PDA

View Full Version : அடுத்து என்ன?.



rambal
18-04-2003, 07:11 PM
மரம் வெட்டி
கட்டிடம் நட்டோம்..
ஏரி தூர் வார்த்து
மனையடி விற்றோம்..
மழைகளை நாடு
கடத்திவிட்டு
வராத நீருக்கு
சண்டை போட்டால் எப்படி?

பிளாஸ்டிக் கழிவுகளை
புதைத்து மண்ணைக் கெடுத்து விட்டு
கன்னி கழிந்த பெண்ணிடம்
கற்பை கேட்டால் எப்படி?

சாய பட்டறை
தோல் பதனீடு என்று
கழிவு நீரை
ஆற்றில் கலந்து
அதை நிறம் மாற்றி விட்டு
இலவசமாய் வியாதிகள்
வந்தது பற்றி
புலம்பி என்ன பயன்?

காற்றில் கார்பன் அளவை
அதிகப் படுத்தி
ஓஸோனின்
கன்னித்திரையைக் கிழித்து
விட்டு
ஏறிப் போன வெப்பம் பற்றி
புலம்பி என்ன பயன்?

இப்படியான பல நிகழ்வுகளில்
மனிதனைக் கொன்று
பூமியை மிகப்பெரிய
கல்லறையாக்கிவிட்டு
பிணங்களை சுமந்து
கொண்டா சுற்றும்?

poo
18-04-2003, 07:25 PM
தவறு நம் கையில்...
கடவுளை நொந்தென்ன லாபம்?!

உன் கருத்து அருமை ராம்!!!

இளசு
18-04-2003, 07:47 PM
காலத்துக்கேற்ற கவிதை இளவலே, உன்
கவலைகள் , சூழல் ஆர்வலரின் கண்ணீர்த் திவலைகள்
பிரளமாய் மாறி பூமிப்பந்தைக் கழுவட்டும்.
மாசுகள் மறையட்டும்.


இயற்கையோடு இணைந்து வாழாமல்
மாசுபட்ட சூழலை மல்லுக்கட்டி
வளர்த்துக்கொண்டிருக்கும் மனிதா
வளர்த்த கடா மார்பில் பாய
வருத்தப்பட்டு லாபமென்ன...?

இராசகுமாரன்
19-04-2003, 06:14 AM
நல்லதொரு எதார்த்தக் கவிதை..
பாராட்டுக்கள்.