PDA

View Full Version : பாலையில்.



பிரியன்
21-08-2005, 05:28 AM
தன் மண் விட்டுப்
பிறிதொரு இடத்தில் வளராத
தாவரங்களைப் போலவே
ஒட்ட வைக்கப்பட்ட
மலர்களாக நகர்கிறது
வாழ்க்கை

செந்நிறம் கண்டு வியப்பவர்கள்
அறிவதில்லை
பிரிவின் வலி மறைக்க
பூசிக்கொண்ட
ஒப்பனைகளே அவையென

வெம்மை தாக்கிட
தனிமையில் நடக்கையில்
கானலாகிவிட்ட
வீட்டு முற்றத்தின்
ஈரம் நினைத்து
கரைகிறது மனம்.

...

மன்மதன்
21-08-2005, 05:37 AM
வெம்மை தாக்கிட
தனிமையில் நடக்கையில்
கானலாகிவிட்ட
வீட்டு முற்றத்தின்
ஈரம் நினைத்து
கரைகிறது மனம்.

இந்த தனிமை வாழ்வு பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் .. நல்ல வரிகள் பிரியன்...

அன்புடன்
மன்மதன்

pradeepkt
21-08-2005, 06:09 AM
"செந்நிறம் கண்டு வியப்பவர்கள் அறிவதில்லை"
-- சரியாகச் சொன்னீர்கள் பிரியன். கசப்பை எழுதி வைத்து உணர்ந்தவர் யார்? உங்கள் வேதனைகளை நான் உணர்கிறேன்.
செடிக்குக் கூடப் பிடிமண் எடுக்கும் உலகில் மனதைச் சட்டென்று பிய்த்தெடுத்து உடலோடு ஒட்டி வைத்திருக்கிறீர்கள்.
அருமையான பதிவு.

பிரியன்
21-08-2005, 06:21 AM
இந்தக் கவிதை புலம் பெயர்ந்து வாழ்பவர்களைப் பற்றியான கவிதை. இங்கு வாழும் இரண்டு வகையான மனிதர்களையும் அவர்களின் வலிகளையும் எழுதி இருக்கிறேன். நன்றாக சம்பாதிப்பவர்களுக்கோ வலிகள் மனதளவிலே. ஆனால் மிகக் குறைந்த ஊதியத்திற்காக உறவுகளை பிரிந்து கொதிக்கும் வெயிலில் பணிபுரியும் எண்ணற்றோர் தங்கள் துயரங்களை மறைத்து தாங்கள் சுகவாழ்வு வாழ்வதாக ஒரு மாய பிம்பத்தை தோற்றுவித்து குடும்பத்தினரை நம்ப வைக்க அவர்கள் படும் வேதனையையும் அதை நம்பி விடும் அப்பாவி உறவுகளையும் அந்தவரிகளில் சொல்லியிருந்தேன்.

kavitha
22-08-2005, 06:33 AM
ஒட்ட வைக்கப்பட்ட
மலர்களாக நகர்கிறது
சோகத்தின் சுமைகளை இந்த வரிகள் உணர்த்திவிட்டன பிரியன்.

ஆதவா
07-01-2007, 10:13 AM
தன் மண் விட்டுப்
பிறிதொரு இடத்தில் வளராத
தாவரங்களைப் போலவே
ஒட்ட வைக்கப்பட்ட
மலர்களாக நகர்கிறது
வாழ்க்கை

செந்நிறம் கண்டு வியப்பவர்கள்
அறிவதில்லை
பிரிவின் வலி மறைக்க
பூசிக்கொண்ட
ஒப்பனைகளே அவையென

வெம்மை தாக்கிட
தனிமையில் நடக்கையில்
கானலாகிவிட்ட
வீட்டு முற்றத்தின்
ஈரம் நினைத்து
கரைகிறது மனம்.

அட. அருமையான கவிதைங்க...பாலைன்னவுடனே நான் என்னவோ நெனச்சேன்.

வெம்மை தாக்கிட
தனிமையில் நடக்கையில்
கானலாகிவிட்ட
வீட்டு முற்றத்தின்
ஈரம் நினைத்து
கரைகிறது மனம்.

அருமையான வரிகள் பிரியன்..

ஷீ-நிசி
07-01-2007, 12:25 PM
தனிமைப் பற்றி
இனிமையான வரிகள்

ப்ரியன்
08-01-2007, 03:26 AM
தன் மண் விட்டுப்
பிறிதொரு இடத்தில் வளராத
தாவரங்களைப் போலவே
ஒட்ட வைக்கப்பட்ட
மலர்களாக நகர்கிறது
வாழ்க்கை

செந்நிறம் கண்டு வியப்பவர்கள்
அறிவதில்லை
பிரிவின் வலி மறைக்க
பூசிக்கொண்ட
ஒப்பனைகளே அவையென

வெம்மை தாக்கிட
தனிமையில் நடக்கையில்
கானலாகிவிட்ட
வீட்டு முற்றத்தின்
ஈரம் நினைத்து
கரைகிறது மனம்.

அருமையான கவிதை பிரியன்

இளசு
08-01-2007, 11:07 PM
புலம் பெயர்தலின் வலியை
வலிமையாய்ச் சொன்ன வரிகள்..

வெம்மையில் ஈரத்தை நினைத்து..
'செம்மை'யில் சோகத்தை மறைத்து..




பிரியனின் வீரியக் கவிதைக்குப் பாராட்டுகள்..!