PDA

View Full Version : விண்டோஸ் ME பிரச்சனை ??



siva
19-08-2005, 08:25 AM
நான் விண்டோஸ் ME பயன்படுத்துகின்றேன். தற்பொழுது விண்டோஸ் 98 மாற்ற எண்ணுகின்றேன். எப்படி மாற்றுவது? அப்படியே எனது hard disk-கை(80GB) பார்டிசன் செய்யலாம் அன்று நினைக்கின்றேன். எப்படி செய்வது?

மதுரகன்
12-01-2007, 07:20 PM
நீங்கள் முதலில் 98 வின்டோஸ் பூற்றபிள் சீடி ஒன்னை பெற்றுக்கொள்ளுங்கள்.

அடுத்து கணனி பூற் ஆகும் போது சீமோஸ் செற்றப் கீ அழுத்தவும் அது பெரும்பாலான கணனிகளில் delete ஆகவும் சிலவற்றில் f4 ஆகவும் காணப்படும் அடுத்து கணனி பூற் ஆகும் போது ஸ்கிறீனில் எந்த கீ என அவதானிக்கலாம். அங்கு 1st boot device ஆக சீடி ரொம் மாற்றவும்.. பின்னர் மாற்றங்களை பதிவு செய்து 98 சீடியை இட்டு மீள ஆரம்பிக்கவும்...

மதுரகன்
12-01-2007, 07:27 PM
பின்பு கணினி சீடியில் பூற் ஆக அனுமதி கேட்கும் அங்கு start computer with cdeom support என்பதை தெரிவு செய்க பின் டொஸ் மூல திரை ஒன்று பெறப்படும் வரும் திரையில் drive ஐ cd drive ஆக மாற்றவும் உ+ம் :அது D எனின் D: என்று அழுத்தி என்ரர் பண்ணவும் பின் harddisk format செய்ய(அது c: ஆயின்) format c: எனவும் partision செய்ய fdisk கட்டளை பயன்படுத்தவும். பின் setup.exe
எனும் பைலை திறப்பதன் மூலம் Install செய்யலாம்.

மேலதிக விளக்கம் தேவைப்படின் கேட்கவும்...

Gurudev
18-01-2007, 11:18 AM
விண்டோஸ் 98 ஐ பில் கேட்ஸ் கைகழுவி விட்டார். updates, Security patches எதுவும் இனிமேல் கிடையாது. அவரது நிறுவனத்திடமிருந்து எந்த Support ஐ யும் பெறமுடியாது. இருந்தாலும் மில்லியன் கணக்கானவர்கள் இன்னமும் அதை பாவிக்கிறார்கள்தான். அடுத்து விண் 98 க்கு பொருத்தமான Drivers ஐ தேடி எடுப்பதும் ஒப்பீட்டளவில் கடினம். எனவே ஏன் வகுப்பு இறங்க விரும்புகிறீகள்?

ME பிரபல்யமற்றது தான். எனது சிபார்சு Win 2000 க்கு மாறுவது. முடிந்தால் Win XP க்கு மாறுங்கள்

praveen
02-03-2007, 10:33 AM
கீழ்க்கண்ட தளத்திற்கு சென்று வின்டோஸ் 98 பயண்படுத்துபவர்கள் புது வசதிகள் (மைக்ரோசாப்ட் தராததை மற்றவர்கள் தருகிறார்கள்) கண்டு பயண்பெறுங்கள்.


http://www.msfn.org/board/index.php?showforum=8

மயூ
02-03-2007, 01:47 PM
பில்கேட்சு வின்டோஸ் 98 ஐக் கைவிட்டாலும் நம்மவர்கள் கைவிடமாட்டார்களோ??? வின்டோஸ் எக்.பிக்கு மாறுங்கள்..
தமிழ் இப்போது ஒருங்குறியில் வாழ்கின்றது. எனவே ஓருங்குறிக்கு ஒத்திசைவு வழங்காத வின் 98 அவ்வளவு நல்லதல்லவே!!!

அறிஞர்
02-03-2007, 04:56 PM
அசோக்கின் தகவல் அருமை.
---
உலகம் விஸ்டாவை நோக்கி போயிட்டிருக்கு...
ME பத்தி பழைய பதிப்பை புதிப்பித்து பேசுறீங்க...

அன்புரசிகன்
04-03-2007, 09:58 AM
நான் விண்டோஸ் ME பயன்படுத்துகின்றேன். தற்பொழுது விண்டோஸ் 98 மாற்ற எண்ணுகின்றேன். எப்படி மாற்றுவது? அப்படியே எனது hard disk-கை(80GB) பார்டிசன் செய்யலாம் அன்று நினைக்கின்றேன். எப்படி செய்வது?

எல்லாவற்றிற்கும் முதலில் நீங்கள் 98ற்கு மாற்ற எண்ணும் விஷேட காரணம் என்ன? ஏதாவது 98ல் மட்டும் இயங்கும் மென்பொருளா?
பூட்டபிள் 98 கிடைக்காவிட்டால் யாரும் 98 வின்டோஸ் வைத்திருப்பவர்களிடம் இருந்து floppy இல் பூட்டப் டிஸ்க்கை தயார்பண்ணலாம். பின்ஒருகாலத்தில் மக்கர் பண்ணும்போது உதவும்.