PDA

View Full Version : ஆகஸ்ட் 22, திங்கட்கிழமை மலேசியாவிலிருந்து 



Mano.G.
22-08-2005, 10:15 AM
மசீச தேர்தலில் தோற்றவர்களின் அரசாங்கப் பதவிகளுக்கு ஆபத்தில்லை
கட்சித்தேர்தலில் தோல்வி கண்டவர்களின் அரசாங்கப் பதவிகள் பாதிக்கப்படமாட்டாது என்று மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஓங் கா திங் நேற்று தெரிவித்தார்.
மசீசவின் 52வது பொதுப்பேரவை நேற்று மாலை நிறைவடைந்த நிலையில் அவர் வெளியிட்ட முதல் அறிவிப்பாக இத்தகவல் அமைகிறது. கட்சித் தேர்தல் முடிவுக்கும் அவர்கள் வகிக்கும் அரசாங்கப் பதவிகளுக்கும் தொடர்பில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
கட்சித் தேர்தல் முடிவுகளை அடிப்படையாக வைத்து ஒருவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு இன்னொருவரை அப்பதவிக்கு நியமனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறினார். விஸ்மா எம்சிஏவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசிய வேளையில் டத்தோஸ்ரீ ஓங் குறிப்பிட்டார்.

--------------------------------------------------------------
குற்றச்செயல்களை ஒழிக்க புதிய வியூகம்
குற்றச்செயல்களை துடைத்தொழிக்க "ராக்கான் கோப்" எனும் திட்டத்தை அரச மலேசிய போலீஸ் படை நாடு முழுவதும் அமல்படுத்தவிருக்கிறது என்று அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ கமருடீன் முகமட் அலி நேற்று அறிவித்தார்.
குற்றச் செயல்களை துடைத்தொழிப்பதில் மக்களுடன் இணைந்து எந்தெந்த வகையில் போலீசார் ஒத்துழைக்க முடியும், போலீசாருக்கு பொதுமக்கள் எந்தெந்த வகையில் உதவிகரம் நீட்ட முடியும் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் ராக்கான் கோப் திட்டமாகும்.
இந்த திட்டம் கோலாலம்பூர் மாநகரில் அமல்படுத்தப்பட்டு இருப்பது நல்ல வெற்றியை அளித்துள்ளதால் இதனை நாடு முழுவதும் அமல்படுத்த தற்போது திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
கெப்போங், ஜெயா Jusco பேரங்காடி வளாகத்தில் செந்தூல் மாவட்ட அளவிலான ராக்கான் கோப் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


பாரம்பரிய இசைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
பாரம்பரிய இசை தொடர்பான புத்தகங்கள் அதிகளவில் வெளியீடு காண வேண்டுமென பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.
பாரம்பரிய இசையின் மகத்துவத்தையும் சிறப்பையும் மக்களுக்கு,குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு உணர்த்திட இந்நடவடிக்கை அவசியன் என அவர் கூறினார்.
இசை மற்றும் பாடல் வரிகள் பலவித இசை நிகழ்ச்சிகளை நடத்த உதவுவதோடு பள்ளிகள்,கல்லூரி மற்றும் பல்கலைக்க்கழகங்களில் மாணவர்களின் ஆய்வறிக்கைக்கும் அவை உதவும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Jimmy Boyle, Ahmad Merican, Saiful Bahri, Johar Bahar, Abu Kassim, Ali Othman, Dol Ramli, Zainal Abu மற்றும் Dol Baharin போன்ற கலைஞர்கள் பாரம்பரிய இசையால் தேசப்பற்றை உணர்த்துள்ளனர் என பிரதமர் கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார்.
Tekun கடனுதவியை உயர்த்தும் திட்டம்
தொழில்முனைவர்களுக்கான Tekun எனும் கடனுதவி பெற்று அத்தொகையை திரும்ப செலுத்தியவர்களுக்கு 30,000 ரிங்கிட் கடனுதவி வழங்குவதற்கான திட்டத்தை தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சு ஆலோசித்து வருவதாக அவ்வமைச்சின் அமைச்சர் Datuk Mohamed Khaled Nordin தெரிவித்தார்.
சிறு தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு கடனுதவி வழங்க இந்நடவடிக்கை உதவும் எனவும் இது அவர்களுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

கடனை முழுமையாக திரும்ப செலுத்தியவர்கள் மற்றும் தொழிலை வெற்றிகரமாக நடத்தியவர்களுக்கே இந்த சலுகை பொருந்தும் என JOHOR BAHARU-வில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறினார்.
சாலை விபத்தில் ராணுவ வீரர் மரணமடைந்தார், இருவர் படுகாயம்
குவாந்தான் Jalan Gambang, Batu 6 பகுதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியுடன் மோதியதில் ராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்தார்.
மேலும், இருவர் படுகாயமுற்றனர் என அம்மாநில போக்குவரத்து போலீஸ் தலைவர் Supt Baharuddin Sarbaini தெரிவித்தார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11.45 மணி அளவில் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். காயமுற்றவர்கள் தற்போது Tengku Ampuan Afzan மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


பூமிபுத்ரா அல்லாதவர்களின் நிறுவனங்களிலும் பூமிபுத்ராக்கள்
பூமிபுத்ரா அல்லாதவர்களின் நிறுவனங்களில்,குறிப்பாக பெரிய நிறுவனங்களில் பூமிபுத்ரா அல்லது மலாய்க்காரர்கள் முக்கிய பதவிகளில் இருப்பது அவசியம் என பிரதமர் துறை அமைச்சர் Datuk Mustapa Mohamed தெரிவித்தார்.
கடந்த Umno பேரவையில் தீர்மானித்தபடி மலாய்காரர்கள் வாணிபம் மற்றும் தொழில்துறைகளில் சிறந்த பங்காற்ற இந்நடவடிக்கை அவசியம் என அவர் கூறினார்.
தற்போது பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் சீன சமூகம் இதர இனத்தவர்களும் பொருளாதாரத்தில் மேன்மையடைய ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என அவர் JELI-யில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
--------------------------------------------------------------
வங்காளதேச எல்லையில் திடீர் துப்பாக்கிச் சூடு
மேற்கு வங்காளதேசத்தில் ஆதம்பூர் மாவட்ட எல்லையில் வங்காளதேசப் பகுதியில் அந்நாட்டு ராணுவத்தினர் காலையில் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அங்கு எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவத்தினரும் திருப்பிச் சுட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இந்தியாவுக்கும், வங்காளதேசத்துக்கும் இடையே ஓடும் Mahananda நதியின் இந்தியக் கரையில் மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க, எல்லைப் பாதுகாப்புப் படையினர் மணல் பைகளை கரையோரம் குவிக்கத் துவங்கினர்.
இதற்கு வங்காளதேசப் Rifles படையினர் எதிர்ப்பு தெரிவித்து திடீரென தாக்குதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தியப் படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினரும் 100 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இத்துப்பாக்கி சூட்டில் ஒரு பெண்மணி மரணமடைந்தார். மேலும் இரண்டு கிராமவாசிகள் காயமுற்றனர்.
கடலூரில் நேற்று கடல் சீற்றம் : திருவாரூரில் லேசான நில அதிர்வு
கடலூரில் நேற்றும் கடல் சீற்றம் காணப்பட்டதாகவும் பெரும் அலைகள் உருவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில்வர் பீச்சில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.
ஆனால், அப்பகுதியில் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இவ்வேளையில் திருவாரூரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால் மக்கள் பீதிக்குள்ளானார்கள்.
சென்னை கடலிலும் அலைகள் வேகமாக இருந்தன.
--------------------------------------------------------------
அமெரிக்க கப்பல் மீது ராக்கெட் வீச்சு: தீவிரவாதிகளை பிடிக்க வேட்டை தீவிரம்
ஜோர்டானில் அமெரிக்க போர் கப்பல்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிக்க, துறைமுக நகரான Aqaba-வில் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்துகிறது.
ஜோர்டானில், Aqaba-வில் உள்ள துறைமுகத்தில் இரண்டு அமெரிக்க போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றின் மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் மூன்று ராக்கெட்டுகளை வீசினர்.
அதிர்ஷ்டவசமாக கப்பல்களை ராக்கெட்டுகள் தாக்கவில்லை. துறைமுகத்தின் ஒரு பகுதியில் தாக்கியது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஜோர்டான் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

al-Qaeda தீவிரவாதிகள், இத்தாக்குதலை நடத்தியதாக சந்தேகம் எழுந்துள்ளது. தீவிரவாதிகளை பிடிக்க Aqaba நகரம் முழுவதும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
முஷாரப்பை கொல்ல முயன்ற வழக்கு: பாக் வீரருக்கு தூக்கு
பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பை கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட இஸ்லாம் சாதிக் என்ற பாகிஸ்தான் ராணுவவீரர் நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டார்.
இத்தகவலை ராணுவ அதிகாரி ஒருவர் தெரித்தார். முஷாரப்பை குண்டு வைத்து கொல்ல 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இரண்டு முறை முயற்சி நடந்தது.

இவற்றில் முஷாரப் காயமின்றி உயிர் தப்பிய போதிலும் அவரது பாதுகாவலர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். Al-Qaeda பயங்கரவாதிகள், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆகியோருக்கு மட்டுமின்றி பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கும் இந்த கொலை முயற்சியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
2006 மார்ச்சுக்கு பின்னரே 'அட்லான்டிஸ், விண்ணில் ஏவப்படும்
அமெரிக்க விண்வெளி ஓடமான அட்லான்டிஸ் 2006 மார்ச் மாதத்துக்கு பின்னரே விண்ணில் ஏவப்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (Naza) அறிவித்துள்ளது.
முன்னதாக அட்லான்டிஸ் விண்வெளி ஓடம் செப்டம்பர் மாதம் 22-ம் திகதி விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் இப்போது அதன் பயணம் அடுத்த மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் டிஸ்கவரி விண்வெளி ஓடத்தை அமெரிக்கா விண்ணில் செலுத்தியது. டிஸ்கவரி விண்வெளி ஓடம் புறப்பட்டுச் சென்றபோது அதன் வெளிப்புறத்தில் இருந்த எரிபொருள் காப்புறையிலிருந்து நுரைபஞ்சுத் துண்டு ஒன்று பெயர்ந்து விழுந்தது.
மேலும், 2003-ல் கொலம்பியா விண்வெளி ஓடம் திரும்பும் வழியில் வெடித்துச் சிதரியதில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------------
வெற்றி பெற்ற Blackburn அணி
Blackburn மற்றும் Fulham அணிகளிக்கிடையே நடைபெற்ற Premiership காற்பந்தாட்டத்தில் Blackburn அணி 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் Fulham அணியை வீழ்த்தியது.
ஆட்டம் தொடங்கப்பட்ட 15-வது நிமிடத்தில் Blackburn அணியின் முதல் கோலை Pedersen புகுத்தினார். அவ்வணியின் இரண்டாவது வெற்றி கோலை ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் Tugay புகுத்தினார்.
இதனிடையே, Fulham அணியின் ஒரே கோலை ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் McBride புகுத்தினார்.

நன்றி வணக்கம்மலேசியா.காம்

மனோ.ஜி

மன்மதன்
22-08-2005, 10:49 AM
பூமிபுத்ரா அல்லாதவர்களின் நிறுவனங்களிலும் பூமிபுத்ராக்கள்
பூமிபுத்ரா அல்லாதவர்களின் நிறுவனங்களில்,குறிப்பாக பெரிய நிறுவனங்களில் பூமிபுத்ரா அல்லது மலாய்க்காரர்கள் முக்கிய பதவிகளில் இருப்பது அவசியம் என பிரதமர் துறை அமைச்சர் Datuk Mustapa Mohamed தெரிவித்தார்.
கடந்த Umno பேரவையில் தீர்மானித்தபடி மலாய்காரர்கள் வாணிபம் மற்றும் தொழில்துறைகளில் சிறந்த பங்காற்ற இந்நடவடிக்கை அவசியம் என அவர் கூறினார்.
தற்போது பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் சீன சமூகம் இதர இனத்தவர்களும் பொருளாதாரத்தில் மேன்மையடைய ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என அவர் JELI-யில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

பூமிபுத்திரர்கள் என்றால் யார்?



கடலூரில் நேற்று கடல் சீற்றம் : திருவாரூரில் லேசான நில அதிர்வு


திருவாரூரிலும் நில நடுக்கமா?? .. அடக்கொடுமையே..

Mano.G.
22-08-2005, 11:40 AM
பூமிபுத்ராக்கள் என மலாய்காரர்களை குறிப்பிடுகிறார்கள்.
அவர்களை இந்த மண்ணின் மைந்தர்கள் எனவும் அழைக்கப்படுகிரார்கள்.

ஆதிவாசிகள் சமூகமும் இங்கு உள்ளது.

மனோ.ஜி