PDA

View Full Version : ஆகஸ்ட் 28, ஞாயிற்றுக்கிழமை, மலேசியாவிலிருநMano.G.
28-08-2005, 06:08 AM
இன ஒற்றுமையை ஒருபோதும் கைவிடாதீர் - பிரதமர்
மலேசியாவின் முதுகெலும்பான இன ஒற்றுமையை ஒருபோதும், எவ்வித சூழ்நிலையிலும் கைவிட வேண்டாமென தேசிய முன்னணி கட்சியின் அனைத்து கிளை கட்சிகளுக்கும் பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிளை கட்சிகள் இனரீதீயான முன்னேற்றத்திற்கு செயல்பட்டாலும், ஒட்டுமொத்த இன ஒற்றுமையை வலுக்க செய்வதிலும் அக்கட்சிகள் சிறந்த பங்காற்ற வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.
அனைத்து இன மக்களுக்கும் நன்மை செய்வதில் நாம் முனைப்பாக இருக்க வேண்டுமென அவர் கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார். அதுவே நாட்டின் முன்னேற்றத்திற்கும் சுபிட்சத்திற்கும் வழிகோலும் என அவர் மேலும் கூறினார்.
-------------------------------------------------------------
WTO மாநாட்டிற்குமுன் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்
எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் WTO எனும் உலகளாவிய வாணிப கழகத்தின் 6-வது மாநாடு நடைப்பெறுவதற்குமுன் அது தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்வு காணப்பட்டு விடவேண்டுமென அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Datuk Seri Rafidah Aziz தெரிவித்தார்.
Doha மேம்பாட்டு திட்டம் தொடர்பாக விவசாயம் மற்றும் விவசாயம் அற்ற பிரச்னைகள் தீர்வு காணப்பட்டு விடவேண்டுமென அவர் கூறினார்.
WTO மாநாடு நடைப்பெறுவதற்குமுன், இப்பிரச்சனைகள் குறுத்து எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் இருந்தால், அம்மாநாட்டை நடத்த அவசியம் இல்லாமல் போய்விடும் என அவர் கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார். இம்மாநாடு Hong Kong-இல் நடைப்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.


உலக நாடுகளுக்கு மலேசியா ஓர் எடுத்துக்காட்டு
தூரநோக்கு சிந்தனை கொண்ட இஸ்லாமிய கொள்கைகளைப் பின்பற்றுவதில் உலக நாடுகளுக்கு மலேசியா ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது என வெளியுறவு துறை அமைச்சர் Datuk Seri Syed Hamid Albar தெரிவித்தார்.
தீவிரவாதத்தையும் இஸ்லாம் மதத்தையும் தொடர்புப்படுத்தும் தவறான போக்கை மலேசியா மாற்றவல்லது என அவ்ர் மேலும் கூறினார்.
ஒற்றுமையுணர்வு, புரிந்துணர்வு, மற்றவரை மதித்தல், நற்பண்புகள் ஆகியவற்றை நிலைநாட்டும் இஸ்லாமிய கொள்கைகளை கொண்ட மலேசியா உலக நாடுகளால் போற்றத்தக்கது என கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறினார்.
அது மட்டுமின்றி, பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதாலும் பல மேம்பாடுகளை அடைந்து வருவதாலும் உலக நாடுகள் பார்வையில் மலேசியா நன்மதிப்பை பெற்றுள்ளது என அவர் கூறினார்.


துன் மகாதீருக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது
முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad அவர்களுக்கு Teknologi Tun Hussein Onn கல்லூரி நேற்று தொழில்நுட்பத்துறைக்கான முனைவர் பட்ட விருது வழங்கி சிறப்பித்தது.
ஜொகூர் மாநிலத்தின் Tunku Mahkota Tengku Ibrahim Ismail Sultan Iskandar Al-Haj அவர்கள் இவ்விருதை துன் மகாதீருக்கு எடுத்து வழங்கினார். Teknologi Tun Hussein Onn கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
துன் மகாதீர் தனது துணைவியார் Tun Dr Siti Hasmah Mohd Ali-யுடன் இவ்விழாவில் கலந்துக் கொண்டார். ஜொகூர் மாநில மந்திரி பெசார் Datuk Abdul Ghani Othman அவர்களும் இவ்விழாவிற்கு சிறப்பு வருகை தந்திருந்தார்.


பிரதமரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்தில் திரண்டனர்
Sultan Abdul Halim விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க தேசிய முன்னணி கட்சி உறுப்பினர்கள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் நேற்று விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். பிரதமர் தனது ஒரு நாள் பயணமாக நேற்று நண்பகல் 12.20 மணியளவில் கெடா வந்தடைந்தார்.
பிரதமரை வரவேற்க மந்திரி பெசார் Datuk Mahdzir Khalid மற்றும் கெடா முழுவதிலும் உள்ள 200 அம்னோ உறுப்பினர்களும் விமான நிலையத்திற்கு வருகை புரிந்தனர்.
அங்கு மக்கள் சந்திப்புக் கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்ட பின்னர் பிரதமர் கெடாவிலுள்ள அம்னோ உறுப்பினர்களைச் சந்தித்து உரை நிகழ்த்துவார் என தெரிய வந்துள்ளது.


நாடு தழுவிய நிலையில் பல வட்டாரங்களில் காற்று தூய்மைக்கேடு இல்லை
நாடு தழுவிய நிலையில் பல வட்டாரங்களில் தற்பொழுது காற்று தூய்மைக்கேட்டின் குறியீட்டின் அளவு நல்ல நிலையில் இருப்பதாகவும் புகை மூட்டம் இல்லாமல் தெளிவாக இருப்பதாவும் தெரிய வந்துள்ளது.
சுமார் 5 வட்டாரங்களின் மட்டுமே காற்று தூய்மைக்கேடு நடுத்தரமாக இருப்பதாகவும் சிறிய அளவில் புகை மூட்டம் காணப்படுவதாகவும் சுற்றுச்சூழல் இலாகா வெளியிட்ட ஓர் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
மலாக்கா Bukit Rambai, Kuala Selangor, Bintulu, Sri Aman மற்றும் Tawau வட்டாரங்களே இன்னும் சிறிய அளவில் புகை சூழ்ந்திருக்கும் பகுதிகளாகும்.
--------------------------------------------------------------
மதுரையில் மின்னல் தாக்கி 3 பேர் பலி
மதுரையில் இறந்தவரை புதைக்க சென்ற 3 பேர் மின்னல் தாக்கியதில் இறந்தனர். மதுரையில் தற்பொழுது கனத்த மழை பெய்து வருகிறது.
இறந்தவர் ஒருவரை அடக்கம் செய்து விட்டு சுடுகாட்டிலிருந்து திரும்பும் போது மின்னல் தாக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
உடன் சென்ற உறவினர்கள் அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 3 பேரும் இறந்ததை டாக்டர்கள் உறுதி செய்ததால், உடல்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்குக் கொண்டு சென்றனர்.
--------------------------------------------------------------
அமெரிக்காவில் சூறாவளி தாக்கி நான்கு பேர் பலி
அமெரிக்காவில் சூறாவளி தாக்கி நான்கு பேர் பலியாகிŢனர். அமெரிக்கா, புளோரிடா மாநிலத்தின் தென்கிழக்கே மையம் கொண்டிருந்த சூறாவளி,' புளோரிடா மாநிலத்தை நேற்று முன்தினம் காலை ஏழு மணிக்கு தாக்கியது.
ஹலான்டேல் கடற்கரைக்கும், வடக்கு மியாமி கடற்கரைக்கும் இடையே சூறாவளி சீறி வந்தது. அப்போது, மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
மேலும் அப்பகுதியில் கடும் மழையும் பெய்தது. இதனால், மின்சாரமின்றி இருபது லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். மரங்கள் விழுந்ததில் மூன்று பேர் பலியாயினர்.

முஷாரப்பை கொலை செய்ய முயற்சி : ராணுவ அதிகாரிக்கு தூக்கு

பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பை கொலை செய்ய முயன்ற வழக்கில் ராணுவ அதிகாரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ள மேலும் நான்கு பேருக்கு நேற்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2003 டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று பாகிஸ்தான், அதிபர் முஷாரப் ராவல்பிண்டியில் இருந்து இஸ்லாமாபாத் சென்றபோது ராவல்பிண்டியில் உள்ள பாலத்தில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு 'ரிமோட்' மூலம் இயக்கி வெடிக்க வைக்கப்பட்டது. அந்தச் சம்பவத்தில் முஷாரப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சதியில் தொடர்புள்ள பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், பல்வேறு குற்றங்களில் தொடர்புள்ள நான்கு பேருக்கு நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிய நகரங்களில் தாக்குதல் : Al-qaeda சதித் திட்டம்
தோக்கியோ போன்ற வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஆசிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த Al-qaeda திட்டமிட்டுள்ளது. Al-qaeda தீவிரவாத அமைப்பு தனது தாக்குதல் வியூகங்களைக் கூர்மையாக்கி இருக்கிறது.
கடந்த காலங்களைப் போலின்றி, பொருளாதார மற்றும் நிதி முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களைத் தாக்குவதில் கவனம் செலுத்துகிறது. ஆசியாவில், ஜப்பான் தலைநகர் தோக்கியோ உள்ளிட்ட சில நகரங்கள், ஆசிய நாடுகளின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களாக உள்ளன. சிங்கப்பூரும் பொருளாதார முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நகரங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த al-qaeda சதித் திட்டம் தீட்டியுள்ளது. இதன் மூலம், இந்நாடுகளில் முதலீடு செய்பவர்களின் நம்பிக்கையை குலைக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைப் போல், al-qaeda-வின் தாக்குதல்களை ஆசிய வர்த்தக நகரங்கள் சந்தித்தது இல்லை.
தங்கள் வர்த்தக நகரங்களின் பாதுகாப்பில் இந்நாடுகள் திருப்தி அடைந்துள்ளன. சமீப காலத்தில், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், பொருளாதார வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகின்றன. இந்நாடுகளில் தாக்குதல் நடத்துவதை மிக முக்கியமானதாக al-qaeda கருதுகிறது.
--------------------------------------------------------------
அமெரிக்க டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் சானியா மிர்சா
முன்னணி வீராங்கனைகள் மோதும் பாரஸ்ட் ஹில்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின், நியூயார்க் நகரில் நடக்கிறது. இந்திய வீராங்கனை சானியா மிர்சா இந்த தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி சுற்று நேற்று முன்தினம் நடந்தது.
இத்தாலி வீராங்கனை ராபெர்ட்டா வின்சியை 6&2, 6&1 என்ற சுலப செட்டுகளில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார் சானியா.
அரையிறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை அலெக்ஸா கிளாட்ச், சானியா மோதுகின்றனர். காலிறுதியில் கிளாட்ச், சுலோவாகியா விராங்கனை மார்ட்டினா சுச்சாவை வென்றார்.

நன்றி வணக்கம்மலேசியா.காம்


மனோ.ஜி

pradeepkt
28-08-2005, 02:22 PM
செய்திகளுக்கு நன்றி மனோ அண்ணா