PDA

View Full Version : காதலிப்பதாகச் சொல்லாதே!kavitha
19-08-2005, 11:01 AM
நீட்டித்திருக்கும் உன் தூக்கத்தில்
வண்ணக்கனவுகள் இல்லை

மீள்பார்வைப் பயணங்களில்
பச்சையங்கள் இல்லை

குவித்த சிந்தனைகளில்
சுடரொளிப் பற்றி எரியவில்லை

விரிந்த விலகல்களில்
வானவில் இல்லை

சந்திப்புகளில்
சர்க்கரை இல்லை

பிரிவுகளில்
சயனைடு இல்லை


நீ
காதலிப்பதாகச் சொல்லாதே!

சம்பளத்தின் மீது
சம்மந்தம் செய்வதல்ல
காதல்.

சக்கை உடலுக்குச்
சாறூற்றுவதல்ல
காதல்.

மற்றதற்கு மாற்று
அல்ல காதல்.

காதல்....
நுண்ணிய ரசனைகள்
நுகரும் ரசவாதம்!

ஒளிக்குள்
ஒளிந்திருக்கும்
வெப்பம்போல்

எனக்குள்
உன்னை

உனக்குள்
என்னை

உருக்கி உருக்கி
ஊற்றி சமன் செய்ய முயலும்
ஓட்டைப்பாத்திரம் காதல்

முதலில் பிடிக்கும்
பிறகு குடிக்கும்
கடைசியில் வெடிக்கும்

தொட்டால் விலகும்
விலகினால் துரத்தும்
மூழ்கினால் மிதக்கச் செய்யும்!
அது தான் ஆழம்.

அதுவரை....

நீ
காதலிப்பதாகச் சொல்லாதே!

மன்மதன்
19-08-2005, 12:07 PM
காதலிப்பதாக சொன்னால்தான் காதலா? தானாக புரிந்துக்கொள்ளப்படுவதே காதல்...

நல்ல கவிதை கவி..

அன்புடன்
மன்மதன்

pradeepkt
19-08-2005, 12:14 PM
இதில் இத்தனை விஷயம் இருக்கிறதா?
காதல் போன்ற மெல்லிய உணர்வுகள் என்னை ஏன் தீண்டியதில்லை என்ற காரணம் புரிந்தது.
கவிதை நன்று.

kavitha
22-08-2005, 06:51 AM
காதலிப்பதாக சொன்னால்தான் காதலா? தானாக புரிந்துக்கொள்ளப்படுவதே காதல்...

நல்ல கவிதை கவி..

அன்புடன்
மன்மதன்

இதை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள் மன்மதன்?
அவர்களுக்கு மட்டும் பிடித்திருந்தால் போதுமென்றே கணக்குப்போட்டுவிடுகிறார்கள்.

ஒரு கை ஓசை சொடுக்குப்போடலாம்.
இரு கை ஓசை தானே பாராட்டு பெறும்.
---------------------------------------இதில் இத்தனை விஷயம் இருக்கிறதா?
காதல் போன்ற மெல்லிய உணர்வுகள் என்னை ஏன் தீண்டியதில்லை என்ற காரணம் புரிந்தது.
கவிதை நன்று.

:) நன்றி பிரதீப். விரைவில் மங்கலம் உண்டாகட்டும்!!

பிரியன்
22-08-2005, 07:07 AM
என் ஆவி பிரியும்
முன்நொடியில் சொன்னாலும்
உள்ளம் புரிந்து வரும்
உன் காதல் புனிதமானதே

mania
22-08-2005, 07:09 AM
:) நன்றி பிரதீப். விரைவில் மங்கலம் உண்டாகட்டும்!!

:D :D அடேடே ப்ரதீப் ........எங்களுக்கெல்லாம் சொல்லவேயில்லையே.......:rolleyes: :rolleyes: வாழ்த்துக்கள்...:D
சந்தோஷத்துடன்
மணியா...:D

ஜீவா
22-08-2005, 07:26 AM
அன்பு அக்கா(நான் சின்ன பயன்தானே:D ) அவர்களுக்கு..
உங்கள் கவிதை படித்தேன்.. இது மட்டுமல்ல.. நீங்கள் எழுதிய அனைத்தும்.. என்னமோ ஏதோ பொறாமையால் கூட நான் நன்றி சொல்லவில்லை என்று நினைத்திருக்கலாம்.. என்னவென்ற்று தெரியவில்லை.. உங்கள் கவிதையை படித்து விட்டு நான் நிறைய நேரம் யோசித்திருக்கிறேன்.. என்ன அருமையா எல்லா தலைப்பிலும் எழுதுகிறார்கள்.. ஏதொ அனுபவித்து எழுதுவது போன்று.. எடுத்துக்காட்டாக..


யார் சொல்லித் தெரியவேண்டும்?
உன்னை நான்
எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை!

யார் சொல்லித் தெரியவேண்டும்?
நீ இல்லாத வெறுமை
எனக்கு எத்தனைக் கொடுமை என்பதை!

யார் சொல்லித் தெரியவேண்டும்?
எனக்குள் நீ நிறைந்திருப்பதை போல
உனக்குள் நான் எங்கேயோ ஒளிந்திருக்கிறேன் என்பதை!

உன் மனம் உன்னிடம்
பேசுவதே இல்லையா?

உன்னைப்போலவே
உன் மனதிற்கும் பிடித்த மொழி
மௌனம் தானோ!

இந்த கவிதை அப்படியே என் வாழ்வில் நடந்து கொண்டிருப்பது.. அதை அப்படியே எழுத்து வடிவில் கொண்டு வந்தீர்கள்.. உண்மையிலே மிக அருமை.. பாராட்ட வார்த்தைகளே இல்லை..

என் கவிதைகளில் கூட நீங்கள் உங்கள் கண்டிப்பான மறுப்பை கூறிய போதுதான் உணர்ந்தேன்..


ஒரு நாள் வரும்..
என் கடந்த கால அன்பை புரிந்து கொள்ள..
அப்படி இல்லையென்றால்
நான் கொண்ட உண்மையான அன்பு
உன்னை காப்பாற்றியது என்று
நினைத்து கொள்...

இவன்
ஜீவா...


கடைசிப் பத்தி கொஞ்சம் ஆபத்தாக உள்ளது.
நேர்மறையாகப்பொருள் கொண்டாலும்...
"ஒரு நாள் என்னைப்புரிந்து கொள்வாய்,
அப்படி புரிந்துகொள்ள வில்லையென்றால் என் அன்பு உன்னைக்காப்பாற்றியது" என்றால் என்ன அர்த்தம்?

ஐயா... காதலில் நீங்கள் அவளை சுகமாக வைத்திருப்பது மட்டுமல்ல; சுகமாகவும் இருக்க வேண்டும். அது அவளால் முடியாதென விலகினால் விட்டு விடுங்கள்.

இந்த இடத்தில் நான் இதற்கு பதில் அளிக்கிறேன்.. எந்த ஒரு உண்மையான காதலும் நான் சொன்ன மாதிரி நினைக்காது.. ஆனால், என்னுடைய சந்தர்ப்ப சூழ்நிலை, அவளுடைய அவ்வப்போது மாறும் தன்மை (குடும்ப நிலமையால்), மேலும், ஆழமான காதல் நம்பிக்கை இல்லாமை இவை அனைத்தும்தான் அந்த வார்த்தையை எழுத தூண்டியிருக்கும் என நான் நினைக்கிறேன்.. அதற்காக நான் கொண்ட காதல் உண்மை இல்லை என்று சொல்லவில்லை.. நான் மேற்கூறிய அனைத்தும் மாறக்கூடிய நேரம் வெகுவிரைவில் உள்ளது.. தவறு செய்வது மனித இயல்புதானே.. எத்தனையோ உண்மை காதலிலும் சில பிளவுகள் ஏற்பட்டு பின் பிரிவுகள் மூலம் உணர்வதும் இயல்புதானே..

ஆனால் புரிந்து கொண்டேன்.. அவள் என்னை விரும்புகிறாள் என்ன.. காத்திருக்கிறேன் அந்த காலம் கனிய..


யார் சொல்லித் தெரியவேண்டும்?
எனக்குள் நீ நிறைந்திருப்பதை போல
உனக்குள் நான் எங்கேயோ ஒளிந்திருக்கிறேன் என்பதை!


இதை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள் மன்மதன்?
அவர்களுக்கு மட்டும் பிடித்திருந்தால் போதுமென்றே கணக்குப்போட்டுவிடுகிறார்கள்.

தற்போது கண்டிப்பாக இது எனக்கு பொருந்தாது.. என்னிடம் இதுவரை மெளனம் சாதிக்கிறாளே தவிர மறுப்பு இல்லை.. அப்படி ஒரு நிலமை வந்தால் கண்டிப்பாக விட்டு விலகிடுவேன்..

இன்னும் நிறைய கவிதை கொடுங்க அக்கா.. அப்ப அப்ப உங்க பேரை சொல்லி நானும் கொஞ்சம் கவிதையை அந்த பக்கம் அனுப்பிறேன்.. கவிதை வர்றவங்க மட்டும்தான் காதலிக்கனுமா என்ன.. அதை காப்பி பண்ணி அனுப்ப தெரிஞ்சவங்களும் காதலிக்கலாம்ல.. :D :D :D

kavitha
22-08-2005, 07:51 AM
என் ஆவி பிரியும்
முன்நொடியில் சொன்னாலும்
உள்ளம் புரிந்து வரும்
உன் காதல் புனிதமானதே

பதில் கவிதையில் இந்த வரியில் அசத்தி விட்டீர்கள் பிரியன். நன்றி

kavitha
22-08-2005, 07:52 AM
அடேடே ப்ரதீப் ........எங்களுக்கெல்லாம் சொல்லவேயில்லையே....... வாழ்த்துக்கள்...
சந்தோஷத்துடன்
மணியா...
சொச்சம் ஐவரணியில்... இதோ வர்றேன்.. :)

kavitha
22-08-2005, 08:18 AM
அன்பு அக்கா(நான் சின்ன பயன்தானே ) அவர்களுக்கு..

ஆஹா... இந்த வம்புக்கு நான் வரல.. கவிதா என்றே அழையுங்கள்.


நீங்கள் எழுதிய அனைத்தும்.. என்னமோ ஏதோ பொறாமையால் கூட நான் நன்றி சொல்லவில்லை என்று நினைத்திருக்கலாம்

அப்படியெல்லாம் நான் நினைக்கவில்லை ஜீவா. நான் எழுதுவதே என்னைப்பொறுத்தவரை ஒரு கிறுக்கல் தான். பல கவிதைகள் அப்படியே தோன்றி மறையும். சிலவை விடாப்பிடியாக சுற்றி சுற்றி வரும். அவற்றை இப்படி ஏதாவது ஒன்றில் எழுதித்தொலைத்து விட்டால் நான் நிம்மதியாக இருப்பேன். இது ஒரு எஸ்கேப்பிசம். அவ்வளவே!

மற்றபடி கிடைக்கும் பாராட்டும், பதிலடியும் அவரவர் கண்ணோட்டத்தினைச் சொல்லும். இது எனது கண்ணோட்டத்திற்கு கிடைத்த பதில்களாக எடுத்துக்கொள்வேன். முரண்பாடு இருந்தால் அவ்வாறு இல்லை என்றோ ஆமாம் என்றோ சொல்வதும், பாராட்டினால் அதற்கு நன்றி கூறுவதும் எனது கடமையாகக் கருதி வருகிறேன். எனது எழுத்தினைத் திருத்திக்கொள்ள அவை மிக உபயோகமாய் உள்ளன.
மற்றபடி யாரையும் குறிப்பிட்டு அல்லது எதிர்பார்த்து எழுதுவதல்ல.

உங்களுக்கு எனது கவிதை பிடித்திருந்தால் மிக்க மகிழ்ச்சி. :)
இந்த கவிதை அப்படியே என் வாழ்வில் நடந்து கொண்டிருப்பது.. அதை அப்படியே எழுத்து வடிவில் கொண்டு வந்தீர்கள்.. உண்மையிலே மிக அருமை..

நன்றி. இந்தக்கவிதை நண்பன் அவர்களின் கவிதைக்கு எழுதியது என்று நினைக்கிறேன். அவருக்கு தான் இந்தப்பாராட்டு செல்லவேண்டும். ஏனெனில் இதை எழுதத்தூண்டியது அவரது வரிகள். வார்த்தைகளைப்பிடுங்கிக் கோர்ப்பதில் அவர் வல்லவர். மன்றத்தில் இது போல் நிறைய பேர் எழுதுகிறார்கள். படித்துப்பாருங்கள். விரைவில் உங்களுக்கும் பிடிபட்டு விடும்.இந்த இடத்தில் நான் இதற்கு பதில் அளிக்கிறேன்.. எந்த ஒரு உண்மையான காதலும் நான் சொன்ன மாதிரி நினைக்காது.. ஆனால், என்னுடைய சந்தர்ப்ப சூழ்நிலை, அவளுடைய அவ்வப்போது மாறும் தன்மை (குடும்ப நிலமையால்), மேலும், ஆழமான காதல் நம்பிக்கை இல்லாமை இவை அனைத்தும்தான் அந்த வார்த்தையை எழுத தூண்டியிருக்கும் என நான் நினைக்கிறேன்.. அதற்காக நான் கொண்ட காதல் உண்மை இல்லை என்று சொல்லவில்லை.. நான் மேற்கூறிய அனைத்தும் மாறக்கூடிய நேரம் வெகுவிரைவில் உள்ளது.. தவறு செய்வது மனித இயல்புதானே.. எத்தனையோ உண்மை காதலிலும் சில பிளவுகள் ஏற்பட்டு பின் பிரிவுகள் மூலம் உணர்வதும் இயல்புதானே..

ஆனால் புரிந்து கொண்டேன்.. அவள் என்னை விரும்புகிறாள் என்ன.. காத்திருக்கிறேன் அந்த காலம் கனிய..

உங்கள் மனமாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்பார்க்காத அன்பிற்கு தானே எல்லாமும் கிடைக்கும். இதை நீங்கள் அனுபவத்தில் விரைவில் உணர்வீர்கள்.தற்போது கண்டிப்பாக இது எனக்கு பொருந்தாது.. என்னிடம் இதுவரை மெளனம் சாதிக்கிறாளே தவிர மறுப்பு இல்லை.. அப்படி ஒரு நிலமை வந்தால் கண்டிப்பாக விட்டு விலகிடுவேன்..

இந்த மனப்பக்குவம் இருந்தால் நீங்கள் பிறழவோ, உழலவோ முடியாது. தைரியமாய் உங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். எல்லாம் நன்மையாய் முடியும்!அப்ப அப்ப உங்க பேரை சொல்லி நானும் கொஞ்சம் கவிதையை அந்த பக்கம் அனுப்பிறேன்.. கவிதை வர்றவங்க மட்டும்தான் காதலிக்கனுமா என்ன.. அதை காப்பி பண்ணி அனுப்ப தெரிஞ்சவங்களும் காதலிக்கலாம்ல..

கவிதை எழுதறவங்க மட்டும்தான் காதலிக்கணும்னு இல்ல ஜீவா. ஆனா நீங்க நல்லாதானே எழுதறீங்க. நீங்கள் காதல்வயப்பட்டால் உங்கள் சொற்கள் கவி பாடும். அவள் உங்கள் வயப்பட்டால் நீங்கள் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு கவிதையாகத் தெரியும்.

எனது தோழி ஒரு கவிதை எழுதியிருந்தாள். வரிகள் மறந்துவிட்டன. அதாவது, அவளது கவிதை பிரசுரமாகும் என்று செலவழித்து பத்திரிகைகளுக்கு அனுப்பினால், அது கடைசியில் சுண்டல் காரனின் பொட்டலமாக மாறியிருந்தது. அப்படியாவது அது பயன்பட்டதே என்று கடைசி வரியில் எழுதியிருப்பாள்.

உருப்படியாக எனது கவிதை உபயோகப்பட்டால் எனக்கும் மகிழ்ச்சியே! :)

இராசகுமாரன்
22-08-2005, 09:03 AM
நல்ல அழகான கவிதை..
கவிதாவின் படைப்புகளின் தலையில் மற்றும் ஒரு கிரீடம்..

நம்ம திரை விமர்சனத்துக்கு பதில் கூறும் பாமரன் ஸ்டையில் கூறினால்...

"கிளைமாக்ஸ் சூப்பருங்க.. "
முதலில் பிடிக்கும்
பிறகு குடிக்கும்
கடைசியில் வெடிக்கும்

தொட்டால் விலகும்
விலகினால் துரத்தும்
மூழ்கினால் மிதக்கச் செய்யும்!
அது தான் ஆழம்.

அதுவரை....

நீ
காதலிப்பதாகச் சொல்லாதே!

பிரியன்
22-08-2005, 09:19 AM
கவிதை வர்றவங்க மட்டும்தான் காதலிக்கனுமா என்ன.. அதை காப்பி பண்ணி அனுப்ப தெரிஞ்சவங்களும் காதலிக்கலாம்ல.. :D :D :D

நீண்ட மவுனம் கலைத்த ஜீவா உங்களுக்கு என் வாழ்த்துக்கள். ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கவிதையை சிறைவைக்க முடியாது. உங்கள் எழுத்துக்களில் நம்பிக்கை கொள்ளுங்கள். அதை மட்டும் அனுப்புங்கள். உள்ளத்தில் உள்ளதை உங்கள் மொழியில் மட்டும் சொல்லுங்கள். உங்கள் நினைவுகளை நீங்கள்தான் சுமக்க வேண்டும்.

திருமலை படத்தில் வரும் ஒரு காட்சி.காதல் கடிதத்தை விஜய் தப்பும் தவறுமாக எழுதி இருந்த போதும் ஜோ சரியாகவே புரிந்து கொள்வார், அது மாதிரிதான் நீங்கள் தவறாகவே சொல்லி இருந்தாலும் உண்மையாக நேசிப்பவர் அதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வார். கவலைப்பட தேவையில்லை. உங்கள் உள்ளம் நினைப்பது நிறைவேற என் வாழ்த்துகளும் பிராத்தனைகளும்....

ஜீவா
22-08-2005, 09:32 AM
அருமையான பதிலுக்கு நன்றி கவிதா.. (இப்ப சரியா :D)..


நீண்ட மவுனம் கலைத்த ஜீவா உங்களுக்கு என் வாழ்த்துக்கள். ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கவிதையை சிறைவைக்க முடியாது. உங்கள் எழுத்துக்களில் நம்பிக்கை கொள்ளுங்கள். அதை மட்டும் அனுப்புங்கள். உள்ளத்தில் உள்ளதை உங்கள் மொழியில் மட்டும் சொல்லுங்கள்.

உண்மைதான் பிரியன்.. எனக்கும் கூட கவிதை எழுத தூண்டியது நான் காதலித்த போது அல்ல.. காதலுக்கு அப்புறம் மற்றவர் கவிதைகளை படிக்க ஆரம்பித்த பின்புதான்..

மற்றபடி, நண்பி கவிதா சொன்னது போல, வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கான வழியினை தேடுவோம்.. அதைத்தான் உண்மையான காதலும் (காதலியும்) விரும்பும்...

பிரியன்
22-08-2005, 09:40 AM
அருமையான பதிலுக்கு நன்றி கவிதா.. (இப்ப சரியா :D)..வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கான வழியினை தேடுவோம்.. அதைத்தான் உண்மையான காதலும் (காதலியும்) விரும்பும்....

கண்டிப்பாக.வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் நம் கொஞ்சம் கவனமாக இருந்தால் பின்பு எந்நாளும் மகிழ்ச்சியாக இருக்கலாம். முன்னேற்றத்திற்கு ஊக்கமாய் காதல் இருக்கும்.காதலியும் இருப்பாள்.

kavitha
24-08-2005, 04:02 AM
திரு. இராசகுமாரன், பிரியன், ஜீவா அனைவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

mukilan
24-08-2005, 04:52 AM
சம்பளத்தின் மீது
சம்மந்தம் செய்வதல்ல
காதல்.

மற்றதற்கு மாற்று
அல்ல காதல்.

அருமையான வரிகள். சம்பளம் பார்த்துதானே இப்பொழுது காதல் பெற்றோர்களிடம் அங்கீகாரம் பெறுகிறது. பருவமடைந்த எல்லோருக்கும் இந்த காதல் என்ற மெல்லிய உண்ர்வு வந்து தழுவிப் போகும். அப்படியில்லை என்று யாரேனும் மறுத்தால் அது பொய் அல்லது அவர் இயல்பில் இருந்து சற்றே மாறிய மன நிலையுடயவர் என்பது என் கருத்து. நிச்சயமாக மற்றதற்கு மாற்றாக காதல் இல்லை. அருமை சகோதரி!வாழ்த்துக்கள்.

kavitha
31-08-2005, 06:52 AM
நன்றி முகிலன்

பிரசன்னா
09-09-2005, 05:30 PM
நல்ல கவிதை கவி..

பென்ஸ்
07-11-2005, 07:58 AM
சூப்பர் அப்பு .. சூப்பர்... கலக்கல் கவிதை, கவிதா...

அப்படியே இதை கேட்டதும் எதிர் பார்ட்டி என்ன சொல்லி இருக்கும் என்னு யோசித்தேன்.. அப்படியே ஒரு கிறுக்கல்... எல்லோருக்கும் தான் தன் உணர்வுகள் தான் சரியாக இருக்கும் என்று தோன்றியதால் இவ்வாறு எழுதியுள்ளேன்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


வெற்றிடமான
என்னிடத்தில் உன்னை
காற்றாய் தானே
வர சொன்னேன்,
ஏன் புயலானாய்..


என்னை நானே
அறிந்து கொள்ளதானே
உன்னை நாடினேன்,
கண்ணேல்லாம் நீயான பிறகு
கனவுகள் எதற்கு...


உலர்ந்த என்மனதில்
தண்ணீர் தானே
விட சொன்னேன்,
ஏன் கண்ணீர் விடுகிறாய்..
அழுவது நீயாகினும்
கரைவது நான் அல்லவா???

கல்லாயிருந்து கரையும்
என்னை சிலையக்கு,
உன் மான சிறையிலாக்கு..
பிறகு சொல் எது
உன் காதல் என்று........

என் காதல் எப்படிபட்டது என்று
நான் யோசித்ததில்லை,
ஆனால் நீயென் காதலியாக
தான் யாசிக்கிறேன்.........

:D :D :D :D

பிரியன்
07-11-2005, 10:08 AM
சூப்பர் அப்பு .. சூப்பர்... கலக்கல் கவிதை, கவிதா...

அப்படியே இதை கேட்டதும் எதிர் பார்ட்டி என்ன சொல்லி இருக்கும் என்னு யோசித்தேன்.. அப்படியே ஒரு கிறுக்கல்... எல்லோருக்கும் தான் தன் உணர்வுகள் தான் சரியாக இருக்கும் என்று தோன்றியதால் இவ்வாறு எழுதியுள்ளேன்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


வெற்றிடமான
என்னிடத்தில் உன்னை
காற்றாய் தானே
வர சொன்னேன்,
ஏன் புயலானாய்..


என்னை நானே
அறிந்து கொள்ளதானே
உன்னை நாடினேன்,
கண்ணேல்லாம் நீயான பிறகு
கனவுகள் எதற்கு...


உலர்ந்த என்மனதில்
தண்ணீர் தானே
விட சொன்னேன்,
ஏன் கண்ணீர் விடுகிறாய்..
அழுவது நீயாகினும்
கரைவது நான் அல்லவா???

கல்லாயிருந்து கரையும்
என்னை சிலையக்கு,
உன் மான சிறையிலாக்கு..
பிறகு சொல் எது
உன் காதல் என்று........

என் காதல் எப்படிபட்டது என்று
நான் யோசித்ததில்லை,
ஆனால் நீயென் காதலியாக
தான் யாசிக்கிறேன்.........

:D :D :D :D

நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் அல்லது எத்தனை தூரம் நேசிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள இதைவிட அற்புதமான வாய்ப்பு கிடைக்குமா? மேலும் நீங்கள் கண்ணை மூடினால்தானே அவள் உங்கள் ஆத்மாவை தழுவமுடியும்

இளசு
07-11-2005, 06:48 PM
மிக வலிமையான வரிகள் - கவிதா சொன்னவை.
வலி புரிந்த பதில்கள் - பெஞ்சமின் தந்தவை..

கவீயின் வீச்சுகளில் இது ஒரு பளீர்.
பெஞ்சமின் பதிக்கும் மன்ற முத்திரைகளில் இது பளிச்.
பாராட்டுகள் இருவருக்கும்..

அறிஞர்
11-11-2005, 01:45 AM
வாவ் இவ்வளவு நாள் இதை கவனிக்கவில்லையே...

அருமை கவி.....

காதல் என்ன கத்திரிக்காயா...
ஒன்னும் செய்யாமல்
காதலிப்பதாக கூற

காதல் எத்தனை சிறப்பு மிகுந்தது
இன்னும் எழுதுங்கள்

எங்கே... அடுத்த கவிதைகள்....
------
பெஞ்சமினின் கவிதை மேலும் சிறப்பு சேர்க்கிறது
இன்னும் எழுதுங்கள்