PDA

View Full Version : எனக்குதான் புரியும்



gragavan
29-08-2005, 09:37 AM
காற்றுப் பல்லாக்கு
இன்னமும் தூக்கி வருகிறது
நாம் சேர்ந்து வெளியேற்றிய மூச்சுகளை

நேற்று போலுண்டு
மறக்கவில்லை காதோரத்தில்
நாம் சேர்ந்து பிதற்றிய பேச்சுகளை

வெற்றுப் போர்வைகள்
விலகிக் கிடக்க, மேனி மறக்கவில்லை
ஒருவருக்கொருவர் பதித்துக் கொண்ட அச்சுகளை

மூச்சும்
பேச்சும்
அச்சும் - என்னை
நொச்சு நொச்சென்று
தொந்தரவு செய்தாலும்
நானுன்னைத் தொந்தரவு செய்யவில்லை
உன் நிலை எனக்குத் தெரியும்
அது எனக்குதான் புரியும்

pradeepkt
29-08-2005, 09:39 AM
இன்னொரு முதுமைக் காதல் போல் தோன்றுகிறதே?
ராகவன் எப்படியாயினும் உங்கள் சொல்லாடல் இனிது.
இன்னொரு விவாதம் துவங்கட்டும்.

gragavan
29-08-2005, 09:45 AM
இன்னொரு முதுமைக் காதல் போல் தோன்றுகிறதே?

அதென்ன இன்னோரு.......

ம்ம்ம்ம்....நான் இப்ப எதுவும் சொல்லலை......மத்த நண்பர்கள் கருத்துகளைச் சொல்லட்டும். அப்புறம் நான் வாய்த் தொறக்கிறேன்.

பிரியன்
29-08-2005, 09:51 AM
காற்றுப் பல்லாக்கு
இன்னமும் தூக்கி வருகிறது
நாம் சேர்ந்து வெளியேற்றிய மூச்சுகளை

நேற்று போலுண்டு
மறக்கவில்லை காதோரத்தில்
நாம் சேர்ந்து பிதற்றிய பேச்சுகளை

வெற்றுப் போர்வைகள்
விலகிக் கிடக்க, மேனி மறக்கவில்லை
ஒருவருக்கொருவர் பதித்துக் கொண்ட அச்சுகளை

மூச்சும்
பேச்சும்
அச்சும் - என்னை
நொச்சு நொச்சென்று தொந்தரவு செய்யவும்
நானுன்னைத் தொந்தரவு செய்யவில்லை
உன் நிலை எனக்குத் தெரியும்
அது எனக்குதான் புரியும்

இந்த வரிகள் வெறும் வாக்கியமாகவே நின்று விட்டது.
மற்றபடி உள்ளத்தின் கிளர்ச்சியில் உடல்சார் உணர்வுகளை நயமாக சொல்ல வருகிறது உங்களுக்கு. நான் மன்மதனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னேன். ஆபாசமில்லாமல் எழுதுவதன் எல்லையை ராகவன் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்று. இந்தக் கவிதை மற்றுமொரு எடுத்துக்காட்டு.

மற்ற கருத்துகளோடு விரைவில் வருகிறேன்

மன்மதன்
29-08-2005, 10:28 AM
கவிதை நன்றாக இருக்கிறது.. விவாதத்தில் நான் கலந்துகொள்கிறேன்..ஹிஹி

gragavan
29-08-2005, 10:40 AM
கவிதை நன்றாக இருக்கிறது.. விவாதத்தில் நான் கலந்துகொள்கிறேன்..ஹிஹிஅப்போ விவாதத்தை நீயே தொடக்கு நாரத(மன்)மதா.........

மன்மதன்
29-08-2005, 10:57 AM
தலைப்பே 'எனக்குத்தான் புரியும்'.. 'உங்களுக்கும் புரியும்' என்று மாத்துங்க..:rolleyes: :rolleyes:

gragavan
29-08-2005, 11:29 AM
தலைப்பே 'எனக்குத்தான் புரியும்'.. 'உங்களுக்கும் புரியும்' என்று மாத்துங்க..:rolleyes: :rolleyes:புரியுங்கறது உண்மைன்னா....என்ன புரிஞ்சதுன்னு சொல்லு பாக்கலாம்?

மன்மதன்
29-08-2005, 11:55 AM
இப்படி காமெடி டைம் 'உள்ளே-வெளியே' கணக்கா கேட்டா எப்படி?? :D :D அர்ச்சனா வரட்டுமே..:D

gragavan
29-08-2005, 12:38 PM
நொச்சு நொச்சென்று தொந்தரவு செய்யவும்
நானுன்னைத் தொந்தரவு செய்யவில்லை

இந்த வரிகள் வெறும் வாக்கியமாகவே நின்று விட்டது.
மற்றபடி உள்ளத்தின் கிளர்ச்சியில் உடல்சார் உணர்வுகளை நயமாக சொல்ல வருகிறது உங்களுக்கு.

புரியவில்லை பிரியன்.வெறும் வாக்கியமாகவே நின்றுவிட்டதென்றால்?


நான் மன்மதனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னேன். ஆபாசமில்லாமல் எழுதுவதன் எல்லையை ராகவன் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்று. இந்தக் கவிதை மற்றுமொரு எடுத்துக்காட்டு.
நன்றி பிரியன். எல்லையை அறிதல் மிக முக்கியம். அது ஒருவிதமான பக்குவம் என்று நினைக்கிறேன்.



மற்ற கருத்துகளோடு விரைவில் வருகிறேன்
வாங்க வாங்க காத்திருக்கிறேன்.

பிரியன்
29-08-2005, 12:43 PM
அது ஒரு வாக்கியத்தை வாசிக்கும் உணர்வைத்தான் தருகிறது.
என் பார்வையில் கவிதைக்குரிய ஒரு அழுத்தத்தை - ஈர்ப்பைத் தரவில்லை என்பதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்..

கத்தி மேல் ஆடும் ஆட்டம் உங்களுக்கு லாவகமாகவே வருகிறது

pradeepkt
29-08-2005, 12:43 PM
இன்னொரு முதுமைக் காதல் போல் தோன்றுகிறதே?
ராகவன் எப்படியாயினும் உங்கள் சொல்லாடல் இனிது.
இன்னொரு விவாதம் துவங்கட்டும்.
இல்ல ஏற்கனவே ஒரு முறை முதுமையின் வேதனையைப் பற்றி நீங்கள் எழுதி இருந்தீர்களே, நாளை என்று தலைப்பிட்டு...
அது நினைவுக்கு வந்தது.

gragavan
29-08-2005, 12:47 PM
அது ஒரு வாக்கியத்தை வாசிக்கும் உணர்வைத்தான் தருகிறது.
என் பார்வையில் கவிதைக்குரிய ஒரு அழுத்தத்தை - ஈர்ப்பைத் தரவில்லை என்பதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்..

கத்தி மேல் ஆடும் ஆட்டம் உங்களுக்கு லாவகமாகவே வருகிறதுகாரணமில்லாமலில்லை பிரியன். அது செய்யுள் பதமுறை.
அதையே...

நொச்சு நொச்சென்று - என்னைத்
தொந்தரவு செய்தாலும்

என்று மாற்றியிருந்தால் சுகப்பட்டிருக்குமோ என்னவோ!

பிரியன்
29-08-2005, 12:51 PM
காரணமில்லாமலில்லை பிரியன். அது செய்யுள் பதமுறை.
அதையே...

நொச்சு நொச்சென்று - என்னைத்
தொந்தரவு செய்தாலும்

என்று மாற்றியிருந்தால் சுகப்பட்டிருக்குமோ என்னவோ!


அதேதான் ராகவன், அழுத்தம் கிடைத்த பின்னும் வாக்கியத்தை தொடரக்கூடாது. அடுத்த வரிக்கு போய்விட வேண்டும். இங்கு என்னைத் என்று முடியும் போதே ஒரு கவனத்தை ஏற்படுத்துகிறதல்லவா...

மற்றபடி எனக்கு செய்யுள் வடிவங்கள் பற்றி அதிகப்படியான அறிவோ,பரிச்சியமோ பயிற்சியோ கிடையாது.

gragavan
29-08-2005, 12:58 PM
அதேதான் ராகவன், அழுத்தம் கிடைத்த பின்னும் வாக்கியத்தை தொடரக்கூடாது. அடுத்த வரிக்கு போய்விட வேண்டும். இங்கு என்னைத் என்று முடியும் போதே ஒரு கவனத்தை ஏற்படுத்துகிறதல்லவா...

மற்றபடி எனக்கு செய்யுள் வடிவங்கள் பற்றி அதிகப்படியான அறிவோ,பரிச்சியமோ பயிற்சியோ கிடையாது.அவ்வளவுதான....மாத்தீட்டாப் போச்சு......

gragavan
29-08-2005, 01:01 PM
இல்ல ஏற்கனவே ஒரு முறை முதுமையின் வேதனையைப் பற்றி நீங்கள் எழுதி இருந்தீர்களே, நாளை என்று தலைப்பிட்டு...
அது நினைவுக்கு வந்தது.ஆமாம் மறந்தே போனேன் அதை. ஆனால் இது முதுமைக்கான கவிதையென்று யார் சொன்னார்?

pradeepkt
29-08-2005, 01:08 PM
யார் சொன்னா என்ன சொல்லாட்டி என்ன?
முதல் பார்வையில எனக்கு அப்படித் தோணுது... :D

gragavan
29-08-2005, 01:15 PM
யார் சொன்னா என்ன சொல்லாட்டி என்ன?
முதல் பார்வையில எனக்கு அப்படித் தோணுது... :Dசரி. நான் கேள்விய மாத்துறேன். இது ஆண் சொல்றதுன்னு நெனைச்சீங்களா? பெண் சொல்றதுன்னு நெனைச்சீங்களா?

kavitha
31-08-2005, 06:26 AM
Quote:
Originally Posted by பிரியன்
நான் மன்மதனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னேன். ஆபாசமில்லாமல் எழுதுவதன் எல்லையை ராகவன் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்று. இந்தக் கவிதை மற்றுமொரு எடுத்துக்காட்டு.

நன்றி பிரியன். எல்லையை அறிதல் மிக முக்கியம். அது ஒருவிதமான பக்குவம் என்று நினைக்கிறேன்

கவிதையின் கடைசி பத்தி தலைப்பிற்கு அர்த்தம் தருகிறது. கவிதை நன்று. இந்தக்கவிதையும் பொதுப்பால் கவிதையை ஒட்டியே அமைந்ததாகக் கருதுகிறேன். மேற்கொண்டு விவாதமென்றால் பண்பட்டவர் பகுதிக்கு மாற்றுங்கள்.

பிரசன்னா
09-09-2005, 05:42 PM
கடவுள்
தன் அன்பு மகனை, மகளை
தேட வைப்பதில்லை...
தேடிவருவார் புரிந்துகொள்ளுங்கள்....

பென்ஸ்
30-11-2005, 07:55 AM
.................
நாம் சேர்ந்து பிதற்றிய பேச்சுகளை
........................
ஒருவருக்கொருவர் பதித்துக் கொண்ட அச்சுகளை
..................
மூச்சும்
பேச்சும்
அச்சும் - என்னை
நொச்சு நொச்சென்று
தொந்தரவு செய்தாலும்
நானுன்னைத் தொந்தரவு செய்யவில்லை
உன் நிலை எனக்குத் தெரியும்
அது எனக்குதான் புரியும்

உன்னை என்னைதவிர யார் நன்றாக புரிந்திருக்க முடியும், அதனால் தான் உன் நிலை புரிந்து தொந்தரவு செய்யாமல் இருக்கிறேன்...... அருமையான வரிகள், அதையும் ... பிரிவின் வலியையும், பெருந்தன்மையும் காட்டி.. காத்திருத்தலையும் ஒரு சிரு சுயநலத்தையும் சொல்லுகிறீர்களா?????

ப்ரியன்
01-12-2005, 09:58 AM
கவிதை இருபாலருக்குமே பொருந்துமாறு அமைந்தது சிறப்பு...இரு பக்கமிருந்து பார்த்தாலும் சரியாகவே அர்த்தம் தருகின்றது...

என்னைப் பொருத்தவரை இது தற்காலிக இடைவெளியைப் பற்றியது என எனக்கு தோன்றுகிறது

உன்னை நன்றாகப் புரிந்த காரணத்தால் தொந்தரவு செய்யாமல் காத்திருக்கிறேன் என்பது காதலின் அழகிய வெளிப்பாடு...

உடல் சார்ந்து எழுதப்பட்டாலும் எல்லைமீறாமல் உணர்வுகளை புரிய வைத்தது வாழ்த்துக்கள் ராகவன்