PDA

View Full Version : ஆகஸ்ட் 25, வியாழக்கிழமை மலேசியாவிலிருந்து 



Mano.G.
25-08-2005, 12:41 AM
பெரு விமான விபத்தில் 70 பேர் பலி
பெரு நாட்டு Boeing 737-200 விமானம் ஒன்று Amazon காட்டுப் பகுதிக்கு அருகில் Pucallpa என்ற இடத்தில் மோசமான வானிலை காரணமாக விபத்திற்குள்ளானது.
கடும் சூறாவளி காற்று வீசியதால் விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்ற போது இவ்விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 40 பேர் பலியாகியுள்ளனர். з┴╓ї, 50-ь╠ї மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பெருநாட்டு அதிபர் அலிஜான்ரோ டொலேடோ தெரிவித்துள்ளார்.
பெரு நாட்டின் 'Tans Airlines' நிறுவனத்துக்கு சொந்தமான இவ்விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகளும் சிப்பந்திகளும் இருந்தனர். கடந்த இரு வாரங்களில் ஏற்பட்ட மூன்றாவது விமான விபத்து இதுவாகும்.
_______________________________________________________________________
திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பவர்களின் மீது கடும் நடவடிக்கை
திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பவர்களின் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என அறிவுறுத்திய போதிலும் சிலர் அதை அலட்சியமாக கருதுவதாக சிலாங்கூர் மாநில Menteri Besar Datuk Seri Mohamad Khir Toyo தெரிவித்தார்.
சமீபத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் சில பகுதிகளில் காற்றின் தூமைக்கேட்டின் அளவு அதிகரித்ததை தொடந்து, அரசாங்கம் அவ்வாறு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, திறந்த வெளியில் குப்பைகளை எரித்த 22 பேர்களின் மேலும், அதிகமான புகையை வெளியாக்கிய 48 வாகன ஓட்டுனர்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே, தற்போது திறந்த வெளியில் குப்பைகளை எரித்தற்காக சுற்றுச்சூழல் துறை மேலும் ஒன்பது பேரை தடுத்து வைத்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மீது தற்போது விசாரனை நடந்து வருவதாக Datuk Seri Mohamad Khir Toyo மேலும் தெரிவித்தார்.
இறுதியாக, பொது மக்கள் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கருத்து தெரிவித்தார்.


மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆதரவு
நாட்டு மக்களின் பிரதிநிதியாக, முக்கிய பதவிகளில் இருந்து சேவையாற்றி, தற்போது பதவி ஓய்வு பெற்றவர்கள் இதர நாட்டு தலைவர்களுக்கு தொடர்ந்து முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad தெரிவித்தார்.
பதவி ஓய்வு பெற்றவர்கள் பதவியில் இருந்தபோது மற்ற சமூக தலைவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு நிச்சயம் இருந்திருக்கும். ஆகவே, நமக்கு ஒத்துழைப்பு கொடுத்த அவர்களுக்கும் நாம் ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என IPOH-வில் Mubarak எனும் முன்னாள் தலைவர்கள் மன்ற நிகழ்ச்சி ஒன்றில் Tun Dr Mahathir Mohamad தெரிவித்தார்.
அது மட்டுமின்றி, மற்றவர்களால் செய்ய முடிந்தால், நம்மாலும் அதைவிட சிறப்பாக செய்ய முடியும் என்ற எண்ணத்தை மலேசிய மக்களிடையே விதைத்த பெருமை Tun Dr Mahathir Mohamad அவர்களையே சாரும் என பேராக் Menteri Besar Datuk Seri Tajol Rosli Ghazali புகழ்ந்துரைத்தார்.


பிரதமர் சவுதி அரேபியாவிற்கு ஒரு நாள் பயணம்
பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi சவுதி அரேபியாவிற்கு நேற்று ஒரு நாள் பயணம் மேற்கொண்டார். பிரதமர் துறை அமைச்சர் Datuk Dr Abdullah Md Zin பிரதமரின் இப்பயணத்தில் கலந்துக் கொண்டார்.
நேற்று காலை 10.00 மணியளவில் பிரதமர் Raja Abdul Aziz அனைத்துலக விமான நிலையத்திற்குச் சென்று சேர்ந்தார். பிரதமரை வரவேற்க கவர்னர் Putera Abdul Majid Abdul Aziz Al-Saud மற்றும் அந்நாட்டின் பிரதமர் Dr Saud Al-Mothami அவர்களும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
மன்னர் Abdullah Abdul Aziz Al-Saud அவர்களின் அரண்மனையில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தின் போது முதற்கட்டமாக Fahd மன்னரின் இறப்புக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை பிரதமர் Abdullah Ahmad Badawi தெரிவித்துக் கொண்டார். Fahd மன்னரின் இறப்புக்குப் பின் மன்னர் Abdullah Abdul Aziz Al-Saud பதவியேற்றதைத் தொடர்ந்து பிரதமர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.


AUSTRALIA-வுடன் கல்வி தொடர்பான கூட்டுறவு
AUSTRALIA-வுடன் கல்வி தொடர்பான கூட்டுறவை வலுப்படுத்த சரவாக் ஆர்வமுள்ளதாக அம்மாநில Ketua Menteri Tan Sri Abdul Taib Mahmud தெரிவித்தார்.
குறிப்பாக, மனிதவளம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் AUSTRALIA-வுடன் கூட்டுறவை வலுப்படுத்த சரவாக் எண்ணம் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
KUCHING-இல் Adelaide பல்கலைக்கழகத்தில் Pesta Australia 2005 எனும் நிகழ்வை தொடக்கி வைத்த பின், அவர் அவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார். சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட உள்ளூர் மாணவர்கள் பெரும்பாலும் மேற்படிப்பிற்காக AUSTRALIA-விற்கு அனுப்பப்படுவதாக அவர் மேலும் கூறினார்.


காற்று தூய்மைக்கேடு சீரடைந்து வருகிறது
புதன்கிழமை காலை 11-மணியிலிருந்து நாடளவில் காற்று தூய்மைக்கேட்டின் குறியீடின் அளவு எந்த இடத்திலும் கடுமையான காற்று தூய்மைக்கேட்டை அறிவிக்கவில்லை என சுற்றுச்சூழல் இலாகா தெரிவித்துள்ளது.
Port Klang, Shah Alam, Nilai, Bukit Rambai, Johor Baharu மற்றும் Tawau-வில் மட்டும் மிதமான காற்று தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, சுமத்ராவில் 48 இடங்களிலும் Kalimantan-இல் 58 இடங்களிலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


ஆயுதமேந்தி கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்
Bandar Perda, Bukit Mertajam-இல் அமைந்துள்ள கைத்தொலைபேசி கடை ஒன்றில் கடந்த திங்கட்கிழமை ஆயுதமேந்தி கொள்ளையிட்ட இரு திருடர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒருவர் கொள்ளை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் கைது செய்யப்பட்டதாகவும் மற்றொருவர் Seberang
Jaya-இல் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாகவும் மாநில குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் Syed Ismail Syed Azizan தெரிவித்தார்.
இவ்விரு திருடர்களும் சுமார் 20,000 ரிங்கிட்டையும் மற்றும் அக்கடையிலுள்ள அனைத்து கைத்தொலைபேசிகளையும் களவாடிச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
________________________________________________________________________
புரட்சி எழுத்தாளர் கைது : எழுத்தாளர்கள் கண்டனம்
புரட்சி எழுத்தாளர் வரவர ராவ் கைது செய்யப்பட்டதற்கு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. புரட்சி எழுத்தாளரும், தீவிரவாதிகள் ஆதரவாளருமான வரவர ராவை ஆந்திர மாநில போலீசார் கைது செய்தனர்.
இதற்கு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அலி ஜாவேத் மேலும் கூறும்போது, "ஆந்திர அரசு தீவிரவாதிகள் பிரச்னைக்கு உண்மையிலேயே தீர்வு காண வேண்டும் என்று நினைத்தால், அதற்கான சூழ்நிலையை முதலில் உருவாக்க வேண்டும்," என்றார்.
________________________________________________________________________
வங்காளதேசத்தில் மீண்டும் தாக்குதல்
வங்காளதேசத்தில் இஸ்லாமிய ஆட்சியை அறிவிக்காவிட்டால், மீண்டும் பயங்கரத் தாக்குதல் நடத்துவோம் என்று தடை செய்யப்பட்ட 'ஜமாத் உல் முஜாகிதீன்' தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
வங்காளதேசம் முழுவதும் கடந்த புதன்கிழமை வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. மொத்தம் உள்ள 66 மாவட்டங்களில் 65 மாவட்டங்களில் வெடிகுண்டுகள் வெடித்ததில், இரண்டு பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த பயங்கரத்துக்கு 'ஜமாத் உல் முஜாகிதீன்' தீவிரவாத அமைப்பே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். தலைநகர் தாகா உட்பட நாட்டின் முக்கிய இடங்களில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், 'வங்காளதேசத்தில் இஸ்லாமிய ஆட்சியை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், நாட்டில் மீண்டும் பயங்கரத் தாக்குதல் நடத்துவோம்' என்று முஜாகிதீன் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.


தீவிரவாதிகள் மிரட்டல்: நேப்பாளத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது
நேப்பாளம், சித்வான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய மாணவர் அமைப்பு மிரட்டலால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் 150 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராம்பூர் விவசாயக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை விடுவிக்கக் கோரி அந்த அமைப்பு கடந்த ஒரு வாரமாக இச்செயலில் ஈடுபட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 120 தனியார் பள்ளிகளை மூட அந்த அமைப்பு கட்டாயபடுத்தியுள்ளது. மூடப்பட்டுள்ள கல்லூரிகளைத் திறக்க இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிய வந்துள்ளது.


சரப்ஜித் சிங் தொடர்பான மனு பரிசீலிக்கப்படும்
பஞ்சாப் மாநிலம் பிகிவிந்த் பகுதியைச் சேர்ந்த சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக அவர் உளவு பார்த்ததாக அவருக்கு அந்நாட்டு சுப்ரீடம் கோர்ட் மரண தண்டனைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சரப்ஜித் சிங்கின் உறவினர்கள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் நட்வர்சிங் ஆகியோரைச் சந்தித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சரப்ஜித் சிங் தொடர்பாக பாகிஸ்தான், பிரதமர் முஷாராப்பிடம் தாம் விரைவில் பேசுவதாக மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இதற்கிடையே தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் அமைச்சர் முகமது கசூரி, சரப்ஜித் சிங் தொடர்பான மனு பரிசீலிக்கப்படும் என்றும், இது குறித்த இறுதி முடிவெடுக்க அதிபர் முஷாரப்பிற்கும் மட்டுமே அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
________________________________________________________________________
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நேற்று ஆரம்பமானது
சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் 4-ம் இடம் வகிக்கும் நியூசிலாந்து, 7-ம் இடத்தில் உள்ள இந்தியா மற்றும் 9-ம் இடத்தில் உள்ள ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் நேற்று ஆரம்பமானது.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று முன்தினம் ஜிம்பாப்வே வந்த சேர்ந்தது.
ஜிம்பாப்வே அணியை பொருத்த வரை, கவுரவமாக தோற்றால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய பயிற்சியாளர் கெவின் கரண் என்ன மாற்றம் கொண்டு வரப்போகிறார் என்பது இந்த தொடர் முடிவில் தெரியும்.


நன்றி வணக்கம்மலேசியா.காம்


மனோ.ஜி

рооройрпНроородройрпН
25-08-2005, 04:17 AM
ஐரோப்பாவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறதாமே..??

kavitha
25-08-2005, 10:59 AM
திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பவர்களின் மீது கடும் நடவடிக்கைபோகின்னு இங்கே கொண்டாடுறோமே... என்னத்த சொல்ல!

aren
25-08-2005, 02:15 PM
பிரதமரின் அமைச்சரவையில் ஏதோ சில மாற்றங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறதே. இது உண்மையா?

ராஃபிதா அவர்களுடைய பதிவி மாற்றப்படலாம் அல்லது பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறதே.

роЗроХрпНрокро╛ро▓рпН
25-08-2005, 02:21 PM
அண்ணாவுக்கு வணக்கம். செய்திகளுக்கு நன்றியும் கூட.

மலேசியா கோலாலம்பூர் வந்தேன் அண்ணா. போகிற இடமெல்லாம்
மன்ற உறவுகளை தேடித் தேடிப் பார்க்கும் மனம் ஏனோ மனோ அண்ணாவை
ஞாபகத்தில் கொண்டு வரவே இல்லை. மன்னிக்கவும்.

இன்னொரு முறை வரும்பொழுது பார்க்க வேண்டும். சரிங்களா அண்ணா?

-அன்புடன் இக்பால்.

aren
25-08-2005, 02:38 PM
அண்ணாவுக்கு வணக்கம். செய்திகளுக்கு நன்றியும் கூட.

மலேசியா கோலாலம்பூர் வந்தேன் அண்ணா. போகிற இடமெல்லாம்
மன்ற உறவுகளை தேடித் தேடிப் பார்க்கும் மனம் ஏனோ மனோ அண்ணாவை
ஞாபகத்தில் கொண்டு வரவே இல்லை. மன்னிக்கவும்.

இன்னொரு முறை வரும்பொழுது பார்க்க வேண்டும். சரிங்களா அண்ணா?

-அன்புடன் இக்பால்.

இக்பால் அவர்களே,

மலேசியா வரும்பொழுது இங்கே சிங்கப்பூருக்கும் ஒருமுறை விஜயம் செய்யுங்கள்.