PDA

View Full Version : தலை..மன்மதன்
23-08-2005, 11:46 AM
ஒவ்வொரு வாக்கியத்திலும்
கொப்பளிக்கும் நகைச்சுவைகள்..
படித்து முடித்தும் நிற்காத
நம் புன்சிரிப்புகள்..

எழுத்தோட நில்லாமல்
எழுந்தோடி வரவேற்கும்
அன்புள்ளம் கொண்டவரே
நம்மனைவருக்கும் தலையாவார்..

கரிகாலன் உட்பட
பல தலைகள்
தலையெனயழைக்கும்
மன்றத்தின் மூத்தகுடிமகன்
மாண்புமிகு மணியா..

வயதுவரம்பில்லாமல்
ஒரே அலைவரிசை பதிவுகள்..
படிக்கும் போது வெளிப்படும்
குபீர் சிரிப்புகள்..

சென்னை சென்றாலோ
அன்பில் உள்ளம் உருக்கும் அந்த
மளிகைக்கடை மணியாவாம்
இந்த மனிதருள் மாணிக்கம்..

முக்கிய பொறுப்பில்
இருந்தும் எங்களுக்காக
நேரம் ஒதுக்கி பல
பதிவுகளை தரும் நண்பர்.

தேஜஸ் தோற்றத்தில்
பார்த்தவரை அப்படியே
மயக்கக்கூடிய மன்மத..மன்னிக்க
மரகத வீணை..

மன்ற நண்பர்களை
சந்திப்பதை விழாவாக்கியதால்
இனி பலப்பல
தலையாய சந்திப்புகள் நிகழும்..


அன்புடன்

http://img.photobucket.com/albums/v372/manmathan/manmadan_Av.gif

gragavan
23-08-2005, 11:54 AM
அடடே தலையைப் பத்தி ஒரு கவிதை.

நானும் ரெண்டு வரி சொல்றேன்.

அன்புள்ள மணியா
உனக்கில்லாத பணியா
இருந்தாலும் மன்றத்திற்குக் கிடைத்த கனியாம்
உன்னோடு சேர்ந்திருப்பதே அணியாம்

மன்மதன்
23-08-2005, 11:57 AM
ஆஹா.. என் கவிதை வரிகளில் இன்னும் 4 கூடிவிட்டது. நன்றி ராகவா.... எல்லோரும் 4 , 4 வரிகளாவது கொடுப்பீங்கதானே..:D :D
அன்புடன்
மன்மதன்

pradeepkt
23-08-2005, 12:02 PM
எங்கள் மனமினிக்கும் நட்பலை
உங்கள் மாண்பிற்கு விலைமதிப்பிலை
வெல்ல இன்னொருவன் பிறக்கலை
வாழ்க நீங்கள் எங்களுக்குத் தலை

pradeepkt
23-08-2005, 12:03 PM
மன்மதா,
அப்படியே வரிசையா ஒவ்வொரு போட்டோவா போடப் போறியா?

திகிலுடன்,
பிரதீப்

மன்மதன்
23-08-2005, 12:05 PM
மன்மதா,
அப்படியே வரிசையா ஒவ்வொரு போட்டோவா போடப் போறியா?

திகிலுடன்,
பிரதீப்


நல்ல ஐடியாவே இருக்கே.. ஆனா கவிதை ஒவ்வொருத்தரா எழுதணும் சரியா?? (மற்ற எல்லா போட்டோவின் முன்னாடியும் பெப்சி, மிரிண்டா பாட்டில் இருக்கே..:rolleyes: :rolleyes: )

அன்புடன்
மன்மதன்

பிரியன்
23-08-2005, 12:20 PM
இரு தலைமுறை கண்ட போதிலும்
இடைவெளி இல்லாதவர்
மாறாக் குறும்பும்
குறையாப் பொலிவும்
நிறைந்த கனிவும்
தன் அகம் புறம் கொண்டு
அன்பால் கவர்ந்த
மன்றத்து கண்மணிகளையே
தன் மகுடத்தில் மணிகளாக்கி இருப்பவர்
நமதன்பு மணியா

பிரியன்
23-08-2005, 12:25 PM
யோவ் மன்மதா ஏற்கனவே சென்னைப் பாராயணம்ன்னு பிரதீப் எழுதி கலக்கீட்டாரு. நீரும் தலைப்பத்தி அசத்தலா இந்த பதிவை போட்டுட்டியே. நான் எதை எழுதுறது. வடைகறி சாப்பிட்டேன்னுதான் எழுதனும் போலிருக்கே

pradeepkt
23-08-2005, 12:28 PM
யோவ் மன்மதா ஏற்கனவே சென்னைப் பாராயணம்ன்னு பிரதீப் எழுதி கலக்கீட்டாரு. நீரும் தலைப்பத்தி அசத்தலா இந்த பதிவை போட்டுட்டியே. நான் எதை எழுதுறது. வடைகறி சாப்பிட்டேன்னுதான் எழுதனும் போலிருக்கே
ஏன்யா எனக்குத் தெரியாம என்ன வடைகறி சாப்பிட்டீங்க...
ஆமா, நீங்கதான் அங்க என்ன என்னவோ குறிப்பு எடுத்துக்கிட்டீங்களே...

மதிப்புக் கூடுதல் வரி
ஐரோப்பிய மாவீரன்

அப்படி இப்படின்னு... என்ன புரியுதா?
அங்க தலைக்கும் மன்மதனுக்கும் வயித்தைக் கலக்குதாம் :D

பிரியன்
23-08-2005, 12:29 PM
இதுவல்லவோ நட்பு ... நன்றி பிரதீப்பூ

pradeepkt
23-08-2005, 12:31 PM
பிரியன்,
ரொம்ப நன்றியெல்லாம் சொல்லாதீங்க..
நீங்க என்னத்தையாவது எழுதப் போயி அடுத்த சந்திப்பில எனக்கு டின் கட்டிறப் போறாங்க...

gragavan
23-08-2005, 12:36 PM
பிரியன்,
ரொம்ப நன்றியெல்லாம் சொல்லாதீங்க..
நீங்க என்னத்தையாவது எழுதப் போயி அடுத்த சந்திப்பில எனக்கு டின் கட்டிறப் போறாங்க...அந்தப் பயம் இருந்தாச் சரி.

மன்மதன்
23-08-2005, 01:02 PM
யோவ் மன்மதா ஏற்கனவே சென்னைப் பாராயணம்ன்னு பிரதீப் எழுதி கலக்கீட்டாரு. நீரும் தலைப்பத்தி அசத்தலா இந்த பதிவை போட்டுட்டியே. நான் எதை எழுதுறது. வடைகறி சாப்பிட்டேன்னுதான் எழுதனும் போலிருக்கே

வடைகறியா.. இல்லை கறிவடையா?? :rolleyes: :rolleyes:
அன்புடன்
தலைமை கவிஞன் (தலை பற்றி கவிதை கொடுத்ததால் ) மன்மதன் ;)

gragavan
23-08-2005, 01:13 PM
வடைகறியா.. இல்லை கறிவடையா?? :rolleyes: :rolleyes:
அன்புடன்
தலைமை கவிஞன் (தலை பற்றி கவிதை கொடுத்ததால் ) மன்மதன் ;)ஏம்ப்பா மாம்ஸ்.....அப்போ தலையெல்லாம் மையா?

pradeepkt
23-08-2005, 02:55 PM
தலையோட தலைக்கு மை எல்லாம் தேவையில்லை... (ஆமா நீங்க மன்மதனைச் சொல்லலையில்ல???)
அவரோட மறுபெயர் இளமை!!!

thempavani
23-08-2005, 11:56 PM
நேரில் பார்த்துவிட்டு இப்படி பாட்டு பாடுறியள்..ஞான் எண்டா பண்ணுறது...

சரி..சரி..அப்பால சொல்றேன்..

(போனவருசம் சேரன் காட்டிய புகைப்படத்தில் தலை இளமையாக அல்லவா இருந்தார்...ஏல மன்மதா என்னடா பண்ணினாய்..தலை கண்டுக்கோங்க....)

mania
24-08-2005, 03:59 AM
நண்பர்களை சந்தித்து மகிழ்வுடன் களித்த அந்த இனிமையான சில மணி நேரங்களின் நினைவுகள் என் மனதை விட்டு விலகுவதற்கு முன்னாலேயே இன்னொரு இன்ப அதிர்ச்சி இந்த பதிவு..:) நான் தான் உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.....:) ..அந்த ஒரு அருமையான சந்தர்ப்பத்தை உருவாகியதற்கு. :) இதற்கு மேல் எனக்கு எதுவும் எழுத்தில் வடிக்க முடியவில்லை (மாபெரும் கவிஞர்கள் முன்னே.......நான் எம்மாத்திரம்...?):D வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் சொல்லிக்கொள்கிறேன்.:)
அன்புடன்
உணர்ச்சி வயப்பட்ட
உங்கள் மணியா....:) :)

kavitha
24-08-2005, 03:59 AM
உங்கள நினைக்கறப்ப மனசுல அருவி மாதிரி கொட்றது.
ஆனா எழுதறப்ப வார்த்தை முட்றது தலை.

தலை படத்தை மட்டும் போட்டு டபாய்த்த மன்மதனுக்கு பேஷ் பேஷ்!

கவிதா

மன்மதன்
24-08-2005, 04:03 AM
Ţ â .
ɡ ؾ š .

!

Ţ

அதானே பார்த்தேன்.. நாங்களெல்லாம் எழுதினா கவிதையென்று ஒத்துக்க மாட்டிங்களே.:D :D
அன்புடன்
அரசகவி மன்மதன்

mania
24-08-2005, 04:03 AM
உருது கவி கவிக்கும் :rolleyes: என் நன்றியும் வாழ்த்துக்களும்....!!!:D
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
24-08-2005, 04:07 AM
தலையின் தலைக்கு மேல் ஒரு ஒளி வட்டம் தெரிகிறதே.. அதை கவனித்தீர்களா மக்கா ?? :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

mania
24-08-2005, 04:09 AM
நேரில் பார்த்துவிட்டு இப்படி பாட்டு பாடுறியள்..ஞான் எண்டா பண்ணுறது...

சரி..சரி..அப்பால சொல்றேன்..

(போனவருசம் சேரன் காட்டிய புகைப்படத்தில் தலை இளமையாக அல்லவா இருந்தார்...ஏல மன்மதா என்னடா பண்ணினாய்..தலை கண்டுக்கோங்க....)

:D "ஆண்டொன்று போனால் .....வயதொன்று கூடும்....!!!":D
அன்புடன்
வயதான மணியா...:D .

kavitha
24-08-2005, 04:13 AM
அதானே பார்த்தேன்.. நாங்களெல்லாம் எழுதினா கவிதையென்று ஒத்துக்க மாட்டிங்களே
உன் படத்தை போடலையே அதைச்சொன்னேன். கவிதையும் அருமை மன்மதன்


--------------------------------------------------------------------------------


உருது கவி கவிக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்....!!!
அன்புடன்
மணியா...

??????

மன்மதன்
24-08-2005, 04:21 AM
என் படத்தை போடலாம்.. கவிதை யார் எழுதுவா?? :D :D
அன்புடன்
மன்மதன்

kavitha
24-08-2005, 04:23 AM
என் படத்தை போடலாம்.. கவிதை யார் எழுதுவா??
அன்புடன்
மன்மதன்
போடு பார்ப்போம்.

kavitha
24-08-2005, 04:27 AM
தலையின் தலைக்கு மேல் ஒரு ஒளி வட்டம் தெரிகிறதே.. அதை கவனித்தீர்களா மக்கா ?? :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்


மனசு போலவே அத்தனை ஒளி... :)

(உச்சியில பிளாஷ் அதிகமா காட்டினாயா?)

மன்மதன்
24-08-2005, 04:41 AM
மனசு போலவே அத்தனை ஒளி... :)

(உச்சியில பிளாஷ் அதிகமா காட்டினாயா?)

எதேச்சையாக அமைந்து விட்டது. ஆனாலும் அங்கே பல்பு இருந்ததா நியாபகம் இல்லை.. (பல்பு வாங்கின பிரதீப்பே சொல்லட்டுமே.:D :D)
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
24-08-2005, 04:46 AM
ராமன் எத்தனை ராமனடி.

சிஷ்யர்களுக்காக எடுத்த அவதாரம் பரமாத்மா
அடி பொடிகளுக்காக எடுத்த அவதாரம் தலை
உடலாலும் உள்ளத்தாலும் இவர் ஒரு ஜெமினி
சிரிக்காதவர்களையும் சிரிக்க வைப்பதில் கஜினி
நம் அனைவருக்கும் தலை தான் என்றும் ரஜினி

மன்மதன்
24-08-2005, 04:48 AM
ஆஹா.. ஆஹா.. அசத்தல் நண்பா.
அன்புடன்
மன்மதன்

mania
24-08-2005, 04:50 AM
எதேச்சையாக அமைந்து விட்டது. ஆனாலும் அங்கே பல்பு இருந்ததா நியாபகம் இல்லை.. (பல்பு வாங்கின பிரதீப்பே சொல்லட்டுமே.:D :D)
அன்புடன்
மன்மதன்

:) மன்மதன் அன்றிருந்த நிலையில் (கண்கள் டயலேட் பண்ணப்பட்டிருந்தன)...இந்த அளவுக்கு படங்கள் எடுத்ததே பெரிய சமாசாரம்....:) (என் தலைக்கு மேலே தோன்றுவது ஞான ஒளி என்று :rolleyes: மன்மதனை போன்ற....!!! சான்றோர்கள் சொல்ல கேள்விதான்....ஹி....ஹி...ஹி..):D :D
அன்புடன்
ஞானஒளி மணியா

pradeepkt
24-08-2005, 08:12 AM
எதேச்சையாக அமைந்து விட்டது. ஆனாலும் அங்கே பல்பு இருந்ததா நியாபகம் இல்லை.. (பல்பு வாங்கின பிரதீப்பே சொல்லட்டுமே.:D :D)
அன்புடன்
மன்மதன்
என்னை ஏம்ப்பு வம்புக்கு இழுக்கற?
நாந்தான் வாங்கின பல்பை உனக்கே கொடுத்திட்டனே..

பிரியன்
24-08-2005, 08:15 AM
தலையின் பவழ விழா மன்றத்து உறுப்பினர்களால் நடத்தபட வேண்டும் என்ற எனது ஆசையை இத்தருணத்தில் தெரியப் படுத்திக் கொள்கிறேன். சரி என்பவர்கள் எல்லாம் கையைத் தூக்குங்கள். இப்போதே குழு அமைத்துக் கொள்ளலாம். அந்த தருணம் மிகவும் இனிப்பாக இருக்கும் என்பது இப்போதே தெரிகிறது

pradeepkt
24-08-2005, 08:19 AM
ஜிமுக்குச்சிக்கா...
நானும் இருக்கேன்...
கொண்டாடிருவோம் பிரியன்...

மன்மதன்
24-08-2005, 08:53 AM
தலையின் பவழ விழா மன்றத்து உறுப்பினர்களால் நடத்தபட வேண்டும் என்ற எனது ஆசையை இத்தருணத்தில் தெரியப் படுத்திக் கொள்கிறேன். சரி என்பவர்கள் எல்லாம் கையைத் தூக்குங்கள். இப்போதே குழு அமைத்துக் கொள்ளலாம். அந்த தருணம் மிகவும் இனிப்பாக இருக்கும் என்பது இப்போதே தெரிகிறது

http://photos2.flickr.com/3222503_da90a153e9_m.jpg

தூக்கிட்டேன் பிரியன்.

mania
24-08-2005, 09:13 AM
http://photos2.flickr.com/3222503_da90a153e9_m.jpg

தூக்கிட்டேன் பிரியன்.

:D :D கையை தூக்குங்கன்னா விரலை தூக்கறீங்களே......வித்தியாசமான ஆள் தான்யா.....!!!:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

gragavan
24-08-2005, 09:18 AM
நானும் தூக்குறேன்

thempavani
24-08-2005, 09:53 AM
நானும் லிஸ்டில் உண்டு..ஆனால் மார்ச் மாதம்தான் விழா வைக்கவேண்டும்..

பரஞ்சோதி
24-08-2005, 10:57 AM
நானும் லிஸ்டில் உண்டு..ஆனால் மார்ச் மாதம்தான் விழா வைக்கவேண்டும்..

நானும் ரெடி, ஆனால் நான் வரும் போது தான் விழா வைக்க வேண்டும்

- சக்தி

ஏலே மன்மதா உன் கையை தூக்கு என்றால் என் கையை பிடித்து ஏம்லே தூக்குறே!

பிரியன்
24-08-2005, 11:05 AM
சக்தி : யப்பா அதற்கு இன்னும் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். புரியுதா

மன்மதன்
24-08-2005, 11:06 AM
நானும் ரெடி, ஆனால் நான் வரும் போது தான் விழா வைக்க வேண்டும்

- சக்தி

ஏலே மன்மதா உன் கையை தூக்கு என்றால் என் கையை பிடித்து ஏம்லே தூக்குறே!

உஷ்ஷ்.. மெதுவா பேசு :rolleyes: :rolleyes: .. அப்புறம் தலை, ஏன் பரம்ஸ் விரலை பிடிச்சி தூக்கிறேன்னு கேட்பாரு..:D :D

suma
25-08-2005, 01:43 AM
மன்முதா என்னப்பா படம் என பார்த்தால், எலக்ஷன்ல நிக்கறீயா? கைய விரிச்சி காமிக்கறே????????

மன்மதன்
25-08-2005, 04:15 AM
கூடியவிரைவில் நின்று விட வேண்டியதுதான்..:Dஅன்புடன்மன்மதன்

pradeepkt
25-08-2005, 05:00 AM
கூடியவிரைவில் நின்று விட வேண்டியதுதான்..:Dஅன்புடன்மன்மதன்
அக்கா சும்மா லுலுலுவாயிக்குச் சொல்றாங்க..
இதையெல்லாம் மனசில் வச்சி தெருவில நின்னுறாதப்பா...
(உன்னை மாதிரி நல்லவங்களுக்கு அரசியல் ஒத்து வராதேன்னுதான்:D)

மன்மதன்
25-08-2005, 07:08 AM
என்னை நன்றாக புரிந்துவைத்திருக்கும் பிரதீபுக்கு எனது நன்றி..
(தலை இன்னைக்கு லீவா?? )

pradeepkt
25-08-2005, 07:48 AM
தலை பெருந்தலை ஆயிட்டார்.. ஐமீன் விஐபியா இருந்தவர் விவிஐபியா மாறிட்டார்... :)

mania
25-08-2005, 09:08 AM
என்னை நன்றாக புரிந்துவைத்திருக்கும் பிரதீபுக்கு எனது நன்றி..
(தலை இன்னைக்கு லீவா?? )

:D :D எனக்கு இன்று A.G.M. போயிட்டு இப்போத்தான் வரேன்....

அன்புடன்
I.P.(இஞ்சி பச்சிடி )
மணியா:D

Mano.G.
25-08-2005, 09:19 AM
கண்டும் காணாமல் இருப்போரை விட
காணாமல் நமை கண்டு கொண்ட
தலை மணியா
உமைக்காண மனம் ஏங்குது
நம் சகோதர சகோதரியின்
விமர்சனம் கேட்டு
பார்ப்போம் கடவுளின் கிருபையால்
அடுத்த சந்திப்பின் போது.


மனோ.ஜி

மன்மதன்
25-08-2005, 09:39 AM
டச் பண்ணிட்டிங்க மனோ.ஜி
உங்கள் சென்னை பயணம் எப்பொழுது? ஏதேனும் எண்ணம் உண்டா?

poo
25-08-2005, 09:59 AM
தலைக்கு மகுடம் சூட்டிய மன்மதனுக்கும்..
மற்ற அருமை மக்களுக்கும் நன்றிகள்...

நான் ரொம்பவே மிஸ்(டேக்) பண்ணிட்டேன்.. இல்லைன்னா ஒரு கலக்கு
கலக்கியிருக்கலாம்!!

மன்மதன்
25-08-2005, 10:02 AM
உங்களுக்கும் சேர்த்துதான் சேரன் கலக்கினார்.. :rolleyes: :rolleyes:

kavitha
25-08-2005, 10:31 AM
தலையின் பவழ விழா மன்றத்து உறுப்பினர்களால் நடத்தபட வேண்டும் என்ற எனது ஆசையை இத்தருணத்தில் தெரியப் படுத்திக் கொள்கிறேன். சரி என்பவர்கள் எல்லாம் கையைத் தூக்குங்கள். இப்போதே குழு அமைத்துக் கொள்ளலாம். அந்த தருணம் மிகவும் இனிப்பாக இருக்கும் என்பது இப்போதே தெரிகிறது
__________________
அன்பின்
பிரியன்

இரண்டு கைகளையும் தூக்கிட்டேன்.

அரை டிக்கட்டுடன் அரை டிக்கட் - கவிதா

Mano.G.
25-08-2005, 10:57 AM
உங்கள் சென்னை பயணம் எப்பொழுது? ஏதேனும் எண்ணம் உண்டா?

கண்டிப்பாக மன்மதரே, உங்களை அனைவரையும் காண ஆவலாய் உள்ளேன் நேரமும் சந்தர்ப்பமும் வாய்க்குமானால்.

வரும் அக்டோபரில் வரலாம் என்ற திட்டம் ஆனால் வேலை நிமித்தம் காரணமாக வரமுடியவில்லை.

கண்டிப்பாக அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரலில் வருவேன்.


மனோ.ஜி

mania
25-08-2005, 11:03 AM
கண்டிப்பாக மன்மதரே, உங்களை அனைவரையும் காண ஆவலாய் உள்ளேன் நேரமும் சந்தர்ப்பமும் வாய்க்குமானால்.

வரும் அக்டோபரில் வரலாம் என்ற திட்டம் ஆனால் வேலை நிமித்தம் காரணமாக வரமுடியவில்லை.

கண்டிப்பாக அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரலில் வருவேன்.


மனோ.ஜி

:) மிக்க மகிழ்சி மனோஜி...... உங்கள் வரவை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.....உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி....:)
அன்புடன்
மணியா..:)

பாரதி
25-08-2005, 04:24 PM
அண்ணா... என் வணக்கங்கள்.

pradeepkt
25-08-2005, 04:34 PM
பாரதி அண்ணா
உங்கள் 3000வது பதிவைத் தலைக்கு அர்ப்பணித்திருக்கிறீர்கள் போல...
உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!!!

சுவேதா
26-08-2005, 01:43 AM
சூப்பர் கவிதை மற்றயது தாத்தாவை காட்டிய மன்மதனுக்கு நன்றிகள் பல. மற்றயது என்னால் கை தூக்கமுடியாது காரணம் நான் வரமுடியாது! ஆனால் என் ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றேன்!

Mathu
29-08-2005, 10:01 PM
ஆகா அண்ணாவை பார்த்ததில் மகிழ்ச்சி
அவரை காட்டிய மன்மதனுக்கு நன்றிகள்....
தொடர்ந்து மிச்ச படங்களையும் போட்டிடு மன்மதா..... :p ;)

மன்மதன்
30-08-2005, 04:16 AM
மக்கள் , படங்களை பார்க்க ஆவலாய் உள்ளனர்.. போட்டிலாமா.. ?? அந்த குரூப் போட்டோவை போடலாமா??

mania
30-08-2005, 04:32 AM
:) நான் அடிக்கடி கேட்டுக்கொண்டுதானே இருக்கிறேன்......ஒன்றொன்றாக ரிலீஸ் பண்ணு....:)
அன்புடன்
மணியா...:)

மன்மதன்
30-08-2005, 04:53 AM
ஒவ்வொரு போட்டோவாகவா.. சரி அப்படின்னா, பிரியனின் போட்டோ அவதாராக ரிலீஸ் ஆகி விட்டது.. பிரதீப் போட்டோவுக்கு இராகவனும், இராகவன் போட்டோவுக்கு பிரதீப்பும் கவிதையோ (வேற என்ன இதர கமெண்டுகளோ) போட்டு ரிலீஸ் பண்ணட்டமே..

mania
30-08-2005, 05:03 AM
ஒவ்வொரு போட்டோவாகவா.. சரி அப்படின்னா, பிரியனின் போட்டோ அவதாராக ரிலீஸ் ஆகி விட்டது.. பிரதீப் போட்டோவுக்கு இராகவனும், இராகவன் போட்டோவுக்கு பிரதீப்பும் கவிதையோ (வேற என்ன இதர கமெண்டுகளோ) போட்டு ரிலீஸ் பண்ணட்டமே..

:D :D ஒவ்வொரு படத்துடனும் உன்னுடைய அல்லது என்னுடைய கமெண்ட்டும் கண்டிப்பாக வரனும்:D .மற்றதெல்லாம் போனஸ்.....க்ரூப் போட்டோ....???:D
அன்புடன்
மணியா....

gragavan
30-08-2005, 05:07 AM
ஒவ்வொரு போட்டோவாகவா.. சரி அப்படின்னா, பிரியனின் போட்டோ அவதாராக ரிலீஸ் ஆகி விட்டது.. பிரதீப் போட்டோவுக்கு இராகவனும், இராகவன் போட்டோவுக்கு பிரதீப்பும் கவிதையோ (வேற என்ன இதர கமெண்டுகளோ) போட்டு ரிலீஸ் பண்ணட்டமே..அட இதென்ன வம்பு.......சரி...நீ பிரதீப் படத்தப் போடு நான் பாட்டைப் போடுறேன்.

மன்மதன்
30-08-2005, 05:29 AM
போட்டிட்டேன்..:D

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5526

பிரசன்னா
09-09-2005, 05:49 PM
இதுவல்லவோ நட்பு ... நன்றி

pradeepkt
12-09-2005, 05:30 AM
அதுக்கு ஏங்க என் அவதாரத்தை இணைச்சிருக்கீங்க?

ஆதவா
16-05-2007, 08:20 AM
மணியா அண்ணாவைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. காரணம் அவர் கலக்கிய காலத்தில் நான் இருக்கவில்லை. என்றாலும் இன்று மீண்டும் திரும்பி கலக்கும் மணியா அண்ணாவுக்கு மன்றத்தின் தலைக்கு வாலின் வாழ்த்துக்கள்.

யாரையும் நோகா
நக்கல், நையாண்டி, கிண்டல்
இவர்கள் மூவரும் தவமிருந்து
பெற்ற முதல்வனே
உம்மை நான் வணங்குகிறேன்

கடல் அலைகளின் உயரத்தை
உம் நடத்தை விஞ்சும்
பல பதிவுகள் தா தா என்று
அவையே உம்மைக் கெஞ்சும்

நேற்று பிறந்த குழந்தை
சிரிப்பை அள்ளிச் சொல்லும்
அதுவே உம்மைக் கண்ட பின்னாலே
சிரிப்பையே அள்ளிச் செல்லும்

சுட்டெரிக்கும் சூரியனும்
உம்மைக் கண்டு சிரிக்கும்
பொங்குகின்ற எரிமலையும்
கோபங்களை எரிக்கும்

கண்காணா நாமெல்லாம்
காணவேண்டும் ஒரு மணியா.
சிரிப்புத் தங்கைகள் உம்
சிரிப்பெண்ணிக்கைகளைக் கணியா

நக்கலும்
நையாண்டியுமாக
கிண்டலும்
சிரிப்புமாக
என்றும் வாழ
வாழ்த்த வயது துளிகூட இன்றி
வாழ்த்தும்
ஆதவன்.

தாமரை
17-05-2007, 03:20 AM
தமிழ்க் காதலில் ஒருதலை
வார்த்தைக் கொள்ளியில் இருதலை
காய்களில் இவரின்னும் முத்தலை
அசோகர் ஸ்தூபி நாற்தலை
சிங்கமாய் அறுத்தாய் அஞ்சுதலை
தேடுவோர் உன்னிடம் ஆறுதலை
தேடினோர் புரிவார் எழுதலை
முயன்றே வெற்றியை எட்டுதலை
தலையில் தினமும் நவதலை (ஒன்பது தலை, புதியதலை-அறிவு)
உம் பதிவுகள் இங்கே பத்(து)தலை

அன்புடன்

மன்மதன்
18-05-2007, 09:38 AM
சிரிப்புத் தங்கைகள் உம்
சிரிப்பெண்ணிக்கைகளைக் கணியா:icon_hmm: தலைக்கு புரியலையாம்..விளக்கமா சொல்லுங்க..:D :D

இந்த திரியை மறுபடியும் தன் சிறப்புக்கவிதையால் புதுப்பித்த ஆதவருக்கு நன்றிகள் பல..!

மன்மதன்
18-05-2007, 09:40 AM
உம் பதிவுகள் இங்கே பத்(து)தலை

அன்புடன்


சூப்பர்..சூப்பர்.. அசத்திட்டீங்க செல்வன்..:ernaehrung004:

ஆதவா
18-05-2007, 10:03 AM
மன்மி.. விளக்கம் இங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=208463&postcount=6)

மன்மதன்
11-09-2009, 02:24 PM
மன்மி.. விளக்கம் இங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=208463&postcount=6)

விளங்கிடிச்சி..:D:D

இப்படிக்கு
மூணு வருசத்துக்கு முந்தைய பதிவ தோண்டியெடுக்கும் சங்கம்..

தாமரை
11-09-2009, 02:27 PM
அடப்பாவி மன்மதா! விளங்க இரண்டு வருடம் என்பதைப் பார்த்தால்

டியூப் லைட் எவ்வளவோ தேவலை!

அறிஞர்
11-09-2009, 02:41 PM
எப்படியோ.. இப்ப விளங்கிடுச்சே.. மன்மதா...

இளசு
11-09-2009, 08:38 PM
தலை....

அன்பு கொண்டு கட்டப்பட்ட மன இல்லம்...
என்றும் இளமை குடியிருக்கும் இனிய உள்ளம்..
நல்லுணர்வு, நகையுணர்வு பொங்கு வெள்ளம்..


தலை, அண்ணல் கரிகாலன் போன்றவர்களை
அறியத்தந்ததற்காகவே மன்றத்துக்கு தனிநன்றிக்கடன் பட்டவன் நான்..


தலையைச் சிலாகிக்க கவிதை தந்த கவிஞன் மன்மிக்கும்
ஆதவன், ப்ரியன், தாமரை, பரம்ஸ், சுவேதா,பிரதீப் எனப் பலரை நினைக்கவைத்த
''மைனர்'' ( MINER) மன்மிக்கும்
இரட்டைப் பாராட்டுகள்!

Mano.G.
12-09-2009, 01:34 AM
சந்திப்பதற்கு முன்பு ஆவல்,
சந்தித்த பின் கூடவே இருக்க வேண்டுதல்,

சந்திப்பின் போது கலாய்ப்பு
தற்காலிக பிரிவின் போது மனம் கணப்பு,

இந்த இளமைக்கு ரகசியம் என்னவோ
இந்த இளைஞனின் புன்னகைதனோ

நீங்கள் தான் மன்றத்தின் தலை
பாசத்திற்கும் நேசத்திற்கும் உபசரிப்பிற்கும் தலைமனோ.ஜி