PDA

View Full Version : ரக்ஷா பந்தன்



மன்மதன்
19-08-2005, 12:07 PM
கல்லூரி காலத்து
விருப்பங்கள்
வெறுப்புகளாய்
சில சமயம்...

வெறுப்புக்கள்
உறவுகளாய்
பாசக்கயிற்றுடன்..

விரும்பி
விரும்பாமல்
கைகளை
கட்டிக்கொண்டும்
நடந்தாலும்
எந்த சமயத்திலும்
கட்டத்தயாராய்
பைக்குள் கயிறுகள்...

ஒரே நாளில்
உறவைக் கொணரும்
வண்ணமயமாக
மணிக்கட்டில்
இறுகும் கயிறு

சிலருக்கு
மனதில் வலிக்கும்..
பெரும்பாலும்
அர்த்தம் இழக்கும்...

பெயரின்றி
இருந்திருந்த
உறவுகள்
பெயர் தெரிந்து
மகிழ்ச்சியாய்..

பெயரொன்று
நினைத்திருந்த
உறவுகள்
பெயர் பிறழ்ந்து
சலனமாய்..

அனைத்தும்
தூண்டிலிட்டு
மெல்லிய கயிற்றின்
ஓரத்தில் தொங்கும்
சின்ன பொம்மை
பார்த்து சிரிக்கும்..

இத்தனை
களேபரத்திற்கு
மத்தியிலும்
என்னுடைய...

ரக்ஷா பந்தன்
மட்டும்
அமைதியாய்...

-
மன்மதன்

(கல்லூரி காலத்தில் படித்த கவிதையின் இன்ஸ்பிரேஷன்...)

pradeepkt
19-08-2005, 01:01 PM
சூப்பரப்பு.
இதெல்லாம் தெரிஞ்சுதானோ என்னவோ எங்க கல்லூரியில இந்த ரக்ஷா பந்தன் எதுவும் கொண்டாடுவதில்லை.
அது இன்னொரு தளம். அங்கே நட்புகள் அல்லது வகுப்புத் தோழர்கள் அல்லது சம்பந்தமில்லாதவர்கள் - அவ்வளவுதான்.
ஆனால் இந்த பிப்ரவரி 14 வந்தால் அடிக்கும் கூத்து இருக்கிறதே? அப்பப்பா! எனக்கு நேர்ந்த ஒரு நிகழ்வை நான் கூட என் கல்லூரி வருட இதழில் கவிதை ஆக்கினேன். பின்னொரு சமயம் அதை இங்கே இடுகிறேன்.

பரஞ்சோதி
19-08-2005, 01:49 PM
நண்பா, அருமையான கவிதை.

கலக்கிவிட்டாய். பல கைகளால் கையில் கட்டப்பட்ட கயிறானது உன் கழுத்தை சுற்றிய கயிறாக நினைத்ததுண்டா?

kavitha
20-08-2005, 03:54 AM
அப்பப்பா! எனக்கு நேர்ந்த ஒரு நிகழ்வை நான் கூட என் கல்லூரி வருட இதழில் கவிதை ஆக்கினேன். பின்னொரு சமயம் அதை இங்கே இடுகிறேன்.
கவிதைப்பக்கத்தில் பதித்திருக்கலாமே!

மன்மதன்
20-08-2005, 04:33 AM
நன்றி நண்பாஸ்..
மாற்றிவிட்டேன் கவி..
அன்புடன்
மன்மதன்

kavitha
20-08-2005, 11:04 AM
நன்றி மன்மதன்.

உடன்பிறந்த சகோதரர்கள் எனக்குக் கிடையாது. ஆசையாக கட்ட நினைத்து அதையும் அன்போடு கட்டிக்கொண்டவர்கள் மட்டுமே உண்டு.

மற்றபடி நிறைய நண்ப, நண்பிகள் வருடம் தோறும் அதிகரித்து நட்புக்கயிறுகள் பெற்றதுண்டு. ஆனால் அவைகளில் நீடித்திருப்பது வெகு சிலவையே!

ஆதவா
07-01-2007, 10:11 AM
சிலருக்கு
மனதில் வலிக்கும்..
பெரும்பாலும்
அர்த்தம் இழக்கும்...

உண்மைதான் மன்மதன்... சிலர் சகோதரிகளாக ஏற்றுக்கொள்வதில் கஷ்டப் படுகிறார்கள்... இப்போழுதெல்லாம் உங்க கவிதையை பார்க்க முடிவதில்லையே!!
எழுதுங்க சார். நாங்க படிப்போம்ல

ஷீ-நிசி
07-01-2007, 01:20 PM
ஒரே நாளில்
உறவைக் கொணரும்
வண்ணமயமாக
மணிக்கட்டில்
இறுகும் கயிறு


சோகம்தான்

கழுத்தில் கட்டி
மனைவியாக்கலாம்
என்றிருந்தேன்! -அவளோ

கையிலே கட்டி என்னை
அண்ணனாக்கிவிட்டாள்!

அக்னி
27-08-2007, 03:34 PM
இதுவரை
ரக்ஷி பந்தன் அறிந்தது மட்டும்தான்...
இந்தமுறைதான்,
மன்றம் வந்த பின்னர்தான்...
உணர்வுபூர்வமாக...
முதல் ரக்ஷி பந்தன்...
எனக்கு...
சந்தோஷமாக அனுபவிக்கின்றேன்,
புது சுகத்தை...
புது சொந்தங்களை...
ரக்ஷி பந்தன் வாழ்த்துக்கள்...

அழகுக்கவிதைக்கு பாராட்டுக்கள்...

2 வது பதிவில், பிரதீப் அவர்கள் தருவதாகச் சொன்ன கவிதை வந்ததா...
இனித்தான் வருமா...
ஆவலுடன்...

ஓவியா
27-08-2007, 03:40 PM
முதலில் எங்கள் தங்கம், பொன்மன செம்மல், உறவு சிகரம், அண்ணன் பிரதீப் அவர்கள் மன்றம் வரட்டும், பின்னாடி கவிதை என்ன ஆச்சுனு கேக்கலாம்ஓய்!!!


பிரமச்சாரி கட்சியின் தொணடர்
− ஓவியாணந்த மாயி