PDA

View Full Version : எங்கே கடவுள் ?...anithanhitler
27-08-2005, 07:25 AM
( இந்த கவிதை கண்ணாடி மாதிரி... அதில் உன் மனம் படிக்க முடிந்தால் வெற்றி எனக்கு.. வீசி எறிந்தால் இழப்பு உனக்கு... )


மனங்களை
அமைதிப்படுத்த வந்த
மதங்களுக்கு
இன்று மதம் பிடித்துவிட்டது...

மழழை
குரல் தனில்
பிழை இருக்கலாம்.
அதற்காக
அதன் குரல்வலையையா
நெரிக்க முடியும்.
மனிதன் போற்றும்
மதங்களிலும் பிழை இருக்கலாம்.
அதற்காக
கடவுளையா தூற்ற முடியும்...

மதங்களை பணங்களோடு
முடிச்சுட்ட
மதவாதிகளும், அரசியல்வாதிகளும்
அல்லவா மரணிக்க வேன்டியவர்கள்..
மாத்திரமல்லாமல்
தான் இந்த மதம் என
தலையில் வைத்து ஆடும்
மாக்களாகிப்போன
மக்களும் அல்லவா
மரணிக்க வேண்டியவர்கள்..

எந்த இறைவனும்
எனக்காக எவரையும்
பகைத்துவிட்ட வா
என பறைசாற்றவில்லை...

நாளுக்கு நாலு தடவை
மசூதிகளில் மண்டியிடுவதாலோ
மணிக்கணக்காய்
விவிலியத்தை புரட்டுவதாலோ,
வாரமிரண்டுமுறை
விரதமிருப்பதிலோ
மாத்திரம்
நீங்கள் இறைவனின்
விரல் நகத்தைக் கூட
காண முடியாது...

இறைவனை
ஏழை, அனாதை, வறியவர்
இவர்களுக்கு செய்யும் சேவையில்
காண்பதை விட்டுவிட்டு
மசூதி,
தேவாலய சுவர்களிலும்
கோயில் சிற்பங்களிலும்
தேடி அலையும்
குருட்டு மானிடர்களே,
நீங்கள் இறைவனை
வ்ழிபாட்டில் மட்டுமே தேடுவது
நுரையீரலை கழற்றி வைத்துவிட்டு
காற்று வாங்க
கடற்கரைக்குச் செல்லும்
ஆஸ்துமா நோயாளியைப்போல் உள்ளது.

குரான், விவிலியம்
புரட்டும் நேரத்தில்
வறியவரை தேடிச்சென்று உதவுங்கள்.
இறைவன்
வீட்டு வாசலில்
உங்களைக் காண தவமிருப்பார்.

தெப்பக்குளங்களைச் சுற்றி
மந்திரம் சொல்லும் நேரத்தில்
அனாதைச் சிறுவர்களுக்கு
ஆறுதல் கூறுங்கள்.
இறைவன் உங்கள் மொழி கேட்க
ஆவலாய் வருவார்...

இறைவனை
பிற இதயங்களில்
காண்பதை விட்டுவிட்டு
இடிந்துபோகும் சுவர்களுக்குள்
அல்லவா தேடிக்கொண்டிருக்கிறோம்...

கடவுளின் நாமத்தை
மெய்மறந்து உச்சரிப்பதையும்
வேத புத்தகங்களை
வாசிப்பதையும் விட்டுவிட்டு
பிற உள்ளங்களை
நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.


கடவுள்
தன் அன்பு மகனை, மகளை
தேட வைப்பதில்லை...
தேடிவருவார் புரிந்துகொள்ளுங்கள்....

பிரியன்
27-08-2005, 10:00 AM
அத்தனையும் நிதர்சனம்.
எவ்வளவுதான் தேடினாலும் கடவுள் வெளியே கிடைக்க மாட்டார். அதை அறியாதவரை இந்த பிரச்சனைதான். மதங்கள் மனிதத்தை விதைத்தன. அந்த ஆதியை வணங்காமல் அதன் பொருள்களை அறியாமல், அதற்கு முயலாமல் அதை காப்பதாகவே முன்னெடுத்துச் செல்வதாக சொல்லிக் கொள்ளும் மதவாதிகளை வணங்கும் மாக்களாக இருக்கும் வரை இறைவனை தரிசிக்க முடியாது.

உள் சென்று தேடு
தன்னுள் சென்று தேடு
எப்போதும் காத்திருக்கிறான்
இறைவன்
நம்மைக் காண

karikaalan
27-08-2005, 10:48 AM
யாரோ சொன்னார்களே, "ஏழையின் சிரிப்பில் இறைவன்", என்று!

kavitha
27-08-2005, 11:01 AM
நாளுக்கு நாலு தடவை
மசூதிகளில் மண்டியிடுவதாலோ
மணிக்கணக்காய்
விவிலியத்தை புரட்டுவதாலோ,
வாரமிரண்டுமுறை
விரதமிருப்பதிலோ
மாத்திரம்
நீங்கள் இறைவனின்
விரல் நகத்தைக் கூட
காண முடியாது...
எந்திரமாய் செய்யும் எந்த செயலுக்கும் பலனில்லை. நம்பிக்கை யாரையும் கைவிடுவதில்லை.

ஏழையில் சிரிப்பில் இறைவனைக் காணமுடியும். வேதங்கள் சொல்வதும் அது தான். சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல் மேல் ஓட்டை புரட்டுவதே வேதனை.

kavitha
27-08-2005, 11:04 AM
யாரோ சொன்னார்களே, "ஏழையின் சிரிப்பில் இறைவன்", என்று!:) :) :)

gragavan
29-08-2005, 04:53 AM
அருமையான கவிதை அனிதன். அற்புதமான கருத்து. பாராட்டுகள்.

mukilan
29-08-2005, 05:02 AM
அனிதன் ஹிட்லர் என்ற பெயர் தங்களின் கவிதைக்குச் சம்பந்தமேயில்லாமல் இருக்கிறதே.மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் அருமையான பதிப்பு.வாழ்த்துக்கள் நண்பரே!

anithanhitler
01-09-2005, 02:42 PM
நன்றி பிரியன், கவிதா, முகிலன் மற்றும் ராகவன்...முகிலன், எனக்கு ஹிட்லரையும் நிரம்ப
பிடிக்கும்

பிரசன்னா
09-09-2005, 05:40 PM
கடவுள்
தன் அன்பு மகனை, மகளை
தேட வைப்பதில்லை...
தேடிவருவார் புரிந்துகொள்ளுங்கள்....

அருமையான கவிதை அனிதன். அற்புதமான கருத்து. பாராட்டுகள்

ஆதவா
07-01-2007, 11:04 AM
மனங்களை
அமைதிப்படுத்த வந்த
மதங்களுக்கு
இன்று மதம் பிடித்துவிட்டது...

இன்று நேற்றா இப்படி மதம் துவ்ங்கியதுமே மதம் பிடித்துவிட்டது சாரே!!

மழழை
குரல் தனில்
பிழை இருக்கலாம்.
அதற்காக
அதன் குரல்வலையையா
நெரிக்க முடியும்.
மனிதன் போற்றும்
மதங்களிலும் பிழை இருக்கலாம்.
அதற்காக
கடவுளையா தூற்ற முடியும்...

நிச்சயமாக... பிழையில்லாத மதமொன்று வேறேது புத்தம் தவிர.

எந்த இறைவனும்
எனக்காக எவரையும்
பகைத்துவிட்ட வா
என பறைசாற்றவில்லை...

நாளுக்கு நாலு தடவை
மசூதிகளில் மண்டியிடுவதாலோ
மணிக்கணக்காய்
விவிலியத்தை புரட்டுவதாலோ,
வாரமிரண்டுமுறை
விரதமிருப்பதிலோ
மாத்திரம்
நீங்கள் இறைவனின்
விரல் நகத்தைக் கூட
காண முடியாது...

அருமையான வரிகள்., அமைதிக்காக ஆலயங்கள் இருக்கிறதென்பதையும் நாம் மறக்கக் கூடாது.. அங்கே நம் பிரச்சனைகள் முறையிடுவது தவறுதான். இருப்பினும் உங்கள் வரிகள் ரெம்ப கம்யூனிசம் பேசுகின்றது.குரான், விவிலியம்
புரட்டும் நேரத்தில்
வறியவரை தேடிச்சென்று உதவுங்கள்.
இறைவன்
வீட்டு வாசலில்
உங்களைக் காண தவமிருப்பார்.

ஹி ஹி ஹி,, யாருங்க இப்படியிருக்காங்க.. ஏழைகளின் கண்ணிரில் இறைவன்னு போஸ்டர் ஒட்டுவானுங்க.. அந்த செலவுகூட ஏழைகளுக்கு பண்ண மாட்டனுங்க..

இறைவனை
பிற இதயங்களில்
காண்பதை விட்டுவிட்டு
இடிந்துபோகும் சுவர்களுக்குள்
அல்லவா தேடிக்கொண்டிருக்கிறோம்...

எங்கேங்க சுவர் இடிந்து போயிருக்கு... எவ்வளவு செலவு பண்றாய்ங்க..

கடவுளின் நாமத்தை
மெய்மறந்து உச்சரிப்பதையும்
வேத புத்தகங்களை
வாசிப்பதையும் விட்டுவிட்டு
பிற உள்ளங்களை
நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

அண்ணா!! கண்டிப்பா இந்த அறிவுரைகள் நிச்சயம் எல்லாருக்கும் தேவை...
அருமையான அறிவுரைக் கவிதை///
தொடருங்கள்/

ஷீ-நிசி
07-01-2007, 12:07 PM
மனங்களை
அமைதிப்படுத்த வந்த
மதங்களுக்கு
இன்று மதம் பிடித்துவிட்டது...

நான் ரசித்த வரிகள்