PDA

View Full Version : என்னவாய் இருக்க??

சுவேதா
26-08-2005, 01:27 AM
என்னவாய் இருக்க??

மேகமாய் நானிருந்தேன்
மழையாய் நீ
இருந்தாய்!

வானமாய் நான்
இருந்தேன்
வானவில்லாய் நீ
இருந்தாய்!

சூரியனாய் நான்
இருந்தேன்
உலகமாய் நீ
இருந்தாய்!

நீராக நானிருந்தேன்
மீனாக நீ
இருந்தாய்!

இப்பொழுது நீ
என்னை அண்ணனாக
இருக்க சொல்கின்றாய்
நான் எவ்வாறு
இருப்பேன்!!!

mukilan
26-08-2005, 02:08 AM
அழுத காதலி அண்ணான்னு சொன்னா "டேக் இட் ஈசி" ன்னு எனக்கு ஏற்கனவே சொல்லி இருக்காங்களே?
அழகாய் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது ஒரு ஏமாற்றப் பட்ட காதலனின் மன நிலை. வாழ்த்துக்கள் சகோதரி!!!

gragavan
26-08-2005, 06:42 AM
என்னவாய் இருக்க??
இப்பொழுது நீ
என்னை அண்ணனாக
இருக்க சொல்கின்றாய்
நான் எவ்வாறு
இருப்பேன்!!!கண்ணனாக இருக்க வேண்டியவனை அண்ணாக இருக்க வேண்டினால் அவன் திண்ணனாக இருந்தாலும் சின்னனாகிப் போவான். சுவேதாவின் கவிதை முயற்சி அருமை.

pradeepkt
26-08-2005, 06:49 AM
சுவேதா,
கலக்கல்... இன்னும் நிறைய எழுதும்மா..

சுவேதா
26-08-2005, 01:59 PM
அழுத காதலி அண்ணான்னு சொன்னா "டேக் இட் ஈசி" ன்னு எனக்கு ஏற்கனவே சொல்லி இருக்காங்களே?
அழகாய் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது ஒரு ஏமாற்றப் பட்ட காதலனின் மன நிலை. வாழ்த்துக்கள் சகோதரி!!!

நன்றி அண்ணா!

சுவேதா
26-08-2005, 02:00 PM
கண்ணனாக இருக்க வேண்டியவனை அண்ணாக இருக்க வேண்டினால் அவன் திண்ணனாக இருந்தாலும் சின்னனாகிப் போவான். சுவேதாவின் கவிதை முயற்சி அருமை.
:)நன்றி அண்ணா!

சுவேதா
26-08-2005, 02:01 PM
சுவேதா,
கலக்கல்... இன்னும் நிறைய எழுதும்மா..

நிச்சயமாக அண்ணா!
நன்றி!

மன்மதன்
27-08-2005, 04:34 AM
என்னா அண்ணாவா..??? அட்வான்ஸாக சொல்லிவிட்டால் பிரச்சனை இல்லை.. ஆனால் காதலனாக இருந்து விட்டு பிறகு அண்ணாவாக மாற்றினால்தான் கொடுமையே..

பிரியன்
27-08-2005, 05:42 AM
என்னவாய் இருக்க??

மேகமாய் நானிருந்தேன்
மழையாய் நீ
இருந்தாய்!

வானமாய் நான்
இருந்தேன்
வானவில்லாய் நீ
இருந்தாய்!

சூரியனாய் நான்
இருந்தேன்
உலகமாய் நீ
இருந்தாய்!

நீராக நானிருந்தேன்
மீனாக நீ
இருந்தாய்!

இப்பொழுது நீ
என்னை அண்ணனாக
இருக்க சொல்கின்றாய்
நான் எவ்வாறு
இருப்பேன்!!!

இப்பொழுது
அண்ணனாக
இருக்கச் சொன்னால்
இனி நான்
என்னவாய் இருக்க

இப்படி இருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.

என்னவாய் இருக்க என்று முடித்திருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக இருக்கும் சுவேதா. எழுத்தில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

Nanban
28-08-2005, 06:31 PM
பாராட்டுகள் சுவேதா.

கவிதையின் வடிவம் மிக அருமை. உங்களின் ஆரம்பகால வசனங்களை மறந்து விட்டு இனி இப்படியே எழுதுங்கள். இது கவிதையின் வடிவத்தைப் பற்றி மட்டுமே. கவிதையின் பொருள் இன்னும் ஆழமாகவும், விசாலமாகவும், மழை பெய்த கணத்தில் எழும் புது மண்வாசனை போல் பரவசமூட்டுவதாகவும் இருக்க வேண்டும். காதலி அண்ணா என்று கூப்பிடுவது மிகப் பழைய தொனி. Cliche என்று சொல்லுவார்கள் தெரியுமா? அதே தான் காதலி அண்ணா என்பது. அதாவது அரதப் பழசு என்று சொல்லுவார்களே அதே தான் இது. மன முறிவுகளை, வலிகளை பழகிய சொற்களில் அல்லாமால், புதிய மொழியில் சொல்லுங்கள். பழைய பழகிய மொழியில் சொல்லும் பொழுது உங்களின் வலி யாருக்கும் புரியாது - காரணம் அந்த வார்த்தைகள் எங்கள் மனதை மரத்துப் போகச் செய்து பல காலம் ஆகிவிட்டது.

உடனே கவலை கொள்ள ஆரம்பித்து விட வேண்டாம். தொடர்ந்து இதே பாணியில் எழுத ஆரம்பித்து விட்டால் பின்னர் அந்த பழைய பழகிய மொழியே போதும் என்று திருப்தி கொள்ள ஆரம்பித்து விடுவீர்கள். அதனால் தான் சொல்லுகிறேன் - ஆரம்பம் முதலே புதிய நடைக்கு முயற்சி செய்யுங்கள்.

புதிய மொழி நடை. பின்னர் -

கருத்தாழம். அது வயது அனுபவம் இவற்றைப் பொறுத்து வரும். வருகிற போது வரட்டும் என்று விட்டு விடாதீர்கள். புதிய அனுபவங்களை உடனே எழுதிப் பார்த்து விடுங்கள். பொதுவில் எல்லோரும் வாசிக்க அனுமதிக்கனுமா வேண்டாமா என்பது இரண்டாம் பட்சம். ஆனால் உங்களுக்கே உங்களுக்காக ஒரு தனி புத்தகம் போட்டு எழுதிக் கொண்டே வாருங்கள்.

வாழ்த்துகள்

அன்புடன்

mukilan
28-08-2005, 06:36 PM

ஆஹா! இதற்காகத்தானே தமிழ்மன்றம்.புதிதாக அறிந்து கொள்ள இது போன்ற மன்றங்களில் தானே முடியும். நண்பர் நண்பனின் ஆலோசனை சுவேதாவுக்கு மட்டுமல்ல எனக்கும் நல்ல பயன் தரக் கூடியதாக இருக்கிறது.நன்றி!

சுவேதா
02-09-2005, 01:35 AM
இப்பொழுது
அண்ணனாக
இருக்கச் சொன்னால்
இனி நான்
என்னவாய் இருக்க

இப்படி இருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.

என்னவாய் இருக்க என்று முடித்திருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக இருக்கும் சுவேதா. எழுத்தில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

நன்றி அண்ணா எல்லாம் உங்கள் அணைவராலும்தான் அண்ணா! அணைவருக்கும் என் நன்றிகள்!

சுவேதா
02-09-2005, 01:38 AM
பாராட்டுகள் சுவேதா.

கவிதையின் வடிவம் மிக அருமை. உங்களின் ஆரம்பகால வசனங்களை மறந்து விட்டு இனி இப்படியே எழுதுங்கள். இது கவிதையின் வடிவத்தைப் பற்றி மட்டுமே. கவிதையின் பொருள் இன்னும் ஆழமாகவும், விசாலமாகவும், மழை பெய்த கணத்தில் எழும் புது மண்வாசனை போல் பரவசமூட்டுவதாகவும் இருக்க வேண்டும். காதலி அண்ணா என்று கூப்பிடுவது மிகப் பழைய தொனி. Cliche என்று சொல்லுவார்கள் தெரியுமா? அதே தான் காதலி அண்ணா என்பது. அதாவது அரதப் பழசு என்று சொல்லுவார்களே அதே தான் இது. மன முறிவுகளை, வலிகளை பழகிய சொற்களில் அல்லாமால், புதிய மொழியில் சொல்லுங்கள். பழைய பழகிய மொழியில் சொல்லும் பொழுது உங்களின் வலி யாருக்கும் புரியாது - காரணம் அந்த வார்த்தைகள் எங்கள் மனதை மரத்துப் போகச் செய்து பல காலம் ஆகிவிட்டது.

உடனே கவலை கொள்ள ஆரம்பித்து விட வேண்டாம். தொடர்ந்து இதே பாணியில் எழுத ஆரம்பித்து விட்டால் பின்னர் அந்த பழைய பழகிய மொழியே போதும் என்று திருப்தி கொள்ள ஆரம்பித்து விடுவீர்கள். அதனால் தான் சொல்லுகிறேன் - ஆரம்பம் முதலே புதிய நடைக்கு முயற்சி செய்யுங்கள்.

புதிய மொழி நடை. பின்னர் -

கருத்தாழம். அது வயது அனுபவம் இவற்றைப் பொறுத்து வரும். வருகிற போது வரட்டும் என்று விட்டு விடாதீர்கள். புதிய அனுபவங்களை உடனே எழுதிப் பார்த்து விடுங்கள். பொதுவில் எல்லோரும் வாசிக்க அனுமதிக்கனுமா வேண்டாமா என்பது இரண்டாம் பட்சம். ஆனால் உங்களுக்கே உங்களுக்காக ஒரு தனி புத்தகம் போட்டு எழுதிக் கொண்டே வாருங்கள்.

வாழ்த்துகள்

அன்புடன்

சரி அண்ணா அப்படியே செய்ய முயற்சிக்கிறேன் அண்ணா! ரொம்ப நன்றி அண்ணா!

kavitha
02-09-2005, 03:54 AM
ஆஹா! இதற்காகத்தானே தமிழ்மன்றம்.புதிதாக அறிந்து கொள்ள இது போன்ற மன்றங்களில் தானே முடியும். நண்பர் நண்பனின் ஆலோசனை சுவேதாவுக்கு மட்டுமல்ல எனக்கும் நல்ல பயன் தரக் கூடியதாக இருக்கிறது.நன்றி!

:) அது தான் மன்றத்தின் சிறப்பு. வாய் நிறைய வரவேற்பதிலும், தட்டியும், குட்டியும் சொல்லித்தருவதிலும் நம் மன்றம் போல் வேறெங்கும் காணேன்.

கவிதையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது சுவேதா. தொடர்ந்து எழுது :)

Nanban
02-09-2005, 07:36 AM
சரி அண்ணா அப்படியே செய்ய முயற்சிக்கிறேன் அண்ணா! ரொம்ப நன்றி அண்ணா!

சுவேதா,

நான் இந்த அண்ணா, என்ற மாதிரியான உறவுகளையும் விளித்தலையும் விரும்புவதில்லை. நண்பன் என்றே குறிப்பிடுங்கள்.

அனைவரும் சமமான நிலையில் இருக்கும் தளத்திலிருந்தே அனைவருடன் பழக விரும்புகிறேன். 'பெரிய அண்ணா - Big Brother' என்ற நிலையில் இருந்து அல்ல.

அன்புடன்

சுவேதா
02-09-2005, 11:57 AM
:) அது தான் மன்றத்தின் சிறப்பு. வாய் நிறைய வரவேற்பதிலும், தட்டியும், குட்டியும் சொல்லித்தருவதிலும் நம் மன்றம் போல் வேறெங்கும் காணேன்.

கவிதையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது சுவேதா. தொடர்ந்து எழுது :)

நன்றி அக்கா!

சுவேதா
02-09-2005, 11:58 AM
சுவேதா,

நான் இந்த அண்ணா, என்ற மாதிரியான உறவுகளையும் விளித்தலையும் விரும்புவதில்லை. நண்பன் என்றே குறிப்பிடுங்கள்.

அனைவரும் சமமான நிலையில் இருக்கும் தளத்திலிருந்தே அனைவருடன் பழக விரும்புகிறேன். 'பெரிய அண்ணா - Big Brother' என்ற நிலையில் இருந்து அல்ல.

அன்புடன்

சரி (அண்ணா) சாரி நன்பன் :)