PDA

View Full Version : பொன்மொழிகள்



kavitha
20-08-2005, 04:04 AM
(உங்களது ஆதரவோடு அறிஞர்களின் பொன்மொழிகளை இங்கே தொகுக்கலாம் என்றுள்ளேன்) (




"உலகமென்பது களிமண்ணைப்போன்று இல்லை. கடினமான இரும்பைப் போன்றுள்ளது.
அதன் மீது விடாமல் அடித்துத்தான் மக்கள் தங்களுக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்."

- எமர்சன்

பரஞ்சோதி
20-08-2005, 05:15 AM
நன்றி சகோதரி.


சான்றோரின் பொன்மொழிகளை அடிக்கடி கொடுங்கள்.

மன்மதன்
20-08-2005, 06:22 AM
நல்லது கவி.. தொடர்ந்து எழுதுங்க..
அன்புடன்
மன்மதன்

சுவேதா
20-08-2005, 03:54 PM
அக்கா நானும் கொடுக்கலாமா??

kavitha
24-08-2005, 04:33 AM
2.
"தன் சக்தியில் இருந்து சாத்தியமான அளவு சாறு பிழிவதே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை இலட்சியமாக
இருத்தல் வேண்டும்" - ரிக்டர்

kavitha
24-08-2005, 04:34 AM
அக்கா நானும் கொடுக்கலாமா??

தாராளமாக.... :) இதேபோல் தொடர்ச்சியாக எண்ணிட்டுத் தரவும். மீண்டும் படிக்க உதவும்.

பரஞ்சோதி
24-08-2005, 10:51 AM
அக்காவும், தங்கையும் மாற்றி மாற்றி கொடுங்க, நாங்க படித்து மகிழ்கிறோம்.

gragavan
24-08-2005, 12:29 PM
பொன்மொழிகள் மதிப்பு மிக்கவை. தங்கத்தை விட வைரம் மதிப்புடையது. இருந்தும் ஏன் வைரமொழிகள் என்பதில்லை? காரணமென்ன? எனக்குத் தெரியும். யாருக்காவது தெரியுமா?

பிரியன்
24-08-2005, 01:03 PM
வைரத்தில் கலப்படமில்லை. தங்கத்தில் உண்டு. அப்படித்தான் பொன்மொழிகளும்

Iniyan
24-08-2005, 01:10 PM
பொன்மொழிகள் மதிப்பு மிக்கவை. தங்கத்தை விட வைரம் மதிப்புடையது. இருந்தும் ஏன் வைரமொழிகள் என்பதில்லை? காரணமென்ன? எனக்குத் தெரியும். யாருக்காவது தெரியுமா?

கட்டாயமாய் ஏதோ ஒரு நல்ல சுவையான காரணம் இருப்பது போல தெரிகிறது. சொல்லுங்களேன்.

gragavan
24-08-2005, 01:15 PM
பிரியன் சொன்னது தவறான விடை. இன்னொரு முறை முயன்று பாருங்களேன்.

gragavan
25-08-2005, 06:51 AM
சரி. நானே சொல்லி விடுகிறேன்.

தனி வைரம் அழகானாலும் பயனாகாது. தனித்தங்கம் பயனாகும். வைரத்தைப் பதிக்கத் தங்கம் தேவை. ஆனால் தங்கத்தை அப்படியே பயன்படுத்தலாம். பொன்மொழிகளும் அப்படித்தான்.

kavitha
25-08-2005, 10:33 AM
சரி. நானே சொல்லி விடுகிறேன்.

தனி வைரம் அழகானாலும் பயனாகாது. தனித்தங்கம் பயனாகும். வைரத்தைப் பதிக்கத் தங்கம் தேவை. ஆனால் தங்கத்தை அப்படியே பயன்படுத்தலாம். பொன்மொழிகளும் அப்படித்தான்.

அடடடா.. அருமையான விளக்கம் அண்ணா.. நேற்று சுவேதா வரவில்லையா?

kavitha
25-08-2005, 10:34 AM
3. தனிமை என்பது விரும்பத்தக்கது அல்ல. மற்றவர்களுடன் சேராமல் தனிமையில் இருக்கும் எண்ணம் உங்களுக்குத் தோன்றுமானால் அந்த உணர்விலிருந்து ஆரம்பத்திலேயே விடுபட்டுவிடுங்கள்.
- காப்மேயர்

பாரதி
25-08-2005, 04:22 PM
பொன்மொழிகள் நன்று கவி. பாராட்டுக்கள்.
ஒரு இளம் கவிஞருக்கு தேவையான பொன்மொழிதான்... ஹஹஹா...
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5076

mukilan
27-08-2005, 04:23 AM
நீ செய்து பார்ப்போமே எனத் தொடங்கும் முயற்சி மிகச் சிறியதாக இருந்தாலும் மகோன்னதமான உன் எதிர்காலத்திற்கான திருப்பு முனையாக அதுவே அமைந்து விடலாம்.
-ஸ்ரீ அரவிந்த அன்னை.

pradeepkt
27-08-2005, 06:24 AM
முயற்சி திருவினையாக்கும்.
வாழ்த்துகள் முகிலன்.

பரஞ்சோதி
27-08-2005, 08:03 AM
நன்றி முகிலன்.

மன்மதன்
27-08-2005, 09:17 AM
பொன்மொழிகள் நன்று கவி. பாராட்டுக்கள்.
ஒரு இளம் கவிஞருக்கு தேவையான பொன்மொழிதான்... ஹஹஹா...
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5076

ஹாஹ்ஹாஹா. பொன்மொழியை படித்து அந்த சுட்டியில் இருக்கும் கவிதாவின் கவிதையும் படித்தேன்.. இதற்குதான் முரண்கவிதை என்பதா?? ;) ;)

kavitha
27-08-2005, 10:48 AM
ஹாஹ்ஹாஹா. பொன்மொழியை படித்து அந்த சுட்டியில் இருக்கும் கவிதாவின் கவிதையும் படித்தேன்.. இதற்குதான் முரண்கவிதை என்பதா?? ;) ;)

ஹஹ்ஹா... அபார ஞாபகத்திறன் பாரதி உங்களுக்கு. மீண்டும் மேலெழுப்பிய மன்மதனுக்கு எனது நன்றிகள்.

கவிதைக்கும், கவிஞருக்கும் சம்பந்தம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

இருந்தாலும் எனக்குத் தனிமை மிகவும் பிடிக்கும். இந்த பொன்மொழியை முதலில் ஏற்றுக்கொண்ட பிறகே இங்கே பதித்தேன்.

அகத்தனிமை தவிர்க்கமுடியாதது. இங்கே கொடுக்கப்பட்ட பொன்மொழி புறத்தனிமையைக்குறிப்பதாகவே கருதுகிறேன்.

பதிவைச் சிறப்பித்த மற்றவர்களுக்கும் எனது நன்றி.

முகிலன் அவர்களின் பொன்மொழிகள் தொடரும் என்று நம்புகிறேன். நன்றி.

kavitha
27-08-2005, 10:50 AM
5. எதையும் சிறப்பாகவும் முழுமையாகவும் நீங்கள் செய்ய வேண்டுமானால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. கற்பனையில் அதைப் பயிற்சி செய்வது தான் அந்த வழி. - காப்மேயர்

kavitha
31-08-2005, 05:59 AM
6. பொறுப்பில்லாத சலுகைகளும், கட்டுப்பாடில்லாத சுதந்திரமும் ஆபத்தானவை - இந்திராகாந்தி

pradeepkt
31-08-2005, 07:13 AM
உண்மையான வார்த்தைகள் பொறுப்பில்லாத சலுகைகள் நாட்டிலும் கட்டுப்பாடில்லாத சுதந்திரங்கள் பல வீட்டிலும் இப்போது வழங்கப் படுகின்றன.

அது சரி, சகோதரி திரும்ப மேண்டரினுக்கே போயிட்டாப்பல இருக்கு.

kavitha
01-09-2005, 06:16 AM
7. முயற்சிப்பவர்களுக்கே வெற்றி சாத்தியம் - டபுள்யூ. கிளமெண்ட்

kavitha
02-09-2005, 04:00 AM
8. நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகத்தான் நாம் இருக்கிறோம். நாம் இனி என்ன ஆகப்போகிறோம் என்பதையும் அது தான் நிர்ணயிக்கிறது
- வால்டர்

gragavan
02-09-2005, 07:37 AM
அருமையான பொன்மொழி. குளவிக்கூட்டில் புழுக்கள் இருக்கும். அந்தப் புழுக்களை எப்போதும் குளவிகள் கொட்டிக் கொண்டே இருக்கும். கொட்டப்பட்ட புழுக்கள் குளவிகளையே நினைத்துக் கொண்டிருந்து குளவிகளாக மாறி விடும்.

kavitha
03-09-2005, 04:23 AM
அருமையான பொன்மொழி. குளவிக்கூட்டில் புழுக்கள் இருக்கும். அந்தப் புழுக்களை எப்போதும் குளவிகள் கொட்டிக் கொண்டே இருக்கும். கொட்டப்பட்ட புழுக்கள் குளவிகளையே நினைத்துக் கொண்டிருந்து குளவிகளாக மாறி விடும்.
மற்றொரு தகவல் கிடைத்தது. நன்றி அண்ணா.

அடுத்தது..


9. நமது நடத்தையே நமது குணாதிசயங்களைத் தீர்மானிக்கிறது - அரிஸ்டாட்டில்

பரஞ்சோதி
03-09-2005, 04:32 AM
அருமையான பொன்மொழிகள் சகோதரி.

kavitha
03-09-2005, 04:41 AM
நன்றி அண்ணா. நீங்களும் தரலாமே!

பரஞ்சோதி
03-09-2005, 04:43 AM
கொடுக்கலாம் சகோதரி, சோம்பேறித்தனம் அதிகமாகி விட்டது.

சுவேதா
08-09-2005, 02:12 AM
அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!
முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு

சுவேதா
08-09-2005, 02:24 AM
பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.
ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.

பரஞ்சோதி
08-09-2005, 04:45 AM
ஆகா சுவேதா சகோதரியும், சேர்ந்தாச்சா, பாராட்டுகள். தொடருங்கள் சகோதரிகளே!

kavitha
08-09-2005, 08:09 AM
* ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கிற முயற்சியின் உத்வேகமும் இருக்கும் - காப்மேயர்

kavitha
08-09-2005, 08:13 AM
அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!
முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு
அருமையான பொன்மொழிகள் சுவேதா. தொடரவும்.

சுவேதா
08-09-2005, 10:31 AM
ஆகா சுவேதா சகோதரியும், சேர்ந்தாச்சா, பாராட்டுகள். தொடருங்கள் சகோதரிகளே!

நன்றி அண்ணா!

சுவேதா
08-09-2005, 10:33 AM
அருமையான பொன்மொழிகள் சுவேதா. தொடரவும்.
சரி அக்கா
நன்றி!

சுவேதா
09-09-2005, 02:35 AM
என்னால் எதையுமே செய்யமுடியுமென்று தன்மீது தளராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கின்றானோ அவனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்.

சுவேதா
09-09-2005, 02:38 AM
தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டது போல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்.

kavitha
09-09-2005, 06:30 AM
இரண்டுமே அருமையான பொன்மொழிகள் சுவேதா. நன்று. :)

kavitha
09-09-2005, 06:37 AM
ஒன்றை அடைவதற்கு தேவையானவை: நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராயிருத்தல் - ஜவஹர்லால் நேரு.

சுவேதா
09-09-2005, 11:43 AM
இரண்டுமே அருமையான பொன்மொழிகள் சுவேதா. நன்று. :)

நன்றி அக்கா!

kavitha
15-09-2005, 11:03 AM
மரணத்தின் சலுகை வாழ்க்கை,
வாழ்க்கையின் தள்ளுபடி மரணம்.
- வலம்புரி ஜான்

kavitha
27-09-2005, 11:06 AM
தன்னம்பிக்கை இல்லாதவன் அனைத்தையும் இழந்தவன் ஆகிறான் - காந்தியடிகள்

kavitha
28-09-2005, 03:57 AM
குறைகளைத் தேடாதீர்கள்; தீர்வைத் தேடுங்கள் - ஹென்றி போர்டு