PDA

View Full Version : போனது போனாய்

gragavan
24-08-2005, 12:12 PM
போனது போனாய்
என்னை ஏன் கொண்டு போனாய்
எனக்குத் தெரியாத என்னை
எனக்குத் தெரியாமல் ஏன் கொண்டு போனாய்!

மீண்டும் வந்தது வந்தாய்
உன்னையாவது தந்தாயா?
எனக்குத் தெரிந்த உன்னை
எனக்குத் தெரிந்தே ஏன் தராமல் போனாய்!

சரி. வருவதுதான் வருவாய்
வருவாயைப் பார்க்காமல்
என்னை விலைக்காவது வாங்க வருவாய்!

கடைப் பொருளுக்கும்
கடைப் பொருளல்லவே
விடைப் பொருள் தருவாய் - நான்
நடைப் பொருளாவதற்குள்!

pradeepkt
24-08-2005, 12:31 PM
அய்யா,
காதல் கவிதை எழுத ஆரம்பிச்சாச்சா...
ஆரம்பமே அசத்தலப்பு...
கடைசியில இது ஆண்டவனிடத்தில் வைத்த வேண்டுதல்னு மட்டும் சொல்லீராதீங்க... :D

பிரியன்
24-08-2005, 12:34 PM
காதல் கவிதை மாதிரி தெரியலையே...

முதிர் கன்னியின் ஏக்கம் மாதிரி தெரியுதே..

பொறுமையா படிச்சு வேற எதுவும் தோணுன்னா சொல்றேன்

gragavan
24-08-2005, 12:35 PM
சரி. இந்தக் கவிதையைப் பத்தி எல்லாரும் கருத்து சொல்லுங்க. எல்லாரும் சொல்லி முடிச்சப்புறம் நான் விளக்கம் சொல்றேன்.

மன்மதன்
24-08-2005, 01:01 PM
விளக்கம் சொன்ன பிறகு நான் கருத்து சொல்றேன்..

நான் புரிந்த கொண்டதின் பொருட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கு.. ராகவன் ஸ்டைலில் புரிந்தும் ..புரியாமலும்...ஹிஹி.

அன்புடன்
மன்மதன்

Iniyan
24-08-2005, 01:06 PM
எனக்கென்னமோ இது காதல் கவிதை போலத் தான் தெரிகிறது. மன்மதன் சொன்னது போல புரிந்தும் புரியாமலும்....

gragavan
24-08-2005, 01:13 PM
என்ன இது புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் என்று சினிமாப் பேரு மாதிரி. எளிமையான சொற்கள்தானே போட்டிருக்கிறேன்.

Iniyan
24-08-2005, 01:18 PM
எளிய வார்த்தைகளாய் இருப்பினும் ஒரு கவிஞன் தன் மனதில் என்ன நினைத்து எந்த சூழலில் கவி வடித்தான் என்பதை யாராலும் உணர முடியாது என்றே நான் கருதுகிறேன். ஒரே ஆண் கணவனாகவும், மகனாகவும், தகப்பனாகவும் பார்ப்பவர்க்கெல்லாம் பல அவதாரமாய் தெரிவது போலத் தான் இதுவும் என நினைக்கிறேன் நான்.

gragavan
24-08-2005, 01:22 PM
எளிய வார்த்தைகளாய் இருப்பினும் ஒரு கவிஞன் தன் மனதில் என்ன நினைத்து எந்த சூழலில் கவி வடித்தான் என்பதை யாராலும் உணர முடியாது என்றே நான் கருதுகிறேன். ஒரே ஆண் கணவனாகவும், மகனாகவும், தகப்பனாகவும் பார்ப்பவர்க்கெல்லாம் பல அவதாரமாய் தெரிவது போலத் தான் இதுவும் என நினைக்கிறேன் நான்.உண்மைதான் இனியன். ஆனாலும் இந்தக் கவிதையைப் படித்தால் என்ன தோன்றுகிறது என்று கருத்திடலாமே. அதைத்தான் இப்பொழுது எதிர் பார்க்கிறேன். நான் நினைத்ததோடு ஒத்துப் போக வேண்டும் என்ற தேவையில்லையே.

Iniyan
24-08-2005, 01:35 PM
திரும்ப படித்து பார்க்கும் போது, பெண் பார்த்து தன் மனம் கவர்ந்து போனவன் பதிலளிக்காத நிலையில், கண்டதும் காதல் கொண்ட கன்னி தன் மனக்குமுறல் சொல்லும் கவிதை போல தெரிகிறது எனக்கு.

மன்மதன்
24-08-2005, 01:49 PM
ஏன் இதை கன்னிதான் சொல்லணுமா.. கண்ணனும் சொல்லலாமே இனியன்..
அன்புடன்
மன்மதன்

mukilan
24-08-2005, 02:24 PM
ஒரு வேலையில்லாப் பட்டதாரி தன் மனங் கொத்தியவளைப் பார்த்து கேட்பதாகப் படுகிறது.சரி. வருவதுதான் வருவாய்
வருவாயைப் பார்க்காமல்
என்னை விலைக்காவது வாங்க வருவாய்! என்ற இந்த வரிகள் வரதட்சணையைக் குறிப்பதாகப் படுகிறது.எனவே எப்படியேனும் என்னை மணம் புரிந்து கொள்வாய் என் எண்ணியிருந்தேன்.நான் நடைப் பிணமாகும் முன் வருவாயா?? என்ற வினாவோடு முடிகிறது.சரியா? தவறா? என்று ராகவன் அவர்கள்தான் கூற வேண்டும்.

Iniyan
24-08-2005, 09:50 PM
ஏன் இதை கன்னிதான் சொல்லணுமா.. கண்ணனும் சொல்லலாமே இனியன்..
அன்புடன்
மன்மதன்

வருவாயைப் பார்க்காமல் விலைக்காவது வாங்க வருவாயா?

என்னுமிடத்தில் நான் கண்டது "வரப் போகும் வரதட்சணையைப் பாராமல் நான் தரப்போகும் விலையான என் காதலுக்கும், என் கன்னித்தன்மைக்கும் ஏன் என்னையே விலையாய்த் தருகிறேனே அந்த விலைகாவது என்னை வாங்க வருவாயா என".

அதனாலேயே நான் அப்படிச் சொன்னேன் மன்மதனாரே.

மன்மதன்
25-08-2005, 04:20 AM
சரி. வருவதுதான் வருவாய்
வருவாயைப் பார்க்காமல்
என்னை விலைக்காவது வாங்க வருவாய்!

இவர் இப்படி சொல்லியதற்கு இப்படித்தான்

பொருள் கொள்ளவேண்டுமா?? நான் எப்படி நினைத்தேன் என்றால்,

நான் வாங்கும் சம்பளத்தை (வருவாய்) பார்க்காமல், என்னை விலைகொடுத்து (வரதட்சணை) கொடுத்து வாங்க வருவாய்..

-
மன்மதன்

mukilan
25-08-2005, 04:31 AM
இவர் இப்படி சொல்லியதற்கு இப்படித்தான்

பொருள் கொள்ளவேண்டுமா?? நான் எப்படி நினைத்தேன் என்றால்,

நான் வாங்கும் சம்பளத்தை (வருவாய்) பார்க்காமல், என்னை விலைகொடுத்து (வரதட்சணை) கொடுத்து வாங்க வருவாய்..

-
மன்மதன்
நானும் அப்படித்தான் நினைத்தேன் மன்மதன். எனது முந்தைய பதிவைப் பாருங்களேன்,

மன்மதன்
25-08-2005, 04:33 AM
கரெக்ட் முகிலன்.. நான் சொன்னது இனியனின் பதிவுக்காக. நாம டூ பேரும்தான் கரெக்டூ :D :D

gragavan
25-08-2005, 04:53 AM
அடேங்கப்பா! நல்ல கருத்துப் பரிமாற்றங்கள்.

நண்பனுடைய கருத்தையும் எதிர் பார்த்திருந்தேன். அவருக்கு வேலைப்பளு போலிருக்கிறது.

சரி. இருங்கள். நான் நினைத்ததைச் சொல்கிறேன். ஒரு ஐந்து நிமிடம்.

pradeepkt
25-08-2005, 05:03 AM
சொல்லிப் பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன.

பரஞ்சோதி
25-08-2005, 05:08 AM
பிரதிப் சொல்லி 10 நிமிடங்கள் ஆகிவிட்டது.

- டைம் கீப்பர் பரம்ஸ்

gragavan
25-08-2005, 05:13 AM
அட இருங்கப்பா.....எழுதிக்கிட்டு இருக்கேன். அதுக்குள்ள ஆபீசுல வேலய வேற பாக்கச் சொல்றாங்க........ஹி ஹி

pradeepkt
25-08-2005, 05:14 AM
அட இருங்கப்பா.....எழுதிக்கிட்டு இருக்கேன். அதுக்குள்ள ஆபீசுல வேலய வேற பாக்கச் சொல்றாங்க........ஹி ஹி
நேரம்யா...
என்னா சலிப்பு ?? :D
ஆபீசுல வேலயப் பாக்கச் சொல்லாம பக்கத்தில இருக்கிற ஃபிகரையா பாக்கச் சொல்லுவாங்க...

gragavan
25-08-2005, 05:36 AM
காதல் கவிதைகளை நான் எழுதுவதில்லை. காதல் இல்லை என்பதற்காகவா அல்லது காதல் எனக்கில்லை என்பதற்காகவா என்று தெரியாது. ஆகையால் முயற்சி கூட செய்து பார்ப்பதில்லை.

நல்ல கவிதை என்பதற்கு ஒரு குறிப்பிட்ட இலக்கணமில்லை. சொல்ல வந்ததைச் சிறப்பாகச் சொல்வதே நல்ல கவிதை. அதற்கு விளக்க உரை கூடத் தேவையிருக்காது. அதே நேரத்தில் பொதுவாகவே நல்ல கவிதைகள் பால் வேறுபாடு பாராமல் வரும். நண்பனின் ஓய்வு கவிதையும் அப்படித்தான். பால் வேறுபாடு பாராட்டாத கவிதைதானே.

என்னுடைய இந்தக் கவிதையும் பால் வேறுபாடு பாராட்டாத கவிதைதான். மன்மதன் சொன்னது போல் கன்னிக்கும் ஆகும். கண்ணனுக்கும் ஆகும்.

எல்லாருமே லேசாக நான் சொல்ல வந்ததை உரசிக் கொண்டுதான் போனார்கள். முதிர் கன்னிமை என்றார் பிரியன். ஆண்டவன் மீது என்றார் பிரதீப். அதைத்தொடர்ந்து ஒரு விவாதமே நடத்தி விட்டார்கள் இனியன், மன்மதன், முகிலன் ஆகிய மூவர். மகிழ்ச்சி. இந்த அளவிற்குச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறதே என்ற மகிழ்ச்சி.

இந்தக் கவிதை நான் கட்டிலில் கிடந்து உறங்கிக் கொண்டிருக்கையில் வந்தது. கனவில் வந்த கவிதை என்று தெரிந்தாலும் கண்ணோரத்தில் ஒரு சொட்டுக் கண்ணீர் தேங்கி வழிந்தது உண்மைதான். முக்கால்கவிதை காலையில் மறந்து போன நிலையில் நினைவிருந்த முதற் பத்தியை வைத்து முழுவதையும் நானே எழுதி முடித்தேன். கனவில் வந்து கவிதை சொன்னவருக்கு நன்றி.

இந்தக் கவிதை காதல் கவிதை என்பதில் ஐயமில்லை. பிரிவுத் துயரைத் தாங்காமல் விளைந்தது என்பதில் ஐயமில்லை. பழகிய காதல் விலகிய போழ்தில் எழுந்த கவிதை.

போனது ஒருத்தர். இங்கேயே இருந்தது மற்றொருத்தர். ஆகையால் போனவருக்கும் இருக்கின்றவருக்கும் முன்பே இருந்திருக்கிறது ஒரு உறவு.
அவர் வராமலும் போகவில்லை. வருகிறார். ஆனால் தராமல் போகிறார். அதுதான் வேதனை.

வருவாயைப் பார்க்காமல் - வருகின்ற வாயைப் பார்க்காமல் - அதாவது யார் என்ன சொல்வார்கள் என்பதைப் பார்க்காமல்
என்னை விலைக்காவது வாங்க வருவாய் - என்னை நீ உறவாகவாகச் சேர வேண்டாம். விலைப் பொருளாக எண்ணியாவது சேர் என்று கெஞ்சல். எவ்வளவு ஆசை பாருங்கள்.

கடைப் பொருளுக்கும் கடைப் பொருள் அல்லவே - விலைப் பொருளாக வருவதால் கடையில் கிடைக்கும் பொருளுக்கும் கடைப் பொருள் (இழிவானது) என்று நினைத்து விடாதே.
விடைப் பொருள் தருவாய் - எதையாவது செய்
நான் நடைப் பொருளாவதற்குள் - நான் நடைப் பிணமாவதற்குள். ( ஏன் தெரியுமா, நடைப் பிணமான பின் வந்தால் வந்தவருக்கு முழுச்சுகம் கிடைக்காதே...அதனால். "சூடாக இருக்கிறப்போ சாப்பிட வாங்க" என்று கண்ணதாசன் சொன்னது போல.)

இந்தக் கவிதையில் உள்ள நிலையில் வேறு யாராவது இருந்திருக்கின்றார்களா என்று இலக்கியங்களைத் தேடிப் பார்த்தேன். என் நினைவிற்கு வந்தது ஆண்டாள். அவளை நினைத்து இந்தக் கவிதை வரவில்லையானாலும் அவளுடைய நிலையிலிருக்கும் ஒருவர் எழுதியதாகக் கொள்ளலாம். பாவம் ஆண்டாள். கண்ணன் வந்தான். பாடினான். ஆடினான். கூடினானென்றால் இல்லை. தேடினாள். ஓடினாள். மீண்டும் வந்தான். பழைய கதைதான்.

இப்பொழுது நான் கவிதையில் சொல்ல வந்தது புரிந்திருக்குமே.

பிரியன்
25-08-2005, 05:39 AM
போனது போனாய்
என்னை ஏன் கொண்டு போனாய்
எனக்குத் தெரியாத என்னை
எனக்குத் தெரியாமல் ஏன் கொண்டு போனாய்!

மீண்டும் வந்தது வந்தாய்
உன்னையாவது தந்தாயா?
எனக்குத் தெரிந்த உன்னை
எனக்குத் தெரிந்தே ஏன் தராமல் போனாய்!

சரி. வருவதுதான் வருவாய்
வருவாயைப் பார்க்காமல்
என்னை விலைக்காவது வாங்க வருவாய்!

கடைப் பொருளுக்கும்
கடைப் பொருளல்லவே
விடைப் பொருள் தருவாய் - நான்
நடைப் பொருளாவதற்குள்!

ராகவன் இந்த கவிதையை காதலியின்ன் பசலைத் தருணங்கள் என்று சொல்லலாம். இது கூடலுக்கு பின்னான ஊடலாக இருக்கிறது.
பிரிவின் அழுத்தம் தாளாமல் வெதும்பும் பெண்ணின் அகவியல் தவிப்பை பதிவு செய்திருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன்

மண்டை காய வைப்பதே என் பணி என்று யாரிடமய்யா வரம் வாங்கியிருக்கிறீர்கள்:angry: :angry: :angry: :angry:

gragavan
25-08-2005, 06:50 AM

ஊடல் என்று நான் சொல்ல மாட்டேன். அகவியல் தவிப்பை ஒத்துக் கொள்கிறேன். பெண்ணென்று மட்டுமே இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. ஆணாகவும் இருக்கலாமே.

மண்டை காய வைக்கின்றேனா....விளக்கமாகச் சொல்லுங்களேன்.

பிரியன்
25-08-2005, 08:04 AM
வருவாயைப் பார்க்காமல் - வருகின்ற வாயைப் பார்க்காமல் - அதாவது யார் என்ன சொல்வார்கள் என்பதைப் பார்க்காமல்
என்னை விலைக்காவது வாங்க வருவாய் - என்னை நீ உறவாகவாகச் சேர வேண்டாம். விலைப் பொருளாக எண்ணியாவது சேர் என்று கெஞ்சல். எவ்வளவு ஆசை பாருங்கள்.

கடைப் பொருளுக்கும் கடைப் பொருள் அல்லவே - விலைப் பொருளாக வருவதால் கடையில் கிடைக்கும் பொருளுக்கும் கடைப் பொருள் (இழிவானது) என்று நினைத்து விடாதே.
விடைப் பொருள் தருவாய் - எதையாவது செய்
நான் நடைப் பொருளாவதற்குள் - நான் நடைப் பிணமாவதற்குள். ( ஏன் தெரியுமா, நடைப் பிணமான பின் வந்தால் வந்தவருக்கு முழுச்சுகம் கிடைக்காதே...அதனால். "சூடாக இருக்கிறப்போ சாப்பிட வாங்க" என்று கண்ணதாசன் சொன்னது போல.)

இந்தக் கவிதையில் உள்ள நிலையில் வேறு யாராவது இருந்திருக்கின்றார்களா என்று இலக்கியங்களைத் தேடிப் பார்த்தேன். என் நினைவிற்கு வந்தது ஆண்டாள். அவளை நினைத்து இந்தக் கவிதை வரவில்லையானாலும் அவளுடைய நிலையிலிருக்கும் ஒருவர் எழுதியதாகக் கொள்ளலாம். பாவம் ஆண்டாள். கண்ணன் வந்தான். பாடினான். ஆடினான். கூடினானென்றால் இல்லை. தேடினாள். ஓடினாள். மீண்டும் வந்தான். பழைய கதைதான்.

இப்பொழுது நான் கவிதையில் சொல்ல வந்தது புரிந்திருக்குமே..

மேற்கொண்ட வார்த்தையைக் கொண்டே அது பெண்ணின் தவிப்பு என்று குறிப்பிட்டிருந்தேன். சமூக அமைப்பில் ஆண்களுக்கு அந்த வாக்கியம் பொருந்தமலே இருக்கிறது. நான் அகவியல் தவிப்பு என்றூ பொதுவான வார்த்தையில் சொல்லியிருந்தேன். அந்த பதத்தின் பிரயோகம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். மேலும் பசலை என்ற வார்த்தையையும் அதற்காகத்தான் பயன்படுத்தினேன்

நல்ல வாசிப்பை தந்தது கவிதை.. நான் எனக்கு பிடிபட்டதை எழுதிவிட்டு பார்த்தால் உங்கள் விளக்கம். நமக்கும் கொஞ்சம் கவிதை புரிகிறது என்று மகிழ்ச்சி அடைந்தேன்.

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் ராகவன்

தங்கள் புதிர், கேள்வி, தலை சற்று சூடாகித்தான் விடுகிறது. அதைத்தான் அப்படி விளையாட்டாய் சொல்லியிருந்தேன்

gragavan
25-08-2005, 08:18 AM
.

தங்கள் புதிர், கேள்வி, தலை சற்று சூடாகித்தான் விடுகிறது. அதைத்தான் அப்படி விளையாட்டாய் சொல்லியிருந்தேன்உண்மைதான் பிரியன். எல்லாரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

முடிந்தவரை சிறப்பாக எழுத முயல்கிறேன் பிரியன். உங்கள் கருத்து ஆக்கத்திற்கான ஊக்கம்.

மன்மதன்
25-08-2005, 08:23 AM
.
தங்கள் புதிர், கேள்வி, தலை சற்று சூடாகித்தான் விடுகிறது. அதைத்தான் அப்படி விளையாட்டாய் சொல்லியிருந்தேன்

தலை சூடாகி விடுகிறது என்றால் கோபம் வருகிறது என்றுதானே அர்த்தம்..:rolleyes: :rolleyes: :D
நாராயணா.. :cool: :cool:

பிரியன்
25-08-2005, 08:26 AM
கோவம் இல்லை. இயலாமை,அறியாமை என்றும் கொள்க...

நடக்காது நாரயணா

நடக்காது....

மன்மதன்
25-08-2005, 08:29 AM
அதான நம்ம பிரியன்.. சும்மா செக் பண்ணினேன்... நம்ம அலைவரிசை ஒத்து போகுது.. :D :D
(ஹ்ம்ம் நடக்கலையே நாராயணா.. :rolleyes: :rolleyes: )

gragavan
25-08-2005, 09:42 AM
அதான நம்ம பிரியன்.. சும்மா செக் பண்ணினேன்... நம்ம அலைவரிசை ஒத்து போகுது.. :D :D
(ஹ்ம்ம் நடக்கலையே நாராயணா.. :rolleyes: :rolleyes: )இதென்ன சென்னை தொலைக்காட்சி நிலையமா? முதல் அலைவரிசை இரண்டாவது அலைவரிசைன்னுகிட்டு.

kavitha
25-08-2005, 10:54 AM
கவிதை மிக நன்றாக இருந்தது. விளக்கமும் அருமை. இரண்டரை மணி நேரத்திற்குள் 30 பதிவுகள்...!
இது மற்றொரு சாதனை. நீங்கள் ஏன் கவிதைகள் அதிகம் பதிப்பதில்லை?

gragavan
26-08-2005, 05:28 AM
கவிதை மிக நன்றாக இருந்தது. விளக்கமும் அருமை. இரண்டரை மணி நேரத்திற்குள் 30 பதிவுகள்...!
இது மற்றொரு சாதனை. நீங்கள் ஏன் கவிதைகள் அதிகம் பதிப்பதில்லை?நன்றி கவிதா.
கவிதை எழுதுவது முன்பு நிறைய. இப்பொழுது குறைந்து விட்டது. அது மட்டுமல்ல. எல்லாம் தானாக வரும். நானாக சிந்தித்து எழுதினால் செய்யுள் போல இருக்கிறது. இந்தக் கவிதை தானாக வந்தது. போட்டு விட்டேன். இனிமேல் நிறைய எழுத முயல்கிறேன்.

பிரசன்னா
10-09-2005, 02:45 PM
சூப்பர்

ஆதவா
07-01-2007, 01:37 PM
போனது போனாய்
என்னை ஏன் கொண்டு போனாய்
எனக்குத் தெரியாத என்னை
எனக்குத் தெரியாமல் ஏன் கொண்டு போனாய்!

மீண்டும் வந்தது வந்தாய்
உன்னையாவது தந்தாயா?
எனக்குத் தெரிந்த உன்னை
எனக்குத் தெரிந்தே ஏன் தராமல் போனாய்!

சரி. வருவதுதான் வருவாய்
வருவாயைப் பார்க்காமல்
என்னை விலைக்காவது வாங்க வருவாய்!

கடைப் பொருளுக்கும்
கடைப் பொருளல்லவே
விடைப் பொருள் தருவாய் - நான்
நடைப் பொருளாவதற்குள்!

புரிந்தும் புரியாமலும்

ஓவியா
08-01-2007, 12:01 AM
காதல் கவிதைகளை நான் எழுதுவதில்லை. காதல் இல்லை என்பதற்காகவா அல்லது காதல் எனக்கில்லை என்பதற்காகவா என்று தெரியாது. ஆகையால் முயற்சி கூட செய்து பார்ப்பதில்லை.

நல்ல கவிதை என்பதற்கு ஒரு குறிப்பிட்ட இலக்கணமில்லை. சொல்ல வந்ததைச் சிறப்பாகச் சொல்வதே நல்ல கவிதை. அதற்கு விளக்க உரை கூடத் தேவையிருக்காது. அதே நேரத்தில் பொதுவாகவே நல்ல கவிதைகள் பால் வேறுபாடு பாராமல் வரும். நண்பனின் ஓய்வு கவிதையும் அப்படித்தான். பால் வேறுபாடு பாராட்டாத கவிதைதானே.

என்னுடைய இந்தக் கவிதையும் பால் வேறுபாடு பாராட்டாத கவிதைதான். மன்மதன் சொன்னது போல் கன்னிக்கும் ஆகும். கண்ணனுக்கும் ஆகும்.

எல்லாருமே லேசாக நான் சொல்ல வந்ததை உரசிக் கொண்டுதான் போனார்கள். முதிர் கன்னிமை என்றார் பிரியன். ஆண்டவன் மீது என்றார் பிரதீப். அதைத்தொடர்ந்து ஒரு விவாதமே நடத்தி விட்டார்கள் இனியன், மன்மதன், முகிலன் ஆகிய மூவர். மகிழ்ச்சி. இந்த அளவிற்குச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறதே என்ற மகிழ்ச்சி.

இந்தக் கவிதை நான் கட்டிலில் கிடந்து உறங்கிக் கொண்டிருக்கையில் வந்தது. கனவில் வந்த கவிதை என்று தெரிந்தாலும் கண்ணோரத்தில் ஒரு சொட்டுக் கண்ணீர் தேங்கி வழிந்தது உண்மைதான். முக்கால்கவிதை காலையில் மறந்து போன நிலையில் நினைவிருந்த முதற் பத்தியை வைத்து முழுவதையும் நானே எழுதி முடித்தேன். கனவில் வந்து கவிதை சொன்னவருக்கு நன்றி.

இந்தக் கவிதை காதல் கவிதை என்பதில் ஐயமில்லை. பிரிவுத் துயரைத் தாங்காமல் விளைந்தது என்பதில் ஐயமில்லை. பழகிய காதல் விலகிய போழ்தில் எழுந்த கவிதை.

போனது ஒருத்தர். இங்கேயே இருந்தது மற்றொருத்தர். ஆகையால் போனவருக்கும் இருக்கின்றவருக்கும் முன்பே இருந்திருக்கிறது ஒரு உறவு.
அவர் வராமலும் போகவில்லை. வருகிறார். ஆனால் தராமல் போகிறார். அதுதான் வேதனை.

வருவாயைப் பார்க்காமல் - வருகின்ற வாயைப் பார்க்காமல் - அதாவது யார் என்ன சொல்வார்கள் என்பதைப் பார்க்காமல்
என்னை விலைக்காவது வாங்க வருவாய் - என்னை நீ உறவாகவாகச் சேர வேண்டாம். விலைப் பொருளாக எண்ணியாவது சேர் என்று கெஞ்சல். எவ்வளவு ஆசை பாருங்கள்.

கடைப் பொருளுக்கும் கடைப் பொருள் அல்லவே - விலைப் பொருளாக வருவதால் கடையில் கிடைக்கும் பொருளுக்கும் கடைப் பொருள் (இழிவானது) என்று நினைத்து விடாதே.
விடைப் பொருள் தருவாய் - எதையாவது செய்
நான் நடைப் பொருளாவதற்குள் - நான் நடைப் பிணமாவதற்குள். ( ஏன் தெரியுமா, நடைப் பிணமான பின் வந்தால் வந்தவருக்கு முழுச்சுகம் கிடைக்காதே...அதனால். "சூடாக இருக்கிறப்போ சாப்பிட வாங்க" என்று கண்ணதாசன் சொன்னது போல.)

இந்தக் கவிதையில் உள்ள நிலையில் வேறு யாராவது இருந்திருக்கின்றார்களா என்று இலக்கியங்களைத் தேடிப் பார்த்தேன். என் நினைவிற்கு வந்தது ஆண்டாள். அவளை நினைத்து இந்தக் கவிதை வரவில்லையானாலும் அவளுடைய நிலையிலிருக்கும் ஒருவர் எழுதியதாகக் கொள்ளலாம். பாவம் ஆண்டாள். கண்ணன் வந்தான். பாடினான். ஆடினான். கூடினானென்றால் இல்லை. தேடினாள். ஓடினாள். மீண்டும் வந்தான். பழைய கதைதான்.

இப்பொழுது நான் கவிதையில் சொல்ல வந்தது புரிந்திருக்குமே.

அன்பு ராகவன்
தங்களின் கவிதை அருமை.....

அதைவிட தங்களின் விமர்சனம் மிகவும் அருமை..................கவிதையைவிட அதை விளக்கும் கருத்துக்களே என்னை அதிகம் கவர்ந்தன

மனதார....பாரட்டுகிறேன்

=====================================================

நன்றி ஆதவா

..........................................................................................................................................................................................

அந்த காய்ந்த ஒரு துளி கண்ணீர் மீண்டும் வந்தால் நான் பொருப்பல்ல..
அனைவரின் கருத்துக்களும் அசத்தல், லூட்டியும் அருமை....:D :D

பென்ஸ்
08-01-2007, 04:26 PM
ராகவா....
நான் இந்த கவிதையை சுடலாமா????

ஆதவா
08-01-2007, 05:46 PM
ராகவா....
நான் இந்த கவிதையை சுடலாமா????

ஏதோ ஒட்டை ஆயிரப்போவுதுங்க..

ஓவியா
29-04-2007, 01:45 AM
ராகவா....
நான் இந்த கவிதையை சுடலாமா????

மானஸ்தன் பெஞ்சமீன்,
சுடுவதில் :waffen093: :waffen093: :waffen093: கூட அனுமதிப்பெற ஆசைப்படுகிறார்.

ஏதோ ஒட்டை ஆயிரப்போவுதுங்க..

அதே அதே சபாபதே :sport-smiley-017: :sport-smiley-017: