PDA

View Full Version : நினைவில் நின்ற நிலாப் பொழுதுகள்!

mukilan
30-08-2005, 01:19 AM
என்
கவலைகளை மறந்து
பாதுகாப்பாய் உணர
உன் தோள்கள்
தருவாயா?

பரபரப்பான
ஒரு மாலையில்
பரிதவிப்புடனான
இக் கேள்வியால்
என்னை ஆக்கிரமித்து
விட்டாய்!

படிக்கும் புத்தகம்
முழுவதும்
உங்க பேர்தான்ப்பா தெரியுது!
உனது இவ் வரிகளால்
எனக்கு யாதுமாகிப்
போனாய் நீ!

நுரைத்துப் பிரவாகமாய்
இசை பாடிக்
கொண்டிருந்த
ஒரு இனிய
மாலைத்தருணத்தில்
உனக்கும்
எனக்குமான
எண்ண முரண்பாடுகள்!

"நமக்கு
ஒத்து வராது!
எண்ணி எட்டே
நாளில்
விவாகரத்தாய் விடும்"
உனது
ஆவேச வார்த்தைகள்
அமிலக் கடலில் நான்.!

இப்போது புரிகிறது!
நீ
என்னை
விட்டு விட்டு
என் மேல்
வைத்திருந்த
அபிமானத்தை
காதலித்திருக்கிறாய்.!!!

பி.கு : இதற்கு பொருத்தமான ஒரு தலைப்பு கிடைக்காததால் இப்படி ஒரு தலைப்பிட்டேன். நண்பர்கள் யாரேனும் ஆலோசனை கூறுங்களேன்.

பிரியன்
30-08-2005, 05:07 AM
நீர்க்குமிழ் காதல் - இது நல்லா இருக்கா முகிலன்

mukilan
30-08-2005, 05:11 AM
நீர்க்குமிழ் காதல் - இது நல்லா இருக்கா முகிலன்
அன்பு பிரியன்

நீர்க்குமிழ் என்ற பெயர் வைக்க காரணம்.??

கானல் நீர்- இது எப்படி?

பிரியன்
30-08-2005, 05:18 AM
அன்பு பிரியன்

நீர்க்குமிழ் என்ற பெயர் வைக்க காரணம்.??

கானல் நீர்- இது எப்படி?

நீர்க்குமிழின் காலம் மிகக்குறைவு. சரி வர புரிந்து கொள்ளாத காதலென்றால்லும் அவர்கிளிடையே காதலே இல்லை என்று சொல்ல முடியாது என்பதைக் குறிக்கவே அந்தத் தலைப்பைச் சொன்னேன்..

கானல் நீர் என்றால் அவர்களிடையே காதலே இல்லை என்று ஆகிவிடும்... தலைப்பு நீங்கள் எதை மனதில் வைத்து எழுதியுள்ளீர்கள் எனப்தைப் பொறுத்தது.

மேலும் கருத்துமுரண்களால் பிரிவது ஒன்றும் பாவமான செயலல்ல. அதுவும் ஒருவகையில் பிரியமானவர்களை தொடர்ந்து காயப்படுத்தாமல் இருக்கும்

mukilan
30-08-2005, 05:23 AM

அருமையான விளக்கம் பிரியன்.நன்றி நான் கானல் நீர் எனக் குறிப்பிட்டது ஒரு விதமான பிம்பத்தை மாயையை விரும்புவது போல அபிப்ராயத்தை காதலிப்பதால்.

பிரியன்
30-08-2005, 05:27 AM
அருமையான விளக்கம் பிரியன்.நன்றி நான் கானல் நீர் எனக் குறிப்பிட்டது ஒரு விதமான பிம்பத்தை மாயையை விரும்புவது போல அபிப்ராயத்தை காதலிப்பதால்.

இதுவும் சரிதான் முகிலன். ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை.

மன்மதன்
30-08-2005, 05:28 AM
உங்கள் தலைப்பு நல்லாவே இருக்கு.. ஏன் மாற்றணும்.. இந்த கவிதையில் 'நினைவில் நிற்கும்' பொழுதுகள்தானே வருகிறது.

mukilan
30-08-2005, 05:30 AM
உங்கள் தலைப்பு நல்லாவே இருக்கு.. ஏன் மாற்றணும்.. இந்த கவிதையில் 'நினைவில் நிற்கும்' பொழுதுகள்தானே வருகிறது.

இதுவும் சரிதான்...ஹி! ஹி!!

pradeepkt
30-08-2005, 05:49 AM
நீ
என்னை
விட்டு விட்டு
என் மேல்
வைத்திருந்த
அபிமானத்தை
காதலித்திருக்கிறாய்.!!!

-- எனக்கு மிகப் பிடித்த வரிகள். சில காதல்களில் (நிறையன்னு சொன்னா அடிக்க வருவாங்க) மற்றவரின் குணங்கள் அல்லது குணமல்லாதவைகள் இவர்களுக்குப் பிடித்துப் போவதுதான் காரணம். எதிர்பார்ப்புகள் கொஞ்சமேனும் இருப்பதால்தான் அவை விட்டு மாறும்போது பிரச்சினைகள் முளளக்கின்றன.

பிரியன்
30-08-2005, 06:05 AM
இப்போது புரிகிறது!
நீ
என்னை
விட்டு விட்டு
என் மேல்
வைத்திருந்த
அபிமானத்தை
காதலித்திருக்கிறாய்.!!!

பி.கு : இதற்கு பொருத்தமான ஒரு தலைப்பு கிடைக்காததால் இப்படி ஒரு தலைப்பிட்டேன். நண்பர்கள் யாரேனும் ஆலோசனை கூறுங்களேன்.

காதல் தோன்றுவதே அந்த அபிமானத்தில்தான். நாம் ஒருவரை விரும்புகிறோம் என்றால் எதை விரும்புகிறேம். ஆன்மாவையா, உடலையா, இல்லையே. அவர் மீது நாம் கொண்ட எண்ணங்களைத்தானே. இந்த உலகிலே மனிதன் அதிகம் விரும்புவது தன்னையும் தான் கொண்ட ர்ண்ணங்களையும்தான். அதை ஏற்பவர்கள் மீதே பிரியம் கொள்கிறான். எனவே அவள் ஏமாற்றவில்லை. அதை உணர்ந்தவன் ஞானி.

gragavan
30-08-2005, 06:13 AM
முகிலன் உங்கள் கவிதையைப் பார்த்தேன். ஆழப் படித்துவிட்டு கருத்திடுகிறேன்.

gragavan
30-08-2005, 10:14 AM
எனக்கு இந்தக் கவிதைக்குரிய பெயர் மாயமான் என்றிருக்கலாம் என்று படுகிறது.

இருக்கிறது என்று இல்லாததை நம்புவது. இல்லாமல் போனதும் இருக்கக் கூடாதா என்று ஏங்க வைப்பதும் மாயமானே.

அபிமானம் காதலை உண்டாக்கும். ஆனால் உண்மையான காதல் அபிமானங்களை மாற்றி அபிப்பிராயங்களைத் தாண்டி ஓடும். ஆகையால் கவிதை வரிகள் சரியே.

பாராட்டுகள் முகிலன். இன்னும் நிறைய முயலுங்கள்.

mukilan
30-08-2005, 01:37 PM
மிக்க நன்றி ராகவன். உண்மையான காதல் எங்குமே தோற்றுப் போவதில்லை. இது போன்ற மாய மானைக் காதலிப்பவர்கள் தான் இன்னமும் ஒரு வன வாசத்தை அனுபவிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

gragavan
30-08-2005, 01:42 PM
என்னய்யா முகிலன், நான் காலைல லேட்டா ஆபீசுக்கு வரும் போதும் இருக்கீரு. அப்புறம் வீட்டுக்குக் கிளம்பும் போதும் இருக்கீறே..........

pradeepkt
30-08-2005, 03:04 PM
ராகவன்,
ஒரு வேளை நீங்க ரொம்ப உழைக்கறீங்களோ?

mukilan
30-08-2005, 03:26 PM
என்னய்யா முகிலன், நான் காலைல லேட்டா ஆபீசுக்கு வரும் போதும் இருக்கீரு. அப்புறம் வீட்டுக்குக் கிளம்பும் போதும் இருக்கீறே..........

எல்லாம் தமிழ் மன்றத்தின் மீதான பற்றுதான்னு சொன்னீங்கன்னா நம்பவா போறீங்க. லேட்டா ஆபீஸ் வரும்போது வீட்டில இருப்பேன்.நீங்க வீட்டுக்குக் கிளம்பற நேரத்தில ஆபிஸ்ல இருப்பேன். ஆனா எப்போவும் logout பண்ண மாட்டேன். அதான்.

kavitha
31-08-2005, 06:04 AM
மேலும் கருத்துமுரண்களால் பிரிவது ஒன்றும் பாவமான செயலல்ல. அதுவும் ஒருவகையில் பிரியமானவர்களை தொடர்ந்து காயப்படுத்தாமல் இருக்கும்
__________________
அன்பின்
பிரியன்

சிறந்த கருத்து. முகிலன் அவர்களின் கவிதையும் நன்று

Nanban
31-08-2005, 09:40 PM
முகிலன் காதலின் ஒரு ஆழமான பரிமாணத்தைத் தொட்டிருக்கிறீர்கள். ஒருவர் மீது மற்றவருக்கு எழும் ரசனையையே காதலாகக் கருதி கொண்டு அவஸ்தை படுபவர்களின் மத்தியில் வெகு சிலருக்கே இந்த சிந்தனைகள் எழுகின்றன. வெளியிலே தெரியும் அந்த இயல்புகளுக்குப் பின்னால், மனிதனின் நிஜம் இருக்கிறது. அவனது அடையாளங்கள் இருக்கின்றன, வேர்கள் இருக்கின்றன. லட்சியங்கள் இருக்கின்றன.

இவற்றையெல்லாம் தேடி தேடி மனிதனை விளாங்கிக் கொள்வதை விட, புறத் தோற்றத்தின் வடிவம், குரல் இனிமை, உடைகளின் நளினம், நிறம், உபயோகிக்கும் வாகனங்கள், உத்தியோகம் சம்பளம் - இத்தகைய கவர்ச்சிகளே பிரதானமாகிப் போகும் காதலின் வெற்றியும் தோல்வியும் திருமணத்தில் முடிகிறதா என்ற பார்வையுடன் காதல் எடை போடப்படுகிறது.

''உன்னை உனக்காக மட்டும் தான் காதலிக்கிறேன் " என்று ஒரு பத்து வருடங்கள் கழிந்ததும் தன் துணையிடம் சொல்லிப் பார்க்கட்டுமே - அது ஏற்கப் படுகிறதா?

இன்றைய கால கட்டத்தில், காதல் ஒரு கணக்கீடு ஆகிவிட்டது என்பது நிதர்சனம்.

kavitha
01-09-2005, 05:54 AM
''உன்னை உனக்காக மட்டும் தான் காதலிக்கிறேன் " என்று ஒரு பத்து வருடங்கள் கழிந்ததும் தன் துணையிடம் சொல்லிப் பார்க்கட்டுமே - அது ஏற்கப் படுகிறதா?
இப்படிச் சொன்னால் கண்டிப்பாக மகிழ்வார்கள்.

நிறைகளை மட்டும் பார்த்து வருவதில்லை காதல்; 100% அப்படியே ஏற்றுக்கொள்வதே காதல் என்று எங்கேயோ கேட்டிருக்கிறேன்.

ஓவியா
13-11-2006, 06:03 PM
காதல் தோன்றுவதே அந்த அபிமானத்தில்தான். நாம் ஒருவரை விரும்புகிறோம் என்றால் எதை விரும்புகிறேம். ஆன்மாவையா, உடலையா, இல்லையே. அவர் மீது நாம் கொண்ட எண்ணங்களைத்தானே. இந்த உலகிலே மனிதன் அதிகம் விரும்புவது தன்னையும் தான் கொண்ட எண்ணங்களையும்தான். அதை ஏற்பவர்கள் மீதே பிரியம் கொள்கிறான். எனவே அவள் ஏமாற்றவில்லை. அதை உணர்ந்தவன் ஞானி.

சிந்திக்க தோன்றும் கருத்து....

நன்றி

ஓவியா
13-11-2006, 06:09 PM
என்
கவலைகளை மறந்து
பாதுகாப்பாய் உணர
உன் தோள்கள்
தருவாயா?

பரபரப்பான
ஒரு மாலையில்
பரிதவிப்புடனான
இக் கேள்வியால்
என்னை ஆக்கிரமித்து
விட்டாய்!

படிக்கும் புத்தகம்
முழுவதும்
உங்க பேர்தான்ப்பா தெரியுது!
உனது இவ் வரிகளால்
எனக்கு யாதுமாகிப்
போனாய் நீ!

நுரைத்துப் பிரவாகமாய்
இசை பாடிக்
கொண்டிருந்த
ஒரு இனிய
மாலைத்தருணத்தில்
உனக்கும்
எனக்குமான
எண்ண முரண்பாடுகள்!

"நமக்கு
ஒத்து வராது!
எண்ணி எட்டே
நாளில்
விவாகரத்தாய் விடும்"
உனது
ஆவேச வார்த்தைகள்
அமிலக் கடலில் நான்.!

இப்போது புரிகிறது!
நீ
என்னை
விட்டு விட்டு
என் மேல்
வைத்திருந்த
அபிமானத்தை
காதலித்திருக்கிறாய்.!!!

.

கவிதை அருமை....
பாரட்டுக்கள் முகில்ஷ்

இன்னும் அதிகம் படைக்கலாமே.....

guna
14-11-2006, 02:14 AM
ஆழமான கருத்தை சொன்ன, அழகான கவிதைக்கு வாழ்த்துகள் முகிலன்..

உங்கள் கவிதையை படிச்சு,நேசத்தை பற்றி ப்ரியன்,ராகவன் & நன்பன் சொன்ன கருத்துகள் அனைத்தும் ஏற்கக்கூடியவையே..

எதிர்பார்புகள் இருக்கும் வரை, காதலில் தேடல் ஓயாது, தன் எண்ணங்களுக்கு ஏற்றப்படி ஒருவர் கிடைக்கும் வரை,தேடல் தொடர்வதால் தான், ஒருவரை பல ப்ரியமானவர்களோடு பார்க்க நேரிடுகிறது..

கவிதா, "உன்னை உனக்காகவே மட்டும் நேசிக்கறேன்னு" சொல்லும் துணை கிடைப்பவர்கள் அதிஷ்டசாலிகளே..

குணா

இளசு
14-11-2006, 08:09 PM
மீள்பார்வைக்கு மீட்டுத்தந்த ஓவியாவுக்கு நன்றி..

முகிலன்..
உள்ளக்குளத்தின் பாசித் தரையை தொட்டு எழுதிய
உண்மை வரிகள்.. உறைக்கிறது... ருசிக்கிறது...
பாராட்டுகள்..

உங்களுக்குள் இருக்கும் கவிஞனை அடிக்கடி உலவவிடுங்கள்..
நிறைய நிறைய வாசியுங்கள்.. நிறைய எழுதுங்கள்..

-----

பிரதீப். பிரியன், நண்பன், கவீ - இவர்களின் பின்னூட்டங்களைக்
காணும்போதே நெஞ்சு நிறைந்து கனத்து சொல்கிறது--
அது ஒரு நிலாக்காலம்!

mukilan
15-11-2006, 03:37 AM
ஓவியா, குணா, இளசு அண்ணா உங்களுக்கு என் நன்றிகள். ஒரு நல்ல விமர்சனத்திற்கு வித்திட்ட கவிதை என எண்ணும் போது மகிழ்வைத் தருகிறது.விமர்சித்த அனைவருக்கும் நன்றி!

ஓவியா
15-11-2006, 04:40 PM
ஓவியா, குணா, இளசு அண்ணா உங்களுக்கு என் நன்றிகள். ஒரு நல்ல விமர்சனத்திற்கு வித்திட்ட கவிதை என எண்ணும் போது மகிழ்வைத் தருகிறது.விமர்சித்த அனைவருக்கும் நன்றி!

இப்படியே நன்றி வணக்கம் போட்டுட்டு போயிடலாமுனு நினைக்கக்கூடாது அம்பி....
அடுத்த கவிதையை எழுதும் ஓய்....:cool: