PDA

View Full Version : பனித்துளி



பிரியன்
28-08-2005, 02:46 PM
நேற்றிரவு நாம் பேசிக் கொண்டதை
வேடிக்கை பார்த்த விண்மீன்களெல்லாம்
மலர்களின் மீது பனித்துளிகளாகி
வருகிறதின்று
உன் கூந்தலில் சூடிக்கொள்ள.....

pradeepkt
28-08-2005, 02:54 PM
ஆகா,
விண்மீன்களுக்கே இத்தனை மயக்கமா?
நீவிர் காதல் நாயகன் ஐயா.

Nanban
28-08-2005, 06:38 PM
விண்மீன்கள்
பனித்துகள்களாய்
பரந்து கிடந்த வெளியில்
காலையில் கால் பதிக்க வேண்டாம்.

துளித்துளியாய்
சிதறிக் கிடக்கும்
உன் எந்த முகத்தில்
முதன்முதலாய்
கால்களைப் பதிப்பேன்?

பெருத்துக் கிடக்கும் உடல்
மூச்சு விட சிரமப்பட்டாலும்
புல்தரையில் நடவாமலே
எண்ணிக் கொண்டிருப்பேன் -

உன்னை
எத்தனை முறை
நீ வந்து போகிறாய் என்று?!!

மன்மதன்
29-08-2005, 05:02 AM
பருவ மங்கை
உன் பரு
முகத்தை பார்த்தால்
என் துரு பிடித்த இதயம்
கூட தூசு தட்டி
மிளிர்கிறது...

சிகப்பு நிற
பனித்துளியை
கண்டு மழை நீர்
கூட உன் முகத்தை
சீண்டாமல் சற்றே
தூர தள்ளி விழுகிறது பார்..

-
மன்மதன்

pradeepkt
29-08-2005, 05:15 AM
அட மன்மதா,
பிரமாதம்யா...
பிரியனுக்கேத்த பதில் கவிதைகள் திரும்ப ஆரம்பித்து விட்டன!!
அருமை.

மன்மதன்
29-08-2005, 05:19 AM
டச் விட்டு போயிடுச்சு. எழுதவே வரலை. அதான் இப்போ எழுதி பழகுகிறேன்..

pradeepkt
29-08-2005, 05:26 AM
இன்னும் பழகி இன்னும் நிறைய எழுதப்பா.
வாழ்த்துகள்.

gragavan
29-08-2005, 05:58 AM
வீண்மீனுக்கும் - உனது
கண்மீனுக்கும் நடந்தது போட்டி
தோற்றவைகள் பனித்துளிகளாக
உதிர்ந்து விட்டன!

பிரியன்
29-08-2005, 05:59 AM
அசத்தல் ராகவன்... இன்னும் இன்னும் கவிதை எழுதுங்கள்

gragavan
29-08-2005, 06:11 AM
நன்றி பிரியன். இன்னமும் நல்லவிதமாக முயல்கிறேன்.

மன்மதன்
29-08-2005, 06:30 AM
கவிதை அசத்தல் இராகவன்..

gragavan
29-08-2005, 07:07 AM
நன்றி மாம்ஸ்.

kavitha
31-08-2005, 06:18 AM
அட எல்லோரும் விண்மீன் பாட்டு பாடி அசத்துறீங்களே...
எனக்கும் ஏதாச்சும் தோணுதானு பார்க்கிறேன். ம்...

"நீ கண்சிமிட்டி சிரிக்கிறாய்
நான் கண்பார்த்தும் சரிகிறேன்"

பிரியன்
31-08-2005, 06:26 AM
அட எல்லோரும் விண்மீன் பாட்டு பாடி அசத்துறீங்களே...
எனக்கும் ஏதாச்சும் தோணுதானு பார்க்கிறேன். ம்...

"நீ கண்சிமிட்டி சிரிக்கிறாய்
நான் கண்பார்த்தும் சரிகிறேன்"

கவிதா கண் பார்த்தும் என்பதற்கு பதில் கண் பார்த்ததும் என்று இருக்க வேண்டுமோ

kavitha
31-08-2005, 06:45 AM
இல்லை பிரியன். கண் பார்த்தும் என்பது தான் என் கண்ணோட்டதில் எழுதியது.

"என் கண் பார்த்தும் கூட மயக்கத்தில் சரிகிறேன்" என்பதாகக் கொள்க!

ஆதவா
07-01-2007, 10:26 AM
நேற்றிரவு நாம் பேசிக் கொண்டதை
வேடிக்கை பார்த்த விண்மீன்களெல்லாம்
மலர்களின் மீது பனித்துளிகளாகி
வருகிறதின்று
உன் கூந்தலில் சூடிக்கொள்ள.....

அருமையான சிந்தனை. பார்த்துங்க.. எல்லா விண்மீன்களும் வந்துட்டா வானம் ங்ற தாய் அழகா இருக்கமாட்டா!!

ஷீ-நிசி
07-01-2007, 12:17 PM
நிலவிற்கு வெளியில்தானே
விண்மீன்கள் இருக்கும் -இங்கே
நிலவுக்குள்ளேயே இருக்கின்றதே

உன் கண்மீன்களைத் தானடி சொல்கிறேன்!