க இந்த படத்தை கொடுக்கவும்
பெண் ஏமாந்துவிடுவாள் மாப்பிள்ளை
அப்பாவி என்று...;)

தாமரை
10-07-2006, 09:59 AM

பிரதீப் மேல் உங்களுக்கு அப்படி என்ன கோபம்??:confused: :confused: :confused:

ஓவியா
10-07-2006, 10:11 AM
பிரதீப் மேல் உங்களுக்கு அப்படி என்ன கோபம்??:confused: :confused: :confused:

கோபம் இல்லை பாசம்
அந்த படத்தில் உண்மையிலே
அவர் தோற்றம் சாதுவாகதான் இருக்கு.....:)

பொதுவாக எல்லா பெண்களுக்கும் சாதுவான ஆண்களை பிடிக்கும்
ஒரு சில பெண்களுக்கே ஆர்பாட்டமான ஆண்களை பிடிக்கும்.....:cool:

தாமரை
10-07-2006, 10:17 AM
கோபம் இல்லை பாசம்
அந்த படத்தில் உண்மையிலே
அவர் தோற்றம் சாதுவாகதான் இருக்கு.....:)

பொதுவாக எல்லா பெண்களுக்கும் சாதுவான ஆண்களை பிடிக்கும்
ஒரு சில பெண்களுக்கே ஆர்பாட்டமான ஆண்களை பிடிக்கும்.....:cool:

பிரதீப்பு,

கண்ணாடி கிளாஸ் முன்னாடி இருக்குற ஃபோட்டோவைக் கொடுக்கச் சொல்லி உங்களை கவுக்கப் பாக்கிறாங்க.. இதில உங்களைப் பார்த்தா டைட் டானிக் கனெக்ஷன் கொடுத்து உங்களை கட் பண்ணிறுவாங்க.
உஷாரப்பு!!!

ஓவியா
10-07-2006, 10:22 AM
பிரதீப்பு,

கண்ணாடி கிளாஸ் முன்னாடி இருக்குற ஃபோட்டோவைக் கொடுக்கச் சொல்லி உங்களை கவுக்கப் பாக்கிறாங்க.. இதில உங்களைப் பார்த்தா டைட் டானிக் கனெக்ஷன் கொடுத்து உங்களை கட் பண்ணிறுவாங்க.
உஷாரப்பு!!!

இப்பதான் பாத்தேன்...:D :D :D

அதுவும் பெரிய கண்ணாடி கிளாஸ் மாக்....;) ;)
புரியுது புரியுது......:D :D :D

pradeepkt
10-07-2006, 10:28 AM
அடப்பாவிகளா,
இப்படியும் ஒரு கூட்டமா? கிளாஸை மட்டும் பாக்காதீங்க... அதுல என்ன இருந்துச்சுன்னும் பாருங்க... :)
செல்வன்,
இந்தத் திரிய எங்கருந்துய்யா தோண்டி எடுத்தீங்க?

மதி
10-07-2006, 10:35 AM
சரி..ஆனது ஆகட்டும்..
எல்லோரும் மறுபடியும்..பிரதீப்ப பத்தி ஒரு கவிதை சொல்லுங்க..

தாமரை
10-07-2006, 10:36 AM
அடப்பாவிகளா,
இப்படியும் ஒரு கூட்டமா? கிளாஸை மட்டும் பாக்காதீங்க... அதுல என்ன இருந்துச்சுன்னும் பாருங்க... :)
செல்வன்,
இந்தத் திரிய எங்கருந்துய்யா தோண்டி எடுத்தீங்க?

அதுல என்ன இருந்துச்சுன்னு எங்களுக்குத் தெரியும். பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு தெரியும்னு சொல்ல முடியுமா? சந்தேகம்னா சரவணனைக் கேளுங்க, ரகசியமா ராகவனைக் கேளுங்க,

நீர் வேற நான் ஸ்டெடி, நான் ஸ்டெடின்னு சொல்ற மாதிரி கைகளை இறுக கட்டிகீட்டு உங்களை நீங்களே பிடிச்சுகிட்டு உட்கார்ந்திருக்கீங்க..

திரி நல்லா இருக்கேன்னு தோண்டினேன்,,

ஓவியா
10-07-2006, 10:48 AM
நீர் வேற நான் ஸ்டெடி, நான் ஸ்டெடின்னு சொல்ற மாதிரி கைகளை இறுக கட்டிகீட்டு உங்களை நீங்களே பிடிச்சுகிட்டு உட்கார்ந்திருக்கீங்க..

:D :D :D :D

அறிஞர்
10-07-2006, 12:08 PM
பழைய பதிவை எடுத்து.. இந்த அளவுக்கு கலாய்க்கிறீங்க.. பாவம்பா.. பிரதீப்....

தாமரை
10-07-2006, 12:17 PM
பழைய பதிவை எடுத்து.. இந்த அளவுக்கு கலாய்க்கிறீங்க.. பாவம்பா.. பிரதீப்....

பதிவு பழசாகலாம். பிரதீப்பு பழசாகலையே!.. மன்றத்துப் புது வரவுகளுக்கு பிரதீப்பை அறிந்து கொள்ளும் ஆவல் இருக்காதா பின்னே!

pradeepkt
11-07-2006, 05:04 AM
பதிவு பழசாகலாம். பிரதீப்பு பழசாகலையே!.. மன்றத்துப் புது வரவுகளுக்கு பிரதீப்பை அறிந்து கொள்ளும் ஆவல் இருக்காதா பின்னே!
புதுசா வந்தவங்க உங்களைக் கேட்டாங்களா?
சித்த நேரம் சும்மா இருங்க சாமி! இப்பத்தான் அடங்கிருக்கு... மதி வேற கவிதை எழுதுறேங்குறான். உங்களுக்கு நாந்தான் கெடைச்சேனா?

மதி
11-07-2006, 06:07 AM
புதுசா வந்தவங்க உங்களைக் கேட்டாங்களா?
சித்த நேரம் சும்மா இருங்க சாமி! இப்பத்தான் அடங்கிருக்கு... மதி வேற கவிதை எழுதுறேங்குறான். உங்களுக்கு நாந்தான் கெடைச்சேனா?
நான் எங்க கவிதை எழுதறேன்னு சொன்னேன்..
எல்லோரையும் எழுத சொன்னேன்..

பெரும்பொருளை அறிய வேண்டி
புரிந்தும் புரியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
உளறும் சிறியன் நான்..

என்னப் போயி..?

தாமரை
11-07-2006, 06:18 AM
நான் எங்க கவிதை எழுதறேன்னு சொன்னேன்..
எல்லோரையும் எழுத சொன்னேன்..

பெரும்பொருளை அறிய வேண்டி
புரிந்தும் புரியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
உளறும் சிறியன் நான்..

என்னப் போயி..?

பிரதீப்பின் அளவை இப்படிச் சொல்லாம சொல்லிட்டீரே!

நண்பருள் நன்பொருள்
செய்வதோ மென்பொருள்
இருக்கையில் இருக்க
கட்டியது இரு கை
காலியானது கிளாஸ்
இவர்
காலியாகாத "Class"

மதி
11-07-2006, 06:30 AM
பிரதீப்பின் அளவை இப்படிச் சொல்லாம சொல்லிட்டீரே!

நண்பருள் நன்பொருள்
செய்வதோ மென்பொருள்
இருக்கையில் இருக்க
கட்டியது இரு கை
காலியானது கிளாஸ்
இவர்
காலியாகாத "Class"

எப்படி...எப்படி செல்வன் உங்களால மட்டும் இப்படி எழுத முடியுது..?
இன்னேர பிரதீப்புக்கு "ஃபுல்" அரிச்சிருக்கும்..

ஓவியா
11-07-2006, 06:43 AM
எப்படி...எப்படி செல்வன் உங்களால மட்டும் இப்படி எழுத முடியுது..?
இன்னேர பிரதீப்புக்கு "ஃபுல்" அரிச்சிருக்கும்..

காலியானது கிளாஸ்
இவர் காலியாகாத "Class"

அட இதுதானா அது

மதி
11-07-2006, 06:52 AM
காலியானது கிளாஸ்
இவர் காலியாகாத "Class"

அட இதுதானா அது
இதுல இப்படி வேற இருக்கா? அட என்ன சொன்னாலும் மக்கள் தப்பாவே புரிஞ்சுக்கறாங்க...என்ன உலகமடா இது?:confused: :confused: :confused:

(இனியும் என்னை "எதிராளி பாத்து தெருவோரம் நின்னு மார்க்கெட்டில் முறைக்க" ...போதும்டா சாமி.!!)

தாமரை
11-07-2006, 08:19 AM
நான் எங்க கவிதை எழுதறேன்னு சொன்னேன்..
எல்லோரையும் எழுத சொன்னேன்..

பெரும்பொருளை அறிய வேண்டி
புரிந்தும் புரியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
உளறும் சிறியன் நான்..

என்னப் போயி..?

பொருள் ---> அர்த்தம்
பொருள் ---> செல்வம்
பொருள் ---> அஃறிணையை குறிக்கும் பொதுவான பெயர்

நீங்க எந்த பெரும் - பொருளை சொன்னீங்கன்னு சொன்னீங்கன்னா ரொம்ப நல்லாயிருக்கும்..:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

மதி
11-07-2006, 08:26 AM
அர்த்தம், செல்வம்..எது வேணும்னாலும் எடுத்துக்குங்கோ..
(ச்சே...நாமளும் ஏதாவது பிட்ட போடலாம்னு பார்த்தா...அர்த்தம்லாம் கேட்டு இப்படி மாட்டிவுடறாரே...! செல்வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...நற..நற..நற..)

தாமரை
11-07-2006, 08:31 AM
அர்த்தம், செல்வம்..எது வேணும்னாலும் எடுத்துக்குங்கோ..
(ச்சே...நாமளும் ஏதாவது பிட்ட போடலாம்னு பார்த்தா...அர்த்தம்லாம் கேட்டு இப்படி மாட்டிவுடறாரே...! செல்வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...நற..நற..நற..)

இதை நான் எப்படி எடுத்துகறது..

அர்த்தம், செல்வம் இந்த ரண்டு அர்த்ததில எதாவது ஒண்ணை எடுத்துக்கவா??:p :p :p

இல்லை,

செல்வம், (அதாவது நான்) எந்த அர்த்தம் வேணும்னாலும் எடுத்துக்கவா? அதாவது மூணுல ஒண்ணு...:eek: :eek: :eek: :eek:

மதி
11-07-2006, 08:38 AM
ஆஹா...
மனுசன நிம்"மதி"யா இருக்க விட மாட்டீங்க போலருக்கு....
பிரதீப்பு...நல்லவர்..வல்லவர்..
போதுமா...
அர்த்தமாம்..அர்த்தம்....ஹ்ம்ம்..

தாமரை
11-07-2006, 08:43 AM
ஆஹா...
மனுசன நிம்"மதி"யா இருக்க விட மாட்டீங்க போலருக்கு....
பிரதீப்பு...நல்லவர்..வல்லவர்..
போதுமா...
அர்த்தமாம்..அர்த்தம்....ஹ்ம்ம்..

மதி = அறிவு
மதி = நிலவு
நிம்+மதி = உங்களுடைய அறிவு, உங்களுடைய நிலவு
எந்த அர்த்தத்தில சொல்றீங்க மதி...

மதி
11-07-2006, 09:01 AM
மதி = அறிவு
மதி = நிலவு
நிம்+மதி = உங்களுடைய அறிவு, உங்களுடைய நிலவு
எந்த அர்த்தத்தில சொல்றீங்க மதி...
இல்ல..இல்ல...
நானில்ல..
இப்படி அர்த்தம்லாம் கேட்டு கொல்லாதீங்க...
யாருப்பா அது..ஒரே வார்த்தைக்கு ரெண்டு மூணு அர்த்தம்லாம் வச்சுகிட்டு..

தாமரை
11-07-2006, 09:07 AM
இல்ல..இல்ல...
நானில்ல..
இப்படி அர்த்தம்லாம் கேட்டு கொல்லாதீங்க...
யாருப்பா அது..ஒரே வார்த்தைக்கு ரெண்டு மூணு அர்த்தம்லாம் வச்சுகிட்டு..

மதியின் மதி மதிகண்டு மயங்க நிம்மதியின் நிம்மதி நிம்மதிக்கும் கிட்டுமா?

மதி : மிதி மிதின்னு மிதிக்கப் போறேன்,,, இதுக்கு ஒரே அர்த்தம்தான்

மதி
11-07-2006, 09:13 AM
மதியின் மதி மதிகண்டு மயங்க நிம்மதியின் நிம்மதி நிம்மதிக்கும் கிட்டுமா?

மதி : மிதி மிதின்னு மிதிக்கப் போறேன்,,, இதுக்கு ஒரே அர்த்தம்தான்
இதுல 7 மதி..2 மிதி..
போதுஞ் சாமி...

தாமரை
11-07-2006, 09:20 AM
இதுல 7 மதி..2 மிதி..
போதுஞ் சாமி...

மதியின் மதி மதிகண்டு மயங்க நிம்மதியின் நிம்மதி நிம்மதிக்கும் கிட்டுமா?

மதி : மிதி மிதின்னு மிதிக்கப் போறேன்,,, இதுக்கு ஒரே அர்த்தம்தான்

7 மதி 3 மிதி.. ஆக மொத்தம் பத்து..............

மதி
11-07-2006, 09:23 AM
ஷாரி..மிஷ்டேக்காயிடுத்து...!

pradeepkt
11-07-2006, 09:49 AM
நீ எப்போ பாத்தாலும் "மிஸ்"களை டேக்கா குடுக்காம பாத்தீன்னா மிஸ்டேக்காகாம என்ன செய்யும்கறேன்....???

மதி
11-07-2006, 09:56 AM
நீ எப்போ பாத்தாலும் "மிஸ்"களை டேக்கா குடுக்காம பாத்தீன்னா மிஸ்டேக்காகாம என்ன செய்யும்கறேன்....???
என்னங்க நீங்க..
மிஸ்கள மிஸ் பண்ணாம பாக்குறது எப்படி மிஸ்டேக்காகும்..எனக்கு என்ன உங்கள மாதிரி வயசா ஆயிடுச்சு..?:D :D :D

sarcharan
11-07-2006, 10:00 AM
என்னங்க நீங்க..
மிஸ்கள மிஸ் பண்ணாம பாக்குறது எப்படி மிஸ்டேக்காகும்..எனக்கு என்ன உங்கள மாதிரி வயசா ஆயிடுச்சு..?:D :D :D
மதியின் எக்ஷ்க்யூஸ்-மீ பத்தி சொல்லுறியா பிரதீப்பு...

மதி
11-07-2006, 10:19 AM
மதியின் எக்ஷ்க்யூஸ்-மீ பத்தி சொல்லுறியா பிரதீப்பு...
ஹ்ம்ம்..அது ஒரு காலம்..

தாமரை
11-07-2006, 10:46 AM
மதியின் எக்ஷ்க்யூஸ்-மீ பத்தி சொல்லுறியா பிரதீப்பு...

அதை விடு பிரதீப்பை பற்றி நீயும் ஒரு கவிதை பாடு.. எந்தக் கவிதை சிறந்ததுன்னு சீக்கிரமா ஒரு ஓட்டெடுப்பு நடத்தனும். இதுவரை பாடியவர்கள்..

1. மணியா
2. மன்மதன்
3. ராகவன்
4. முகிலன்
5. பிரியன்
6. பரம்ஸ்
7. பெரி (babu4780)
8. கவிதா
9. சுவேதா
10. பிரசன்னா
11. ஓவியா
12. மதி
13. செல்வன்

pradeepkt
11-07-2006, 12:44 PM
சரி, இனி எல்லாம் விதிப்படி நடக்கட்டும்...

இனியன்
11-07-2006, 02:08 PM
செல்லச் சண்டை
நல்லாத்தான் இருக்கு
ஃபுல் லாப் போகுது
பார்த்துப் போகச் சொல்லுங்க.
அப்புறம் யாராவது தள்ளிக்கினு போயிடப் போறாங்க......

mukilan
11-07-2006, 02:40 PM
நான் எழுதினது எல்லாம் கவிதையா? இது அடுக்குமா செல்வரே! சரி விடுங்க. யாரு கண்டா, இத்தாலி போல கடைசியிலே யாருமே எதிர் பார்க்காத நேரத்தில நான் வந்தாலும் வந்திடுவேன்.

பென்ஸ்
14-07-2006, 12:11 AM
அட நான் இதை இவ்வளவு நாள் கவணிக்கலையே பிரதிப்பு...

(வாடா என் மச்சி ஸ்டைலில் வாசிக்க)

வாடா என் பிரதிப்பு
நீ எனக்கு ஆப்பு
நம்ம நட்பு ; ரொம்ப டீப்பு
மன்றத்தில் நீ டாப்பு...

அட பிரதிப்பு... மன்றத்தில் நீங்க எவ்வளவு செல்லம்ன்னு இப்ப தெரியுதா???

pradeepkt
14-07-2006, 05:10 AM
நல்லாத் தெரியுதுங்க... நல்லாத் தெரியுது! அமெரிக்காவுல ஒரு பக்கம் பயத்துல நடுங்கிக்கிட்டே இன்னொரு பக்கம் குழந்தைகளை மிரட்டிக்கிட்டே, இங்க வந்து கலாய்க்கவும் நேரம் இருக்குல்ல உங்களுக்கு! பெங்களூருக்கு வாங்க, பத்தடிக்கு ஒரு கவிதைக் கட்டவுட்டு வைக்க செல்வன் ரெடி பண்ணிட்டு இருக்காரு :D

ஆனா இந்தப் ஓட்டெடுப்பு எல்லாம் ரொம்ப ஓவரு!

மதி
14-07-2006, 05:21 AM

விடுங்க..விடுங்க..
ஏதோ உங்க மேல இருக்குற பிரியத்த எல்லாரும் காட்டறாங்க. ரொம்பவும் சீன் வுட்டோம்னா..அப்புறம் கண்டுக்கவே ஆள் இல்லாம போய்டும். :D :D :D

தாமரை
14-07-2006, 05:23 AM
நல்லாத் தெரியுதுங்க... நல்லாத் தெரியுது! அமெரிக்காவுல ஒரு பக்கம் பயத்துல நடுங்கிக்கிட்டே இன்னொரு பக்கம் குழந்தைகளை மிரட்டிக்கிட்டே, இங்க வந்து கலாய்க்கவும் நேரம் இருக்குல்ல உங்களுக்கு! பெங்களூருக்கு வாங்க, பத்தடிக்கு ஒரு கவிதைக் கட்டவுட்டு வைக்க செல்வன் ரெடி பண்ணிட்டு இருக்காரு :D

ஆனா இந்தப் ஓட்டெடுப்பு எல்லாம் ரொம்ப ஓவரு!

அடுத்து ஒரு ஆள் மேல நீங்க கவிதை பாட ஆரம்பிக்கிற வரை உங்கமேல கவிதைகள் குவிஞ்சிகிட்டேதான் இருக்கும்.. மயூரேசன் வேற இன்னும் எழுதலை.. சரவணன் எழுதி ரெடிய வச்சிருக்கார்...

அப்புறம்.. இன்னும் அல்லிராணியும் எழுதலை...:eek: :eek: :eek:

வருவாங்கன்னு நினைக்கிறேன்..:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

மதி
14-07-2006, 05:36 AM
இன்னும் இவ்ளோ பேர் இருக்காங்களா? வரட்டும் வரட்டும்..பிரதீப் புகழ் பாட. போறபோக்க பாத்தா.."பிரதீப் பா"னு பாட்டே எழுதிடலாம் போல

தாமரை
14-07-2006, 05:41 AM
இன்னும் இவ்ளோ பேர் இருக்காங்களா? வரட்டும் வரட்டும்..பிரதீப் புகழ் பாட. போறபோக்க பாத்தா.."பிரதீப் பா"னு பாட்டே எழுதிடலாம் போல

நல்ல யோசனையா இருக்கே.. ராகவன், பிரதீப் ஸ்டைல்களை உபயோகித்து பிரதீப்பா என்ற ஒரு புதிய இலக்கணத்தை வகுப்போமே!!!!..

நான் ரெடி! நீங்க ரெடியா?

மதி
14-07-2006, 05:56 AM
நல்ல யோசனையா இருக்கே.. ராகவன், பிரதீப் ஸ்டைல்களை உபயோகித்து பிரதீப்பா என்ற ஒரு புதிய இலக்கணத்தை வகுப்போமே!!!!..

நான் ரெடி! நீங்க ரெடியா?
ஹலோ..
பிரதீப் பா ன்னு சொன்னத..பிரதீப்பா ஆக்கிட்டீங்க.

தாமரை
14-07-2006, 06:14 AM
நல்ல யோசனையா இருக்கே.. ராகவன், பிரதீப் ஸ்டைல்களை உபயோகித்து பிரதீப்பா என்ற ஒரு புதிய இலக்கணத்தை வகுப்போமே!!!!..

நான் ரெடி! நீங்க ரெடியா?

சீர் : எந்த வகை சீர்களை பிரதீப் உபயோகிப்பார்???

நாள், மலர், தேமா, புளிமா, கூவிளம், கருவிளம், தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய், தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி,

தேமாதன்காய், புளிமாதன்காய், கூவிளம்தன்காய், கருவிளம்தன்காய்,

தேமாதன்கனி, புளிமாதன்கனி, விளம்தன்கனி, கருவிளம்தன்கனி, தேமாஉவர்காய், புளிமாஉவர்காய், கூவிளஉவர்காய், கருவிளஉவர்காய், தேமாஉவர்கனி, புளிமாஉவர்கனி, கூவிளஉவர்கனி, கருவிளஉவர்கனி

தளை :

இது சீர்களை எப்படி அடுக்குவது என்பது. எந்த சீருக்குப் பின் எந்த சீர் வரலாம் என்று தீர்மானிப்பது. இதன் மூலம் பாட்டுக்கு ராகம் தன்னாலேயே அமைந்து விடுகிரது

அடி :

இதில் ஒரு அடியில் எத்தனை சீர்கள் வரலாம் என்றும், ஒரு பாட்டிற்கு எத்தனை வரிகள் இருக்கலாம் எனவும் சொல்வது. குறளடி (இரு சீர்), சிந்தடி (மூன்று சீர்) அளவடி (நான்கு சீர்) நெடிலடி (5 சீர்)
கழிநெடிலடி (6+)

சில சமயங்களில் கடசி வரி, கடைசி வரிக்கு முந்தின வரி, முதலடி அல்லது இரண்டாம் அடி கடைசியில் ஓரசைசீர் வருவர்து போன்று சில சிறப்பு விதிகளும் நிர்ணயக்கப்பலாம்.. உதாரணமாக நோண்டிச் சிந்து

நந்த வனத்திலோர் ஆண்டி - அவன்
நாலறு மாதமாய் குயவனை வேண்டி..

இதில் முதல் அடி குறுகி (3 சீர்) இரண்டாம் அடி விரிந்து (4 சீர்) இரண்டையும் ஒரு ஓரசைச்சீர் இணைக்கும்..

ஆசிரியப்பாவில் கடைசி அடியின் முதலடி 3 சீர்களாகி இறிதி அடி ஏ, ஓ, ஆ என கராத்தே சத்தங்களாக முடியும்..

தொடை :

இது எதுகை மோனை போன்று அலங்காரங்கள், மோனைகள், எதுகைகள் ஒரே அடியில் வந்தாக வேண்டுமா, இல்லை அடுத்தடுத்த அடிகளில் வரவேண்டுமா எப்படி வரவேண்டும் என நிர்ணயித்தல்...முரண்தொடை என்பது எதிர் எதிரான பொருள்களைச் சொல்லுதல் (இரவு - பகல், சூரியன் - சந்திரன்) அப்புறம் ஒரே மாதிரியான பொருள் சொல்லுதல் (தாமரை- அல்லி- ரோஜா-மல்லி)

சந்தம்:

டி.ராஜேந்தர் மாதிரி கடைசி எழுத்துக்கள் இசைந்து வருதல்.. இது எவ்விடங்களில் வரவேண்டும் என நிர்ணயித்தல்..

அணி:

உவமை அணி, உருவக அணி, எடுத்துக்காட்டு உவமையணி, தற்குறிப்பேற்ற அணி, தன்மை அணி, வஞ்சப்புகழ்ச்சி அணி, பிறிதுமொழிதல் அணி, ..... தெரிந்ததெல்லாம் சொல்லுங்கள்..
உங்க கருத்துகளைக் கொடுங்கள்.

மதி
14-07-2006, 06:31 AM
இந்த தளை, அணி, சீர், சந்தம்லாம் விடுங்க...
பாட்டுல அங்கங்க...சுள்ளான் மாதிரி "ஏய்" வரணும்..அடிக்கடி "நாந்தான் வரணும்" அம்புட்டுதேன். ஹிஹி.
(எனக்கு நேரம் சரியில்ல..)

sarcharan
14-07-2006, 06:55 AM
இந்த தளை, அணி, சீர், சந்தம்லாம் விடுங்க...
பாட்டுல அங்கங்க...சுள்ளான் மாதிரி "ஏய்" வரணும்..அடிக்கடி "நாந்தான் வரணும்" அம்புட்டுதேன். ஹிஹி.
(எனக்கு நேரம் சரியில்ல..)

தம்பி, இதுக்கு பதில் நாளைக்கு கிடைக்கும்....

pradeepkt
14-07-2006, 06:56 AM
இந்த தளை, அணி, சீர், சந்தம்லாம் விடுங்க...
பாட்டுல அங்கங்க...சுள்ளான் மாதிரி "ஏய்" வரணும்..அடிக்கடி "நாந்தான் வரணும்" அம்புட்டுதேன். ஹிஹி.
(எனக்கு நேரம் சரியில்ல..)
நீ சொன்னதுல இது மட்டும்தான் சரி! :D

தாமரை
14-07-2006, 07:10 AM
தம்பி, இதுக்கு பதில் நாளைக்கு கிடைக்கும்....

ஓ.கே ஓ.கே.. ஆனால் பிரதீப்பு இல்லாம அவரைப் பற்றி டிஸ்கஸ் பண்ணக்கூடாது எனவே டாபிக்கை ஆகஸ்ட் இறுதி மீட்டிங்கிற்கு வச்சுக்கலாம்.. அதை விட முக்கியமான மேட்டர் இருக்கு இந்த சந்திப்புக்கு.

மதி
14-07-2006, 07:15 AM
தம்பி, இதுக்கு பதில் நாளைக்கு கிடைக்கும்....
நீங்க பிரதீப்புக்கு பினாமியா?

மதி
14-07-2006, 07:16 AM
ஓ.கே ஓ.கே.. ஆனால் பிரதீப்பு இல்லாம அவரைப் பற்றி டிஸ்கஸ் பண்ணக்கூடாது எனவே டாபிக்கை ஆகஸ்ட் இறுதி மீட்டிங்கிற்கு வச்சுக்கலாம்.. அதை விட முக்கியமான மேட்டர் இருக்கு இந்த சந்திப்புக்கு.
ஆமாமா..ரொம்பவே முக்கியமான மேட்டர்.

sarcharan
14-07-2006, 11:33 AM
ஆமாமா..ரொம்பவே முக்கியமான மேட்டர்.

என்ன அது??? அப்பாவியாய் கேட்கும் சிறுவன் சரவணன்

மதி
14-07-2006, 11:38 AM
என்ன அது??? அப்பாவியாய் கேட்கும் சிறுவன் சரவணன்
அடடா..
செல்வன் சொன்னது சரி தான். நீங்க அப்பாவி தான். ஆனா சிறுவன்ங்கறது உங்களுக்கே....:eek: :eek: :eek: :eek: :eek:

தாமரை
14-07-2006, 12:17 PM
அடடா..
செல்வன் சொன்னது சரி தான். நீங்க அப்பாவி தான். ஆனா சிறுவன்ங்கறது உங்களுக்கே....:eek: :eek: :eek: :eek: :eek:

சிறுவனுக்கு எதுக்கு கல்யாணம், திருச்சி போறவங்க போயி கேளுங்கப்பா!!!:rolleyes: :rolleyes: :rolleyes:

பென்ஸ்
14-07-2006, 12:26 PM
ஏன்பா.... பொண்ணு சரவணனை போயிபிடிக்கலைன்னு சொல்லிட்டாளா????

தாமரை
14-07-2006, 12:30 PM
ஏன்பா.... பொண்ணு சரவணனை போயிபிடிக்கலைன்னு சொல்லிட்டாளா????

பென்ஸூ நிங்க இங்க இல்லாம உங்களுக்கு அப்டேட்டட் நியூஸே கிடைக்கறதில்லை.. இன்னிக்கு என்ன நடக்குது தெரியுமா? சரவணா!!!:D :D

pradeepkt
14-07-2006, 12:36 PM
அடடா..
செல்வன் சொன்னது சரி தான். நீங்க அப்பாவி தான். ஆனா சிறுவன்ங்கறது உங்களுக்கே....:eek: :eek: :eek: :eek: :eek:
உனக்கு ஏம்ப்பா காயுது? வேணும்னா அவனைக் குழந்தைன்னு கூப்பிட்டுக்க!
அவனே இப்பத்தான் வாழ்க்கையில முக்கியமான கட்டத்துல எட்டு வைக்கிறான், பென்ஸூ, நீங்க இங்க வாங்க, நிறைய கூத்து காத்திருக்கு :rolleyes:

sarcharan
14-07-2006, 01:12 PM
ஏன்பா.... பொண்ணு சரவணனை போயிபிடிக்கலைன்னு சொல்லிட்டாளா????

பென்ஸூ, உங்க ஆதங்கம் எனக்கு புரியுது.... ஆனா ஹ்ம்ம்

தாமரை
14-07-2006, 01:14 PM
பென்ஸூ, உங்க ஆதங்கம் எனக்கு புரியுது.... ஆனா ஹ்ம்ம்
ஃபாரத்தில நீங்க நல்ல பையனா நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கறதாமே!! :rolleyes: :rolleyes: :rolleyes: போன மீட்டிங்ல அதான் கண்ணாடி மிஸ்ஸிங்கா?:cool: :cool: :cool:

sarcharan
14-07-2006, 01:17 PM
ஃபாரத்தில நீங்க நல்ல பையனா நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கறதாமே!! :rolleyes: :rolleyes: :rolleyes: போன மீட்டிங்ல அதான் கண்ணாடி மிஸ்ஸிங்கா?:cool: :cool: :cool:

ஹ்ம்ம் இது வேறயா....

என் (நல்ல) கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே...

பிரதீப்பு, என்ன பத்தி எல்லாருக்கும் கொஞ்சம் சொல்லு

தாமரை
14-07-2006, 01:18 PM
ஹ்ம்ம் இது வேறயா....

என் (நல்ல) கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே...

பிரதீப்பு, என்ன பத்தி எல்லாருக்கும் கொஞ்சம் சொல்லு

அவருதான் என்னமோ சொன்னாரு:D :D

மதி
14-07-2006, 01:22 PM
அவருதான் என்னமோ சொன்னாரு:D :D
அப்படி என்னங்க பிரதீப் சொன்னாரு சரவணன் நல்ல குணத்த பத்தி..

sarcharan
14-07-2006, 01:27 PM
ஏன்பா.... பொண்ணு சரவணனை போயிபிடிக்கலைன்னு சொல்லிட்டாளா????

பேன்ஸூ, என்ன ஒரு சந்தோசமா கேள்வி கேக்குறீங்க...;) ;) ;)

ஆதவா
07-01-2007, 02:10 PM
பிரதீப் என்னும் காலசூரியன்

நீல மேகங்களின்
நெருப்புச் சத்தத்திற்கிடையில்
கால சூரியன் கீழ் விழுந்ததாம்
இந்த மானிட உலகுக்கு.

எடுத்து வைக்கவோர் இடமில்லை யென
இடுக்கில் வைத்தலைந்தார்களாம்

வானம் இருமியது
கானம் பொருமியது.
நேரம் கழிந்தது
தூக்கம் துலைந்தது.

இடுக்கில் வைத்த சூரியன்
எழுந்தாடினானாம்
அவன் பெற்றவள் வயிற்றில்

முறுக்கி யெழுந்த அவன் பெற்றவன்
சொன்னானாம் இவனைப் பார்த்து,
யெளவனம் பொருந்திய கள்வன்
அவ்வமயம் நிகரில்லாத செல்வன் என்று

வளர்ந்தான் வளர்ந்தான் ஆளுயர
ஆல மரக் காலுயர,

மழைத் துளியிலும் மென்மையாக
சூரியனாய் சுடர்விட்டான் - தமிழ்
கிழத்திடம் பொறுமையாக
சந்திரனாய் குளிர் விட்டான்.

வானம் அடைந்து விண்மீன்கள்
பார்த்து கதைக்கின்றான்.
மோனம் கொண்ட சூரியன்
வேர்த்து விதைக்கின்றான்.

நண்பர்களே!
உங்களுக்கு இதயம் வேண்டுமா?
பிரதீப்பிடம் இருக்கும்.
எடுத்துக் கொள்ளுங்கள்.
காணக்கிடைக்காதவையல்ல ஆயினும்
பொருத்துங்கள் இதயம் அவரிடமிருந்து
பெருத்துங்கள் நல்ல இதயங்களை அதனிடமிருந்து,

பிரதீப்! என்னாலியன்ற கவி உமக்கு இது
பிற தீ மூட்ட வருவர் பல கவி புது.

ஓவியா
07-01-2007, 10:21 PM
அடடே

பிரதீப்பூ,
கவிதை ஜோரா இருக்குலே

நன்றி ஆதவா

தாமரை
09-01-2007, 11:14 AM
பிரதீப் என்னும் காலசூரியன்

நீல மேகங்களின்
நெருப்புச் சத்தத்திற்கிடையில்
கால சூரியன் கீழ் விழுந்ததாம்
இந்த மானிட உலகுக்கு.

எடுத்து வைக்கவோர் இடமில்லை யென
இடுக்கில் வைத்தலைந்தார்களாம்

வானம் இருமியது
கானம் பொருமியது.
நேரம் கழிந்தது
தூக்கம் துலைந்தது.

இடுக்கில் வைத்த சூரியன்
எழுந்தாடினானாம்
அவன் பெற்றவள் வயிற்றில்

முறுக்கி யெழுந்த அவன் பெற்றவன்
சொன்னானாம் இவனைப் பார்த்து,
யெளவனம் பொருந்திய கள்வன்
அவ்வமயம் நிகரில்லாத செல்வன்என்று

வளர்ந்தான் வளர்ந்தான் ஆளுயர
ஆல மரக் காலுயர,

மழைத் துளியிலும் மென்மையாக
சூரியனாய் சுடர்விட்டான் - தமிழ்
கிழத்திடம் பொறுமையாக
சந்திரனாய் குளிர் விட்டான்.

வானம் அடைந்து விண்மீன்கள்
பார்த்து கதைக்கின்றான்.
மோனம் கொண்ட சூரியன்
வேர்த்து விதைக்கின்றான்.

நண்பர்களே!
உங்களுக்கு இதயம் வேண்டுமா?
பிரதீப்பிடம் இருக்கும்.
எடுத்துக் கொள்ளுங்கள்.
காணக்கிடைக்காதவையல்ல ஆயினும்
பொருத்துங்கள் இதயம் அவரிடமிருந்து
பெருத்துங்கள் நல்ல இதயங்களை அதனிடமிருந்து,

பிரதீப்! என்னாலியன்ற கவி உமக்கு இது
பிற தீ மூட்ட வருவர் பல கவி புது.

ஹைலைட் செய்யப்பட்ட விஷயங்களை விளக்கவும்

ஆதவா
09-01-2007, 11:31 AM
நீல மேகங்களின்
நெருப்புச் சத்தத்திற்கிடையில்

இதற்க்கு எப்படி விளக்கம் தருவது? நெருப்புச் சத்தமென்பது விளக்கக் கூடியதா?

வானம் இருமியது
கானம் பொருமியது.

கானம் என்றால் பாட்டு,
பொருமல் என்றால் அழுகை... அழுகையான பாட்டுப் பாடியது வானம் கால சூரியனை இழந்த சோகத்தில்..

தூக்கம் துலைந்தது.

இவ்ளொ சத்ததிலே தூக்கம் இருக்குமா?

யெளவனம் பொருந்திய கள்வன்
அவ்வமயம் நிகரில்லாத செல்வன்

யெளவனம் என்பது அழகு..
அழகான கள்வன்.. அந்த காலத்தில் நிகரில்லாத செல்வன் (நீங்க இல்லீங்க செல்வன்னா அரசன் அல்லது செல்வம் படைத்தவன்னு பொருள்)

பொருத்துங்கள் இதயம் அவரிடமிருந்து
பெருத்துங்கள் நல்ல இதயங்களை அதனிடமிருந்து,

இதயத்தை அவரிடம் வாங்கிப் பொருத்தி அதனை வைத்து நல்ல இதயங்களைப் பெருத்துங்கள் (பெருத்து = அதிகம் செய்)

தாமரை
09-01-2007, 03:51 PM

1. எனக்குத் தெரிந்தது கார்மேகமும் வெண்மேகமும் தான்,, மேகத்தின் நெருப்பு மின்னல்.. மின்னலின் ஒலி இடி.. இடித்த இடியில் உங்கள் காது செவிடாகி விட்டதா?

2. வானம் இருமி பொருமி கானம் இசைத்தது அப்படின்னா காறித்துப்பியது என்று அர்த்தம் வருதே பிரதீப்புக்கு புரிந்தாலும் பிற தீபங்களுக்கு புரியனுமே...

3. என்ன சால்ஜாப்பு சொன்னாலும் நிகரில்லா செல்வன் அப்படி என்று புகழ்கிறீர்களே அதனால கொஞ்சம் கூச்சமாத்தான் இருக்கு,,

4, பெருக்கு - அதிகமாக்கு பெருத்து - அதிகமாகு, குண்டாகு

ஆக்குவதா ஆகுவதா? ஆக்குவது எமக்கெளிது. ஆகுவது பிரதீப்பிற்கெளிது.. நீங்க எப்படி?

ஓவியா
09-01-2007, 03:54 PM
சபாஷ்...:D :D :D

ஆதவா சமாலி......:eek:

பென்ஸ்
09-01-2007, 06:09 PM
1. எனக்குத் தெரிந்தது கார்மேகமும் வெண்மேகமும் தான்,, மேகத்தின் நெருப்பு மின்னல்.. மின்னலின் ஒலி இடி.. இடித்த இடியில் உங்கள் காது செவிடாகி விட்டதா?

2. வானம் இருமி பொருமி கானம் இசைத்தது அப்படின்னா காறித்துப்பியது என்று அர்த்தம் வருதே பிரதீப்புக்கு புரிந்தாலும் பிற தீபங்களுக்கு புரியனுமே...

3. என்ன சால்ஜாப்பு சொன்னாலும் நிகரில்லா செல்வன் அப்படி என்று புகழ்கிறீர்களே அதனால கொஞ்சம் கூச்சமாத்தான் இருக்கு,,

4, பெருக்கு - அதிகமாக்கு பெருத்து - அதிகமாகு, குண்டாகு

ஆக்குவதா ஆகுவதா? ஆக்குவது எமக்கெளிது. ஆகுவது பிரதீப்பிற்கெளிது.. நீங்க எப்படி?

செல்வனுக்கே உரிய இயல்பான பொறாமை...:D :D :D

ஆதவா
09-01-2007, 06:25 PM
1. எனக்குத் தெரிந்தது கார்மேகமும் வெண்மேகமும் தான்,, மேகத்தின் நெருப்பு மின்னல்.. மின்னலின் ஒலி இடி.. இடித்த இடியில் உங்கள் காது செவிடாகி விட்டதா?

2. வானம் இருமி பொருமி கானம் இசைத்தது அப்படின்னா காறித்துப்பியது என்று அர்த்தம் வருதே பிரதீப்புக்கு புரிந்தாலும் பிற தீபங்களுக்கு புரியனுமே...

3. என்ன சால்ஜாப்பு சொன்னாலும் நிகரில்லா செல்வன் அப்படி என்று புகழ்கிறீர்களே அதனால கொஞ்சம் கூச்சமாத்தான் இருக்கு,,

4, பெருக்கு - அதிகமாக்கு பெருத்து - அதிகமாகு, குண்டாகு

ஆக்குவதா ஆகுவதா? ஆக்குவது எமக்கெளிது. ஆகுவது பிரதீப்பிற்கெளிது.. நீங்க எப்படி?

மிக்க நன்றி... என் கவிதையை இந்த அளவுக்கு ஆராய்ந்ததுக்கு...

1 உங்கள் நிஜ வாழ்வில் தெரிந்த வெண் மற்றும் கார் மேகம் என் கற்பனை உலகில் தெரிய வாய்ப்பில்லை... நான் என்ன செய்ய எங்கு திரும்பினாலும் நீல நிற மேகமே தெரிகிறது..

மேகத்தின் மோதல் இடி யென்பதை அறிவீர்கள்.

நீலமேகத்தின் மோதலால் ஏற்பட்ட இடிபோன்ற சத்தத்தில் கால சூரியன் விழுந்தது... இது என் முதல் பேராவின் அர்த்தம்...

2. வானம் இருமியது; பொருமியது இரண்டையும் இணைத்துப் படித்தால் நீங்கள் சொன்ன காறித் துப்பியது என்ற சொல்லை இப்போதுதான் நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் பார்வையில் அப்படியிருக்கலாம். தவறில்லை..

வானம் இருமியது...
கானம் பொருமியது....

பிரதீப் என்ற சூரியனை இழந்த சோகத்தில் மேகம் இருமிக் கொண்டும் அழுதுகொண்டும் கானம் பாடியது என்று கூட நீங்கள் வைத்துக் கொள்ளலாம்..

3. நிகரில்லாத அரசன் (செல்வன்) என்று நான் சொன்னது மிகைப்படுத்தப் பட்ட கவிதைதான்... யாரும் யாருக்கும் நிகரில்லை... வாழ்த்துக் கவிதையில் இதெல்லாம் நீங்க பார்க்கக் கூடாது...

4. பெருத்து = அதிகப் படுத்து என்று நினைத்து எழுதினேன்... என்னிடம் தமிழ் டிக்ஷ்னரி இல்லை இருந்திருந்ந்தால் கவனித்திருப்பேன்... எழுத்துப் பிழை அங்கே இருந்தாலும் பொருள் பிழை இல்லை என்றே நினைக்கிறேன்..

உங்களின் இந்த கவிதை அலசல் எனக்கு மிகவும் பிடித்துப்போனது.. எல்லா கவிதைகளையும் நீங்கள் அலசலாமே!

பொதுவாக நான் எழுதிய கவிதையை திரும்ப ஓர் முறை படிப்பதோடு சரி.. அர்த்தமிருக்கிறதா என்று பார்க்க மாட்டேன்..

இனி பார்க்கவேண்டுமே!!

உங்கள் விடைக்கு காத்திருக்கும்
ஆதவன்

தாமரை
09-01-2007, 10:25 PM
4. பெருத்து = அதிகப் படுத்து என்று நினைத்து எழுதினேன்... என்னிடம் தமிழ் டிக்ஷ்னரி இல்லை இருந்திருந்ந்தால் கவனித்திருப்பேன்... எழுத்துப் பிழை அங்கே இருந்தாலும் பொருள் பிழை இல்லை என்றே நினைக்கிறேன்..

ஆதவன்
பிரதீப்பு என்பதால் பெருத்து என்பதில் பொருள் பிழை இல்லையென்றே கொள்ளலாம்.. நாராயணா நாராயணா..:eek: :eek: :eek:
(நார் நாராய் கிழிப்பதால் நார் - ஆயினன் நாராயணன் என்றெல்லாம் சொல்லக்கூடாது.. சரியா)

தாமரை
09-01-2007, 10:59 PM
பிரதீப் என்னும் காலசூரியன்
.
காலச் சூரியன் - எமன். (எமன் சூரியனின் பெயர்.. எமனுக்கு காலன் என்ற பெயருண்டு.. சூரிய வம்சத்தவன் ஆதலால் காலச் சூரியன். இல்லையா ஆதவா?)

ஓவியா
09-01-2007, 11:12 PM
பிரதீபு சும்மாவே அழுவாக, இதை பார்த்து
பெங்களூர் வெள்ளமாகாம இருந்தா சரிதான்.......;)

நேரமே சரியில்லை போழும்
புது வருசத்துலே என்னாமா கலாய்க்கிறாங்க.....:eek: :eek:

பிரதீப்பு புலிதான்,
என்னத பண்ண, சமாதான புலியாம்லே.......:D :D

ஆதவா
10-01-2007, 02:19 AM
காலச் சூரியன் - எமன். (எமன் சூரியனின் பெயர்.. எமனுக்கு காலன் என்ற பெயருண்டு.. சூரிய வம்சத்தவன் ஆதலால் காலச் சூரியன். இல்லையா ஆதவா?)

இல்லை செல்வன்.... காலம் + சூரியன்... அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வாழக்கூடிய.. காலநஷத்திரம் கேள்விப் பட்டதில்லையா? சில நூறு வருடங்கள் மட்டுமே வாழுமாம்..

நம் சூரியனையே எடுத்துக்கோங்க. சில லட்சம் வருடம் மட்டுமே வாழும்.. அதுவும் ஒரு கால சூரியந்தான்... இங்கே எதுவும் நிலையில்லை... அப்படிப்பட்ட ஒரி சூரியனைத் தான் இங்கே எழுதியிருக்கிறேன்..

தாமரை
10-01-2007, 03:35 AM

நான் காலமாக்குகிற சூரியன்னு சொன்னேன். நீங்க காலச் சூரியன்னு சொல்லிட்டு இப்படி காலமாகிற சூரியன்னு சொல்லி காலை வாரி கலாய்க்கறீங்களே இது முறைதானா?

ஆதவா
10-01-2007, 04:08 AM
நான் காலமாக்குகிற சூரியன்னு சொன்னேன். நீங்க காலச் சூரியன்னு சொல்லிட்டு இப்படி காலமாகிற சூரியன்னு சொல்லி காலை வாரி கலாய்க்கறீங்களே இது முறைதானா?

அய்யோ நான் வரலீங்க இந்த ஆட்டத்துக்கு

sarcharan
10-01-2007, 04:56 AM
1.
4, பெருக்கு - அதிகமாக்கு பெருத்து - அதிகமாகு, குண்டாகு

ஆக்குவதா ஆகுவதா? ஆக்குவது எமக்கெளிது. ஆகுவது பிரதீப்பிற்கெளிது.. நீங்க எப்படி?

அய்யா, நீர் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறில்லையோ????

தாமரை
10-05-2007, 04:06 PM
வாழ்க்கையில் உண்மை எது பொய்யெது என்று இப்பொழுது தெள்ளத் தெளிவாய் தெரிந்திருக்குமே!

கல்யாண வாழ்க்கை எப்படி சரவணன்

ஓவியா
10-05-2007, 04:18 PM
இது எனக்கு மிகவும் பிடித்தமான திரி,

படிச்சு சிரியோ சிரினு சிரித்தேன்.

சிரிப்பை இன்னும் அடக்க முடியவில்லை...

பிச்சி
10-05-2007, 04:22 PM
பிரதிப் அண்ணா பத்தி எனக்கு தெரியாதுன்னாலும் இங்க படிச்சா அவரு லூட்டி அடிக்கறவரா? சரி நானும் கவிதை எழுதி போட்டறேன்.

பிச்சி
10-05-2007, 04:33 PM
முத்துக்கள் அடங்கிய
பொற்சிலம்புக்குள்
இசைந்துருகும் இன்ப ஒலி
நீ

கவிதைக்குள் காத்திருக்கும்
காதல் வெள்ளங்களை
தடுப்பணைபோடாமல்
நெஞ்சிருத்தியவன்
நீ

அலர்ந்த மலருக்குள்
ஆழும் வண்டுகள் போல்
மொய்ந்தெடுக்கும் பாவையர்.
மயங்காத மணவாளன்
நீ

தமிழுக்கெனவே
படைத்துவிட்ட ழ வின்
இசைக்குள்
சர்ப்பமாய் சுருண்டுகிடப்பாய்
நீ

வெண்மை நிறத்துப்
பால்போல
வர்ணம் கலக்காத
சொர்ணம்
நீ

உன் கருத்துக்களில்
நனைந்துபோய்
நாணப் படுகிறேன்
எனக்கேதும் உண்டா
உன் போலொரு திறம்?

இந்த கவிதை பிரதீப் அண்ணாக்கு.

மதி
11-05-2007, 02:35 AM
அட்றா சக்கை...
அட்றா சக்கை...

மறுபடியும் தொடங்கிடுச்சா....வாழ்த்துக்கள்...ப்ரதீபண்ணே...!

தாமரை
11-05-2007, 02:45 AM
இக்கவிதைகள் மே இறுதியில் புத்தகமாக வெளியிடலாம் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது...

சரி சரி சரி .. நீங்க நினைக்கறதுதான்..

கவி மழை பொழியுங்கள் தோழர்களே...

ஓவியன்
13-05-2007, 03:49 AM
புத்தகத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் செல்வன் அண்ணா?

மன்மதன்
14-05-2007, 11:41 AM
அடடே.. பிரதீப்பை பற்றிய கவிதைகள் புத்தகமாகவே வருதா??

ஓவியன்
14-05-2007, 11:48 AM
அடடே.. பிரதீப்பை பற்றிய கவிதைகள் புத்தகமாகவே வருதா??

ஆமா!

நீங்க தான் அந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுத வேணும்.:grin:

ஆதவா
09-09-2009, 04:31 AM
இராகவனுக்கு பிரதீப்பை பற்றி சொல்ல கை அரிக்குது என்ற கேள்விபட்டவுடனேயே , இங்கே அன்பு நண்பன் 'பிரதீப்' படத்தை போட்டு , இராகவனை தொடர்ந்து அனைவரும் பிரதீப்பை பற்றி இரண்டு வரிகளாவது கவிதை எழுத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..இந்த போட்டோவை பார்க்கும் பொழுது உங்களுக்கு இவர் ஏவிஎம் சரவணம் மாதிரி அமைதியானவரோ என்ற அதிர்ச்சி எழுலாம்.. மாற்றிக்கொள்ளுங்கள். கலகல லகலக ப்பானவர்.. இராகவா.நீ வா...

என்னுடைய ஜாலிக்கூ..

பார்த்தவுடனே
தோன்றியது நீ இல்லையென்று
பிரதீப்...

இவரை பற்றிய டாப் 10 யாராவது கொடுங்க.. :D

அய்யய்யோ... இங்கே இருந்த போட்டோவைக் காணோமே???? :medium-smiley-100:

தாமரை
09-09-2009, 04:33 AM
சுட்டவர் அமரன்..

மன்மதன்
09-09-2009, 09:40 AM
ஆமா!

நீங்க தான் அந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுத வேணும்.:grin:

கண்டிப்பாஆஆஆஆஆ....:D

ஆதவா
09-09-2009, 10:06 AM
கண்டிப்பாஆஆஆஆஆ....:D

ரெண்டு வருஷமாச்சு,.. கேள்வி கேட்டு....:eek:

aren
09-09-2009, 11:41 AM
ரெண்டு வருஷமாச்சு,.. கேள்வி கேட்டு....:eek:

மன்மதன் லேட்டா வந்தாலும் நிச்சயம் லேட்டஸ்டாதான் வருவார். என்ன மன்மதா நான் சொல்வது சரிதானே?

aren
09-09-2009, 11:42 AM
சுட்டவர் அமரன்..

பர்மிட் வாங்கி வைத்திருக்கிறாரா?

மன்மதன்
09-09-2009, 02:31 PM
ரெண்டு வருஷமாச்சு,.. கேள்வி கேட்டு....:eek:

நீங்க மூணு வருசம் கழிச்சு சந்திப்பு பதிவு போடுவீங்க..நாங்க முன்னுரைக்கு பின்னுரை போடக்கூடாதாக்கும்..:rolleyes::D

மன்மதன்
09-09-2009, 02:32 PM
மன்மதன் லேட்டா வந்தாலும் நிச்சயம் லேட்டஸ்டாதான் வருவார். என்ன மன்மதா நான் சொல்வது சரிதானே?

அதேதான்..;)

ஆதவா
09-09-2009, 03:11 PM
மன்மதன் லேட்டா வந்தாலும் நிச்சயம் லேட்டஸ்டாதான் வருவார். என்ன மன்மதா நான் சொல்வது சரிதானே?

நீங்க மூணு வருசம் கழிச்சு சந்திப்பு பதிவு போடுவீங்க..நாங்க முன்னுரைக்கு பின்னுரை போடக்கூடாதாக்கும்..:rolleyes::D

:shutup::shutup: