PDA

View Full Version : சுமா தரும் சுவையான தகவல்suma
21-08-2005, 04:36 PM
அதாவது உலகப் புகழ் பெற்ற மொகலாயச் சக்ரவர்த்தி அக்பருக்கு எழுதப் படிக்கவே தெரியாது. அவர் குழந்தையாக இருந்த போது, இரண்டு ஆண்டுகள் ஆரம்ப கல்வி மட்டும் தான் படித்தாராம். ஆனால் அவர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், கலை, கவிதைத் தத்துவம் என்று எடுத்துக் கொண்டு விவாதிப்பதைக் கூர்ந்து கேட்டு, அதை அப்படியே கிரகித்துக் கொண்டு, எழுந்து விடாமல் அப்படியே திருப்பிக் கூறும் திறமை இருந்தது. போரில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் அவர் புகழ் வாங்கியிருந்ததற்குக் காரணம், அவரது அறிவாற்றல்தான்.

பெருந்தலைவர் காமராஜரின் வெற்றிக்கு காரணம், உள்மனதில் உறங்கிக் கிடந்த ஆற்றலை உசுப்பி விட்டு உழைத்ததுதான்.

அமெரிக்க ஜனாதிபதிகளில் டரூமேன், க்ளீவ்லாண்ட், ஆண்ட்ரு ஜான்சன், லிங்கன், ஃபில்மோர், டெய்லர், வான்பரன், ஜாக்ஸன, வாஷிங்டன் முதலான ஒன்பது ஜனாதிபதிகளும் கல்லூரிப் படிப்பே படித்ததில்லை. இவர்களில் ஆண்ட்ரூ ஜான்சன் மழைக்கு கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியதில்லையாம்.

உலகப் புகழ் பெற்ற நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் படிப்பு என்று பார்த்தால், வெறும் ஐந்தாண்டு பள்ளிப் படிப்புதானாம்.

மோட்டார் மன்னன் ஹென்றி ஃபோர்ட், ஒரு கிராமப் பள்ளிக்கூடத்தில் சில ஆண்டுகளே படித்தவராம்.

நியூயார்க் மாநிலத்தின் கவர்னராக நான்கு முறை பதவி வகித்த அல்ஸ்மித்தின் பள்ளிப் படிப்பு ஏழாண்டு காலம்தான்.

புகழ்பெற்ற பொருளியல் வல்லுனர் ஜியார்ஜ், தனது பதினான்கு வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்தவர். பொருளியலை முறையாக படித்ததில்லை. ஆனால் அடிப்படை பொருளியல் விதிகளைப் புரிந்து கொண்டு, உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியவர்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மிகப் பெரிய ஞானி. அவர் படித்தது உலகமெனும் பல்கலைக் கழகத்தில்தான்.

காப்பு விளக்கைக் கண்டுபிடித்த சர்ஹம்பரி டேவி, ரைட் சகோதரர்கள், எடிசன் இவர்கள் எல்லாம் படித்தது அனுபவ பள்ளியில்தான்.

சுவேதா
22-08-2005, 03:40 AM
அடடா எல்லோருமே அவ்வளவுதான் படித்தார்களா அதிகமாக படித்தது அனுபவத்திளா??

பரஞ்சோதி
22-08-2005, 05:36 AM
நன்றி சகோதரி, இதை படித்தால் நம்பிக்கை கூடும்.

சுவேதா கூட அப்படி தான், மழைக்கு கூட பள்ளிக்கு ஒதுங்கியது இல்லை.

pradeepkt
22-08-2005, 06:17 AM
அப்ப என்னைக்காவது சுவேதாகூட கனடா நாட்டு அதிபர் ஆயிருவாங்கறீங்களா???
நல்லது, அப்ப நம்ம போயி கனடாவை அரசு விருந்தினரா சுத்திப் பாக்கலாம் :D

gragavan
22-08-2005, 06:37 AM
அப்ப என்னைக்காவது சுவேதாகூட கனடா நாட்டு அதிபர் ஆயிருவாங்கறீங்களா???
நல்லது, அப்ப நம்ம போயி கனடாவை அரசு விருந்தினரா சுத்திப் பாக்கலாம் :Dஅப்படியே கனடா நாட்டின் உயரிய விருது ரெண்டு எனக்கு..............

gragavan
22-08-2005, 06:39 AM
கல்வி கரையில. ஏட்டுக்கல்வி தொடக்கம். அதற்குப் பிறகு அனுபவக் கல்வியே உதவும். அதனால்தான் தமிழ் இப்படி சொல்கிறது. கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று உற்ற கலைமடந்தை ஓதுகிறாள். கலைகளுக்கெல்லாம் தெய்வமான வாணியே இப்படிச் சொன்னால்....நாமெல்லாம்?

pradeepkt
22-08-2005, 06:40 AM
அப்படியே கனடா நாட்டின் உயரிய விருது ரெண்டு எனக்கு..............
என்னமோ மசால் தோசை கேக்குற மாதிரி கேக்குறீங்க...??? அதுவும் ரெண்டு.
எல்லாம் கனடாவுக்கு வந்த நேரம்!

gragavan
22-08-2005, 06:43 AM
என்னமோ மசால் தோசை கேக்குற மாதிரி கேக்குறீங்க...??? அதுவும் ரெண்டு.
எல்லாம் கனடாவுக்கு வந்த நேரம்!ஒத்தப்படையா வாங்கக் கூடாதுல்ல.. அதுக்குத்தான். என்னவோ எனக்காக கேக்குற மாதிரி பேசுறீங்க. கனடாவுக்கு ஒன்னும் ஆகக்கூடாதேன்னு ரெண்டு கேட்டேன்.......

மன்மதன்
22-08-2005, 06:47 AM
அனுபவமே முக்கியம் என்ற இந்த தகவலை தந்த சுமாவிற்கு நன்றி...
அன்புடன்
மன்மதன்

kavitha
22-08-2005, 07:29 AM
ஒத்தப்படையா வாங்கக் கூடாதுல்ல.. அதுக்குத்தான். என்னவோ எனக்காக கேக்குற மாதிரி பேசுறீங்க. கனடாவுக்கு ஒன்னும் ஆகக்கூடாதேன்னு ரெண்டு கேட்டேன்.......
:) :) :) என்னே நல்லெண்ணம்! B)

படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை மீண்டும் அறிஞர்கள் வாயிலாக நிரூபித்த சுமாவிற்கு நன்றி.

பரஞ்சோதி
22-08-2005, 07:49 AM
அனுபவமே முக்கியம் என்ற இந்த தகவலை தந்த சுமாவிற்கு நன்றி...
அன்புடன்
மன்மதன்

மன்மதன் ரொம்ப திருந்திட்டார்.

மேற்பார்வையாளர் ஆனப் பின்பு தலைப்பை திசை திரும்பாமல் ஒழுங்கா பதில் சொல்கிறார். :D :D

mukilan
23-08-2005, 11:08 PM
ஒத்தப்படையா வாங்கக் கூடாதுல்ல.. அதுக்குத்தான். என்னவோ எனக்காக கேக்குற மாதிரி பேசுறீங்க. கனடாவுக்கு ஒன்னும் ஆகக்கூடாதேன்னு ரெண்டு கேட்டேன்.......
ஹய்யோ!...ஹய்யோ!! பிரதீப்பு ! அவரு உங்களுக்கும் சேர்த்துல்ல கேட்டாரு? கனடா நல்லா அமைதியா தானய்யா இருக்கு. அதையும் விட்டு வைக்க மாட்டீங்களே! (நான் சுவேதா பிரதமர் ஆகப் போறதைப் பத்தி பேசவேயில்லை!ஹி! ஹி!)

--------------
முகிலன்.

மன்மதன்
24-08-2005, 05:26 AM
மன்மதன் ரொம்ப திருந்திட்டார்.

மேற்பார்வையாளர் ஆனப் பின்பு தலைப்பை திசை திரும்பாமல் ஒழுங்கா பதில் சொல்கிறார். :D :D

நன்றி நண்பனே.. :D :D ரொம்ப கண்ணு வைக்காத ;) ;) ;)

suma
31-08-2005, 12:15 AM
மகாத்மா காந்தி, தினமும் சபர்மதி ஆசிரமத்துல மாலையில பிரார்த்தனை நடத்துவாரு. பிரார்த்தனை பண்றப்ப, ராம நாம பஜனையில, "ரகுபதி ராகவ ராஜாராம் பதி தபாவன சீதாராம்'னு பாடுவாங்க. இது, நவகாளி யாத்திரைக்கு முன் பாடப்பட்ட பாடல்.
நவகாளி யாத்திரை போனப்போ, பின்னால வர்ற ரெண்டு வரிகளையும், ராம நாம பஜனையுடன் சேர்த்துகிட்டாராம்.
""ஈஸ்வர அல்லா தேரே நாம் ஸப்கோ ஸன்மதி தே பகவான்'' என்பதுதான் அந்த வரிகள்.
இதோட பொருள் என்னன்னா, "ஈஸ்வரன் என்றாலும், அல்லா என்றாலும் உன்னுடைய திருநாமம்தான் பகவானே? எல்லோருக்கும் நல்ல புத்தியை அருளுக'
ராம பஜனைகள்ல, இந்த வரிகளை மகாத்மா சேர்த்தப்போ, இந்துக்கள்ல பல பேருக்கு இது பிடிக்கலையாம். காந்தி சொல்கிறாருங்கிறதுக்காகத்தான் ஏத்துகிட்டாங்களாம்.
ஆனாகாந்தி மகான் ஜனவரி 30ல் உயிர்த்தியாகம் செஞ்சப்போ, அத்தனை லட்சக் கணக்கான இந்துக்களும், மனசுல எந்தவித தயக்கமோ, சில்மிஷமோ இல்லாம, "ஈஸ்வர அல்லா தேரே நாம்..''ங்கிற வரிகளையும் சேர்த்து, விம்மிக் கொண்டும், விசித்துக்கொண்டும் பாடினாங்களாம்.
=பாக்யா

kavitha
31-08-2005, 06:58 AM
எதுவும் இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை.
நல்ல தகவல் சுமா. தொடர்ந்து தாருங்கள்.

suma
10-09-2005, 07:51 PM
ஒருத்தன், பத்து வருஷமா அக்கவுன்ட் வச்சிருந்த பேங்குக்குப் போய், "சார்... இந்த பேங்க்ல நான் பத்து வருஷமா அக்கவுன்ட் வச்சிருக்கேன். அதனால, என்னை நம்பி எனக்கு நீங்க வீடு கட்ட லோன் கொடுக்கணும்'னான். பேங்க் மேனேஜர், "முடியாது'ன்னு மறுத்துட்டாரு. உடனே இவன், வேற ஒரு பேங்குக்குப்போய், லோன் கேட்டான். கிடைத்துவிட்டது. லோன் கிடைத்தவுடனே முதல் வேலையா, இவன் மார்க்கெட்டுக்கு போய், 500 ரூபாய்க்கு கருவாடும், மீனையும் வாங்கிகிட்டு, லோன் கொடுக்க முடியாதுன்னு சொன்ன பேங்குக்கு வந்து, தன்னோட சேஃப்ட்டி லாக்கரைத் திறந்து, கருவாடையும், மீனையும் உள்ளே வைத்து பூட்டிட்டுப் போயிட்டானாம். ஒரு வாரத்துல பேங்க்கே நாறிப்போச்சாம்.

poo
12-09-2005, 08:09 AM
சுமா...

சூப்பர் ஐடியாவா இருக்கே...

lavanya
13-09-2005, 12:25 AM
நல்ல ஐடியா தான்...ஆனா நமக்குதான் அந்த நேரத்துல ஒண்ணுமே தோணாது

அறிஞர்
13-09-2005, 12:33 AM
சுமாவின் தகவல்கள் அருமை.. தினமும் தொடரலாமே... சுமா......
---
லாவண்யாவை பார்ப்பது சந்தோசமாக உள்ளது.... இன்னும் அதிக பதிப்புக்களை தர வாழ்த்துக்கிறேன்

suma
25-09-2005, 12:44 AM
லைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கொலை வழக்குல சிக்கி சிறையிலிருந்தப்போ, என்.எஸ்.கே.யை விடுதலை செய்ய டி.ஏ.மதுரம் பல முயற்சிகளை எடுத்தாங்க. இவங்களுக்கு உதவணும்னு கோவை அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு, டி.ஏ.மதுரம் அவர்களை அப்போ சென்னை மாகாண மந்திரியா இருந்த டாக்டர் பி.சுப்பராயன்கிட்ட அழைச்சிட்டுப் போனாரு.
என்.எஸ்.கே. விடுதலைக்கு உதவி செய்யுமாறு நாயுடு, அமைச்சர் சுப்பராயன்கிட்ட கேட்டாரு.
""அவங்க கேஸ் டில்லி பிரிவி கவுன்சிலுக்குப் போறப்ப, என்னால் ஆன உதவியைச் செய்யறேன்''னு சொன்ன மந்திரி சுப்பையன், தன் பக்கத்துல உட்கார்ந்திருந்த ரெண்டு குழந்தைகளையும் பார்த்தாரு. அந்த ரெண்டு குழந்தைகளுமே ரொம்பசோகத்துல இருந்தாங்க.
அவங்க ரெண்டு பேரையும் சுட்டிக்காட்டி, ""இது என்னோட மகள் பார்வதி கிருஷ்ணனின் குழந்தை. அது என் மகன் குமாரமங்கலத்தின் குழந்தை. ரெண்டு பேருக்குமே அவங்க அப்பா, அம்மாவைப் பார்க்கணுமாம். அவங்க ரெண்டு பேருமே ஜெயில்ல இருக்காங்க. இதுக்கு என்ன சொல்றீங்க? ஒருவகையில நானும், டி.ஏ.மதுரம் நிலைமையிலதான் இருக்கேன்''னு சொன்னாராம்.
இத்தனைக்கும், டாக்டர் பி.சுப்பராயன், போலீஸ் மற்றும் சிறைத்துறை மந்திரியா இருந்தாராம்.

kavitha
27-09-2005, 07:32 AM
எனக்கு ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருது சுமா... அது என்னானா...
"கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போனா...." னு சொல்லுவாங்களே...

ஒருவிதத்தில் பாராட்டணும். தானும் அந்த நிலையில் இருந்தாலும் உதவும் எண்ணத்தைக்கைவிடாமல் இருந்ததற்கு. மேலும் தொடருங்கள். நன்றி

suma
05-11-2005, 03:16 PM
கெட்ட பேரு வந்து விடக்கூடாதுன்னு, நீதி தேவைதை துணியால் தன் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிற மாதிரி, உண்மையிலேயே ஒரு நீதிபதி கண்கள்ல துணியைக் கட்டிக்கிட்டு, கோர்ட்டுக்கு வந்திருக்காரு.
அவரோட பேரு, ஜேம்ஸ் ஹாக்கின்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், செயின்ட் லுõயி மாவட்ட நீதிபதியா 1882ம் வருடம் பதவியேற்றாரு. இவர், கோர்ட்டுக்குப் போறப்ப, ஒரு துணியால தன்னோட கண்களைக் கட்டி, மறைச்சிக்குவாரு. வேலைக்காரன் துணையோடதான் கோர்ட்டுக்கு வருவாராம்.
வழக்கு விசாரணை நடந்துக்கிட்டிருக்கப்ப, சாட்சி விசாரிப்பு, விவாதங்கள் என எல்லாத்தையும் காதால கேட்டுக்குவாரு. விசாரணையில ஆவணங்களை இவர் பார்க்காம, அரசு வக்கீலைப் படித்துக் காட்டச் சொல்வாரு.
ரெண்டு தரப்பு வாதங்களையும் கேட்டுட்டு, சரியான தீர்ப்பை வங்குவாராம் நீதிபதி ஜேம்ஸ் ஹாக்கின்ஸ் இவர் அளித்த தீர்ப்பைப் பற்றி, யாரமே குறை சொன்னதேயில்லையாம். அதிருப்தியும் பட்டதில்லை. இப்படியே நீதிக்கு அரசராக 14 வருஷம் இருந்தாரு. வீட்டுல, காலையில கண்கள்ல கட்டுன துணியை, மாலை வீட்டுக்குத் திரும்பியதும்தான் அவிழ்ப்பாராம்.

இளசு
05-11-2005, 03:41 PM
நீதிக்குக் கண்ணில்லை...
காது மட்டும் உண்டு..
சுவையான சேதிதான் சுமா...

aren
05-11-2005, 05:39 PM
இந்த மாதிரி நம் நாட்டு நீதிபதிகள் செய்தால் பல தீர்ப்புகள் சரியாக இருக்குமே? யாராவது செய்வார்களா?