PDA

View Full Version : ஆகஸ்ட் 23, புதன் கிழமை மலேசியா செய்திகள்



Mano.G.
24-08-2005, 12:02 PM
குத்தகை வழங்குவதில் F பிரிவை சேர்ந்தவர்கள் ஒதுக்கப்படமாட்டார்கள்-சாமி
பொதுப்பணித் துறை F பிரிவை சேர்ந்த தனிநபர் குத்தகையாளர்களை நிராகரிக்காது என அத்துறையின் அமைச்சர் Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.
ஐந்து ஒன்றிணைக்கப்பட்ட பூமிபுத்ரா குத்தகையாளர்கள் சம்மேளம் அமைக்கப்பட்டலும் தனிநபர் பூமிபுத்ரா குத்தகையாளர்களை அமைச்சு நிராகரிக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், பூமிபுத்ரா குத்தகையாளர்கள் சம்மேளனம் அமைக்கப்பட்டதை பொதுப்பணித் துறை வரவேற்ப╛бகவும், ஆனால் F பிரிவின் தனிநபர் குத்தகையாளர்கள் தொடர்ந்து அமைச்சின் குத்தகை பணிகளை மேற்கொண்டு வருவார்கள் என அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இதனிடையே, நூற்றுக்கணக்கான பூமிபுத்ரா குத்தகையாளர்கள் அரசாங்கத்தை நேரடியாக தொடர்பு கொண்டு குத்தகை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என Datuk Seri S. Samy Vellu மேலும் தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவது சுமார் 43 ஆயிரம் F பிரிவை சேர்ந்த குத்தகையளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------------
இலட்சியத்தை நோக்கி...
2020 தூரநோக்கு திட்டம் தொடர்பாக மலேசியாவின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வரைவுத்திட்டங்களில் எந்த மாறுதலும் இல்லை எனவும் கால மாறுதலுக்கு ஏற்ப அது தொடர்பான செயல்திட்டங்களில் மாறுதல் ஏற்படலாம் எனவும் பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.
இலட்சியத்தை தேர்வு செய்த பின், அதை எப்படி அடைவது என்பதற்கான வழிவகைகளை கண்டறிந்து செயலாற்றும் நிலையில்தான் தற்போது நாம் இருக்கின்றோம் என அவர் PUTRAJAYA-வில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த வாரம், அனைத்துலக ஆலோசக மன்ற குழுவினர், மலேசியா தற்போது இலட்சியத்தை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தரமான பொருள்தான் நிலைக்கும்

தரமான பொருட்களை நியாயமான விலையோடு வியாபாரிகள் விற்க வேண்டும் என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார். நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான பல திட்டங்களில் இதுவும் ஒன்று என அவர் மேலும் கூறினார்.
'Brand loyalty' என்பதற்கேற்ப தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், உள்ளூர் வியாபாரிகள் வெளிநாட்டு வியாபாரிகளுக்கு ஈடாக வாடிக்கையாளர்கள் அல்லது பயனீட்டாளர்களைக் கவர முடியும் என அவர் கூறினார். கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

9-வது மலேசிய திட்டத்தின் கீழ் கிளினிக்குகள் நிறுவப்படும்

9-வது மலேசிய திட்டத்தின்கீழ் சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் பல கிளினிக்குகள் நிறுவப்படவிருப்பதாக சிலாங்கூர் மாநில சுகாதார இலாகாவின் இயக்குனர் Dr Ang Kim Teng தெரிவித்தார். மேம்பாடு அடைந்துவரும் பொருளாதாரத்தினால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
குறிப்பாக, நகர்ப்புறத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கும் சிற்றூர் மக்களின் நலன் காக்க இத்திட்டம் அமல்படுத்தப்படவிருப்பதாக SHAH ALAM-இல் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறினார்.
இதற்கு முன், சிலாங்கூரில் உள்ள பல கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டாலும் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட கிளினிக்குகள் பல நிறுவப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


சிலாங்கூர் மாநிலத்தில் சுற்றுப்பயணிகள் அதிகரிப்பு
இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் சிலாங்கூர் மாநிலத்தில் சுமார் 2.004 மில்லியன் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுப்பயணிகள் சுற்றுலா மேற்கொண்டதாக ஆய்வின் வழி தெரியவந்துள்ளது.
இவ்வெண்ணிக்கை இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் 43.26 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில், உள்நாட்டு சுற்றுப்பயணிகள் மட்டும் சுமார் 1.245 மில்லியன் பேர்கள் சுற்றுலா மேற்கொண்டதாகவும், இவ்வெண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 48.72 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், இம்மாநிலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் மட்டும் 759,282 பேர்கள் சுற்றுலா மேற்கொண்டனர் மற்றும் இவ்வெண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 5.12 விழுக்காடாக உயர்ந்துள்ளது குறுப்பிடத்தக்கது.


திறந்த வெளிகளில் தீ மூட்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள்
நாட்டில் அண்மையில் சூழ்ந்திருந்த புகை மூட்டத்தின் போது 3 மாநிலங்களில் 92 ஹெக்டர் திறந்த வெளிகளில் தீ மூட்டிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை தற்பொழுது நிறைவுக்கு வரவிருப்பதாக சுற்றுச்சூழல் இலாகா தெரிவித்துள்ளது.
பகாங் மாநிலத்தில் சுமார் 80 ஹெக்டர் நிலப்பரப்பில் தீ மூட்டப்பட்டதாகவும் Sungkai, Perak-இல் எட்டு ஹெக்டரும் மற்றும் Sungai Belankan, Selangor-இல் நான்கு ஹெக்டரும் தீ மூட்டப்பட்டதாக அவ்விலாகாவின் இயக்குனர் Datuk Rosnani Ibarahim தெரிவித்தார்.
இந்த தீ சம்பவங்களில் பெரும்பாலும் தோட்டப்புற உரிமையாளர்களும் விவசாயிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முடிவுற்றதும் சுற்றுச்சூழல் இலாகா சம்பந்தப்பட்டவர்களின் மீது தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என Rosnani கூறினார்.
--------------------------------------------------------------
மும்பையில் அடுக்குமாடி மாடி கட்டடம் சரிந்து விழுந்தது : 11 பேர் பலி
மும்பையில் பழமை வாய்ந்த குடியிருப்பு அடுக்குமாடி கட்டடம் விழுந்ததில் 11 பேர் பலியானார்கள். மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். 20 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
மும்பையில் உள்ள டேம்கர் தெருவில் 4 மாடி( 16 குடியிருப்புகளை ) கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு நேற்று அதிகாலை 1. 15 மணியளவில் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் பலியானார்கள். மேலும் 37 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் 20 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இடிந்த கட்டடம் 100 ஆண்டு மிக பழமை வாய்ந்தது. இதனால் கட்டம் வலுவிழந்து இடிந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
--------------------------------------------------------------
இலங்கை வெளியுறவு அமைச்சராக அதிபர் சந்திரிகாவின் சகோதரர் நியமனம்
இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சராக, அதிபர் சந்திரிகாவின் சகோதரர் அனுரா பண்டார நாயகே நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த லட்சுமண் கதிர்காமர், கடந்த 12ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து காலியாக இருந்த வெளியுறவு அமைச்சர் பதவிக்கு அதிபர் சந்திரிகாவின் சகோதரர் அனுரா பண்டார நாயகே நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.
இத்தகவலை அதிபர் சந்திரிகாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். வெளியுறவு பொறுப்பை ஏற்றுள்ள அனுரா பண்டார நாயகே ஏற்கனவே, அமைச்சர் பதவியில் இருந்து வருகிறார். சுற்றுலா, தொழில் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி போன்ற துறைகளை அவர் கவனித்து வந்தார்.
இப்போது, வெளியுறவு அமைச்சர் பொறுப்பை ஏற்றதை அடுத்து, தொழில் மற்றும் முதலீடு ஆகிய துறைகள் நிதி அமைச்சர் சரத் அமுனுகுமாவுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன. சுற்றுலாத் துறையை அனுரா பண்டார நாயகேவே தொடர்ந்து கவனிப்பார்.


விமான படை தளபதி விமான விபத்தில் மரணம்
போலந்து நாட்டின் விமானப் படை தளபதி கேப்டன் ஜாசெக் பார்டோ ஸ் ஜோஸ் விமான விபத்தில் மரணமடைந்தார். இரண்டு பேர் அமரக்கூடிய தனியார் விமானத்தில் படை தளபதியும் அவரின் நண்பரும் சென்றனர். இதில், இருவரும் இறந்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஜெனரல் ஜாசெக் கடந்த வாரம் தான் விமானப் படை தளபதியாக பதவி உயர்வு பெற்றார். அவர் அமெரிக்காவில் ஒரு வாரம் சிறப்பு பயிற்சியும் பெற்றுள்ளார். இவ்வாறு ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


இந்தியா & பாகிஸ்தான் இம்மாத இறுதியில் பேச்சு
இந்தியா & பாகிஸ்தான் இடையே நடக்கும் விரிவான பேச்சின் முன்னேற்றம் குறித்து விவாதிக்க, வெளியுறவு செயலர் ஷியாம் சரண், இம்மாதம் இறுதியில் பாகிஸ்தான் செல்கிறார்.
நியூயார்க்கில் அடுத்த மாதம் ஐ.நா., பொதுச் சபைக் கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பும் பங்கேற்கின்றனர். அப்போது, இருதரப்பு உறவு குறித்து இருவரும் பேச்சு நடத்தவுள்ளனர். இது தொடர்பாக விவாதிக்க, வெளியுறவு செயலர் ஷியாம் சரண், இம்மாதம் 31ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார்.
அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி, வெளியுறவுச் செயலர் ரியாஸ் முகமது கான் ஆகியோருடன் ஷியாம் பேச்சு நடத்த உள்ளார். காஷ்மீர், சியாச்சின் உட்பட இருதரப்புக்கும் இடையே நடக்கும் விரிவான பேச்சில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, அவர்களுடன் விவாதிக்க உள்ளார். பாகிஸ்தானுக்கு அவர் மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.
--------------------------------------------------------------
Tennis-இல் Maria Sharapova சாதனை
Tennis தரவரிசை பட்டியலில் Maria Sharapova 'Number 1' இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2004-ம் ஆண்டில் Wimbledon தொடரில் சாம்பியன் பட்டம் வென்று Tennis-ல் தடம் பதித்தவர் ரஷ்யாவின் Maria Sharapova.
இதையடுத்து பல்வேறு சர்வதேச தொடர்களில் கோப்பை வென்று சாதித்தார். தற்போது முதல் முறையாக சர்வதேச தரவரிசை பட்டியலிலும் முதல் இடம் பிடித்துள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்ட இப்பட்டியலில் Sharapova 4 ஆயிரத்து 452 புள்ளிகள் பெற்று, அமெரிக்காவின் Lindsay Davenport-டை பின்னுக்குத் தள்ளி 'Number 1' இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.
18 வயதாகும் இவர் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெறும் முதல் ரஷ்ய வீராங்கனை என்ற சாதனையும் படைத்துள்ளார். தவிர, குறைந்த வயதில் முதலிடம் பெறும் ஐந்தாவது வீராங்கனை என்ற பெருமையும் பெற்றுள்ளார்.


நன்றி வணக்கம்மலேசியா.காம்

மனோ.ஜி

pradeepkt
24-08-2005, 12:25 PM
ஷரபோவாவிற்கு வாழ்த்துகள்
ஷியாம் சரணுக்கு வாழ்த்துகள்
ஜாசெக் பார்டோ குடும்பத்தினருக்கு இரங்கல்கள்.
அனுரா பண்டாரநாயகாவிற்கு வாழ்த்துகள்.

மனோ அண்ணாவிற்கு நன்றிகள்.