PDA

View Full Version : பரமாத்மா குரு தலையும், அட்டகாச சிஷ்யர்களும் - 3



பரஞ்சோதி
22-08-2005, 08:22 AM
பரமாத்மா குரு தலையும், அட்டகாச சிஷ்யர்களும்-3

முந்தைய பாகங்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4456

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4467 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4467)

கொஞ்ச நாட்களாக சுனாமி மற்றும் கடன் கொடுத்த பினாமிகளின் பயத்தால் கடற்கரை நாயர் டீக்கடை பக்கமே போகாத பரமாத்மா குரு (தலை, மக்கா நம்ம தலை அந்த பரமார்த்த குரு அல்ல), சிஷ்ய புண்ணியகே(ர்)டிகள் மாலை நேரம் ஒன்று கூடினார்கள்.

வழக்கம் போல் தலை படுபயங்கரமான உற்சாகத்திலிருந்தார், காரணம் தெரிந்தது தான் இருந்தாலும் சொல்கிறேன், அலுவலகத்தில் வேலைப்பளு தெரியாமல் இருக்க கடலை போடுவது (வேர்க்கடலை தான்), திருப்பூர்க்காரர் கடையில் வாங்கிய மசால் வடைகளையும் அதிகம் சாப்பிட்டது தான். அவருடன் வாடி வதங்கி போய் பரம்ஸும், குறும்பே குறியாக மன்மதனும், பக்திபரவசமாக இராகவனும் (பிள்ளையார் கோயில் சுண்டல் கையில்), உலக அதிசயமே அதிசயிக்கும் வகையில் வாயை மூடிக்கொண்டு பிரதீப்பும், உடைந்தும், ஒட்டி வைத்த பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள்.

பரம்ஸ்: தலை, எங்கே நம்ம சேரனும், பூவும், ரொம்ப நாளாக ஆளைக் காணவில்லை.

மன்மதன்: அட, பரம்ஸ் ஒனக்கு மேட்டரே தெரியாதா?

எல்லோரும் ஆர்வமாக கேட்க காதை தீட்ட,

மன்மதன்: எனக்கும் தெரியாது.

தலை: அது ஒன்னும் இல்லப்பா, பூ கடைசியாக வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் நாயர் கடை வடையில் 5 சாப்பிடானா, அத்தோடு எடுத்த ஓட்டம் தான், இந்த பக்கமே தலை காட்டுவது இல்லை. சேரன் கதையே வேற.

பிரதீப்: தலை, சொல்லுங்க தலை, எனக்கு கதை கேட்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும்.

மன்மதன்: தோடா, கதை வேண்டுமாம், பரஞ்சோதி மாமா சொல்லுவாரா, போய் கேளு.

இராகவன்: தலை, சேரனுக்கு என்னாச்சு, சொல்லுங்க இல்லன்னா, இல்லன்னே மனசு பன்னாச்சு. தலை, வின்னு வின்னாச்சு.

பிரதீப்: ஆரம்பிட்டாரய்யா, ஆரம்பிட்டாரய்யா

மன்மதன்: பிரதீப் நீங்க வடிவேலாயிட்டீங்க, சந்திரமுகி வடிவேலாயிட்டீங்க.

பரம்ஸ்: மன்மதா, கொஞ்சம் வாயை வைச்சிட்டு சும்மா இருக்கியா, இல்லை நாயர் வடையை வாயில் திணிக்கட்டுமா?

பின்லேடனை கண்ட புஷ் மாதிரி பிரதிப், மன்மதன் அடங்க.

தலை: சேரன் இப்போ ரொம்ப பிஸியாட்டாரு, ஏதோ ஆப்பம் இல்ல இல்ல ஆல்பமோ, கலைப்படமோ தயாரிக்கிறாராம்.

மன்மதன்: தலை, அப்போ எனக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கும் தானே.

பரம்ஸ்: கண்டிப்பாக நீ தான் கதாநாயகன், நாயகியைத்தான் தேடி போயிருக்காரு.

பிரதீப்: அண்ணே! எனக்கும் ஒரு வேடம் கொடுக்கச் சொல்லுங்கன்னே!

இராகவன்: தம்பி! எந்த மாதிரி கதை, வேதாளம் வேடம் இருந்தா பிரதீப்புக்கு கொடு.

மன்மதன்: திரிஷாவை அல்லது நயந்தாராவை கதாநாயகி ஆக்கலாம்.

பரம்ஸ்: அவங்க இல்லை, அவங்களை விட புகழ் பெற்றவர்.

தலை: அது யாரப்பா?

பரம்ஸ்: நம்ம பஞ்சகல்யாணி தான்.

மன்மதன்: ப-ஞ்-ஞா-க-ல்-யா-ணியாஆஆஅ (விவேக் மாதிரி முகத்தை சுழிக்க)

பரம்ஸ்: ஆமாப்பா, பஞ்சகல்யாணி கழுதை தான்.

தலை: கழுதையை வைத்து சேரன் என்ன படம் எடுக்கிறான்

பரம்ஸ்: பஞ்சகல்யாணியின் ஆட்டோகிராப், அதாவது கிராமத்து மணம் வீச, ஒரு கழுதையின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியானவற்றை எடுத்து, அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருது வாங்க போகிறாராம்.

பிரதீப்: அய்யா, ஜாலி, நம்ம மன்மதரு எங்கே வருகிறாரு?

தலை:ஹா ஹா, அதே அதே சபாதே ஹா ஹா.

மன்மதன்: (கடுப்போடு), தலை பார்த்து சிரிங்க, பல்லு சுளுக்கு பிடிக்க போகுது.

பரம்ஸ்: கிராமத்தில் மழையே இல்லாததால் மழைக்கு வேண்டி பஞ்சகல்யாணிக்கு திருமணம் செய்து வைக்கிறாங்க, அந்த சீனில்.

இராகவன்: அடங்க்கொப்புரானே, மன்மதன் தான் மாப்பிள்ளையா?

மன்மதன் இராகவனை, விஜயகாந்தை கண்ட ராமதாஸ் மாதிரி முறைக்க,

பரம்ஸ்: அய்யொ அண்ணா, மன்மதன் தான் மாப்பிள்ளைக்கு தோழன். மாப்பிள்ளை கழுதையானது மன்மதனுடன் சின்ன வயதிலேயே பழக்கம். சின்ன வயசில் திருட்டுத்தனமாக விளையாடி விட்டு வீட்டுக்கு போக அவங்க வீட்டு சுவத்தை தாண்ட அந்த கழுதையின் முதுகில் ஏறி தான் வீட்டுக்குள்ளே போவானாம், அப்படி தான் கதை இருக்கும்.

பிரதீப்: அண்ணே! சேரன்கிட்ட சொல்லி, கதையில் புதுமையை புகுத்தலாமே!

தலை: என்ன பிரதீப் புதுமைன்னா, கழுதை திருமணம் ஆனதும் சுவிட்ஸர்லாந்தில் டூயட் பாட வைக்க வேண்டுமா?

பிரதீப்: அது இல்லைன்னா, மன்மதனின் நட்பு எத்தகையது என்பதை பெருமையாக காட்ட வேண்டாமா? அதான் மாப்பிள்ளை கழுதை ஒருகட்டத்தில் பங்காளி கழுதையை குரல்வளையை கடித்து கொல்ல, ஆயுள்தண்டனை பெற்று ஜெயிலுக்கு போகுது, அது திரும்பி வரும் வரை, மன்மதன் தான் பஞ்சகல்யாணியையும், அதன் குட்டி பஞ்சவர்ணமுகியையும் பார்த்துக் கொள்கிறார், கழுதை என்றாலும் நட்புக்காக இத்தகைய தியாகத்தை செய்வதால் மன்மதனின் பாத்திரம் உலகம் முழுவதும் பேசப்படும், ஆஸ்கார் விருது நம்மவருக்கு தான்.

மன்மதன்: அடப்பாவி உன் கற்பனைக்கு அளவே இல்லையா? நீ இப்படி தான் கதை எழுத வேண்டுமா? சேரன் என் கூட்டாளி அந்த மாதிரி எல்லாம் செய்ய மாட்டாரு.

தலை: சரி சரி விடுங்கப்பா, மேட்டருக்கு வாங்க.

நாயரு குவாட்டர் மில்கில் லிட்டர் பால் கலந்த பால் டீயை கொண்டு வந்து நீட்ட, அரைகுறையாக காதில் விழுந்ததை வைத்து,

நாயர்: சாரே! எந்தா பிலிமு, சேரன் சாரா எடுக்குது, கேரளத்தில் போய் கதக்களி டான்ஸ் ஆடுவது போல் இந்த படத்திலும் டான்ஸ் உண்டா?

பிரதீப்: கதக்களி டான்ஸ் இல்ல, ஆனா மன்மதன் ஆடும் கழுதகளி உடான்ஸ் உண்டு.

நாயர்: எந்தா, இப்புள்ளி எந்தா பறையுது,

இராகவன்: ஆகா பிரதிப் புள்ளிராஜா என்பது நாயருக்கு கூட தெரிந்து விட்டதா?

நாயர்: இராகவன் சாரே! யான் இயாளு எந்தா பறையுதுன்னு கேட்டேன்?

இராகவன்: அது ஒன்னுமில்லை நாயரே! சேரன் படத்திலே ஒரு டான்ஸ் இருக்குது,

தலை: அட விடுங்கப்பா, நாயரே! படத்திலே நீரும் வருவீரு, அதனாலே கடன் எல்லாத்தையும் நில் பேலன்ஸ் ஆக்கிடும். உம்ம கடை முன்னாடி தாம்வே கதாநாயகன், நாயகி தெனமும் சந்திப்பாங்க.

பரம்ஸ்: அது எப்படி தலை

தலை: அட டூரிங்க் டாக்கிஸ்காரன் ஒட்டுற பட போஸ்டரை திங்க வருவாங்க தானே, அதான்.

இராகவன்: அதே அதே சபா தே.

நாயர்: சாரே! அது எல்லாம் முடியாது, நானும் நடிக்கணும், இல்லை கடனை இப்போவே செட்டில் செய்யணும் சாரே!

பரம்ஸ்: தம்பி பிரதீப், இந்த முறை நீ கடனை செட்டில் செய், அடுத்த முறை தலை, அதுக்கு அடுத்த முறை..

இராகவன்: தம்பியுடையான் கடனுக்கு அஞ்சான், தம்பி பரம்ஸ் அடுத்தடுத்து வரும் கடனை அடைப்பான்.

பரம்ஸ் கவிதாவின் இரண்டு வரி கவிதை படித்த மாதிரி முகத்தை வைக்க, மன்மதனுக்கு மனதுக்குள் சந்தோசம், நம்மை யாருமே மதிக்கவில்லையே.

பிரதீப் : ஒரு கவலையும் வேண்டாம், நாயரே! நான் ஒரே ஒரு கேள்வி கேட்பேன், அதற்கு நீர் ஒரே ஒரு பதில், ஆமாம், இல்லை என்று 5 நிமிடத்தில் சொல்ல வேண்டும், பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் கடன் கொடுக்க மாட்டோம், கணக்கு நில் ஆகிவிடும், சரியா?

நாயர் எப்படியும் இந்த கடன் கடலில் கரைத்த கருப்பட்டி மாதிரி, கிடைக்கவே கிடைக்காது, ஒரு வேளை சரியாக சொன்னால் ஏதாவது கிடைக்குதான்னு பார்ப்போம் என்று மனதில் தீர்மானம் செய்து சரி என்கிறார்.

பிரதீப்: நாங்க முந்தைய கடனை நல்லபடியாக அடைத்திருக்கிறோம்\இப்போ கடனே இல்லை?

தலை மனதுக்குள் ஆகா, அடிச்சான்யா பிரதீப், நாயர் கதை முடிந்தது, இப்படி தானே தினமும் விடை கண்டுபிடிக்கிறேன், கேள்வி கேட்கிறேன் என்று பரம்ஸை இம்சை படுத்துகிறான்.

நாயர் யோசிக்கிறார், இதில் இரண்டு கேள்வி இருக்கிற மாதிரி இருக்குதே. ஒரே பதில் ஆமாம் அல்லது இல்லை என்று சொல்ல வேண்டுமே எப்படி சொல்வது. ஆமாம் என்றால் கடனே இல்லை என்று சொல்லி கடனை தரமாட்டார்கள்.

இல்லை என்று சொன்னால் சொன்னால் ஏற்கனவே கடன் கொடுத்திருக்கிறோம், தவறாக இல்லை என்று சொன்னதால் கடனை அடைக்க வேண்டியதில்லை என்று ஆகிவிடுமே என்று ஆறி போன டீயில் விழுந்த ஈ போல் அல்லாடுகிறார்.

நாயர் மரமாகி போனதை சாக்காக வைத்து மன்மதன் அங்கே கிடைத்த வடையை உள்ளேத் தள்ள, கண்கள் வெளியே தள்ள, இராகவன் தண்ணீரை குடிக்க வைத்து சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்.

தலை : பரம்ஸ் எப்போ இந்த மாதிரி ஆமாம், இல்லை ஆரம்பிச்சானோ, எல்லோருடைய வீட்டிலும், எது கேட்டாலும் ஆம், இல்லை என்று தான் பதிலாக வருது.

இறுதியில் நாயர் தன் இயலாமையை ஏற்றுக் கொண்டு அதுவரை இருந்த கடனை தள்ளுப்படி செய்து விட்டார். அடுத்த முறை இவன்களுக்கு கழுதைப்பாலைத் தான் காய்ச்சி டீ கொடுக்க வேண்டும் என்று மனதில் கறுவிக் கொண்டார்.

அனைவரும் ஆகா, ஓகோ என்று விம்பிள்டன் கோப்பை கொண்டு வந்த மாதிரி பிரதீப்பை பாராட்ட, பிரதீப் பெருமையாக தலையை நிமிர்த்துக் கொண்டார்.

திடிரேன்று அய்யோ கடவுளே1 இது என்ன சோதனை என்று கத்த, எல்லோரும் என்ன என்ன என்று கேட்க.. தூரத்தில் ஒருவர் வருவதை காட்டி, ஓட்டம் எடுத்தார்.

அவர் தான் நம்ம ..
(யார் என்று சரியாக சொன்னால், நாயர் கடை டீயும், இரண்டு பன்னும் கிடைக்கும்)

(தொடரும் )

மன்மதன்
22-08-2005, 08:37 AM
ஆஹா... நண்பன் கிளம்பிட்டான்யா.. கிளம்பிட்டான். :D :D ரொம்ப நாள் மூடி வச்சிருந்த நாயர் கடை திரும்ப திறந்தாச்சி.. :) :) ஆஹா.. ஓஹோ..... கழுதை புராணத்தில் என் பாடுதான் திண்டாட்டம் போல.. சமீபத்திய அனைத்து சங்கதிகளையும் ஒரே பதிவில்.. (மைதிலி, கழுதையை :rolleyes: :rolleyes: கூட விட்டு வைக்கவில்லை...).. கடைசியில் வருவது சுவேதா.. அவதானா ஹீரோயினா படத்தில் நடிக்கிறா..;) ;)
அன்புடன்
மன்மதன்;)

mania
22-08-2005, 08:39 AM
:D ஆரம்பிச்சிட்டான்யா........:D :D :D
அன்புடன்
மணியா.....

பிரியன்
22-08-2005, 08:42 AM
மன்மதனுக்கு டீயும் இரண்டு வடையும் பார்சல்.......

மன்மதன்
22-08-2005, 08:57 AM
பார்சல் வேண்டாம்.. அப்படியே சாப்பிடுறேன்.... எந்த நாயர் .. யான் பறயரது செரிக்கா?? :D :D
அன்புடன்
மன்மதன்

ஜீவா
22-08-2005, 09:22 AM
அருமை அண்ணா.. அருமை.. அது என்னமோ மன்மதனை வாரும் போதெல்லாம் அப்படி ஒரு சிரிப்பு வருகிறது..

இவண்
டீயும் பன்னும் விரும்பா
ஜீவா..

(அப்பாடி யாருன்னு கெஸ் பண்ணுறதுலருந்து தப்பிச்சாச்சு.. :D :D :D :D )

பரஞ்சோதி
22-08-2005, 09:54 AM
மன்மதனுக்கு டீயும் இரண்டு வடையும் பார்சல்.......

நாயரே! சரியான விடையை சொன்ன மன்மதன், அதை சரி என்று கண்டுபிடித்த பிரியன் இருவருக்கும் உடனே பார்சல் கட்டுங்க.

தப்பி ஓடும் ஜீவாவைப் பற்றி கவலை வேண்டாம், அடுத்த வாரம் நான் வேண்டாம் என்றாலும் கண்டிப்பாக இங்கே வருவார், அப்போ அந்த பஜ்ஜியை எடுத்துக் கொடுங்க. :D

மன்மதன்
22-08-2005, 09:55 AM
அதென்ன என்னை கிண்டும் போது மட்டும் சிரிப்பு வருகிறதா ஜீவா.. நண்பா பரம்ஸ்.. அடுத்த பரமாத்மா சீரியலில் ஜீவாதான் சிறப்பு விருந்தினர்.. விடாதே பிடி :D :D
அன்புடன்
போ.கு
மன்மதன்

pradeepkt
22-08-2005, 10:25 AM
அடடா... வெகு நாளைக்கப்புறம் திரும்பத் தொடருதா???
என்னவோ என் புண்ணியத்தில கடன் மிச்சம்...
அடுத்து நாயரை நம்ம கேள்வி பதில்ல உள்ள இழுக்க வேண்டியதுதான்.
என்னப்பா மன்மதா?

மன்மதன்
22-08-2005, 10:37 AM
நாயர் .. அதே..அதே. என்றும்.. இல்யா..இல்யா என்றும் பதில் பறயும் . பரவாயில்லையா ப்ரதீப்..:D :D
அன்புடன்
மன்மதன்

thempavani
22-08-2005, 10:51 AM
அண்ணா...நல்ல வாறல்..(மன்மதன் கழுதையைப்பற்றிச் சொன்னேன்..)அருமையான துவக்கம்...தொடருங்கள்...

(ராகாவன் அண்ணா சட்டை பாக்கெட் வெற்றாக இரூப்பதாகக் கேள்விப்பட்டேன்...)

பரஞ்சோதி
22-08-2005, 10:59 AM
அண்ணா...நல்ல வாறல்..(மன்மதன் கழுதையைப்பற்றிச் சொன்னேன்..)அருமையான துவக்கம்...தொடருங்கள்...

(ராகாவன் அண்ணா சட்டை பாக்கெட் வெற்றாக இரூப்பதாகக் கேள்விப்பட்டேன்...)

அதே தான் சகோதரி.

சட்டை போடுவதை விட்டு, கோயிலுக்கு போய் வருகிறேன் என்று காவித்துண்டை போட்டுக்கிட்டு வந்துட்டார். :D

thempavani
22-08-2005, 11:45 AM
நான் சட்டையில் பாக்கெட்டுதான் இல்லைன்னு நினைச்சேன்.. சட்டையே இல்லையா..கழுதை(மன்மதன் நீ இல்லை) அதையும் தின்னுட்டுதா..கலிகாலம் சாமி...

மன்மதன்
22-08-2005, 12:16 PM
நான் சட்டையில் பாக்கெட்டுதான் இல்லைன்னு நினைச்சேன்.. சட்டையே இல்லையா..கழுதை(மன்மதன் நீ இல்லை) அதையும் தின்னுட்டுதா..கலிகாலம் சாமி...
உன் ஃப்ரண்டு . தின்னாதா பின்னே..:rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

mania
22-08-2005, 12:19 PM
உன் ஃப்ரண்டு . தின்னாதா பின்னே..:rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

:rolleyes: :rolleyes: ஏய்.....பாத்து பாத்து....:rolleyes: பின்னே போனா உதைச்சாலும் உதைக்கும்......:D :D
அன்புடன்
மணியா...

gragavan
22-08-2005, 12:24 PM
பக்திபரவசமாக இராகவனும் (பிள்ளையார் கோயில் சுண்டல் கையில்),

ஏன் பழநி பஞ்சாமிர்தமா இருக்கக் கூடாதா? திருச்செந்தூர் புட்டமுதா இருக்கக் கூடாதா? சுண்டல்தானா...................சுவாமிமலையில் அஞ்சு ரூபாய்க்கு எல நெறய சக்கரப் பொங்கல் கொடுத்தார். அடடா! அத நினைக்க வைச்சிட்டியே!!!!!!!!!!

gragavan
22-08-2005, 12:26 PM
அதே தான் சகோதரி.

சட்டை போடுவதை விட்டு, கோயிலுக்கு போய் வருகிறேன் என்று காவித்துண்டை போட்டுக்கிட்டு வந்துட்டார். :Dநானா நானா நானா :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:

gragavan
22-08-2005, 12:27 PM
நான் சட்டையில் பாக்கெட்டுதான் இல்லைன்னு நினைச்சேன்.. சட்டையே இல்லையா..கழுதை(மன்மதன் நீ இல்லை) அதையும் தின்னுட்டுதா..கலிகாலம் சாமி...அசட்டையாக இருக்கும் வழக்கம் எனக்கு இல்லை தேம்பாட்டி.................. (புரியலைன்னா கிவாஜாகிட்ட தமிழ் டியூஷன் வெச்சுக்கலாம்)

மன்மதன்
22-08-2005, 12:36 PM
:rolleyes: :rolleyes: ஏய்.....பாத்து பாத்து....:rolleyes: பின்னே போனா உதைச்சாலும் உதைக்கும்......:D :D
அன்புடன்
மணியா...

உங்கள் வாக்கியத்தில் பிழை உள்ளது தர்மதுரையே.... :rolleyes: :rolleyes: உதைச்சாலும் உதைப்பா என்றிருக்க வேண்டும்.. ;) ;) :D :D
அன்புடன்
நக்கல்கீரன் மன்மதன்

pradeepkt
22-08-2005, 12:37 PM
அசட்டையாக இருக்கும் வழக்கம் எனக்கு இல்லை தேம்பாட்டி.................. (புரியலைன்னா கிவாஜாகிட்ட தமிழ் டியூஷன் வெச்சுக்கலாம்)
தமிழ் டியூஷன்.. அது சரி!!!
சட்டையே போச்சு... என்னய்யா?

karikaalan
22-08-2005, 12:44 PM
பரஞ்சோதிஜி

நல்லாவே "வெளுத்து" வாங்குகிறீர்கள். சிரிப்பை அடக்க முடியவில்லை!

===கரிகாலன்

gragavan
22-08-2005, 01:03 PM
தமிழ் டியூஷன்.. அது சரி!!!
சட்டையே போச்சு... என்னய்யா?அப்படிச் சொல்லலைன்னா தேம்பாவுக்குப் புரியாதே...............

பரஞ்சோதி
22-08-2005, 01:09 PM
:rolleyes: :rolleyes: ஏய்.....பாத்து பாத்து....:rolleyes: பின்னே போனா உதைச்சாலும் உதைக்கும்......:D :D
அன்புடன்
மணியா...

மன்ற உறுப்பினர்களை அது, இது என்று எல்லாம் சொல்லக்கூடாது. மன்மதன் சொன்னது போல் தான் உதைப்பா, உதைப்பார் என்று இருக்க வேண்டும். இதை கடுமையாக கண்டிக்கிறேன்.

- நேர்மை பரம்ஸ்

பரஞ்சோதி
22-08-2005, 01:12 PM
பரஞ்சோதிஜி

நல்லாவே "வெளுத்து" வாங்குகிறீர்கள். சிரிப்பை அடக்க முடியவில்லை!

===கரிகாலன்

நன்றி அண்ணா.

ஒரு வாசகம் சொன்னாலும், அது திருவாசகமாக அமைவது தான் உங்கள் பதிவின் சிறப்பு.

அப்புறம் வெளுத்து வாங்குவது எல்லாம் நம்ம நாயகன், நாயகியின் உதவியால் தான்.

அடுத்த வாரம் பாருங்க, என்ன ஆகப்போகுதுன்னு.

சுவேதா
26-08-2005, 12:45 AM
அண்ணா கதை சூப்பர் ஆமா யார் அண்ணா அந்த கழுதை மற்றது கடைசியில் வருவது நானா?? அடுத்த கதையை சீக்கிரம் கொடுங்கள்!!!!

எதிர்பார்ப்புடன்
தங்கை!

mukilan
26-08-2005, 02:04 AM
அண்ணா கதை சூப்பர் ஆமா யார் அண்ணா அந்த கழுதை மற்றது கடைசியில் வருவது நானா?? அடுத்த கதையை சீக்கிரம் கொடுங்கள்!!!!

எதிர்பார்ப்புடன்
தங்கை!

அடடா! தங்கையே! இப்படியா பகிரங்கமாக உண்மையை ஒத்துக் கொள்வார்கள். என்னமோ போ! கனடாவில் இருந்து கொண்டு கழுதையாகப் போகிறேன் என்கிறாய்.நன்கு பொதி சுமக்க வாழ்த்துக்கள்.

சுவேதா
26-08-2005, 02:05 PM
நான் ஒத்துக் கொண்டேனா?? நான் அப்படி சொல்லவில்லையே....

பரஞ்சோதி
26-08-2005, 03:06 PM
அடடா! தங்கையே! இப்படியா பகிரங்கமாக உண்மையை ஒத்துக் கொள்வார்கள். என்னமோ போ! கனடாவில் இருந்து கொண்டு கழுதையாகப் போகிறேன் என்கிறாய்.நன்கு பொதி சுமக்க வாழ்த்துக்கள்.

ஹா ஹா. :D :D :D

முகிலன் கலக்குறீங்க.

எங்க அணிக்கு ஏற்ற ஆள் நீங்க.

mukilan
26-08-2005, 03:09 PM
ஹா ஹா. :D :D :D

முகிலன் கலக்குறீங்க.

எங்க அணிக்கு ஏற்ற ஆள் நீங்க.
பரம்ஸ்
உங்க அணி என்றால் "ஐவர் அணி"தானே???

பரஞ்சோதி
26-08-2005, 03:17 PM
பரம்ஸ்
உங்க அணி என்றால் "ஐவர் அணி"தானே???

ஆமாம், ஐவர் என்பது ஆரம்ப அணி, இப்போ ஐந்தாயிரம் அணியாகிவிட்டது. வாங்க ஜோதியில் கலந்துக் கொள்ளுங்க. அறிஞர் அணியை காணவில்லை. விரைவில் அவர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம். :D

mukilan
26-08-2005, 03:40 PM
ஆமாம், ஐவர் என்பது ஆரம்ப அணி, இப்போ ஐந்தாயிரம் அணியாகிவிட்டது. வாங்க ஜோதியில் கலந்துக் கொள்ளுங்க. அறிஞர் அணியை காணவில்லை. விரைவில் அவர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம். :D
நானும் உங்க ஜோதில கலந்தாச்சுங்கோ! நன்றி பரம்ஸ் ஐவரணியென்ற பெரிய ஆல மரத்தடி நிழலில் எனக்கும் இடங்கொடுத்ததற்கு.

பரஞ்சோதி
26-08-2005, 03:45 PM
நானும் உங்க ஜோதில கலந்தாச்சுங்கோ! நன்றி பரம்ஸ் ஐவரணியென்ற பெரிய ஆல மரத்தடி நிழலில் எனக்கும் இடங்கொடுத்ததற்கு.

எல்லோரையும் சமாளிக்கலாம், ஆனால் தேக்ஸா இல்லை இல்லை தேம்பாவிடம் மட்டும் ஜாக்கிரதை. மணி அடிக்கும் கட்டையால் நடுமண்டையில் போட்டு விடப்போகிறார். நானாவது ஹெல்மெட் போட்டிருக்கிறேன், நீங்க வலுக்கைத் தலை.

mukilan
26-08-2005, 04:00 PM
எல்லோரையும் சமாளிக்கலாம், ஆனால் தேக்ஸா இல்லை இல்லை தேம்பாவிடம் மட்டும் ஜாக்கிரதை. மணி அடிக்கும் கட்டையால் நடுமண்டையில் போட்டு விடப்போகிறார். நானாவது ஹெல்மெட் போட்டிருக்கிறேன், நீங்க வலுக்கைத் தலை.
அண்ணே!நம்ம கையில சூலம் வச்சிருக்கம்ல! பார்த்துக்கிடுவோம்.

pradeepkt
26-08-2005, 04:18 PM
சகோதரியைப் பத்தி முழுசாத் தெரியாமப் பேசிட்டீங்க முகிலன்.
நம்ம அணிக்கு முக்கியமான எதிரி அவங்கதான்...
அதுவும் அண்ணாவோட போட்டிக்கு அவங்களை நடுவராப் போட்டதிலிருந்தே ஒரு மாதிரியா இருக்காங்க..
ஜாக்கிரதை.

thempavani
27-08-2005, 09:08 AM
இது என்ன..எனக்குத் தெரியாமல் என்னை காய்ச்சுறீங்க...ரெம்ப நல்லா இருக்கு....முகிலன் நான் அப்பாவிங்கோ..சின்னப் பிள்ளை...

மன்மதன்
27-08-2005, 09:15 AM
இது என்ன..எனக்குத் தெரியாமல் என்னை காய்ச்சுறீங்க...ரெம்ப நல்லா இருக்கு....முகிலன் நான் அப்பாவிங்கோ..சின்னப் பிள்ளை...
ஆஹா.. அந்த 5 லட்சம் பார்ட்டி நீதானா.. :rolleyes: :rolleyes: பணத்தை என்ன பண்னினே அக்கா?? :D :D
அன்புடன்
மன்மதன்

அக்னி
22-03-2009, 03:41 PM
அறிஞரோட இண்டர்வியூவைத் தேடி வந்தால்,
இங்க மன்மதனுக்காகப் படமே எடுத்திருக்காங்களே...

பரம்ஸ் அண்ணா...
வேற பாகங்கள் மிஸ்ஸாயிடுச்சா... இல்லே, இதுவரைக்குமே 3 பாகங்கள்தான் எழுதியிருக்கீங்களா...